Samsons riddle
அன்புடையீர், வணக்கங்கள்.
நிழலும் பொருளும்
நியாயாதிபதிகள் 14:1-13
நீதித்தலைவரான ஷிம்ஷோன், தனது பெற்றோர்களுடன் பெலிஸ்திய நாட்டுக்கு பெண் பார்க்க செல்லும் வழியில், எதிர்வந்த சிங்கத்தை கிழித்து கொன்று போட்டார். பின்பு, சில நாட்களுக்கு பின்பு, அந்த இறந்த சிங்கத்தின் பிணத்தை அவர் காண நேர்ந்த போது, அதில் தேன் கூடும் தேனும் காணப்பட்டது.
அதன் பின்பு, மணப்பெண்ணின் உறவினர்களிடம் அவர் கண்டதன் அடிப்படையாக கொண்டு
- ஒரு விடுகதை கேட்டார்.
நிழல்:
நியாயாதிபதிகள் 14:14
அப்பொழுது அவன்:"பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது" என்றான்
பொருள்:
பட்சிக்கிறவன் = பட்சிக்கிறவர்
நமது கடவுளாம் பரமதந்தை
நமது கடவுளாம் பரமதந்தை
எபிரேயர் 12:29
“நம் ஆண்டவர் அழிக்கும் நெருப்பு போன்றவர்.”
“நம் ஆண்டவர் அழிக்கும் நெருப்பு போன்றவர்.”
உபாகமம் 4:24
"உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்"
"உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்"
பலவான் (சிங்கம்)
நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து = யூதா கோத்திரத்து சிங்கம்.
திருவெளிப்பாடு 5:5
"யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்"
"யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்"
பட்சணம் (அப்பம்)
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, வானத்திலிருந்து வந்த அப்பமாக (பட்சணமாக = உணவாக) இருக்கிறார்.
யோவான் 6:48
"வாழ்வுதரும் உணவு நானே."
"வாழ்வுதரும் உணவு நானே."
மரித்த சிங்கமும் அதன் உடலுக்குள் இருந்த மதுரமாகிய தேன்.
மரித்த சிங்கம் = நமது ஆண்டவரின் சிலுவை மரணத்தையும்,
அவர் மரணம் மூலம் திருச்சபைக்கு கிடைத்த மதுரமான தேனாகிய = பரலோக அழைப்பை அடையாளப் படுத்தப்படுகிறது.
எபிரேயர் 10:19
"சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு"

கிறிஸ்துவுக்குள்
Very clear explanation. God bless you
ReplyDelete