FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




1. DISCOVER WISDOM - INTRODUCTION | வசனமும் சத்தியமும் | THE VERSE AND THE TRUTH

DISCOVER WISDOM - INTRODUCTION

DISCOVER WISDOM - INTRODUCTION

1. வணக்கங்கள் 🙂🙏

அன்புக்குரிய சகோதரரே, சகோதரியே!

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பின் வாழ்த்துக்கள்.


நாம் பைபிளை அதிகமாக படித்திருப்போம், அறிந்திருப்போம். இந்த பாடங்களில் நாங்கள் அறிந்த சில உண்மைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


👉 உங்களிடம் சில கேள்விகள், கேட்கலாமா? 🙂


▪️உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா?
▪️ஆசீர்வாதத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறதா?

நிச்சயம் அழிவை நோக்கி தான். முழு உலகமும் பாவத்தினாலும், போர்களினாலும் நிறைந்து உள்ளது.

இந்த அழிவுகள் மத்தியில், நமக்கு சந்தோசத்தை கொடுப்பது பைபிள் அறிவு மட்டும் தான்.

2. நாம் ஏன் பிறந்த்திருக்கிறோம்?

வாசிப்போம் -

ரோமர் 8:29 - தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, கடவுள் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

ஆம். நாம் கடவுளின் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதே கடவுளின் விருப்பம்.

இது தான் கடவுளின் விருப்பம்/திட்டம் என்றால், நாம் என்னவாக மாற வேண்டும்?

வாசிப்போம் -

கலாத்தியர் 4:19 - என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.

ஆம். நம்மிடம் கிறிஸ்து உருவாக வேண்டும். அது தான் கடவுளின் திட்டம்.


நம்மிடம் கிறிஸ்து உருவாக வேண்டும் என்றால், நமக்கு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி தெரிய வேண்டும்.

அவர் உலகுக்கு வந்தார். நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் அப்போஸ்தலர் பவுல் அடிகளார் என்ன கூறுகிறார்?

3. அப்போஸ்தலர் பவுல் அடிகளாரின் கூற்று என்ன?

வாசிப்போம் -

2 கொரிந்தியர் 4:4 - கடவுளின் சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

இந்த வசனத்தின் படி, பிசாசு அவர்களுடைய மனதை குருடாக்கினான். அப்படி என்றால் நம்முடைய மனது குருடாக்கப்பட்டுள்ளதா?

வாசிப்போம் -

எபேசியர் 1:19 - தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றுவேண்டிக்கொள்ளுகிறேன்.

ஆம். நம் மனக்கண்கள் குருடாக்கப்பட்டுள்ளது.

அப்படி என்றால்,
எதை நாம் அறிந்து கொள்ள முடியாத படி நம் மனக்கண்கள் குருடாக்கப்பட்டு உள்ளது?

நாம் கிறிஸ்துவாக மாற வேண்டும்.
ஆனால், அவரை (இயேசு கிறிஸ்துவை) பற்றி அறிந்து கொள்ள முடியாதபடி, நம் மனக்கண்கள் குருடாக்கப்பட்டுள்ளது.

4. எது இயேசு கிறிஸ்துவை பற்றி நமக்கு மறைக்க பட்டிருக்கிறது?

நமது பைபிளில், ஆதியாகமத்தில் இருந்து திருவெளிப்பாடு புத்தகம் வரை, நம் ஆண்டவரை பற்றியே கூறப்பட்டுள்ளது. 

வாசிப்போம் -

யோவான் 20:31 - இயேசுவானவர், கடவுளின் குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

ஆம். பைபிள் எழுதப்பட்டதே, நாம் இயேசு கிறிஸ்து - கடவுளின் குமாரன் என்று விசுவாசித்து, அவர் மூலம் நித்திய ஜீவனை - நிலை வாழ்வை பெற்று கொள்வதற்காக எழுதப்பட்டுள்ளது.

