BLESSED CRACKED POT
தண்ணீர் சுமக்கும் மனிதன் ஒருவன் இரண்டு பானைகள் இணைத்த கம்பை தோளில் சுமந்து தூக்கிச் சென்றானே....
இரண்டில் ஒன்று விரிசல் பானை; இன்னொன்று நீர் நிறைந்த நல்ல பானை;
நீர் நிலையிலிருந்து..தன் நிலைக்கு [வீடு ]
தண்ணீர் வந்து சேர்க்கும் போது, இதோ சிந்தாமல் சிதறாமல்... தண்ணீர் நிறைந்து வந்தது.
சிந்தி சிந்தி தழும்பி சிறிது... சிறிதாய். கசிந்து, வழியெல்லாம்... வாசல் தெளித்தாற் போல். குறைவாய் தண்ணீர் கொடுத்தது.. கசிவுப் பானை.
நல்ல பானை நற்செயலால் தன்னில் நிறைவு கொண்டது, விரிசல் பானையோ... விக்கித்துப் போய் துக்கித்தது;
அந்தோ.. ஐயா- என் எஜமானரே...
உமக்கு நல்ல பலன் கொடுக்கும் நல்ல பானை எங்கே?
சிந்திக் கசியும் சிறுமையான நான் எங்கே?
உடைந்த பானையான என் செயல் உறுப்படியல்லவே; உமக்கு முன் உண்மை பலன் கொடுக்கவில்லையே; கசியும் தண்ணீர் போல, எனக்குள் கண்ணீர்
தழும்புகிறது;
என்ன செய்வேன். என் எழுமானனே.. என்றே வெதும்பி தவித்ததே...
நல்ல பானையையும்... விரிசல் பானையையும், லாவகமாக ஒரு சேரக்கையாளும் எஜமானனின் நிஜமான பதில் இதோ;
நல்ல பானையின் நற்செயல் எனக்குரியதே;
விரிசல் பானையின் விளைவும் எனக்கே உரியது.
வீட்டுக்குத் தேவையான வேலையை அது செய்தது.
வீட்டுக்குத் தேவையான வேலையை அது செய்தது.
வழிஓரத்துத் தேவைகளை - நீ செய்தாய்: வண்ண மலர்ச்செடியும் செழித்த கீரைகளையும், வரப்போரத்தின் வழியிலே... நான் நட்டேன்:
நீ சிந்தும் நீரினால் அதற்கு நீர்ப் பாய்ச்சினேன்;
இதோ பெலன் தரும் கீரையும்.... மணம் வீசும் மலர்களும்
உன்னுடைய வேலையினால் உயிர்பெற்று..பயிரானதே;
உருப்படியானதோ..கசியும் பாத்திரமோ... எதை... எங்கே.. எதை எதற்காகவோ எப்படிப் பயன்படுத்துவது... என்பது எனது தீர்மானம்; கலங்காதே...கசிவுப் பானையே...
நீ வீணான விரிசல் பானையல்ல
என்று சொன்னாரே!
ஆஹா, என்ன அருமையான எஜமானன்; என்னை ஆதரிக்கும் குணவாளன்;
கதையில் வரும் கசிவுப்பானை நானல்லவோ; நிஜத்தில் உள்ள.. எஜமானன் என் நாதனல்லவோ; ஆம் அவர் என் இயேசு நாதனே!
மார் தட்டும் நல்ல பானையாய் நான் இல்லாமல்; மார்பிலடித்துக்கொள்ளும் ஆயக்காரனாய் நான் மனம் கசந்து உருகும் போது, இறுக அணைத்து உச்சிமுகரும் ஈசாக்கே.... உம் முகப் போஷாக்கு எனக்குப் போதுமய்யா! உம்முடைய ரத்தப் பிசின் பசை எனக்கு ரத்தாம்பரம் -உடுத்தியது.
விரிசல் பானை, உம்மாலே விருது பெற்றது!!
ஆமென்.
Comments
Post a Comment