நிழல் - பொருள்
வாசிக்கவும்:
எண்ணாகமம் 35:1 - 29 மற்றும் யோசுவா 20:1-9
நிழல்:
அடைக்கலம் பட்டணங்கள் - 6
லேவியருக்கு கொடுக்கப்பட்ட 48பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கல பட்டணங்களாக குறிக்கப்பட்டது.
அவற்றில் 3 பட்டணங்கள் - யோர்தானுக்கு கிழக்கில் உள்ளவை.
(இணைச் சட்டம் 4:43, யோசுவா 20:8)
பெயர் | அர்த்தம் |
---|---|
பெட்சேர் | கோட்டை |
இராமோத்து | உயர்ந்த மலை |
கோலான் | மகிழ்ச்சி |
(யோசுவா 20:7)
பெயர் | அர்த்தம் |
---|---|
கெதேசு | பரிசுத்தம் |
செக்கேம் | தோள் |
எபிரோன் | சகோதரத்துவம் |
அடைக்கல பட்டணங்களின் நோக்கம் என்ன?
திட்டமிடாமல், அறியாமல், தவறுதலினால் ஒருவரால் இன்னொருவர் கொலை செய்யப்பட்டிருந்தால்,கொலை குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அடைக்கல பட்டணத்தில் தஞ்சம் அடையலாம்.
அங்கு பிரதான ஆசாரியர் தலைமையில் அவரது வழக்கு விசாரிக்கப்பட்டு, நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால், அந்த பிரதான ஆசாரியரின் மரணம் வரை அவர் அங்கு வாழலாம். இடைப்பட்ட காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அடைக்கல பட்டணத்தை விட்டு வெளியே போகலாகாது. மீறி சென்று பழி தீர்க்கப்பட்டால், கொலை செய்தவர் மேல் பழி சுமராது.
இவை நிழலாக நடந்தவை.
இவற்றின் பொருள் என்ன?
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
உரோமையர் 5:12
மரணத்தின் பிடியில் இருக்கும் மனுக்குலமும் -தன் ஜீவனை காத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது.
நாம் அடைக்கல பட்டணத்தில் நுழைந்து பிரதான ஆசாரியனிடத்தில் தஞ்சம் அடைந்தால் காப்பாற்றப்பட்டு வாழ்வு பெறுவோம்.
யார் நமது அடைக்கலபட்டணம்?
சங்கீதம் 90:1, 142:5, 94:22
என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை.
அடைக்கல பட்டணம்: நம் கடவுளாம் பரமதந்தை
யார் நமது பிரதான ஆசாரியர்?
எபிரேயர் 4:14, 3:1, 2:17, 5:5, 5:10, 6:20, 7:26
பிரதான ஆசாரியர்: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
நாமும் கடவுளிடம் புகலிடம் அடைந்து, பிரதான ஆசாரியரான நமது ஆண்டவர் ஏசு கிறிஸ்துவிடம் தஞ்சம் அடைந்தால் காப்பாற்றப்படுவோம்.
6 அடைக்கல பட்டணங்கள் - பொருள்
6 அடைக்கலப் பட்டணங்கள் ஜீவனை காக்கும், பாதுகாக்கும் பட்டணங்களாக இருந்தன.
(எண்ணிக்கை 35:14)
6 - ஆறு என்பது, ஆறு மணி நேரம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கியது, யூதர்களையும், புறஜாதிகளையும் ஜீவனுக்குள் கொண்டு வரும்படியாக இருந்ததை அடையாளப்படுத்துகின்றது.
இந்த ஆறு பட்டணங்கள் மூன்று மூன்றாக இரண்டு வகுப்பாக பிரிக்கப்பட்டது.
அவ்வகையில்,
ஜோர்டானின் கிழக்கு பக்கத்தில் உள்ள 3 பட்டணங்கள் கொடுக்கப்பட்டது என்பது, சுவிசேஷ யுகத்தில் முதலில் ஜீவன் காக்கப்பட்ட சபை வகுப்பறை அடையாளப்படுத்தும்.
3️ - நம் ஆண்டவரின் மீட்கும் பலியைக் குறிக்கின்றது.
ஜோர்டானின் மறுபக்கத்தில் உள்ள 3 பட்டணங்ள் ஆயிர வருட அரசாட்சி காலத்தில், மனுக்குலம் ஜீவனுக்குள் வருவதை/ காக்கப்படுவதை அடையாளப்படுத்தும்.
இந்த வசனத்திலுள்ள ஞான அர்த்தம் என்ன ? எண்ணாகமம் 35: 32 தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும் பொருளை வாங்கக்கூடாது.
அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும்.
எபிரேயர் 6:18
அடைக்கல பட்டணத்திற்குள் ஓடிப்போனது - சுவிசேஷ யுகத்தில் மரணப் பிடியிலிருந்து கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்திற்குள் தஞ்சம் புகுந்த தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சபையாரை குறிக்கும்.
ஆசாரியன் மரணம் - ஆசாரிய வேலையின் முடிவை அடையாளப்படுத்தும் = சுவிசேஷ யுக காலத்தின் முடிவு.
🌿 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இந்த சுவிசேஷ யுக காலத்தில் மீட்கப்பட்ட சபை ஜனங்களுக்கு நம்முடைய ஆண்டவர் ஆசாரியனாக இருந்து அவர்களை பராமரித்து வருகிறார். இந்த வேலையானது சுவிசேஷ காலத்தின் முடிவு வரை செல்லும்.
எபிரெயர் 9:16-17
🌿 இந்தக் காலப்பகுதியின் முடிவு வரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளின் மூலம் மீட்கப்பட்டவர்கள், தற்காலிகமாக வாழ்வை பெற்றுள்ளார்கள். அதனை அசட்டை செய்து மீண்டும் உலகத்திற்கு திரும்பக் கூடாது என்பதை இது அடையாளப்படுத்துகிறது.
அடைக்கலப்பட்டணத்தின் உள்ளேயே ஒருவர் கொலை குற்றம் செய்தால், அவரை காப்பாற்றுவதற்கு வேறு வழி இல்லை.
நாமும் கடவுளாம் பரம தந்தையையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அடைக்கலமாக கொண்டு சத்தியத்தில் நடக்க அர்ப்பணித்துள்ளோம். ஆனால் இங்கும் நாம் கொலை பாதகராக இருந்தால் நம்மை காப்பாற்ற வழி இல்லை.
எப்படி?
தம் சகோதரர் சகோதரிகனை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே.
1 யோவான் 3:15
அடைக்கல பட்டணத்தில் இருப்பவரை வெளியில் உள்ளோர் வெறுப்பர். அதுபோல சத்தியத்தில் நடக்கும் நாமும் வெளியில் உள்ளவர்களால் பகைக்கப்படுவோம்.
சகோதர சகோதரிகளே, உலகம் உங்களை பகைத்தால், நீங்கள் வியப்படைய வேண்டாம்.
1 யோவான் 3:13
எனவே, நாம் நமது இந்த விசுவாச ஓட்டத்தை பயத்துடன் ஓடி, அடைக்கல பட்டணத்தில் தங்கி, தரித்து நிலை வாழ்வு பெற பிரயாசப்படுவோம்.
Comments
Post a Comment