2-C. METHOD 3 : UNCOVERING THE HIDDEN MEANING IN THE PARABLES | உவமைகளில் மறைந்துள்ள உள் அர்த்தத்தை புரிந்து படிப்பது
UNDERSTANDING SCRIPTURE - THE SIX METHODS - 3 of 6 (LEARNING THROUGH PARABLES)
1. உவமை என்றால் என்ன?
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
கலாத்தியர் 1:3
நாம் முந்தைய பாடத்தில், வசனத்தின் கருப்பொருளை உணர்ந்து/ அறிந்து படிப்பது என்ற வழிமுறையின் படி, சில வசனங்களை நிதானித்து அதன் கருப்பொருளை அறிந்தோம்.
இந்த பாடத்தில், பைபிளில் உள்ள உவமைகளில் மறைந்துள்ள உள் அர்த்தத்தை அறிவது எப்படி என்று சில விளக்கங்களை அறிய போகிறோம்.
பைபிளில் பழைய ஏற்பாட்டில் 12 உவமைகள் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 50 உவமைகள் உள்ளன.
உவமை என்றால் என்ன?
ஒரு ஆழ்ந்த கருத்தை நேரடியாக கூறுவதற்கு பதிலாக, அதை ஒரு எளிய கதையாக உருவகப்படுத்தி கூறுவது.
நம்முடைய சிந்தனைக்கு சில உவமைகளையும், அதில் நமக்கு எழுகின்ற கேள்விகளையும் பார்ப்போம். அதன், விளக்கங்களை நாம் பின் வரும் வகுப்புகளில் விரிவாக படிக்க போகிறோம்.
2. புளித்த மாவு உவமை
வாசிப்போம்:
மத்தேயு 13: 33, லூக்கா 13:20-21
33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
நம் ஆண்டவர் கூறிய இந்த உவமையில், 33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
புளித்த மாவு என்றால் என்ன?
அந்த பெண் யார்?
மூன்று படி மாவு என்றால் என்ன?
அதை ஏன் ஒளித்து வைக்க வேண்டும்?
இந்த உவமையின் பொருள் தான் என்ன?
3. கடுகு விதை பெரிய மரமான உவமை
வாசிப்போம்:
மத்தேயு 13:31, மாற்கு 4:30, லூக்கா 13:18
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
இந்த உவமையில், நிலத்தில் விதைக்கப்பட்ட ஒரு கடுகு விதை - பெரிய மரமாக வளர்ந்ததாகவும், அதில் பறவைகள் கூடு கட்டி வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. கடுகு ஒரு செடியாக தான் வளரும். ஆனால், ஏன் இந்த உவமையில் கடுகு பெரிய மரமாக வளர்ந்ததாக கூறப்பட்டுள்ளதே! இதில் மறைந்துள்ள உள் அர்த்தம் என்ன?வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
பரலோக ராஜ்ஜியத்தை, மிக பெரிய அழைப்பாக நாம் எண்ணம் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் ஆண்டவர் அதை புளித்த மாவுக்கும், கடுகு விதைக்கும் மேலுள்ள உவமைகளில் ஒப்பாக கூறுகிறார்.
இந்த உவமைகளின் பொருள் எவ்வாறு நமக்கு புரியவில்லையோ, நம் ஆண்டவரின் சீடர்களுக்கும் புரியவில்லை. அதனால், அவர்களும் நம் ஆண்டவரிடம் ஏன் இவ்வாறு உவமைகளாக பேசுகிறீர் என்று கேள்வி எழுப்பினர்.
4. ஏன் நம் ஆண்டவர் உவமைகளாக பேசினார்?
வாசிக்கலாம்:
மத்தேயு 13:10-11
10 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
ஆம். உவமைகளில் பரலோக ராஜ்யத்தின் ரகசியங்கள் உள்ளது. அதனால், அது மறைக்கப்பட்டு உள்ளது.
வாசிப்போம்:
10 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.
