QUESTIONS AND ANSWERS

Break Time Questions

Collection of Break Time Questions from Whatsapp

Question and Answer
Select Your Q and A:
1. CIRCUMCISION
Circumcision

அன்புடையீர், வணக்கங்கள்.

ஞானத்தின் ஊற்று

கேள்வி:

ஆதியாகம்ம் - 17:9-14 - இந்த வசனத்திலுள்ள ஞான அர்த்தம் என்ன ?

பதில்:

விருத்தசேதனம் - இருதய பரிசுத்தம்.
ஊனுடலின் அழுக்கை நீக்குதல்.
பழைய சுபாவத்தை அறுத்து போடுதல்.

ரோமர் 2:29
ஆனால் அகத்தில் யூதராய் இருப்பவரே உண்மையான யூதர், உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே உண்மையான விருத்தசேதனம். அது எழுதிய சட்டத்தின்படி செய்யப்படுவது அல்ல, தூய ஆவியால் செய்யப்படுவதாகும். அத்தகையவர் மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவர்.

பிலிப்பியர் 3:3
ஏனெனில், உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்.

கொலோசெயர் 2:11
நீங்கள் மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல: கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்தசேதனம் செய்யப்பட்டு ஊனியல்பைக் களைந்துள்ளீர்கள்.

👉🏼 இருதய விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் = உலகிற்கு மரித்தவர்களாயிருப்பார்கள்

👉🏼 உலகின்
▪️ நம்பிக்கைகள்,
▪️ பேராசைகள்,
▪️ நோக்கங்கள் ஆகியவை அவர்களுக்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கும்.

👉🏼 அவர்கள் கடவுளுக்கென்று பிழைப்பவர்களாயிருப்பார்கள்.
👉🏼 மரணம் மட்டும் உண்மையுள்ளவர்களாயிருப்பார்கள்.
👉🏼 தீங்கு நாளில் ஏற்படும் சோதனைகளை ஜெயிக்க
✨ ஆவியோடும்
✨ உண்மையோடும் _ கடவுளை தொழுது கொள்ளுபவர்களால் மட்டுமே கூடும்.
👉🏼 எந்தவித நிபந்தனையுமின்றி கர்த்தருக்கென்றேத் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் மட்டுமே இந்தத் தீங்கு நாளில் நிலைநிற்க முடியும்.

கிறிஸ்துவுக்குள்

2. SIN IN THE TEMPLE
AD29 to AD33

அன்பானவர்களே🙏

கேள்வி: 

ஆலயத்தில் பாவம்?


மத்தேயு 21:12-14

12பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்: கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
13 "என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்“ என்று அவர்களிடம் சொன்னார்.
14 பின்பு பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்.

யோவான் 2:14-17

14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்:
15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்: ஆடு மாடுகளையும் விரட்டினார்: நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
16 அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்: என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார்.

ஒன்று போலவே இருக்கும் இந்த சம்பவங்கள் நம் ஆண்டவர் வாழ்க்கையில் எப்பொழுது நடந்தது? 

விளக்கவும்!!


மத்தேயு 21:12-14

முதலாம் வருகையில்

 நம்முடைய ஆண்டவருடைய ஊழியத்தின் முடிவு வருஷமாகிய, 33 AD யில்   நடந்தது.

யோவான் 2:14-17

முதலாம் வருகையில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் ஆரம்ப காலப்பகுதியில், AD 29 யில்  நடந்தது.


விளக்கம்:


1️⃣

யோவான் 2 :12 - 13

முதலாவதாக அவர் ஆலயத்தை சுத்திகரித்தது:

கப்பர்நகூமிலிருந்து எருசலேமுக்கு வந்தார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் தன்னுடைய ஊழியத்தை தொடர்ந்து செய்தார் - யோவான் 2:23 & 4:45 


2️⃣

மத்தேயு 21:12-14

இரண்டாவதாக அவர் ஆலயத்தை சுத்திகரித்தது: 

யோவான் 12:1, 12-16

பெத்தானியாவிலிருந்து  எருசலேமுக்கு வந்தார்.

மேலும், இந்த சம்பவம் நடந்தது 11 ஆம் தேதி, அதன் பிறகு அவர் மரித்தார்.


கிறிஸ்துவுக்குள்


3. EARLY & LATTER RAIN - Deuteronomy 11:14
முன்மாரி, பின்மாரி
early and latter rain

நிழல் பொருள்


நிழல்:


முன்மாரி பின்மாரி


பொருள் :


இஸ்ரயேலின் இரண்டு காலங்களில் பெய்யும் மழையை குறிக்கிறது.


பயிர்களுக்கு முக்கியமானது முன்மாரி (இலையுதிர் காலம்) (அக்டோபர் - நவம்பர்) நடவு செய்வதற்கு மண்ணை மென்மைப்பாக்குகிறது.

பின்மாரி (வசந்த காலம்) மார்ச் - ஏப்ரல் அறுவடைக்கான பயிர்களை முதிர வைக்கிறது.


ஒரு கோணத்தில் ஒப்பிடும் பொழுது,


மழை:

ஆசீர்வாதம், இறை வார்த்தை, பரிசுத்த சக்தியை குறிக்கிறது.

உபாகமம் 11:14

தக்க காலத்தில் அவர் உங்கள் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியும் பின்மாரியும் தருவார்.அதனால் உங்கள் தானியத்தையும், திராட்சை இரசத்தையும், எண்ணையையும் சேகரிப்பீர்கள்.

எரேமியா 5:24

தக்க காலத்தில் முன் மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்” என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.

ஓசியா 6:3

அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது: மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.

யோயேல் 2:23

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்: ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்: முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.

யாக்கோபு 5:7

ஆகவே, சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்.

முன்மாரி


நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையில் அவருடைய போதனைகள் ஜனங்களின் இருதயங்களில் கடவுளின் ஆரம்ப வேலையை குறிக்கிறது.
பெந்தெகொஸ்தே நாளில் பெற்ற கடவுளின் பரிசுத்த சக்தி அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள செய்கிறது.


