THE STAFF HELD HIGH | உயர்த்தப்பட்ட மோசேயின் கோல் - EXODUS 17:8-13

THE STAFF HELD HIGH

The Staff held High


அன்புடையீர், வணக்கங்கள். 🙂🙏

நிழலும் பொருளும்


நிழல்:

விடுதலை பயணம் 17:8-13
பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்.

மோசே யோசுவாவை நோக்கி, "நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்" என்றார். 

அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே. ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். 

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். 

மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். 

அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. 

யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார். 
விடுதலைப் பயணம் 17:8-13

பொருள்:

மோசே
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

கோல்
சத்தியம்

சங்கீதம் 23:4
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். 

யோசுவா
திருச்சபை இறைமக்கள்.

அமலேக்கியர்
பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள்.
பலவீனமானவர்களை வெட்டுபவர்கள். 

இணைச் சட்டம் 25:17,18
நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் அமலேக்கு உனக்குச் செய்ததை நினைவில் இருத்து. 
நீ களைத்துச் சோர்ந்திருக்கையில் வழியிலே அவன் உன்னை எதிர்த்து, உன் பின்னால் வலுவற்றவர்களை வெட்டி வீழ்த்தினான். ஏனெனில் அவன் கடவுளுக்கு அஞ்சவில்லை.

--> நம்முடைய ஊனியல்பு எண்ணங்களை அடையாளப்படுத்துகிறது. 

மத்தேயு 26:41
உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்"

உரோமையர் 7:19,20
நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். 
நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. 

ஆரோன் & கூர்
சபையின் தூதர்களை அடையாளப்படுத்துவார்கள். 

சபையின் தூதர்கள் மூலம் கிறிஸ்துவை பற்றின சத்தியம் உயர்த்தப்படும் போது, திருச்சபை இறைமக்கள் யோசுவாவை போல் ஊனியல்போடு யுத்தம் செய்து அதை வெல்ல முடியும்.

பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.


Comments