மாற்கு 4:10, 34
10 அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
இந்த வசனங்களில், அவர் உவமைகளின் பொருளை தனித்திருக்கும் போது, சீடர்களுக்கு அவற்றின் பொருளை விவரித்து கூறினார் என்பதை அறிகிறோம். 10 அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.
34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
இப்போது இந்த பாடத்தில், நம் ஆண்டவர் ஊசியின் காதில் நுழைந்த ஒட்டகம் உவமையின் பொருளை அறிவோம்.
5. ஒட்டகமும் ஐஸ்வர்யவானும்
மத்தேயு 19: 23-25
23 அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 மேலும் ஐசுவரியவான் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 சீடர்கள் இதைக் கேட்டு, அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்? என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.
உருவத்தில் மிகப்பெரிய ஒட்டகம்,23 அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 மேலும் ஐசுவரியவான் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 சீடர்கள் இதைக் கேட்டு, அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்? என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.
சிறிய ஊசியின் காதில் (ஓட்டையில்)
செல்வதை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 😃
ஆனால், இங்கு நம் ஆண்டவர் அதிக பணம் உடைய ஐஸ்வர்யவான்கள், பரலோக ராஜ்யத்தில் செல்வது அதை விட அரிது என்கிறார். இதற்கு, செல்வமுடையோருக்கு பரலோக ராஜ்யத்தில் இடமில்லை என்று நேரடியாக சொல்லி விடலாம்.
அப்படி என்றால், நமக்கு தெரிந்த பல ஊழியக்காரர்கள், பாஸ்டர்மார்கள் அதிக செல்வமுடையவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் பரலோக ராஜ்யம் செல்ல முடியாதா என்ற கேள்வி நமக்கு எழுகின்றது.🤔
நாமும் வீடு, BIKE, CAR ஆகியவற்றுடன் ஐஸ்வர்யவான்களாக இருக்கிறோம். நாமும் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாதா? 😕
நாம் அறிந்திருக்கிற படி, உவமை என்பது வேறொரு காரியத்தை விளக்க கூறப்படும் உருவகங்கள் ஆகும். இந்த உவமையில் பரலோக ராஜ்யத்தின் என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது?
வாருங்கள் ஆராய்வோம்.
6. உவமையை கூற காரணம்
இந்த உவமைக்கு முந்தைய வசனங்களை (மத்தேயு 19: 16 - 22)நாம் படிக்கும் போது,
ஒரு வாலிபன் நம் ஆண்டவரிடம் நிலை வாழ்வு (நித்திய ஜீவன்) பெறும்படி என்ன செய்ய வேண்டும் என்று வினவுகிறார். அதற்கு நம் ஆண்டவர்,
மத்தேயு 19: 21-22
21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
யாராலும் நம்முடைய ஆஸ்திகள் அனைத்தும் விற்று தரித்திரருக்கு கொடுக்க முடியாது. அவ்வாறாக, செல்வந்தர்களாக இருந்த ஆபிரஹாம், அரசர் சாலமன் கூட செய்யவில்லை. 21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
அப்படி என்றால், ஐசுவர்யவான் ஒட்டகத்திற்கு ஒப்பிட்டு பேசப் பட்டுள்ள இந்த உவமையின் பொருள் என்ன?
ஐசுவரியவான் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்
7. உவமையின் பொருள் என்ன?
ஜெருசலேம் நகரை சுற்றி படத்தில் உள்ளது போல 12 வாசல்கள் இருந்தது. இது பற்றி நெகேமியா புத்தகத்தில் உள்ளது.
| GATE NAME | VERSE IN NEHEMIAH |
|---|---|
| Sheep Gate | Nehemiah 3:1 |
| Fish Gate | Nehemiah 3:3 |
| Old Gate (Jeshanah Gate) | Nehemiah 3:6 |
| Valley Gate | Nehemiah 3:13 |
| Dung Gate | Nehemiah 3:14 |
| Fountain Gate | Nehemiah 3:15 |
| Water Gate | Nehemiah 3:26 |
| Horse Gate | Nehemiah 3:28 |
| East Gate | Nehemiah 3:29 |
| Inspection Gate (Muster Gate / Miphkad Gate) | Nehemiah 3:31 |
| Gate of Ephraim | Nehemiah 12:39 |
| Prison Gate (Guard Gate) | Nehemiah 12:39 |
8. ஒட்டகம் ஊசி வாசலுக்குள் நுழைதல்
ஜெருசலேம் நகருக்குள், ஊசி வாசல் வழியாக ஒரு மனிதர் எளிதாக சென்று விடலாம். ஆனால், அந்த ஒட்டகமும் அதிலுள்ள சுமைகளும் உள்ளே நுழைவது மிகவும் சிரமமான காரியம்.