அப்படி என்றால், பைபிளில் உள்ளவைகளில், எது இயேசு கிறிஸ்துவை பற்றி நமக்கு மறைக்க பட்டிருக்கிறது? 🤔

5. எத்தனை புத்தகங்கள்?

நம்முடைய பைபிளில் 66 புத்தகங்கள் உண்டு. ஆனால், கத்தோலிக்க திருவிவிலிலிய மொழி பெயர்ப்பில், கூடுதலாக 9 புத்தகங்கள் - இனைத் திருமறை நூல்கள் என்று சேர்க்கப்பட்டு - மொத்தம் 75 புத்தகங்கள் உண்டு.

இன்னும், ரஷியா, எத்தியோப்பியா ORTHODOX பைபிள்களில் 79, 81 புத்தகங்கள் உண்டு.

இவைகளில் எது சரி?

a) 66
b) 75
c) 79
d) 81

வாசிப்போம் -

எபிரேயர் 10:23 - நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்;

நமது பைபிளிலேயே, எத்தனை புத்தகங்கள் உண்டு என்ற குறிப்பு உண்டு.

அதுவும் பழைய ஏற்பாட்டில் 39 + புதிய ஏற்பாட்டில் 27 = 66

என்று 66 தான் சரி என்று பைபிளில் இரண்டு குறிப்புகள் உண்டு.

அது எப்படி மறைபொருளாக உள்ளது என்று ஒன்றை இப்போது பார்க்கலாம். மற்றொன்றை வரும் பாடங்களில் அறிய போகிறோம்.

பைபிளில் கடவுளின் வார்த்தைகள் ஆகாரத்திற்கு ஒப்பிட்டு அப்பங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

வாசிப்போம் - 

எரேமியா 15:16 - உம்முடைய வார்த்தைகள் கிடைத்த உடனே அவைகளை உட்கொண்டேன் 

மத்தேயு 4:4 - அவர் பிரதியுத்தரமாக மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கடவுளின் வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதி இருக்கிறதே என்றார். 

மேலுள்ள படத்தை பார்க்கும் போது, ஆசரிப்பு கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் சமூகத்து அப்பங்கள் ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு அப்பங்கள் வீதம் இரண்டு அடுக்குகளாக அடுக்கப்பட்டிருக்கும். 

ஆம் இது கடவுளிடத்திலிருந்து கிடைக்கப்பெறும் இறை வார்த்தைகளான 

66 அப்பங்களை = 66 புத்தகங்களை குறிக்கும். 

லேவியர் 24:5-7

5. அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

6. அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,

7. ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.


6. எதனால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்?
வாசிப்போம் -

கலாத்தியர் 4:5 - காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

ஏனென்றால, எங்கு நியாய பிரமாணம் கொடுக்கப்பட்டதோ, அங்கு தான் நம் ஆண்டவர் பிறக்க முடியும்.
7. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள்
டிசம்பர் 25 - இயேசு கிறிஸ்து பிறக்கவில்லை என்று அனைவருமே அறிவர். ஆனால் பாரம்பரியத்தினால் அந்த நாளில் கொண்டாடி வருகின்றனர்.
இயேசு கிறிஸ்து எந்த வருடம் பிறந்தார் மற்றும் அவரது பிறந்த நாளும் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது.

அது எங்கு, எவ்வாறு பைபிளில் மறைபொருளாக கொடுக்கப்பட்டுள்ளது? எப்படி அதை கணக்கிட்டு அறிந்து கொள்வது என்று பின் வரும் பாடங்களில் கற்று கொள்ள போகிறோம்.
8. தீர்க்கதரிசன வருடங்கள்
நம் ஆண்டவர் மத்தேயு 23:37,38ஆம் வசனங்களில்

மத்தேயு 23: 37 - எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்;
38. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.

இஸ்ரயேல் நாடு - அழிய போவதை பற்றி ஆண்டவர் கூறிய வார்த்தை இது.


இது நிறைவேறி விட்டதா?
நிறைவேற போகிறதா?


