FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




2-B. METHOD 2: UNVEILING THE CORE MESSAGE | வசனத்தின் கருப்பொருள் அறிதல்

UNDERSTANDING SCRIPTURE - THE SIX METHODS - 2 of 6 (THE CORE MESSAGE)

UNDERSTANDING SCRIPTURE - THE SIX METHODS - 2 of 6 (THE CORE MESSAGE)

1. வசனத்தின் கருப்பொருள் அறிவது
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
கலாத்தியர் 1:3
நாம் முந்தைய பாடத்தில், ஒரு தலைப்பின் கீழ் படிப்பது என்ற வழிமுறையின் படி, ஆதாமை பற்றி சில கேள்விகளுக்கு விளக்கங்களை ஆராய்ந்து அறிந்தோம்.

இந்த பாடத்தில், ஒரு வசனத்தின் கருப்பொருளை அறிந்து படிப்பது என்றால் என்ன என்று சில விளக்கங்கள் பெறுவோம்.
நமது பைபிள் முழுவதும் உருவகங்களாக கொடுக்கப்பட்டுள்ளமையினால், வசனங்களின் அர்த்தம் நேரடியாக புரிந்து கொள்ள கூடாது/ முடியாது. வசனங்களை நிதானித்து அறிந்து, அதன் கருப்பொருளை அறிந்து படிக்க வேண்டும்.
2. மன்னா | இறை வார்த்தை

பழைய ஏற்பாடு காலத்தில், எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்கள், தங்களுக்கு வாக்களிக்கபட்ட கானான் நாட்டுக்கு செல்ல, மோசேயின் தலைமையில் வனாந்திர பிரயாணத்தை மேற்கொண்டனர்.

நாமும் அவ்வாறே, உலகத்தில் இருந்து பரம கானானாகிய பரலோகம் செல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தலைமையில் இந்த வனாந்திர பிரயாணத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம்.
அந்த வனாந்திர பிரயாணத்தில், கடவுள் வானத்தில் இருந்து தந்த மன்னா அவர்களுக்கு உணவாக இருந்தது.

நமக்கு இறை வார்த்தைகள் தான் மன்னாவாக = உணவாக இருக்கிறது.
வாசிப்போம்:
ஏரேமியா 15:16
16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது.
உபாகமம் 8:3, மத்தேயு 4:4
3மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
யோவான் 6:48-50
48 ஜீவ அப்பம் நானே.
49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்
50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.

அந்த மன்னாவை பெற்ற இஸ்ரயேல் மக்கள் அப்படியே சாப்பிட கூடாது.
எப்படி சாப்பிட வேண்டும்?
3. மன்னாவை எப்படி சாப்பிட வேண்டும்?

வாசிப்போம்:
எண்ணாகமம் 11:7,8
7 மன்னா கொத்துமல்லி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது.
8 மக்கள் வெளியில் சென்று அதைச்
சேகரித்தனர்,
அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது
உரலில் போட்டு இடித்தனர்
பானைகளில் அதை வேக வைத்து அதை
அப்பங்களாக சுட்டனர்.
அதன் சுவை ஒலிவ எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது.
ஆம். எவ்வாறு இஸ்ரயேல் மக்கள் அந்த மன்னாவை அப்படியே சாப்பிடாமல், சேகரித்ததை உரலில் அரைத்து, பொடியாக்கி, சுட்டு சாப்பிட்டார்களோ,
நாமும் நம்மிடம் இங்கொன்றாக அங்கொன்றாக உள்ள இறை வார்த்தைகளை சேர்த்து, ஆராய்ந்து அதை உட்கொள்ளும் விதமாக அப்பமாக சுட்டு, அதன் கருப்பொருளை அறிய வேண்டும். அப்போது தான், ஜீரணமாகும்.