உவமையில், ஐசுவர்யவான் என்பவர் பரம எருசலேமாகிய பரலோக ராஜ்ஜியத்தில் நுழைவது எவ்வளவு கடினம் என்றால், இந்த சிறிய ஊசி வாசல் வழியாக ஒட்டகம் எருசலேம் நகருக்குள் நுழைவது போன்று கடினம்.
முதலில் அந்த ஒட்டகத்தின் மேலுள்ள சுமைகள் அனைத்தையும் இறக்க வேண்டும்.
பின்னர் அந்த ஒட்டகம் தனது தலையை தாழ்த்தி, உடலை ஒடுக்கி, ஒருவர் மறுபக்கத்தில் இருந்து இழுக்க, இன்னொருவர் பின்னிருந்து தள்ள என்று மிகுந்த சிரமத்துடன் மெதுவாக அந்த ஒட்டகம் ஊசி வாசலில் நுழையலாம்.
அது போல, ஐசுவர்யவானாகிய நாமும், எருசலேமாகிய பரலோக ராஜ்யத்திற்கு செல்ல வேண்டும் என்றால், நமது தலையில் உள்ள ஆசைகள், இச்சைகள், கோபங்கள், மேட்டிமைகள், கர்வம் அனைத்தையும் இறக்கி இந்த பூமியில் விட்டு விட வேண்டும்.
வாசிப்போம்...
கலாத்தியர் 5:19-21
19 ஊனியல்பின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் கடவுளின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9. உபத்திரவங்களின் வழியாய்...
வாசிப்போம்...
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
ஆம். நாம் உபத்திரவங்களின் வழியாய் தான் கடவுளின் ராஜ்ஜ்யத்திற்குள் நுழைய முடியும்.
வாசிப்போம்
22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் கடவுளின் ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
மத்தேயு 7:13
13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ஆம். இந்த உவமை - பணம் அதிகமாக உடைய ஐசுவரியவான்களை பற்றியது அல்ல. ஊனியல்பின் பாவங்களை பற்றியது. இதை எடுத்து போட்டால் தான் நாம் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியும் என்பதே இந்த உவமையின் பொருள்.13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
10. எது ஐஸ்வர்யம்?
வாசிப்போம்...
மத்தேயு 19:21,22
21 இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
நம் ஆண்டவரிடம், நித்திய ஜீவன் குறித்து கேள்வி கேட்ட அந்த வாலிபனுக்கு, அவர் கூறியதன் பொருள் அறியாததால், தன்னுடைய சொத்து அனைத்தையும் இயேசு கிறிஸ்து தரித்திரருக்கு கொடுக்க கூறுகிறார் என்று துக்கமடைந்தான்.21 இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.
நாம் இந்த உலகத்தின் ஐசுவர்யத்தை விட, நம் ஆண்டவர் நமக்கு தரும் ஐஸ்வர்யத்தை நாட வேண்டும்.
எது நம் ஆண்டவர் தரும் ஐஸ்வர்யம்?
வாசிப்போம்...
நீதிமொழிகள் 4:5-9
5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7 ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
9 அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
ஆம், ஞானம் தான் கடவுள் தரும் ஐஸ்வர்யம். 🙂

நீதிமொழிகள் 24:5
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்;
நாம் அடுத்த பாடத்தில், பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்களையும் அடையாள மொழிகளை எவ்வாறு படிப்பது என்று அறிய போகிறோம்.ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்;
நம் பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.

Comments
Post a Comment