பின்மாரி:


நம் கர்த்தரின் இரண்டாம் வருகையில் காலப்பகுதியிலிருந்து சத்தியத்தின் வெளிச்சம் அவருடைய ஜனத்தை அறுவடைக்கு ஆயத்தமாக்குகிறது.


இன்னொரு கோணத்தில் ஒப்பிடும் பொழுது.


முன்மாரி: சுவிசேஷ யுகத்தில் கிடைக்கும் மழையாகிய சத்தியம்.


பின்மாரி: ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் உலகத்தை செழிப்பாகும் மழையாகிய சத்தியம்.


கிறிஸ்துவுக்குள்


4. WHY GOD DID NOT ALLOW DAVID TO BUILD THE TEMPLE?
நிழல்:
கடவுள் ஏன் தாவீது இராஜா ஆலயத்தை கட்டக் கூடாது என்று சொன்னார்?
பொருள்:
தாவீது ராஜாவின் காலப்பகுதி - ரத்தம் சிந்தக்கூடிய போராட்டங்கள் நிறைந்த காலப்பகுதி. இந்த காலப்பகுதி எதிரிகளை ஜெயிக்க கூடிய ஒரு காலப்பகுதி, ஆதலால் ஆலயம் கட்ட முடியாது - 1 Kings 5:3
இது நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூன்று அரை (3.6) வருட ஊழியத்தின் காலப்பகுதியை அடையாளப்படுத்தும். (AD 29 to AD 33)
இந்த காலப்பகுதியில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆலயம் கட்ட முடியாத சூழ்நிலை, அந்த காலப்பகுதியும் இது அல்ல.
எப்படி, தாவீது ராஜா ஆலயம் கட்டுவதற்கு தேவைப்படக்கூடிய பொருட்களை சம்பாதித்து சேர்த்து வைத்தாரோ, அதுபோல நம் ஆண்டவரும் அவருடைய ஊழியத்தின் நாட்களிலே சபை கட்டப்படுவதற்கு தேவைப்படக்கூடிய அஸ்தி பாரமாகிய அவருடைய ஜீவனை தயார்படுத்தும் வேளையில் ஈடுபட்டு அதை சேர்த்து வைத்தார்.
பிறகு சலொமோன் ராஜா ஏழு வருடத்தில் (1 KINGS 6:38) ஆலயம் கட்டியது போல,
பெந்தெகொஸ்தே நாளிலிருந்து ராஜாவாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏழு வருட சுவிசேஷ யுகத்தில் சபையை கட்டி வருகிறார்.
கிறிஸ்துவுக்குள்
5. WIFE OF COVENANT | Malachi 2:14:15
உடன்படிக்கையின் மனைவி?
யார் இந்த தோழியும், உடன்படிக்கையின் மனைவியும்?
மல்கியா 2:14-15 விளக்கவும்!
பதில்
முதலில், மல்கியா 2:4,11,12 வசனங்களை கவனிக்கும்பொழுது, அது, லேவியை பற்றியும், யூதாவை பற்றியும், பின்பு பொதுவாகவும் (இஸ்ரயேல்) கூறுகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். இஸ்ரயேல் கணவனாக இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
தோழியும், இளவயது மனைவியும் யாரை அடையாளப்படுத்துகிறது என்றால் நியாயப்பிரமாண உடன்படிக்கையை அடையாளப்படுத்துகின்றது.
(யாத்திராகமம் 19:5 & 8 - எசேக்கியேல் 16:1-13)
கணவனுக்கும், மனைவிக்கும் இருக்கக்கூடிய உடன்படிக்கைக்கு சாட்சி யார் என்றால் பிதாவாகிய கடவுள். (EXAMPLE: Genesis 31:49-50)
இஸ்ரயேல் மறு ஜாதியான ஸ்திரீகளை சேர்த்துக் கொண்டது நிமித்தம் (இள வயது மனைவிக்கு, உடன்படிக்கைக்கு)துரோகம் பண்ணினார்கள்.
(MALACHI 2:11)
ஒரு நல்ல நட்பாக (தோழியாக) நல்ல புரிந்து கொள்ளுதலோடு (மனைவியாக) இந்த உடன்படிக்கையானது இஸ்ரயேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது.
அதற்கு அவர்கள் துரோகம் பண்ணினார்கள்.
அதுபோல, இன்று உடன்படிக்கைக்கு உட்பட்ட ஜனங்களாக நாம் வாழும் பொழுது, எந்த சூழ்நிலையிலும் கடவுள், ஒரு நட்பிற்கு ஏற்றவாறும், நல்ல ஐக்கியத்திற்கு, புரிந்து கொள்வதற்கு ஏற்றவாறும் நமக்கு கொடுத்த உடன்படிக்கைக்கு துரோகம் பண்ண கூடாது என்பதையும் நினைவில் கொள்வோம்.
கிறிஸ்துவுக்குள்
6. THE DEATH OF AHITHOPHEL
நிழல் - பொருள்
நிழல்
அகித்தோப்பேலின் மரணம்.
"When Ahithophel saw that his advice was not followed, he saddled his donkey and arose and went home to his house, to his city. He put his household in order, and hanged himself, and died, and was buried in his father’s tomb.”
2 Samuel 17:23
பதில்
இந்த ஒரு நிழலை பல்வேறு வகையில் பொருள்படுத்த முடியும். அகித்தோபேல் என்றால் - மூடத்தனத்துக்கு சகோதரன் என்று அர்த்தம் - Brother of foolishness.
தாவீது என்றால் - இருதயத்துக்கு ஏற்ற/ அன்புக்குரிய/ விருப்பத்துக்குரிய/ Beloved என்று அர்த்தம்.
தாவீது ராஜா நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு வகையில் முன்னடையாளம். அவருடைய காலப்பகுதி சுவிசேஷ யுகத்திற்கு ஒரு முன்னடையாளம்.
சுவிசேஷ யுகத்தில் நம் ஆண்டவருக்கு எதிராக ஆலோசனை கூறியவர்கள் பரிசேயர், சதுசேயர் வேதபாரகர் என்கிறவர்கள். ஆதலால் அவர்கள், எப்படி அகித்தோபேல் தன் ஜீவனை இழந்தாரோ அதேபோல தங்களுடைய பரம அழைப்பை இழந்தார்கள்.
இன்னொரு வகையில் அகித்தோபேல் யூதாஸிற்கு முன்னடையாளம்.
ஆகவே நாமும் எப்பொழுதும் கடவுளின் அன்பிற்கும்/ நீதிக்கும் எதிராக ஆலோசிக்காமலும் சிந்திக்காமலும் இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த ஒரு பரம அழைப்பை இழந்து விடுவோம்.
கிறிஸ்துவுக்குள்
7. MEANING OF 7th YEAR and 10th MONTH - Esther 2:16
ஞானத்தின் ஊற்று
கேள்வி:
எஸ்தர் Esther 2:16 - Esther was taken to King Ahasuerus, into his royal palace, in the tenth month, which is the month of Tebeth, in the seventh year of his reign.
இந்த வசனத்திலுள்ள ஞான அர்த்தம் என்ன ?
பதில்
அப்படியே எஸ்தர், ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். (எஸ்தர் 2:16)
7 வது வருடம் 10 - ம் மாதம்.
வஸ்தி அகாஸ்வேரு ராஜாவின் 3 ஆம் வருடத்தில் உயர்ந்த ஸ்தானத்திலிருந்து நீக்கப்பட்டாள்.
மேலும், எஸ்தர் அகாஸ்வேரு ராஜா அரசாளுகிற 7 - ஆம் வருடம் 10 - ஆம் மாதத்தில் ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக் கொண்டுப் போகப்பட்டாள்.
வஸ்தி, அகாஸ்வேரு ராஜாவின் 3 - ஆம் வருடத்தில் உயர்ந்த ஸ்தானத்திலிருந்து நீக்கப்பட்டு ராஜாவின் 7 ஆம் வருடத்தில் எஸ்தர் மேன்மை நிலைக்கு உயர்த்தப் பட்டதற்கும் இடைப்பட்ட 4 வருடங்கள் சபை வளர்வதற்கான காலப்பகுதியாகிய சுவிசேஷ யுகம் முழுவதும் அல்லது சபையின் சோதனை காலப்பகுதியை அடையாளப் படுத்துகிறது.
இங்கு சொல்லப்பட்ட 7 - ஆம் வருடம் 10 - ஆம் மாதம் என்பது இவ்வுலகத்திற்கு பாவநிவர்த்தி செய்யப்படும் காலப்பகுதியை (1000 வருட அரசாட்சியின் துவக்கத்தை) அடையாளப்படுத்துவதாயிருக்கிறது. (லேவியர் 23:27)
கிறிஸ்துவுக்குள்
8. DEW ON THE WOOL and ON THE DRY GROUND- Judges 6:36-40
நிழல் பொருள்
நிழல்:
நீதித் தலைவர்கள் 6:36-40
நிஜம் :
தோல் என்பது மாம்சத்தை அடையாளப்படுத்தும்.
மாம்சம் என்பது இந்த மண்பாண்டமாகிய சரீரத்தை குறிக்கும் - 2 Corinthians 4:7.
பனி என்பது தேவ வார்த்தைகளை குறிக்கும் - Deuteronomy 32:2.
மயிருள்ள தோல் - உடன்படிக்கை செய்த கடவுளின் பிள்ளைகளை அடையாளப்படுத்தும்.
தோலின் மீது மாத்திரம் பனி பெய்வது என்பது இந்த சுவிசேஷ யுகத்தில் சபையாக அழைக்கப்பட்டவர்கள் மீது மட்டும் பனியாகிய சத்தியம் பெய்வதை அடையாளப்படுத்துகின்றது.
மேலும், பூமியின் மீது மாத்திரம் பனி பெய்வது என்பது வரவிருக்கின்ற ஆயிரமாண்டு அரசாட்சியில் ஜனங்களுக்கு சத்தியம் பெய்வதை அடையாளப்படுத்துகின்றது.
ஏசாயா 11:9
கிறிஸ்துவுக்குள்
9. SET THE BASKET ON ITS BASE - Zechariah 5:11

அன்புடையீர், வணக்கங்கள். 


கேள்வி:


சகரியா-5:11 "அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.


இந்த வசனத்திலுள்ள ஞான அர்த்தம் என்ன ?


பதில்


சிநெயார் - பாபேல் - பாபிலோன் : 

மேட்டின்மை / குழப்பம் நிறைந்த இடம் / கடவுளின்  தெய்வீக ஏற்பாட்டிற்கு எதிரான செயல். (GENESIS 11 : 1 - 9)

ஆதியாகமம் 10:10 - சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.


இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். (தானியேல் - 4:30)


வீடு கட்டும்படி: அமைப்புகள். (திருவெளிப்பாடு 18)


ஸ்தாபிக்கப்பட்டு,  தன் நிலையிலே வைக்கப்படும்:

மேட்டிமை / குழப்பத்திற்கு காரணமாகிய யாவும் நியாயம் தீர்க்கப்படும்.


தெய்வீக ஏற்பாட்டை மாற்றிய மேட்டின்மையான அமைப்பாகிய பெயர் கிறிஸ்தவம் வேதத்தை தன் வசமாக்கி உலக அமைப்பில் மிகப் பாதுகாப்பான நிலையில் தங்களை காத்துக் கொள்ளுதல். (திருவெளிப்பாடு 18)


ஏசாயா 46:1 

பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.


எரேமியா 50:2 

பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.


எரேமியா 51:44

 நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.


கிறிஸ்துவுக்குள்


10. AARON TO ELEAZER: THE CLOAK TRANSFERRED

 அன்புடையீர், வணக்கங்கள். 


