FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




WHY IS THIS SO? | இது எதனால்? | PROSE POETRY

why is this so?

Why is this so? prose poetry

இறைவா!  நீர் என்னை ஆசிர்வதிக்கிறீர். உமது அனுக்கரகத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள். என்பதால் அல்ல;

நீர் எங்களின் பாவதரித்திரத்தை எங்களில் நீக்கி எங்களை மன்னித்திருக்கிறீர்.-என்கிற உறுதியை ஸ்திரப்படுத்தும்படிக்கே.. எங்களை ஆசிர்வதிக்கிறீர்;

இறைவா!  எங்களை பாதுகாத்து பராமரிக்கிறீர். எங்களின் நீதியான நடத்தையினால் அல்ல நேர்மையான வாழ்க்கையினாலும்... அல்ல.

எங்களைக் காத்துக்கொள்ள எங்களாலேயே முடியாது என்பதாலும்....

நாங்கள் கெட்டுப்போவது உமக்கு சித்தமில்லை என்பதாலுமே..எங்களைக் காப்பாற்றுகிறீர்!!

எங்களுடைய அர்ப்பணிப்பை இறைவா, நீர் ஏற்றுக்கொள்கிறீர்... அர்ப்பணிப்பின் அருமையினால் அல்ல; முழுமையான கீழ்ப்படிதலும் காரணமல்ல.

காளையின் ரத்தத்துடன் கலக்கப்பட்ட ஆட்டின் ரத்தம் போல்...

எங்களுடைய சின்னச் சின்ன காரியத்திலும் நீர் பெரிய அக்கறை எடுத்துக் கொள்வதினாலேயே;

இறைவா!  நீர் எங்களைப் போஷிக்கிறீர்; கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உமக்கில்லை;


நல்ல கனிகளை நாங்கள் கொடுக்கிறோம் என்பதாலுமல்ல: நீர்.. நல்லாருக்கும் பொல்லாருக்கும் எல்லாம் தருகிறர்:

காக்கையும்.. குருவியையும் போஷிக்கிறீர். இவைகளைக் காட்டிலும் மேலானவர்களாக நீர் எங்களை எண்ணியதாலும், . எங்களுக்கு இன்னது தேவையென்று நீர் அறிந்திருப்பதாலும்... எங்கள் படியை எங்களுக்கு அளந்து போறிக்கிறீர்; 

இறைவா! உமது பரிசுத்த நீர்வாகத்தில் வேலை வாய்ப்பைத் தருகிறீர்;

நாங்கள்.. கற்றறிந்த கல்விமான்கள் அல்ல;
கற்றபடி நிலை நிற்கும் பக்திமான்களும் அல்ல;

கல்லையும் பேசவைக்கும் உமது ஆற்றலாலும்; உலக ஞானத்தை அவமாக்கும் உமது மெய்ஞானத்தாலும்;

பைத்தியக்காரர்களாகிய எங்களை வைத்தியர்கள் ஆக்குகிறீர்;

இறைவா!  எங்களை உயிரோடு வைத்திருக்கிறீர்; எங்களின் வாழ்நாள் நீடித்தது என்பதால் அல்ல. சரீரத்தின், சுயபெலத்தினாலுமல்ல:

நாங்கள் பாதி வயதில் எடுத்துக் கொள்ளாத படிக்கும்.

எங்களின் பலியின் ஜீவியம் முழுமையடையும் படிக்கும், எங்களுடைய ஜீவனை நீர்.. அருமையாய். எண்ணியிருப்பதாலுமே..

இறைவா! நீர் எங்களை வானத்தின் நட்சத்திரம் ஆக்குகிறீர்:

இது எங்களால் உண்டானதல்ல.. உம்முடைய ஈவு;

என் ஆண்டவான் புண்ணியத்தால் உண்டான தகுதியினாலும்

என் ராஜாவினால் எனக்குத் தரிப்பிக்கப்பட்ட நீதியினாலும்,

வேலியோரத்தில் இருந்த எங்களை- ராஜ விருந்துக்கு அழைத்த ராஜாவின் தயவுனாலும்,

எப்போதும் எங்களைக் கூடவே வைத்துக்கொள்ள விரும்பும் என் நேசரின் பிரியத்தினாலுமே!!

ஆமென். 


Comments

Post a Comment