FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



வழியிலே உங்களுக்கு ஏதாவது குறைவு இருந்ததா? - சகோதரர் அருள், திண்டுக்கல்


இஸ்ரயேலரை தூக்கிச் சுமந்து கானான் தேசம் சேர்த்தார் இஸ்ரயேலின் இறைவன்/

வழியிலே தண்ணீரும். வானத்து மன்னாவும். மேகத்து நிடிலும் மேய்ச்சலுள்ள நிலமும், காட்டின் கனிகளும். காற்றின் மூலம் காடைகளும். முன் சென்ற சமூகத்தின் முழு பாதுகாப்போடு, 1 கூடச் சென்ற ஞானக் கன்மலையின் கரிசனையே; உறங்கவும். தூங்கவும் அவசியமில்லாத ஆளுமையுள் தாயின் மடியிலே தாலாட்டும் பிள்ளை போல் அவர்களைத் தேற்றி நடத்தினார். சோரம் போன மனைவியைத் தள்ளி விடாமல்,

தேடிச் சேர்த்த புருஷன் போல, . தூரம் போன இஸ்ரயேலை கூட்டி சேர்த்துக்கொண்டார்.

வழியிலே.ஒரு குறைவுமில்லை:

வழிநடத்துதலில் முழுநிறைவே உண்டு.

பாதரட்சை தேய்வில்லை... பயப்படுத்துவார் யாருமில்லை;

அதுபோல்;

ரெண்டு--ரெண்டு பேராய் பன்னிரண்டு பேர், அங்குமிங்கும் .. காணாமல் போனவர்க்கு சுவிசேஷம் அறிவிக்க சுற்றும் போகையில், கையில் ஒன்றும் கொண்டு செல்லாத போதிலும் வழியிலே உங்களுக்கு குறைவேது முண்டோ.?

என்று கேட்டவர் இங்கே உண்டு:
சொந்தம்விட்டு மணப்பந்தம் தேடி தூரம் கடந்த ரெபேக்காளை விசாரித்த ஈ.சாக்கு; - அன்பையும் அக்கறையையும் அள்ளிக்கொட்டினது

σωπου;

தகப்பன் வீடு விட்டு வந்து, தரிசிக்காமல். விசுவாசத்தோடு முனங்காமல்-முக்காடிட்டு, ஆயத்தமாகும் மணவாட்டியை அள்ளிச் சேர்த்தணைத்துக் கேட்பார்.... அன்பே வழியில் உனக்கு குறைவேது முண்டோ? என்று!!

1 எனக்கு முன்பே நடந்தவர் அவர்; தாமே சோதிக்கப் பட்டதினால், நெருப்புப் போன்ற வெறுப்பை அவர் நெருங்கிக் கடந்திருக்கிறார்!!

எனவே இதோ குறுகலான வழியென்றாலும். அதிலே எனக்குக் குறைவொன்றும் இல்லை;

காரணம். நான் இங்கே இழப்பதற்கொன்றுமில்லை. எல்லாமே இரவலாய்ப் பெற்றதே இவைகளோடு உறவாடி உயிராகி பின்பு விட்டுப்போகும் தருணத்திலே நான் பட்டுப்போவானேன்?

இலக்கொன்றை கொடுத்திட்டவரின் கால் என் படகில் படும் போது,. இதோ படகு உடனே மறுகரைக்குச் செல்லும்;

( எனவே... குறைவொன்றுமில்லை ...அவரின் குறையாத புண்ணியத்தால்!!


Comments