SOLOMON'S TEMPLE, PALACE & HOUSE OF FOREST OF LEBANON | அரசர் சாலமோனின் தேவாலயம், மாளிகை மற்றும் வனம் - 1 KINGS Ch. 6, 7:1-12
1 Kings 6:1, 7:1,2 - Solomon built the house of the LORD, his own royal palace, and the house of the forest of Lebanon, each in great splendor, according to the wisdom given him by God.
அன்புடையீர் வணக்கங்கள்,
நிழலும் பொருளும்
நிழல் :
1. சாலொமோனின் ஆலயம்.
2. சாலொமோனின் மாளிகை.
3. சாலொமோனின் வனம்.
பொருள்: (அடிப்படை விளக்கம்)
1. சாலொமோனின் ஆலயம்
சாலொமோன் தேவாலயத்தின் இரு நிலைகளின் பொருள்.
1️⃣ சாலொமோன் தேவாலயம் கட்டப்பட்டு வரும் நிலையில், அது சுவிசேஷ யுகத்தில் சபை எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகின்றது.
2️⃣ சாலொமோன் தேவாலயம் கட்டப்பட்டு முடிந்த பிறகு, சபை பூரணம் அடைந்த பின்பு எவ்விதமாக மகிமையான நிலையில் இருக்கும் என்பதை அடையாளப் படுத்துகின்றது.
முடிவில், மகிமை அடைந்த சபையின் மூலமாக (தேவாலயம்) எவ்வாறு உலக ஜனங்கள் தேவனிடத்தில் கொண்டு சேர்க்கப்படுவார்கள் என்பதையும் காண்பிக்கின்றது.
2. சாலொமோனின் மாளிகை
சாலொமோனின் மாளிகை எவ்வாறு சாலமொனுக்கு மகிமையாக இருந்ததோ....
அப்படியாக, சபையையானது நம் ஆண்டவரின் விசுவாசத்திற்கும்,
உண்மைக்கும் மகிமையாக சதாகாலங்களிலும் இருக்கும் என்பதை காண்பிக்கின்றது.
3. சாலொமோனின் வனம்
என்பது உலக ஜனங்கள் ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்வதை அடையாளப்படுத்துகின்றது.
இது முற்றிலும் மரத்தால் செய்யப்பட்டது, அதாவது கேதுரு மரத்தால் உண்டு பண்ணப்பட்டது.
இது, பூமிக்குரிய வாழ்க்கையை அடையாளப்படுத்தும், அதாவது நித்திய வாழ்க்கையை குறிக்கும்.
இதின், அளவுகள் 50 x 100, இது ஆசரிப்பு கூடாரத்தில் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் அளவுக்கு ஒத்ததாக இருக்கின்றது,
இது, பூமிக்குரிய ஆசிர்வாதத்தை அடையாளப்படுத்தும்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment