YOUR MERCY | உமது இரக்கமே - திரு அருள் வேளாங்கண்ணி

YOUR MERCY

YOUR MERCY



இறைவா! நீர் நீதியில் ஆளுகிறீர்.. 
நியாயத்தில் விசாரிக்கின்றீர்.... வல்லமையால் படைக்கின்றீர்.. ஞானத்தால் நிறுவுகின்றீர்... அன்பாலே அரவணைத்து.... ஆறுதலாய் விளங்குகிறீர்....

இவையெல்லாம் உம் மகத்துவம்; ஈடில்லா தனித்துவம்:

நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யமானவராம்!!
நான் கண்ட ஆச்சர்யம். 
ஆம்; இது... இதுவே...இதுமட்டுமே உமக்கு முன் என் இருப்பு:

ஏனெனில், நீதி எனக்கு எதிர் நீச்சல்; அன்பு - இது எனக்குள் அரிய வளர்ச்சி! 
ஞானமும், வல்லமையும் என் ஆண்டவரின் ஆதரவே !!

ஆனாலும்- உம் இரக்கத்தால் 
- ஆவேன் நான் பூரணமே !

திரும்பிப் பார்க்கிறேன், யோவானைப் போல..
நான் எம்மாத்திரம்; 
என் தகப்பன்வீடு எம்மாத்திரம்?
காலத்தில்.. சுவிசேச யுகம் -- உம் இரக்கமே ! 
இத் தருணத்தில். என் ஜனனம்- உம் இரக்கமே! 
அவயத்தில் ஊனமில்லை - உம் இரக்கமே ! 
அறிவிலே- ஒன்றுமில்லை-- உம் இரக்கமே
ஆனாலும் ஒரு குறைவுமில்லை உம் இரக்கமே !

பிரகாரம் கடந்தது உம் இரக்கமே
பரிசுத்தஸ்தல தூபவாசம், உம் இரக்கமே ! 
திரை கடந்து நிலைப்படுதலும், உம் இரக்கமே!
ஏனெனில், நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யமானவராம்!!

நான் விழுந்தபின் எழுந்ததும் - உம் இரக்கமே!!
எழுந்த பின் இன்னும் நிற்பதும்-- உம் இரக்கமே! 
நிலை நின்று ஜெயிப்பதும் -- உம் இரக்கமே! 
ஜெயத்தினால் பெறும் பரிசும் -- உம் இரக்கமே !

ராகாபின் பிழைப்பு - யோசுவாவின் இரக்கம்,
ரூத்-தின் சிறப்பு-- போவாஸின் இரக்கம்; 
கிருபாசன சலுகை - கிறிஸ்துவின் இரக்கம்; 
என் பிரகாச மணக்கண் - உம் ஐஸ்வர்ய இரக்கம்;

மனதுருகி...

விரைந்தோடி...

கழுத்தைக் கட்டி..

முத்தமிடும், இவ்விரக்கத்தின் நோக்கம் தான் என்ன?

பாவ - தடுமாற்றத்தில் தாங்கிப் பிடிக்கவே!!
நல்- மன மாற்றத்தை - ஓங்கச் செய்யவே...

பார்வோனைப் போல் மனம் கடினப்பட்டால் உம்மை பயங்கரமானவராய்" பார்க்க நேரிடுமே!

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே; அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை;

அவைகள் காலைதோறும் புதியவைகள். 
உமது உண்மை பெரிதாயிருக்கிறது:

அவர் சஞ்சலப்படுத்தினாலும், தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

JEREMIAH 3:22
என்னைவிட்டு விலகிய மக்களே! திரும்பி வாருங்கள்: உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்: “இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
ஆமென். 


Comments