 நிழல் பொருள் 


நிழல்


எண்ணிக்கை  20:25-29

25 ஆரோனையும் அவனுடைய மகன் எலயாசரையும் ஓர் என்ற மலைக்குக் கூட்டிக் கொண்டு வா: 

26 ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலயாசருக்கு உடுத்து: ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக் கொள்ளப்படுவான், அங்கேயே இறப்பான்”. 

27 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்: மக்கள் கூட்டமைப்பு முழுவதின் பார்வையிலும் அவர்கள் ஓர் என்ற மலைக்கு ஏறிப் போனார்கள். 

28 மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார்: ஆரோன் அங்கேயே மலையுச்சியில் இறந்தார். பின் மோசேயும் எலயாசரும் மலையைவிட்டுக் கீழிறங்கி வந்தனர். 

29 ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது: இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.


பொருள்:


ஓர் மலை: சுவிசேஷன் மலை என்று அர்த்தம். 

மோசே: சுவிசேஷன் பிரமாணத்திற்கு அடையாளம். 

ஆரோன்: சுவிசேஷ யுகத்தின் பிரதான ஆசாரியராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அடையாளம்.

எலெயாசர்:  ஆயிரம்  ஆண்டு அரசாட்சியின் பிரதான ஆசாரியராகிய  கிறிஸ்துவை அடையாளப்படுத்துவார்.

வஸ்திரம் மாற்றப்படுதல்: என்பது சுவிசேஷ யுகத்தின் ஆசாரிய ஊழியம் முடிந்து ஆயிரம்  ஆண்டு அரசாட்சியின் ஆசாரிய ஊழியம் தொடங்குவதை  அடையாளப்படுத்துகின்றது. 


 கிறிஸ்துவுக்குள்

11. THE DAY OF SMALL THINGS - Zechariah 4:10

அற்பமானவை


அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?
சகரியா 4 : 10


சகரியா தீர்க்கதரிசி எந்த சூழ்நிலையில் இந்த கேள்வியை கேட்டுள்ளார் என்பதை குறித்துப் பார்க்கலாம்.


கேள்விக்கான பின்னணி


இஸ்ரயேல் பாபிலோனில் இருந்து விடுவிக்கப்பட்டு நகரத்தையும், ஆலயத்தையும் மீண்டும் எடுப்பித்துக் கட்டுவதற்காக எருசலேமுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்ட காலம் அது.


அவர்கள் திரும்பி வந்தபோது 49 வருஷங்கள் பாழாய் கிடந்த தேசத்தின் நிலையை கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர்.


அலங்கமும், ஆலயமும், சிதிலமடைந்து மனுஷருடைய குடியிருப்புகள் இடிபாடுகளாக காணப்பட்டு, அந்த இடம் ஒரு நகரம் போல் அல்லாமல் வனாந்தரம் போல காட்சியளித்தது. அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் அவர்கள் எங்கிருந்து மீண்டும் கட்டத் தொடங்கியிருப்பார்கள் ?


சகரியா தீர்க்கதரிசியின் கேள்வியைக் கவனிக்கும் போது பல விஷயங்களை அதிலும், விசேஷமாக சிறிய அற்ப காரியங்களின் முக்கியத்துவத்தையும் குறித்து புரிந்து கொள்ள முடிகிறது!


இவை பெரிய காரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் முக்கியமானவையாக இருக்கின்றன


அங்கே, ஆலயத்தின் கட்டிடத்திற்கு பல தனித்தனி கற்கள் தேவைப்பட்டன. அதாவது, பெரிய கட்டிடத்தை உருவாக்கும் சிறு சிறு கூறுகள் தேவைப்பட்டன. தனித்தனி கற்கள் இல்லாமல் எந்த ஒரு ஆலயத்தையும் உருவாக்க முடியாது.


எனவே, படிப்படியாக ஒவ்வொரு கல்லாக ஏற்படுத்தி வைத்து கட்டத் தொடங்குங்கள் என்பதே அன்றைய தினத்தில் தீர்க்கதரிசியின் செய்தியாக இருந்தது.


கிறிஸ்துவுக்குள்


ANNA AND SAMUEL


நிழல் பொருள்


நிழல்


1சாமுயேல் 1:24

அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார், அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்,


பொருள்


சாமுயேல்:

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து


அன்னாள்:

உடன்படிக்கை (உதாரணம்: கலாத்தியர் 4:23-26)


3 காளைகள்:

முழு பலத்துடன் நம் ஆண்டவர் ஜீவனை கொடுப்பார் (மீட்கும் பொருள்) என்பதை அடையாளப்படுத்துகிறது.(மத்தேயு 12:40,27:63)


1 மரக்கால் மாவு:
தன் சரீரத்தை பலியாக செலுத்துவார் (எபிரேயர் 10:5)


திராட்சை ரசம்
எல்லா பாடுகளுடன் செலுத்துவார்.(யோவான் 6:54, கொலே1:20)


கிறிஸ்துவுக்குள்


13. ARE WE HEBREWS

Hebrew = எபிரேயர்= עברי = IVRI = One Who Crosses Over = கடந்து செல்பவர்.


ஆபிரகாம் அவர்கள், யூப்ரடீஸ் நதியின் மறுகரையில், சிலை வழிபாடு நிறைந்த கல்தேயரின் mesopatomia (ஈராக்)இல் உள்ள ஊர் என்னும் ஊரில் இருந்து கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து, வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு (கானான்) நுழைவதற்குக் கடந்து சென்றதால், அவர் எபிரேயர் (கடந்து செல்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.


நாமும், நமது முந்திய உண்மை அல்லாத வேறு வழிபாட்டு முறைகளை விட்டு, கடவுளின் அழைப்பிற்கு அடிபணிந்து, நமக்கு வாக்களிக்கப்பட்ட பரமகானானை நோக்கி செல்வதால், நாமும் எபிரேயர் (கடந்து செல்பவர்கள்).<hr>

பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.


14. THE THREE PASCAH IN JESUS'S LIFE

அன்பானவர்களே 🙏


கேள்வி


நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்தது முதல் அனுசரித்த பஸ்கா எத்தனை?