ஆம். ரோம அரசர் 73AD இல், முழுவதுமாக இஸ்ரயேல் நாட்டை அழித்தார். இதை MASADA FALL என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்தபடியே, இஸ்ரயேல் நாடு மீண்டும் பெரும் போராட்டத்திற்கு பின்பு 1948AD ஆம் ஆண்டு மறுபடியும் ஒரு நாடாக உருவெடுத்தது.


73AD ஆம் ஆண்டு பைபிளில் உள்ளதா?


1948 ஆம் ஆண்டு பைபிளில் உள்ளதா?


இஸ்ரயேல் நாட்டுக்கு சம்பந்தபட்ட இந்த இரண்டு ஆண்டுகளும் பைபிளில் மிக தெளிவாக கடவுள் தந்துள்ளார்.


ஏன் இதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

வாசிப்போம் -

சங்கீதம் 90:12 - நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

வாசிப்போம் -

லூக்கா 12:56 - மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?

இவைகளை நாம் அறியும் போது, கடவுள் மேலும் அவரது வார்த்தைகள் மேலும் மிக பெரிய விசுவாசம் நமக்கு வரும்.

9. அந்தி = எதிர் கிறிஸ்து எப்போது வருவான்?
பரவலான சபைகளில் போதகர்கள், 'பெரிய' ஊழியக்காரர்கள் அந்தி = எதிர் கிறிஸ்து என்று ஒருத்தன் வரப்போகிறான் என்றும் அவன் 7 ஆண்டுகள் முழு உலகையும் ஆள போகிறான் என்று போதிக்கிறார்கள்.

ஆனால், முதல் நூற்றாண்டிலேயே எதிர் கிறிஸ்து வந்து விட்டான் என்று அப்போஸ்தலர் யோவான் அவர்கள் கூறுகிறார்.
வாசிப்போம் -

1 யோவான் 2:18 - பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக் = எதிர் கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் (எதிர்கிறிஸ்துக்கள்) இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

இங்கு பல அந்தி = எதிர் கிறிஸ்துக்கள் இருக்கிறார்கள் என்று முதலாம் நூற்றாண்டிலேயே கூறப்பட்டுள்ளது.

அப்படி என்றால், இப்போது அந்தி = எதிர் கிறிஸ்துக்கள் யார்?
10. 12 மாதங்கள் ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உண்டு என்று நாம் அனைவருமே அறிவோம். ஆனால் காலங்களை உண்டாக்கிய கடவுள் அதற்கு பைபிளில் சான்று தந்திருக்கிறார்.
வாசிக்கலாம் -
1 இராஜாக்கள் 4:7 - ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.
இங்கு ஒவ்வொரு மாதமும் ஒருவராக வருடத்திற்கு 12 நபர்கள் சாலமன் அரசருக்கு மளிகை பொருள் சேகரிக்கும் பணிவிடைக்காரர்களை பற்றி கூறப்பட்டுள்ளது.
ஆக, வருடத்திற்கு 12 மாதங்கள் தான் என்று பைபிள் சான்றளக்கிறது.
11. 30 நாட்கள்
அது போல, ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்று பைபிளில் குறிப்பு உண்டா?
நோவாவிடம் கடவுள் ஒரு பேழையை கட்ட சொன்னார். அதன் பின், 40 நாட்கள் தொடர்ந்து பெரு மழை பெய்தது.
இந்த பெரு மழை எந்த நாளில் துவங்கியது? வாசிப்போம் -
ஆதியாகமம் 7:11 - நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. 12. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
ஆக, பெரு மழை துவங்கியது = 2ம் மாதம் 17ம் தேதி
இப்போது பூமியில் அந்த வடியாத மழை தண்ணீர் எத்தனை நாட்கள் இருந்தது? வாசிப்போம் -
ஆதியாகமம் 7:24 - 24.ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
ஆதியாகமம் 8:3 - ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
தண்ணீர் வடியாமல் இருந்த நாட்கள் : 150 DAYS.
எந்த நாளில் தண்ணீர் வடிய துவங்கியது?
வாசிப்போம் -
ஆதியாகமம் 8:4 - ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
தண்ணீர் வடிய துவங்கியது : 7th மாதம் 17ம் தேதி.

