FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



LOTH AND HIS TWO SONS | லோத்து மற்றும் அவரின் இரு மகன்களும் | GENESIS 19: 30-38

அன்புடையீர்,வணக்கங்கள் 🙏
நிழல் பொருள்
நிழல்:
தொடக்க நூல் 19:30-38
30லோத்து சோவாரைவிட்டு வெளியேறி மலைக்குச் சென்று குடியேறினார்.சோவாரில் குடியிருக்க அஞ்சியதால் தம் இரு புதல்வியருடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தார்.
31 அப்பொழுது மூத்தவள் இளையவளை நோக்கி, “நம் தந்தை வயது முதிர்ந்தவர்.உலகெங்கும் உள்ள வழக்கிற்கேற்ப நம்மை மணந்து நம்முடன் உறவு கொள்ளுமாறு இப்பகுதியில் வேறு ஆடவர் எவரும் இல்லை.
32 ”வா: நம் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்து, அவருடன் உறவுகொள்வோம். இவ்வாறு நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக் கொள்வோம்” என்றாள்.
33 அவ்வாறே அன்றிரவு தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்கவைத்தார்கள்.பிறகு மூத்தவள் உள்ளே நுழைந்து தன் தந்தையுடன் படுத்துக் கொண்டதோ, அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
34 மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி, “நேற்றிரவு என் தந்தையோடு நான் படுத்துக்கொண்டேன்.இன்றிரவும் அவ்வாறே அவரைத் திராட்சை மது குடிக்கவைப்போம்.நீ சென்று அவருடன் படுத்துக்கொள்.இவ்வண்ணமாக நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக்கொள்வோம்” என்றாள்.
35 அவ்வாறே அன்றிரவும் தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்தார்கள்.இம்முறையும் அவள் படுத்துக்கொண்டதோ அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
36 இவ்வாறு லோத்தின் புதல்வியர் இருவரும் தம் தந்தையின் மூலம் கருத்தரித்தனர்.
37 பின் மூத்தவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு”மோவாபு” என்று பெயரிட்டாள்.அவன் இன்றுவரை இருக்கிற மோவாபியருக்குத் தந்தை.
38இளையவள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்குப்”பென் அம்மி” என்னும் பெயரைச் சூட்டினாள்.அவன் இன்றுவரை இருக்கிற அம்மோனியரின் தந்தை.

பொருள் கண்டுபிடிங்கள்.
பொருள்:
லோத்தின் இரு மகள்களின் செயல்கள் மிகவும் தவறானவை. அவர்கள் தங்களது தந்தையை திராட்சை மதுவால் மயக்கி, அவருடன் உறவுகொண்டார்கள். மேலும் அவர்கள் வம்சத்தில் வந்த மோவாபியரும் அம்மோனியரும், கடவுள், தமது முதல் மகனாக தெரிந்து கொண்ட இஸ்ரயேல் மக்களை எதிரிகளாகவும், புறஜனமாகவும் கருதினர்.
லோத்துவின் இரண்டு மகன்கள்: கிறிஸ்தவ மதத்தில் உள்ள இரண்டு பிரிவினரை அடையாளப் படுத்துகின்றார்கள்".

போப்புமார்க்கம் மற்றும் ப்ராட்டஸ்டண்ட் பிரிவினர்.
எப்படி?
லோத்துவின் இரண்டு மகன்களும், புத்தி மயக்கத்தால், ஒரு தவறான உறவில் வெளி வந்தவர்கள்.

அதுபோலவே, திருத்தூதர்களால் உருவான ஆதி உண்மை திருச்சபை கலங்கமில்லாமல் இருந்தது. ஆனால் திருத்தூதர் பவுல் அடிகளார் உரைத்தது போலவே, பிற்காலத்தில் தவறான போதனைகள் (மது) உட்புகுந்தன. அதனால் உருவானதே போப் மார்க்கமும், பிராட்டஸ்டன்ட் சபைகளும். இவர்கள் உண்மை கடவுளை தேடாமல், திருத்துவம், நரகம் போன்ற பைபிள் கூறாத போதனைகளை உட்புகுத்தி, உண்மை திருச்சபை மக்களை ஒடுக்கினர்.
திருத்தூதர் பணிகள் 20:29,30
29உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும்.

30 உங்களிடமிருந்து சிலர் தோன்னறி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
திருவெளிப்பாடு 17:2
மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால் வெறி கொண்டிருக்கிறார்கள்” என்றார்
இவ் இறைவார்த்தைகளை பகுத்தறிந்து நிதானிக்கும் பொழுது, அந்த இரண்டு மகன்களும், இந்த இரண்டு அமைப்புகளுக்கு அடையாளமாக உள்ளனர்.
கிறிஸ்துவுக்குள்

Comments