அனுசரித்தது: மூன்று பஸ்கா


நான்காம் பஸ்காவை அனுசரிக்க ஆசையாயிருந்தார்; ஆனால் அனுசரிக்கவில்லை; ஏனென்றால், அவரே அந்தப் பஸ்கா.


விளக்கம்


FIRST PASSOVER

யோவான் 2 :13 -15
பின்பு யூதருடைய பஸ்கா பண்டிகை சமீபமாயிருந்தது, அப்பொழுது இயேசு எருசலேமுக்கு போய்"

"என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்".

இது முதலாம் பஸ்கா.


SECOND PASSOVER

யோவான் 5:1

யூதருடைய பண்டிகை

யோவான் 4:35
அறுப்புக் காலம் வருகிறதற்கு இன்னும் நாலு மாதம் செல்லும்.

யோவான் 5:1
பஸ்கா
யோவான் 5:9
அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது.

இது இரண்டாம் பஸ்கா.


THIRD PASSOVER

யோவான் 6:4
அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.

இது மூன்றாம் பஸ்கா


யோவான் 12:1
பஸ்கா பண்டிகை வர ஆறு நாளைக்கு முன்னே

லூக்கா 22:15
இந்தப் பஸ்காவை புசிக்க ஆசையாயிருந்தேன்.

நான்காம் பஸ்காவை, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனுசரிக்கவில்லை; ஏனென்றால், அவரே அந்தப் பஸ்கா.


கிறிஸ்துவுக்குள்


THE NORTH IN GOD'S PLAN


கடவுளின் திட்டத்தில் வடக்கு

அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,* 

லேவியராகமம் 1:10


கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன், அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

லேவியராகமம் 1:11

மந்தையிலிருந்து பலி கொடுக்கப்பட்டால் ஒரு காளை அல்லது ஆடு பலிபீடத்தின் வடபுறத்தில் கொல்லப்பட வேண்டும் இது தற்செயலாக நடக்கக் கூடிய ஒரு காரியம் அல்ல 


ஆசரிப்பு கூடாரத்தில் நுழைவுவாயில் கிழக்கில் இருந்தது  பலிபீடம் மையத்திலிருந்து *வடபக்கம்*  அங்கு தான் மிருகங்கள் கொல்லப்பட்டது

யாராவது தகனபலிக்காக கொண்டு வரும்போது கிழக்கு வாயிலிலிருந்து உள்ளே வந்து வடபக்கமாக கொண்டு செல்லப்படும்


ஏன் வட பக்கத்தில் பலி கொல்லப்பட்டது கடவுள் சாதாரணமாக எதையும் செய்யவில்லை இதிலும் ஆழமான அர்த்தங்களை வைத்துள்ளார்

பாவ நிவாரண பலிகளும் குற்ற நிவாரண பலிகளும் வட பக்கத்தில் கொல்லப்பட்டன எனவே பலி *நீதியை* சந்தித்த இடம் 


கிறிஸ்துவுக்குள் இருக்கும் நமக்கு வலப்பக்கம் என்பது வேதாகமம் முழுவதும் நியாயத்தீர்ப்பை பற்றி சொல்லக்கூடிய காரியமாக இருக்கிறது

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.*

எரேமியா 1:14


வடக்கு திசை என்பது நியாயத்தீர்ப்பு மற்றும் கடவுளின் பிரசன்னம் ஆகும் இடமாகும் 

வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்*. 

சங்கீதம் 48:2


வடக்கு பகுதி இரண்டு உண்மைகளை சந்திக்கும் இடமாக இருக்கிறது கடவுளின் நீதி மற்றும் கோபம்

அது பாவம், நியாயம் தீர்க்கப்படும் இடமாகவும் பாவத்திற்கு நிவாரணம் தொடங்கும்  இடமாகவும் இருக்கிறது


இந்த பலிகள் கிறிஸ்துவை அடையாளப்படுத்தக் கூடியதாக இருக்கிறது

இப்பொழுது கிறிஸ்துவை பாருங்கள் அவரே தகன பலியின் நிறைவேறுதலாய் இருக்கிறார்

அவர் கர்த்தருக்கு முன்பாக பலியிடப்பட்டார் 

பாவத்தின் முழு தீர்ப்பையும் ஏற்றுக் கொண்டார்

அவர் நமக்கு பதிலாக நம்முடைய பலியாக இருந்தார் லேவியராகமத்தில் உள்ள விலங்கைப் போலவே 

அவருடைய மரணம் சாதாரணமானது அல்ல தெய்வீகமாக நியமிக்கப்பட்டது அதுவும் *இடத்தில்* கூட நிச்சயிக்கப்பட்டிருந்தது


ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.*

எபிரேயர் 13:11

அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.* 


எபிரேயர் 13:12

ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம்.

எபிரேயர் 13:13

வரலாறு குறிப்பிட்ட இடத்தை குறித்து சொல்லப்படுகிறது *கபாலஸ்தலம்* கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடம் 

எருசலேமின் வடக்கு சுவருக்கு எதிரே தமஸ்கு வாயிலுக்கு அருகாமையில் அமைந்திருந்தது.


(Golgotha, the site of Jesus' crucifixion, is believed to be located outside the city walls of Jerusalem. The traditional site of Golgotha is now within the Church of the Holy Sepulchre, a significant pilgrimage site for Christians.


Direction:

The Church of the Holy Sepulchre is situated in the northwest part of Jerusalem's Old City, near the Damascus Gate. If we consider the orientation of the city, Golgotha would be:

- *Northwest of the Temple Mount*: The site is located outside the city walls of ancient Jerusalem, which would have been northwest of the Temple Mount.

*Near the current location of the Church of the Holy Sepulchre*: This site has been venerated as the place of Jesus' crucifixion and burial.)

இதுதான் கிறிஸ்துவின் மரணத்தை *வடக்கு* என்ற திசையில் வைக்கிறது.