வசனங்களில் உள்ள கடவுளின் திட்டமும் உட்கருத்தும் நமக்கு புரியும்.
நம் உடல் வளர்ச்சிக்கு, நாம் எப்படி உணவு உண்ணுகிறோமோ, அதுபோல - நம் ஆத்தும வளர்ச்சிக்கு இறை வார்த்தைகளை தேவை.
இப்போது, நம் அனைவருக்கும் தெரிந்த சங்கீதம் 1ஆம் அதிகாரத்தில் உள்ள ஒரு வசனத்தின் கருப்பொருளை கண்டு பிடிக்க போகிறோம். கண்டுபிடிக்கலாமா? 🙂
4. சங்கீதம் 1:1-2

வாசிப்போம்:
சங்கீதம் 1:1-2
1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து,
இரவும் பகலும்
அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு வசனம்.
இவ்வசனம், இரவும் பகலும், பைபிள் படித்து தியானமாயிருக்கிற மனிதன் பாக்கியவான் என்று கூறுகிறது.
ஆனால், ஒரு கேள்வி எழுகிறது?
ஒரு மனிதனால் இரவும் பகலும், அதாவது
இரவு 12 HOURS + பகல் 12 HOURS = 24 மணி நேரமும்,
பைபிள் படித்து தியானமாயிருக்க முடியுமா?
நாம் தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேன்டும். பிழைப்புக்கு வேலைக்கு செல்ல வேண்டும். சாப்பிட வேண்டும். வண்டி ஒட்ட வேண்டும்.

பின் எப்படி இரவும் பகலும் = 24 மணி நேரமும் பைபிள் படிப்பது?
நம்மால் முடியாத ஒன்றை கடவுள் செய்ய சொல்வாரா?
பைபிளில் உள்ள விசுவாச வீரர்களான தாவீது, சாலமன் கூட இவ்வாறு செய்யவில்லையே!
அப்படி இருக்க, அவ்வாறு இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிற மனிதன் தான் பாக்கியவான் என்று பைபிள் கூறுவதன் கருப்பொருள் என்ன?
5. இரவும் பகலும்

இரவு என்றால் இருட்டு,
பகல் என்றால் வெளிச்சம்.
அப்படித்தானே?
வாசிப்போம்:
யோபு 30:26
26 நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
இந்த வசனம், நன்மை என்பதை வெளிச்சத்திற்கும்
தீமையை இருளுக்கும் உருவகப்படுத்துகிறது.

அதாவது,

இரவு இருள் தீமை துன்பம்
பகல் வெளிச்சம் நன்மை இன்பம்

ஆம். இவ்விரு வசனங்களையும் நாம் சேர்த்து, நிதானித்து ஆராயும் போது, அதன் கருப்பொருள் புலனாகிறது.
சங்கீதம் 1:2
தீமையிலும் நன்மையிலும் (துன்பத்திலும் இன்பத்திலும்) கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்."
அதாவது, துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் இறை வார்த்தைகளின் மேல் அன்பு கொண்டு அவற்றை கருத்தாய் படிக்கும் மனிதன் பாக்கியவான்.🙂

இதை தான் யோபு செய்தார். வாசிப்போம்:
யோபு 2:10
கடவுள் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.
யோபு அனைத்தையும் இழந்த நிலையிலும், அவர் நன்மையிலும் தீமையிலும் அவர் கடவுளோடு உள்ள உறவை காத்துக் கொண்டார்.
6. அழுகையும் களிப்பும்
மற்றொரு வசனம் குறிப்புக்கு:
சங்கீதம் 30:5
சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

இந்த வசனத்திலும்,
சாயங்காலத்தில் உள்ள இருளை - அழுகை = துன்பத்திற்கும்,

விடியலில் வரும் வெளிச்சத்தை - களிப்பு = சந்தோஷத்திற்கும் அடையாளப்படுத்தபட்டுள்ளது.

சாயங்காலம் (இருளான காலம்) என்பது பாவம் நிறைந்த இவ்வுலக வாழ்வையும்,

விடியல் என்பது வரப்போகும் மகிழ்ச்சியான கடவுளின் அரசாட்சியை குறிக்கும்.
இது குறித்து பின் வரும் பாடங்களில் விரிவாக அறிய இருக்கிறோம்.
இது போல, ஒவ்வொரு வசனத்தையும் அதன் உள் அர்த்தத்தை நாம் ஆராய்ந்து படிக்கும் போது, கடவுளின் திட்டமும் அவரது சத்தியமும் வெளிப்படும்.
நாம் அடுத்த பகுதியில், இயேசு கிறிஸ்து கூறிய உவமைகளை எவ்வாறு அறிந்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வது என்று அறிவோம்.
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.

Comments