ரிம்மோன் கோயிலில் அசீரியா ராஜாவோடு கைலாகு கொடுத்தாலும் இருதயத்தில் “பரமதந்தையை" பணிந்தாரே நாமான் என்னும் நீதிமான்!
விக்கிரக ஆராதனைக்கார மெசபத்தோமியாவிலே.. இறை பக்தியுள்ளவராய் அறியப்பட்டார் ஆபிராம்!
சோதோமில் இருந்தாலும் அக்கிரமம் கண்டு இருதயம் வாதிக்கப்பட்டு நீதிமான் ஆனார் லோத்!
தன் உண்மைத்தன்மை உரசிப்பார்க்கப் பட்ட போதிலும், பாம்பைக் கண்டு ஓடுவது போல் பாவத்தைக் கண்டு ஓடினார் யோசேப்பு;
ஆமானின் அடக்கு முறைக்கு அஞ்சாமல், இறை பக்தியின் மொத்தமாய் நின்றார் மொர்தேகாய்!!
ஆகாபும், யேசபேலும் அழித்தொழிக்க விரட்டினாலும், அடர்ந்த வனத்தில் காகத்தால் ஆகாரம் பெற்றார் எலியா!
பசியோடு புசிக்க வெறியோடு நின்ற சிங்கத்தின் நிஜ சிங்கமாய் நின்று ஜெயித்தார் தானியேல்!!!.
தோற்றத்தில் வேசியாயிருந்தும் இருதயத்தில் இஸ்ரயேலின் இறைவனை பூஜித்து, வரலாற்றில் இடம் பெற்றார் ராகாப்!!
சூழ்நிலைகள் பலவாயினும், சுத்த இருதயம் மட்டுமிருந்தால், அசுத்தத்திலிருந்து சுத்தத்தைப் பிறப்பிப்பவர் அக்கிரமம் நீக்கி கிரமப்படுத்துவார்!!
அழுக்கும்.. கந்தையுமான அநீதி நீக்கி, நீதியின் சால்வை தரிப்பித்து தகுதிப்படுத்துவார்!!
தகுதியைத் தக்கவைப்போர் பெறுவது, பரிசுத்தவான்களின் நீதியாகிய மெல்லிய வஸ்திரம்||
ஆனால்: நாய் தான் கக்கினதை மீண்டும் திண்ணக்கூடாது; கழுவப்பட்ட பன்றி மீண்டும் சேற்றில் புரளக் கூடாது; கலப்பையில் கை வைத்தவன்,
திரும்பிப் பார்க்கக் கூடாது:
வைத்தியனே உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்று கூறி நம்மை நிராகரித்தாலும்.. கீலேயாத்தின் பிசின் தைலம் மணம் குறையாது.
ஆம் நானறிவேன்....
காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் என் நேசர்!!
முள்ளுகளுக்குள்ளே-லீலி புஷ்பம் நான்!
ஆமென்!
Comments
Post a Comment