FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




THE GATE OF BLESSING | திறக்கப்பட்ட ஆசீர்வாத கதவு - Br. வேளாங்கண்ணி

THE GATE OF BLESSING

THE gate of blessing

ஆசிர்வதிக்கிற என் ஆண்டவரே..... ஆண்டவரே.

- நீர் வாசலில் நின்று கதவைத் தட்டின சத்தத்தினாலே, என் இதயம் திறந்து சதையாய் மாறினது:
நீர் கதவைச் சாத்தும் போது. நீர் அறிந்த கன்னிகையாய் உம்மோடே சேர்ந்து உள்ளே வர அனுமதியும்
பேதுருவின் மூலம் எங்களின் அழைப்புக் கதவைத் திறந்தவரே, ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும். ஒருவரும் திறக்கக் கூடாதபடி பூட்டுகிறவரும், பரலோகத்தின் திறவுகோல்களை உடையவராக நீரே இருக்கிறீர் --என் ஆண்டவரே!!

பேழையின் கதவு பூட்டப்பட்டு, ஏழுநாள் மழையில்லாமல்..நோவாவின் விசுவாசம் சோதிக்கப்பட்டதே;
இந்த ஏழையின் அறிவுக்கதவு திறக்கப்பட்டு ஏழாம் நாளின் திறப்புகளால்-
என் விசுவாசத்தை வர்த்திக்கச் செய்கின்றீர்; பல நேரம் என் மனக்கதவைத் தட்டுகிறீர்.
சில நேரம் நான் கதவைத்திறக்க யோசிக்கிறேன்; ஆனாலும், நீர்..-அத்துமீறாமல். எளியோனாகிய என் அனுமதிக்காக. பொறுத்திருக்கிறீர்..!

ஆ.... என் ஆண்டவரே.. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை நொறுக்குகிறவரே.. என்--நெஞ்சக்கதவு உமக்குமுன் எம்மாத்திரம்?

பூட்டின கதவுகளுக்குள் பிரவேசித்து, உம் சீடர்களின் சந்தேகத்தையும். தோமாவின் துணிகரத்தையும் பொறுத்துக்கொண்டவரே,

இதோ,இரும்புக்கதவும் உம் பிரசன்னத்தால், தானாய் திறவுண்டு.. பேதுருவை விடுவித்தீரே....
கதவின் கைப்பிடி என்னிடமே உள்ளது.
கனத்த இருதயத்தோடு திறக்கின்றேன்.--

கர்த்தாவே... உள்ளே ---வாரும்:
ஆம்..என் ஆண்டவரே...

பாவக்கதவு என் பாதையை அடைக்கப் பார்க்கிறது. உலக பாசக்கதவு எனக்கு அடைப்பை ஏற்படுத்துகிறது. ' என் யோசனைக்கதவு குழப்பத்தில் ஸ்தம்பிக்கிறது.

தட்டுங்கள் திறக்கப்படும். என்று நீர் தந்த தைரியத்தினால்,... நான் எட்டும் போதெல்லாம்..- எனக்கு, பரலோகத்தின் பலகணிக் கதவு திறக்கிறது.

உம் அறிவாகிய திறவு கோல்களினால், அழியாமை எனும் கதவு திறக்கக் கண்டேன். திரும்புகிற பக்கமெல்லாம் சோதோமின் கதவு

உலகம் திறந்து அழைக்கிறது:

விரும்பித் தேடின வாசற்கதவோ இருக்கமானதாய் உள்ளது;
ஆனாலும் உம்மாலே...அது இன்பமாய் உள்ளது.

ஆம்... என் ஆசிர்வாதக் கதவு - இனி ஒருபோதும் அடைபடாது. 

ஆமென்.


Comments