இது கடவுளின் தீர்ப்பு மற்றும் பிரசன்னத்தை அணுகுவதோடு இணைக்கப்பட்டுள்ளது

ஆகையால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அந்த மலையில் சிந்தப்பட்ட போது பலிபீடத்தின் அக்கினி அதன் முழு சுடரை எட்டியது போல் இருந்தது நீதியை திருப்தி படுத்தியது மற்றும் கிருபையின் சிங்காசனத்தின் வழியை திறந்தது ஆனால்

அது அங்கே முடிவடையவில்லை சுவிசேஷம் அடிப்படையில் பெந்தகோஸ்தே நாளுக்கு பிறகு ஆரம்பகால அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தை எருசலேமில் இருந்து அதாவது தெற்கு அந்தியோகியா ,ரோம், ஐரோப்பாவுக்கு அதாவது வடக்குக்கு சுவிசேஷத்தை கொண்டு சென்றனர் இருளின் இடத்திற்கு வெளிச்சத்தை கொண்டு சென்றனர்.

கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது*. சங்கீதம் 75:6


  • வடக்கிலிருந்து தான் ஜெயம் வரும் 
  • ஆகையால் வடபக்கம் என்பது திசை மட்டுமல்ல கிறிஸ்து தீர்ப்பை சந்தித்து உறவுக்கான வாசலை திறந்த இடம்.

கிறிஸ்துவுக்குள்


PROVERBS 22:3
The prudent see danger and take refuge, but the simple keep going and pay the penalty.
எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்: அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

அன்பானவர்களே

ஞானத்தின் ஊற்று


கேள்வி:

*நீதிமொழிகள் 22 : 3* 

இவ்வசனத்தின் ஞான அர்த்தம் என்ன ?

ஞானம்

விவேகி - என்பதன் பொருள் ஜாக்கிரதையாக தெளிவாக செயல்படுபவர். 

அதாவது தெய்வீக சட்டங்களை அடிப்படையாக கொண்டு பகுத்தறிவோடு செயல்படும் அர்ப்பணிக்கப்பட்டவர்.


*விவேகி இரண்டு வகுப்பார்* 

அவர்கள் வருகின்ற உபத்தரவத்தில் தெய்வீக பாதுகாப்பை எதிர்பார்க்கலாம். 

1.  குறிப்பிட்ட வயதில் பகுத்தறிந்து விவேகத்தோடு ஒப்புக்கொடுத்த பிள்ளைகள்.
2.  உபத்தரவ நேரத்தில்  ஒப்புக்கொடுக்கின்ற சிலர்.


3.  தேவையானது இல்லாமல் அற்புதமான உதவிகளை நாம் எதிர்பார்க்கக்கூடாது. தலையை உயர்த்தி சிறந்த நியாயத்தீர்ப்பை நாம் உபயோகப்படுத்த வேண்டும். நம்பிக்கையோடு கடவுளுடைய தெய்வீக பாதுகாப்பின் வழிநடத்தலுக்கு விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்.

*ஆபத்தை கண்டு மறைந்து.* 

*மகா உபாத்திரவ காலம்.*


உபத்திரவத்தின் காலம் இரண்டு வகையானது.

*உபத்திரவங்களுக்கும் பிரித்தெடுத்தலுக்கும்* எந்த சபையின் அங்கத்தினர்களும் தப்பமுடியாது.

தற்போதைய அமைப்புகள் அழியும்போது உண்மையான கடவுளுடைய பிள்ளைகள் இவைகளுக்கெல்லாம்  தப்பிக்காக்கப்படுவார்கள் *லூக்கா 21:36* 


ஒரு பெற்றோர் தன் குழந்தையை சிறந்த குணலட்சணத்தில் வளர்ப்பதே மிக சிறந்த பாரம்பரியமாகும். 

1.  நீதி என்கிற பொன்னான கட்டளை 

2.  இரக்கம் (கருணை) உதவி செய்யக்கூடிய உணர்வு 


3.  சாந்தம் பெருந்தன்மை 

4.  எல்லாவற்றிலும் சிக்கனம். 

ஒருவரும் உற்சாகம் இல்லாமல் முறைகேடாக மகா உபத்திரவ காலத்திற்கு தப்பித்து கொள்வதற்காக உடன்படிக்கை செய்ய வற்புறுத்த கூடாது. 


*மறைந்து கொள்ளுகிறான்*

தன்னையும் தன் குடும்பத்தையும் கடவுளின் கிருபைகளால் சிறப்பாக நடத்துகிறவன் கடவுளுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சத்தியத்திற்கும் கூட ஊழியம் செய்கிறார்.

பாதுகாப்பான இடத்தை தேடுவதற்கு பதிலாக *செப்பனியா 2:3* இல் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வீக வழிநடத்துதலின் கீழ் உள்ள பாதுகாப்பான நிலையை தேட வேண்டும்.


 *பேதைகள்* :

யார் இந்த *பேதைகள்*?

இவர்களும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் ஆனால் விசுவாசத்தின் வைராக்கிய குறைச்சலினால் உலகத்தின் இச்சைகளில் மாட்டிக் கொண்டு உலகத்திற்கு வரும் நியாய தீர்ப்பில் இவர்கள் மாட்டி விடுகிறார்கள்.

*தண்டிக்கப்படுகிறார்கள்* 


கடுமையான அனுபவங்களினாலும் இயற்கையான விதிமுறைகளின் *விளைவுகளை கவனியாததினாலும்* தண்டிக்கப்படுகிறார்கள்.


கிறிஸ்துவுக்குள்


THE REMOVAL OF KING SAUL'S GARMENTS CORNER - I SAMUEL 24:4,5

 அன்பானவர்களே 🙏

 நிழல் நிஜம்

நிழல்:

 சவுல் ராஜாவின் வஸ்திர தொங்கல் அறுக்கப்பட்டது! 

*நிஜம் கவனிக்கவும்*

*முதலில்* , 

பண்டைய காலத்தில் *ஒரு வகையில்* நீண்ட வஸ்திரமானது அவர்களுக்கு இயற்கை உபாதைகள் நேரத்தில் தன்னுடைய சரீரத்தை மறைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படும்.

அதனால் தான் ஆங்கிலத்தில் வாசிக்கும் பொழுது " *To cover his feet* " (தமிழில் - மலஜாதிக்கு) என்று இருக்கும்.