ஆக, 7th Month 17 மற்றும் 2nd Month 17 - ஆகிய ஐந்து = 5 மாத இடைவெளி உள்ள நாட்களுக்கு இடை பட்ட நாட்கள் = 150.
அப்படி என்றால், ஒரு மாதத்திற்கு 150/5 = 30 நாட்கள்.
12. உலகத்தின் முடிவு எப்போது?
உலகம் எப்போது முடியும் என்று இயேசு கிறிஸ்துவுக்கு தெரியுமா? இப்போது தெரியும் என்றால் கண்டிப்பாக அவரது பிள்ளைகளுக்கு அதை தெரிவித்து இருப்பார்.
வாசிப்போம் -
லூக்கா 21:8 - அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது இருக்கும் என்றும்
இந்த உலகத்தின் முடிவு குறித்தும் நமது பைபிளில் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதை எவ்வாறு அறிந்து கொள்வது?
13. ஏன் நமக்கு பைபிளின் வார்த்தைகளை படித்தால் புரியவில்லை?
நாம் பைபிளை இவ்வளவு நாட்கள் கருத்தாய் படித்திருந்தாலும், ஏன் நாம் இன்னும் மேல் கூறியவைகளை அறிந்திருக்கவில்லை?

வாசிப்போம் -
லூக்கா 9: 44 - நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45. அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது, அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.

ஆம். ஆதியாகமத்தில் இருந்து திருவெளிப்பாடு வரை உள்ள அனைத்து வசனங்களும மறை பொருளாகவே கொடுக்கபட்டுள்ளது.

அப்படி என்றால், அதை எப்படி அறிந்து கொள்வது? வாசிப்போம் -
மத்தேயு 7:7 - தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்.

அந்த மறை பொருள்களை கண்டடைந்தால் நமக்கு என்ன ஆகும்?

வாசிப்போம் -
யோவான் 8:32 - சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

அடுத்த பகுதியில்
  • வசனம் என்றால் என்ன?
  • சத்தியம் என்றால் என்ன?
    என்று அறிவோம்.
  • 14. வசனத்திற்கும் சத்தியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    சத்தியம் நம்மை விடுதலை ஆக்கும் என்றால் வசனத்திற்கும் சத்தியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? 


    வாசிக்கலாம் - 

    எசேக்கியேல் 7:6,7  - முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது. 

    7. தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.


    மலைகள் என்றால் என்ன அர்த்தம்?


    வாசிக்கலாம் - 

    தானியேல் 9:16 ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய = மலையாகிய  எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்.

    ஆம். பைபிளில் மலை / பர்வதம் / MOUNTAIN என்பது ராஜ்ஜியங்களை / நாடுகளை  குறிக்கும். 

    அப்படி என்றால், மலைகளில் சந்தோஷ சத்தம் இல்லை என்றால் = நாடுகளில் சந்தோஷம் இருக்காது என்று அர்த்தம். 


    15. முடிவு காலங்கள் எப்படி இருக்கும்?

    இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர் நோக்கி பல கிறித்தவர்கள் உள்ளனர். அந்த முடிவு காலங்கள் எப்படி இருக்கும்? 

    சில வசனங்கள்... 

    வாசிப்போம் - 

    ஆமோஸ் 5:17 - எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    திராட்சை தோட்டம் என்பது ஆசீர்வாதம் / ஆசீர்வாதமான இடத்தை குறிக்கும். 

    இவ்வசனம், ஆசீர்வாத மான இடங்களில் (எ.கா : ஸ்விட்சர்லாந்து போல) கூட புலம்பல் இருக்கும் என்று எச்சரிக்கிறது. 


    16. மேலும் சில முடிவு கால எச்சரிப்பின் வசனங்கள்:

    வாசிப்போம் - 

    எசேக்கியேல் 7:19,25,26

    19. தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது;

    25. சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.

    26. விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.

