FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




வஸ்திரம் | GARMENT OF RIGHTEOUSNESS | Br. VELLANKANNI

Garment of Righteousness

Garment of Righteousness

garment of righteousness
அழுக்கும் கந்தையுமான எங்கள் நீதிக்கு,
மீட்கும் பொருளினால் நீதியின் வஸ்திரம் உடுத்தினீர்; சித்திரத்தையலாடை தரித்துக்கொண்ட
மணவாட்டியின் வஸ்திரம்,
அர்ப்பணிக்கப்பட்டவர்களுடைய மெல்லிய வஸ்திரமாகும்.

இலவசமான புண்ணியமாகிய கிருபாசனத்தின் சலுகையினால்,
நாளுக்கு நாள் சுத்திகரித்து, சிங்காரப் பின்னலிட்டு, வகை, வகையாய், வரைகலை அழகைப்பின்னி, இடையிடையே வரும் கறை திரைகளைக் கழுவி!
சுத்தமும்...பரிசுத்தமுமான மெல்லிய வஸ்திரமாகிய
நீதியை தொடர்ந்து.. நிறைவாக்குபவர்க்கே,
நீதியின் கிரீடம், தரிப்பிக்கப்படும்.

அழுக்கை அகற்ற அலட்சியம் பண்ணி, அதனால் வரும் அசுத்தத்தினால் கறைபட்டு,

ஆட்டுக்குட்டியின்டியின் ரத்தத்தினால், துவைத்து வெளுத்து,  துன்பம் நீங்கி தேற்றப்பட்டாலும். எப்ராமியும் திருப்பிப் போடாத அப்பமாவான்;

கல்யாண வஸ்திரம் என்னும் வஸ்திரமுண்டு; கண்ணால் காண இயலாத விசுவாச வஸ்திரம் அது;

அதைக்காணாமல் போடுவதும் கண்திறந்துகொண்டே, படுகுழியில் விழுவதும்.இரண்டும் ஒன்றே;

ராஜகுமாரத்தியின் வஸ்திரவாசனை... மாறுபாடான ஜனங்களின் மத்தியில் மடிப்பு களையாதது. 

பள்ளிக் குழந்தைகளின் சீருடையைப் போல, அர்ப்பணிக்கப்பட்டவர்களின் நீதியின் வஸ்திரம் பகலைப் போல நீதியை ஸ்திரப்படுத்தும்.

சூரியனை அணிந்திருக்கும் பெண் இவள்;

போவாஸின் போர்வையால் போர்த்தப்பட்டவள் இவள்; காட்டுப்புஷ்பத்தைப் போல--சாலமோனைக் காட்டிலும், மேன்மையாக உடுத்துவிக்கப்பட்டவள் இவள்?

வஸ்தியைப் போல், வஸ்திரத்தை உதறாமல், எஸ்தரைப் போல் உடுத்திய ராஜகுமாரத்தி இவள்:

ஐயா...பரம நெசவாளரே...

கிபியோனியரைப் போல, கிழிந்த வஸ்திரமும், யோசுவாவைப் போல அழுக்கு வஸ்திரமும் ஆதாமைப்போல காய்ந்து உதிரும் இலை ஆடைகளும், உள்ளபடியே என் உடுப்பு ஆயிற்று:

இதிலே பாபிலோனிய வஸ்திரம் திருடின ஆகானைப் போல, 
அடிக்கடி இச்சிக்கிறேன்: வஸ்திரம் விட்டு ஓடின கெத்சமனே சீடனைப்போல் சில நேரம் ஓடி ஒளிகிறேன்.

ஐயா.. என் ஆண்டவரே....

வஸ்திர ஓரத்தினால் குணமாக்கிவைரே,
இரக்கத்தின் போர்வை விரித்துப் பிடித்திருப்பவரே....

ராஜ வஸ்திரமாகிய ரத்தாம்பரம் நான் உடுத்தும்படி, தன் வஸ்திரத்தை சீட்டுப்போடக் கொடுத்தவரே...

நீர் தந்த ரட்சிப்பின் சால்வையைக் கொண்டு, என் பாவ அழுக்கால் வரும் சாவை வெல்வேன்;
இரக்கப் போர்வையின் தரத்தை இழக்காமல், நீதியின் வஸ்திரத்தை இறுக்கமாய்க் காத்துக் துதியின் ஆடையைத் தரித்துக் கொண்டு,

தூயவரே...உம்மைப் பார்ப்பேன்!!

ஆமென்!!


Comments