மேலும் இராஜாக்களின் வஸ்திரமும் இதுபோல் நிண்டுதாக இருக்கும்.

பிறனுடைய வஸ்திரத்தை எடுக்கக் கூடாது என்பதும் பிரமாணத்தில் உள்ளது (Ex 22:27)

*இரண்டாவது* ,

இந்த இடத்தில் தாவீது அவர்களின் *முழு கவனமும் அபிஷேகத்தின்* மீது காணப்பட்டது என்பது தெளிவாகின்றது.

தாவீது அவர்கள் கடவுளின் மனுஷன் பிரமாணத்துக்கு உட்பட்டவர். 

*ஆதலால்* தாவீது அவர்களுக்கு தெரியும், தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் மீது கனவீனுமான காரியத்தை ஏற்படுத்துவது தவறு என்று.

ஒரு வகையில் இராஜாவை கொல்லாமல் விட்டது தாவீது அவர்களின் உயர்ந்த பண்பை *காட்டினாலும்* , 

கடவுள் அபிஷேகம்: பண்ணவரை கனவீப்படுத்துவது தேவனின் உயர்ந்த செயலை (அபிஷேகம்) கனவினப்படுத்துவதற்கு அடையாளம். 

சவுல் அவர்கள் இஸ்ரயேலின் ராஜா அதாவது தேவன் சார்பாக நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டவர். 

அவரை தேவனே நியாயம் தீர்க்க வேண்டும் என்று இன்னொரு சம்பவத்தில் தாவீத் அவர்கள் சொல்லி இருப்பார் (1 சாமு 26:10)

ஆதலால் நிஜத்தில்

தேவ ஏற்பாடாகிய அபிஷேகத்தை/ அங்கீகரிப்பை பெற்றவர்களை நாம் எந்த சூழ்நிலையிலும் கனவீனப்படுத்தக் கூடாது.

கிறிஸ்துவுக்குள்

RACHEL AND BENJAMIN - GENESIS 35:17-19

நிழல் நிஜம்


நிழல்: 

ஆதியாகமம் 35:17-19

பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.

மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள் 

ஆதியாகமம் 35:17-19


 நிஜம்

💠 ராகேல் மரித்து பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியிலே அடக்கம் பண்ணப்பட்டார்.

💠 பென்யமீனின் பிறப்பு, திரள் கூட்டத்தின் நிறைவை அடையாளப் படுத்துகிறது.

💠 இந்த சமயத்தில் யோசேப்பையும் (நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மற்றும் சபை) மற்றும் பென்யமீனையும் (திரள் கூட்டம்) வெளிக்கொணர்ந்த ஆவிக்குரிய (சாராளின் - ஆபிரகாமின் உடன்படிக்கை) உடன்படிக்கையானது முடிவுக்கு வந்திருக்கும் (ராகேலின் மரணம்) .


கிறிஸ்துவுக்குள்


THE CAVE OF MACHPELAH

*மக்பேலா குகை*

🏮யாக்கோபு தன் வாழ்க்கையின் முடிவை நெருங்கும் போது தன் மகன்களுக்கு ஒரு இறுதி அறிவிப்பை கொடுத்தார்

🏮யோசேப்பின் பாதுகாப்பில் ஆறுதலை அனுபவித்து எகிப்தில் பல ஆண்டு காலம் எகிப்தில் கழித்திருந்தாலும் அவர் ஆபிரகாமுக்கும், ஈசாக்கும் ,அவருக்கும் கொடுத்த வாக்குத்தத்தமாக கொடுக்கப் போகும் தேசத்தையே தன் இருதயத்தில் நினைத்திருந்தார்.

*ஆதியாகமம் 49 :29 -33 வரை* யாக்கோபு அவர்களிடம் தெளிவாக சொல்கிறார் நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படுவேன் *மக் பேலா* என்னும் குகையிலே என் பிதாக்களண்டையிலே என்னை அடக்கம் பண்ணுங்கள் இந்தக் கல்லறை வெறும் குகை மட்டுமல்ல தேவனுடைய உடன்படிக்கைக்கும் விசுவாசத்திற்கும் அடையாளமாக இருந்தது.

🏮ஆபிரகாம், ஈசாக்கு சாராள், லேயாள் ஆகியோர் அடக்கம் பண்ணப்பட்ட அதே இடம் இது யோசேப்பு தன்னுடைய தகப்பன் இறுதி அறிக்கையை கேட்டு பார்வோனின் அனுமதி பெற்று அதை பெறுகிறார் எகிப்திலிருந்து கானானுக்கு ஒரு பெரிய ஊர்வலம் செல்கிறது அதில் ரதங்கள் குதிரை வீரர்கள் எகிப்தின் பெரியவர்கள் யாக்கோபின் குடும்பத்தினர் அனைவரும் செல்கின்றனர் அனைவரும் ஆழ்ந்த துக்கத்தை காட்டுகின்றனர் .

🏮இது சாதாரண இறுதி சடங்கு அல்ல தேசிய அளவிலான துக்கம் எகிப்தில் 70 நாள் துக்கம் கொண்டாடிய பிறகு காணானுக்கு அருகில் உள்ள களத்தில் ஏழு நாள் துக்கம் காண்பிக்கப்பட்டது யோர்தானுக்கு அருகில் அவர்கள் துக்கம் அனுசரிக்கப்பட்ட இடம் *ஆபேல் மிஸ்ராயிம்* என்று அழைக்கப்பட்டது
இதன் பொருள் *எகிப்தியரின் துக்கம்*

*ஆதியாகமம் 50:11*

🏮எகிப்தியர்கள் தங்கள் சொந்த மக்களை விட யாக்கோபுக்காக அழுதனர் இது எகிப்தில் யாக்கோபு கொண்டுள்ள செல்வாக்கை காண்பிக்கிறது.