    இப்படி பட்ட காலங்களில் இருந்து, நம் ஆண்டவர் நம்மை மீட்பதற்கு நமக்கு சத்தியம் தேவை. 

    வாசிப்போம் - 

    யோவான் 8:32 - சத்தியத்தை அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். 


    எதில் இருந்து விடுதலை ஆக்கும்? 


    நாம் அடிமைப்பட்டிருக்கும் அறியாமையில் இருந்து, அடிமைத்தனத்தில் இருந்து, இருளில் இருந்து விடுதலை ஆக்கும். 

    17. சாத்தானுக்கு சத்தியம் தெரியுமா?
    வாசிப்போம் -
    மத்தேயு 4: 5,6

    5. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:

    6. நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

    இவ்வசனத்தில், சாத்தான், சங்கீதம் 91:11,12 வசனங்களை மேற்கோள் காட்டி நம் ஆண்டவரை சோதிக்க பார்க்கிறான்.


    சங்கீதம் 91:11,12

    11. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

    12. உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

    இதன் மூலம், சாத்தானுக்கு வசனம் நன்கு தெரியும் என்பது புலனாகிறது.

    ஆனால், அவனுக்கு சத்தியம் தெரியுமா?

    வாசிப்போம் -

    யோவான் 8:44

    44. நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

    ஆம். சாத்தானுக்கு வசனம் மட்டும் தான் தெரியும். ஆனால், அதினுள் இருக்கும் சத்தியம் தெரியாது.


    அப்படி என்றால், வசனம் வேறு - சத்தியம் வேறு என்பதை அறிகிறோம்.

    அதே சமயம், வசனத்திற்குள் சத்தியம் மறைந்துள்ளது என்பதை அறிகிறோம்.

    18. இஸ்ரயேல் மக்களுக்கு சத்தியம் தெரியுமா?

    வாசிப்போம் - 

    ரோமர் 9:4 - அவர்கள் இஸ்ரயேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

    இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்திருந்த போது, இஸ்ரயேல் மக்களோடு தான் இருந்தார். அவர்களிடமும் வசனம் இருந்தது. ஆலயத்திலும், பரிசேயர் சதுசேயரிடமும் வசனங்களை கொண்டு கேட்ட கேள்விகளுக்கு ஆண்டவர் பதில் அளித்தார் என்று வாசிக்கிறோம். 

    அவர்களிடம் இருந்த வசனங்களில் இசுரயேலர்கள், நம் ஆண்டவரை தான் தேடி கொண்டிருந்தனர். 

    வாசிப்போம் - 

    மீக்கா 5:2 - எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

    ஏசாயா 9:6 - நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    சகரியா 9:9 - சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

    இது போல இன்னும் பல வசனங்கள் உண்டு. 

    இருந்தும், ஏன் அவர்கள் இயேசு கிறித்துவை விசுவாசிக்கவில்லை?

    ஏனென்றால, அவர்களுக்கும் வசனம் மட்டும் தான் தெரிந்தது. சத்தியம் தெரியவில்லை. 

    வாசிப்போம் - 

    யோவான் 8:45 - நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.

    அவர்களுக்கு சத்தியம் தெரிந்திருந்தால், அவர்கள் நம் ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். 

    வாசிப்போம் - 

    லூக்கா 9: 44,45

    44. நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.

    45. அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது, அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.

    நம்மை விட, இசுரயேலர்கள் வைராக்கியமும், வசன அறிவும் உடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும், அது அறிவுக்கேற்ற வைராக்கியம் அல்ல என்று அப்போஸ்தலர் பவுல் அடிகளார் கூறுகிறார். 

     

    19. ஏன் அறிவுக்கேற்ற வைராக்கியம் அல்ல?

    ஏன் அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல என்று பவுல் அடிகளார் கூறுகிறார்?


    வாசிப்போம் - 

    ஓசியா 8: 12 - என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். 

    நாமும் கிறித்தவர்களாக இருந்தாலும், நம் ஆண்டவரை பற்றி முழுமையாக அறியாமல் இருக்கிறோம். 

