மண்ணால் பிசையப்பட்ட மனித சரீரம், தன்னால் சுவாசம் நீங்கினால் அது சவம்; பிரமிக்கத்தக்க அதிசயம் தான்.... மீறுதலால், பிணமாகிப்போகும் ஆச்சர்யம்தான்;
ஆதாமின் சந்ததிக்கு வந்த அழிவு இது;
ஜீவனுக்கென்று உண்டானதே. சீரழிந்து போனது;
பாவத்தன் சம்பளம் மரணம் ...
எந்த பாதுகாப்பாலும் தடுக்க முடியாத பயணம்....
ஆம்...இது ஆதாம் துவக்கிய விசாலமான பயணம்:
அதிசயமானவர் மூலம் அதிசயமாய் உண்டான மனிதன், அதி விசனமாய் அழிந்து போவதுதான் முடிவோ? இல்லை! இதோ சக்கரத்துக்குள் சக்கரம், சுழன்று கொண்டிருக்கிறது;
பாவத்தின் அனுபவம் சுழன்று, -- தெய்வீக பாசத்தின் அனுபவம் பாராட்டப்படும் காலம் வரப்போகிறது;
நீதி ஆதாமின் மீறுதலை தண்டித்ததில் திருப்தி கொண்டது.
அன்பு.... ஆதாமின் ஜீவனை மீட்டுத்தர விருப்பம் கொண்டது.
அன்பு கூறியது... நீதியை நோக்கி, உன்கையிலிருந்து ஆதாமை எடுத்து ஜீவனளிக்க விரும்புகிறேன்;
நீதி சொன்னது என்னவெனில், என் கையிலிருந்து ஆதாமை எடுத்தால் அங்கே வேறு ஒன்றைக் கொண்டு வந்து வை;
நீதியின் தேவை நிறைவு செய்யப்பட்டது, மீட்கும் பொருள் தராசில் வைக்கப்பட்டது; காலம் வரும் போது செயல்பட ஜீவ வல்லமை காத்துக்கொண்டிருக்கிறது.
இவை அனைத்தையும் திட்டமாய்ச் செய்துகொண்டு ஞானம் நடை போடுகிறது:
உலக மறைநூல் எதிலும் சொல்லப்படாத நல்ல செய்தியே சரீரத்தோடு கூடிய உயிர்த்தெழுதல்!!'
உலக ரட்சகரின் ஈடுபலியால் சாவு கொல்லப்படும். அழுகிப்போன லாசருவின் சரீரம் அழகிய பூச்செடியைப் போல் முளைக்கும் காலியான கல்லறை சொல்லும் பாடம் இது;
சரீரமும், மனமும் சரிவிகித வாலிபத்துக்கு திரும்பும்.
நீதிமானின் சரீரமும் [திருச்சபை] பக்தியுள்ளவன் சரிரமும்
[திரள் கூட்டம்]
பாவியின் சரீரமும் [இரண்டாம் மரணம்] கடலில் போட்ட கல்லைப் போல மீண்டும் வராது.
இதோ நித்திய பிதாவின் ரபேக்காள் ஆயத்தமாகிறாள்.கோடானு கோடியாய்ப் பெறுகுவதற்கு!
பிரசவ வேதனைப்படும் சிருஷ்டிகள் ஜீவ நம்பிக்கை பெறுவார்கள்; அன்பும். வல்லமையுமான கேருபீன்கள்
பறப்பதற்கு ஆயத்தமாய்.--உடன்படிக்கை பெட்டியின் மேல் காத்திருக்கிறது. காலம் வெளிப்படக் காத்திருங்கள் கன்னியரே... கையில் எண்ணெயுடன்.
இது ஏழாம் எக்காளத்தின் சத்தம்!!!
Comments
Post a Comment