FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




இந்த பாடத்தில், நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய "இரண்டு மகன்கள்" குறித்த உவமையை 3 கோணங்களில் அறிய போகிறோம்.


வாசிக்கலாம்:

மத்தேயு 21:28-32

28. மேலும் இயேசு, “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், “மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்“ என்றார்.

29. மேலும் அவர் மறுமொழியாக, “நான் போக விரும்பவில்லை “ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 

30. மேலும் அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, “நான் போகிறேன் ஐயா! “ என்றார்: ஆனால் போகவில்லை. 

31. மேலும் இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? “ என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே “ என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.


இங்கு, தந்தையின் சொல்லுக்கு போக விரும்பவில்லை என்று கூறிய மூத்த மகன், தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றும், 

போகிறேன் என்று கூறிய இளைய மகன், தந்தையின் பேச்சை உதாசீனப்படுத்தியதாக அறிகிறோம். 


Comments