    வாசிப்போம்:

    ஓசியா 4: 6 - அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தாய்; நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன். நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்; நானும் உன் மக்களை மறந்து விடுவேன்.

    நமக்கும் இஸ்ரயேல் மக்கள் போல வசனம் தெரியும். 

    அப்படி என்றால் சத்தியம் என்றால் என்ன? 

    வாசிப்போம் - 

    யோவான் 17:17 - உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

    ஆம். வசனத்திற்குள் சத்தியம் உள்ளது. 

    அப்படி என்றால் வசனத்திற்குள் இருக்கும் சத்தியத்தை எப்படி அறிவது? 

    20. வசனத்திற்குள் இருக்கும் சத்தியத்தை எப்படி அறிவது?ஆகாரம்/தண்ணீர்

    வாசிப்போம் - 

    பிரசங்கி 11:1 - உன் ஆகாரத்தை தண்ணீர்கள மேல் போடு. அது பல நாட்களுக்கு பின்பு பலன் தரும். 

    இந்த வசனத்தின் படி நாம் செய்ய முடியாது. உணவை தண்ணீரில் போட முடியுமா? அதனால் எந்த பயனும் இல்லை. 

    இந்த வசனத்தில் உள்ள சத்தியம் என்ன?

    வாசிப்போம் - 

    யோவான் 17:17 - உண்மையினால் (சத்தியத்தினால்) அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை = சத்தியம்.


    நாம் நித்திய ஜீவனை அடைவதற்கு வசனத்தை மட்டும் போதாது. அதனுள் இருக்கும் சத்தியமும் அறிந்து கொள்ள வேண்டும். 

    சத்தியம் நம்மை பரிசுத்த படுத்தும். சத்தியம் வசனத்திற்குள் இருக்கிறது. 

    அதை தான் நாம் இறை வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க போகிறோம். 

    ஆம். பைத்தியமான நம்மை கடவுள் தெரிந்தெடுத்து அவரது ஞானத்தை தருகிறார். 

    ஒரு வசனம் புரியவில்லை என்றால், அது பைபிளில் உள்ள குறை இல்லை. நம்மிடம் தான் குறை உண்டு. 


    ஆகாரம் (உணவு) எதை குறிக்கும்? 

    ஆகாரம் இல்லை என்றால் நம் உடல் சோர்ந்து விடும். நாம் உயிரோடு இருப்பதற்கு சக்தியை தருவது  ஆகாரம் = உணவு. 

    அது போல, பைபிளில் நமக்கு ஜீவன் தருவது எது?

    வாசிப்போம் -  

    மத்தேயு 4:4 - அவர் மறுமொழியாக, “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் “ என மறைநூலில் எழுதியுள்ளதே “ என்றார். 

    ஆகாரம் =  கடவுளின் வார்த்தை 

    கடவுளின் வார்த்தையை தண்ணீரில் போட முடியுமா?

    அப்போ, தண்ணீர் என்றால் எதை குறிக்கும் 

    வாசிப்போம் 

    திருவெளிப்பாடு 17:15 - வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: “அந்த விலைமகள் நீர்த்திரள் = தண்ணீர் மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும். 

    ஆக, தண்ணீர் = ஜனங்கள் = மக்களை குறிக்கும். 


    பொது வாழ்க்கையில் கூட நாம் "அலை கடலென திரண்டு வந்திருக்கும் மக்களே" என்று அரசியல் கூட்டங்களில் மக்களை கடல் = தண்ணீரோடு தொடர்பு படுத்துவதை கேட்டிருப்போம். 


    யோவான் 5:39 - வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

    கடவுளின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கும் போது,  அதில் மறைந்துள்ள  சத்தியத்தை  அறிய முடியும். 


    நாம் அடுத்து வரும் பாடங்களில், எவ்வாறு பைபிளை படிக்க வேண்டும் என்று நாம் அறிய போகிறோம். வாழ்த்துக்கள்.

    Comments