🏮 *மக்பேலா குகை* இரட்டைப் பகுதி அல்லது மடிக்கப்பட்ட இடம் என்று பொருள்படும் இது அடக்கம் மட்டுமல்ல உயிர்த்தெழுதலின் நம்பிக்கையும் குறிக்கிறது மரணம் முடிவல்ல .

🏮யோசேப்பு பார்வோனுக்கு அடுத்தபடியாக இருந்த போதும் தன்னை தாழ்த்தி தன் தந்தையை முத்தமிட்டு இறுதி ஊர்வலத்தில் பின் சென்றார் யாக்கோபு எகிப்தில் மரித்ததின் நிமித்தம் அவர் எகிப்தை தன் இறுதி வீடாக நினைக்கவில்லை அவர் எப்பொழுதும் அவருக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை இது காட்டுகிறது.

🏮 யாக்கோபின் மரணம் அது முற்பிதாக்களின் முடிவு மட்டுமல்ல அது ஆபிரகாமிடம் தொடங்கப்பட்ட ஒரு அத்தியாயத்தின் முடிவு.

🏮 *மக்பேலாவின்* குகையில் யாக்கோபின் அடக்கம் ஒரு முடிவைப் போன்று தோன்றலாம் ஆனால் தேவனுடைய திட்டத்தில் அது உயிர்த்தெழுதல், ராஜ்ஜியம், நீதிமான்களின் எதிர்கால மகிமை ஆகியவற்றின் தீர்க்கதரிசனம் முன்னோட்டமாக மாறுகிறது.

🏮 *எபிரேய மொழியில் மக்பேலா* என்ற வார்த்தைக்கு இரட்டை அல்லது மடிக்கப்பட்ட என்ற பொருள் அது வெறும் அடக்கம் செய்யப்பட்ட இடம் மட்டுமல்ல அது உயிர்த்தெழுதலுக்கான உறுதி மொழியாகும்.

🏮ஆபிரகாம் அந்த நிலத்தை வாங்கினார் ஆதியாகமம் 23ஆம் *அதிகாரம்*, தற்கால பயன்பாட்டிற்காக அல்ல நிரந்தர உடமையின் அடையாளமாக அவருடைய சந்ததிக்கும் நிரந்தர சுதந்திரமாக கொடுப்பேன் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பினார்.

🏮 *ஆதியாகமம் 17:8* ஆம்வசனம் யாக்கோபு அங்கு அடக்கம் பண்ணப்பட்டது அவர் ஒரு நாள் உயிர்த்தெழுந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் மறுபடியும் வாழ்வார் என்ற அவர் விசுவாசத்தை காட்டுகிறது.

🏮 *எபிரேயர் 11: 39,40* ஆம் வசனத்தில் குறிப்பிட்ட படி யாக்கோபு, ஆபிரகாம், ஈசாக்கு, லேயாள் ஆகியோர் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார் பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள் உயிர்த்தெழுதலுக்காககாத்திருக்கிறார்கள்.

🏮இரட்டைக் குகை என்பது இரண்டு உயிர்களை குறிக்கிறது தற்போது இருக்கும் வாழ்க்கை மற்றும் வரப்போகிற நித்திய வாழ்க்கை இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கல்லறையைப் பற்றிய தீர்க்கதரிசனமாகும்.

🏮பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு, மோசே இவர்கள் அனைவரும் பரலோகத்தின் அழைப்புக்கு அல்ல பூமிக்குரிய ஆசிர்வாதத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.

🏮ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் இவர்கள் மனித வாழ்க்கையை பூரணப்படுத்த பிரபுக்களாக இந்த பூமியை அரசாளுவார்கள், *சங்கீதம் 45:16.*

THE ALTAR OF SACRIFICE - THE SHADOW AND THE TRUTH

பழைய ஏற்பாட்டு காலத்தில் பலிபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன/ காண்பிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக வேதாகமத்தில் பலிபீடத்தின் பொருள் என்ன?!

நிஜம்:

முதலில்,

பழைய ஏற்பட்டு காலத்தில் பலிபீடம் என்பது, வெவ்வேறு பொருட்களினால் கட்டப்பட்டது/ உண்டாக்கப்பட்டது.

முதன் முதலில்,

நோவா அவர்களிடம் இருந்து இந்த பலிபீடமானது நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பலிப் பொருளானது பலிபீடத்தின் மீது நேரடியாக வைக்கப்படும்.

சில நேரங்களில், பலிபீடத்தில் நெருப்பிருக்கும், அதன் மீது *கட்டை இருக்கும், அதன் மீது* சமாதானம் பலி செலுத்தப்படும் - *லேவியர 3:5* .

*ஆக* ,

எந்த பலியாக இருந்தாலும் பலிபீடத்தின் மீது அது பிற்காலங்களில் செலுத்தப்பட்டது.

*அப்படி என்றால்,* பலி செலுத்துகின்றவர்கள் அனைவரும் பலிபீடத்தின் மீதுதான் பலி செலுத்த வேண்டும்.

*நம் கர்த்தராகிய இயேசுவும் பலி செலுத்தினார் எதன் மீது?*

தேவ *நீதிக்குள்ளாக தன்னை பலியாக செலுத்தினார்.
*மத்தேயு 3:14-15*

அப்படி என்றால்,

பலிபீடம் என்பது தேவ நீதியை அடையாளப்படுத்தும்.

நம் கர்த்தராகிய இயேசுவும் தேவனுடைய நீதியாகவே வாழ்ந்து ஜெயம் கொண்டார்.

அப்படிப்பட்ட ஒரு பலிபீடம் (நம் கர்த்தராகிய இயேசு) நமக்கு உண்டு.

அந்த பலிபீடத்தின் மீது விசேஷமான உணவுகள் உள்ளன அதை நாம் மட்டுமே ருசிக்க முடியும்.

அதை ருசிப்பவர்களும், புசிப்பவர்களும் தேவ நீதியாகவே தங்களை மாற்றிக்கொள்ளும் எண்ணங்களில் பலப்படுவார்கள்.

எபிரேயர் 13:10
1 பேதுரு 2:24

கிறிஸ்துவுக்குள்



Comments

Post a Comment