பூமி என்னும் பிரமாண்டமான பள்ளிக்கூடம்
புவி ஈர்ப்பு விசையைப் போல ஈர்ப்புகளோடு தன்னைத்தானே சுற்றுகிற தானியங்கி பள்ளிக்கூடம்:
இறைமகனார் பயின்ற பள்ளிக்கூடம்: தேர்ச்சி பெற்ற ஆசாரியனாய்.--அவரின் சகல அதிகாரத்துக்குட்பட்ட பள்ளிக்கூடம்:
வித விதமான மனிதர்கள்....
வித்தியாசமான அனுபவம் பெற்று, ஜீவ விருத்தியடையும் பள்ளிக்கூடம்:... நாளை விருது பெறும் ராஜாக்களின் பலனை, விஸ்தாரமாக்கும் பள்ளிக் கூடம்.
கட்டணமில்லாத பள்ளிக்கூடம்;
உலக கருத்துகளை பொய்யாக்கும் பள்ளிக்கூடம்.
பரிணாமக் கொள்கைகளை புரிய வைக்கும் பாடக்கூடம்
நீதியின் சூரியனைச் சுத்தி, நீள் வட்டப் பாதையில், நியமப்படி இயங்கும் பள்ளிக் கூடம்.
பரம நிர்வாகத்தின் பாடங்களை -அனுபவமாக கற்றுத்தரும் ஆச்சர்யமான பள்ளிக்கூடம்:
நீதி என்னும் சட்டக் கல்வி அடிப்படைப் பாடம். மரித்தவரை உயிர்ப்பிக்கும் உயிரியல் பாடமும் உண்டு;
அழிவு என்னும் மரணத்தினால் மறுஜென்ம காலத்திலே, ஜீவனின் மதிப்பைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடம்;
இப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் பரிபூரண பட்டதாரியாக்கி.. தன்னுடைய சுதந்திரவாளியாக ஏற்றுக்கொள்ளும் பள்ளிக்கூடம்
இங்கே ..கர்த்தருடைய அடிச்சுவடு ... என்னும் சிறப்புப் பாடப்புரிவு உண்டு:
அனுதின சிலுவை என்னும் வகுப்புகளும் அதிலே
செயல் முறைப் பயிற்சியும் உண்டு: அர்ப்பணிப்போடு படிப்பவர்க்கு இது கிறிஸ்துவின் பள்ளிக்கூடம்
மட்டம் போடாமல் படிக்கிறவர்களும் உண்டு: படிப்பின் படியே பக்குவப்படுகிறவர்களும் உண்டு; படிப்பது போல நடித்து. உலகத்தைப் பார்த்து பரீட்சை எழுதி.. பரிசை இழந்து போவாரும் இங்கே உண்டு; இது சீக்கிரத்தில் முடியப்போகும் சிறப்பு வகுப்பு
உலகக் கல்வியை அவமாக்கிப் போடும் உயர்நிலைப் பள்ளிக்கூடம் இது:
ஒழுங்கை முதல் பிரமாணமாய்க் கற்றுத் தந்து ஒருமைப் பாட்டை ஓங்கச் செய்யும் பள்ளிக்கூடம்;
பரம பிதாவின் வல்லமையின் ஆதாரம்.. பூமி என்னும் பள்ளிக் கூடம். பரிசுத்தப் பிள்ளையின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிக்கூடம்.
பரம பிதாவின் வல்லமையின் ஆதாரம்.. பூமி என்னும் பள்ளிக் கூடம். பரிசுத்தப் பிள்ளையின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிக்கூடம்.
பரிபூரண மனிதர்களாகிய ஆசிரியர்களைக் கொண்டு பால்வெளி மண்டலத்துக்கும் படிப்பினை தரப்போகும் பள்ளிக்கூடம்.
ஆம்... எஜமானர் சொன்னார் -
"பூமி என் பாதபடி".. என்று.
ஆமென்!!
Comments
Post a Comment