TAMIL PROSE POETRY | தமிழ் உரை இலக்கியம்

TAMIL PROSE POETRY

TAMIL PROSE POETRY

SELECT YOUR PSALM HERE

1. பரிசுத்தமும் நீதியும்
HOLINESS
சர்வத்தையும் சிருஷ்டித்தவரின் சாயல்- பரிசுத்தமும்... நீதியுமே!
சுத்தம் என்ற வார்த்தையின் முழுப் பூரணத்தன்மையே, பரிசுத்தம்
துல்லியமான திவ்யஜீவாலை போன்ற பட்சிக்கின்ற நேர்மையே நீதி
மாறாத இவ்விரண்டிலிருந்து பிறப்பதுவே. உண்மை (or) சத்தியம்.
அசுத்தத்திலிருந்து...சுத்தத்தைப் பிறப்புக்கிறவரின், அபூர்வமான கிரியையே...
ஆண்டவர் மூலம் வெளிப்பட்ட தயவு:
தடுமாற்றம் கண்டறிந்து தடுக்கப்படவே...
தயவு நமக்குத் தயவு செய்கிறது;
தொடர் மாற்றம்.. தொடர்ந்து. நல்மாற்றம் வரும்வரை, ஓங்கி நிற்கும் தயவு...ஒய்வெருப்பதில்லை:
பயிற்சியின் நோக்கம் பலன் பலன் பெறும்படிக்கே;
இருதய நோக்கத்தின் முயற்சி;
பயிற்சியினால் வளர்ச்சிவெற்று,
அசுத்தமானதைப் பகுத்தறிந்து...
அதில் சுத்தமானதை படித்து அறிந்து,
மாம்சத்தில் ஏழுமுறை விழுந்தாதும்...
மறைக்காத உள்ளத்தோடு...
மறுபடியும் எழுந்திருந்து,,
மறுரூப மலைக்கு ஒடி,
மகிமையையும்.. பரிசுத்தத்தையும்...நீதியைபும் மிளிரச் செய்வதே,
மணவாளனுக்கு ஆயத்தமாகும் மணவாட்டியின் வேலை;
நீதியின் வஸ்திரம் தரிக்கப்பட்டதும்;
கிருபாசன சலுகை அளிக்கப்பட்டதும்
சுத்திகரிக்கும் சத்தியம் கொடுக்கப்பட்டதும்,
சுகம்பெறும் ஐக்கியம் சேர்க்கப்பட்டதும்;
சிட்சை என்னும் மருந்து தெளிக்கப்படுவதும்,
பரிசுத்தமும்.நீதியும் நம்மில் வளர்ந்து பெருகவே;
அறியாமைக்கு தரப்படுவது... இரக்கம்:
அறிந்தும் செய்யும் அசட்டு தைரியத்துக்கு, சிட்சையும்...
சீர்படுத்தலும் அவசியமாமே;
இரக்கத்தை மிகைப்படுத்தி..
கிருபையை மட்டுமே விரும்பி,
அநீதியில் பிரியப்பட்டு..
நீதியில் குறைவுபட்டு...
சலுகைகளால் மட்டுமே சிங்காசனம் பெற விரும்பினால்,
விழுகையின் விளிம்புக்கு விரைவது போலாகிவிடும்;
பாவியின் மேல் சினம் கொள்ளுகிறவரும்;
பாவத்தை ஒரு துளியும் அங்கீகரிக்காதவரும்,
பட்சபாதமில்லாதவரும்... பட்சிக்கிற அக்கினியுமானவரும்;
பரலோகத்தின் பிதா.-பரிசுத்தத்தையே விரும்புகிறார்!
பாவ மோப்பம் பிடிக்கும் நாய்போல.. திருக்குள்ள இருதயத்தின் திருட்டுத்தனம் திருத்தப்பட தடவப்படும் மருந்தே..
மனதுருக்கம்;
ஆனாலும்,
மனதின் இறுக்கம் தொடருமானால்,
அங்கே மறு பேச்சுக்கு இடமில்லை;
மகிமைக்கும்...வழியில்லை:
ஆம் -- தேட ஒரு காலமுண்டு..
இழக்க ஒரு காலமுண்டு
காப்பாற்ற ஒரு கால முண்டு
எறிந்துவிட ஒரு காலமுண்டு;
[ பிரசங்க:3:6
எனவே, குளிர்ந்த நீர் போன்ற சத்தியமே...
சில நேரம் சுடும் வெந்நீராய் சுத்திகரிக்கும்.
நீதியில் நிறைவடைந்து..
அநீதியின் மேல்..
எரிச்சல் உள்ள..
பரிசுத்தரின் வசனமே..சத்தியம்.
ஆமென்
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்
2. பாறையும்... உளியும்... சிற்பாசாரியும்
SCULPTOR
உருவமற்ற பாறை ஒன்றை உற்று கண்ட சிற்பி - தான்,
உருவாக்கும் படைப்பாற்றலால் உயிரூட்ட சித்தமானார்!
கருப்பிடிக்கும் கருவியாக... சிற்றுண்டி எடுத்துக் கொண்டு
பெருங்கல்லை உடைத் தெடுத்து.. பெரும் பணியை துவக்கினாரே!
சாத்தியமாகிய சம்மட்டி... சந்தேகத்தை உடைத்து
அசத்திய மென்னும் அறியாமையை அடித்து பொடித்தது;
கருங்கல் என்னும் ஸ்தரக்கல் காணும் படி,
வெறும்... மண் எல்லாம் அகற்றப்பட்டது.
சிற்பாசாரிக்கு சிறந்த சித்திறக்கள் கிடைத்தது இப்போது;
கல்லை நல்வழிக்கு கொண்டு வரும் படிக்கு,
இப்போதே, உளியின் உழைப்பு தேவைப்பட்டது.
சிற்றுளி என்னும் கொத்தும் உளி,
குழி குழியாய்க் கொத்தும்போது,
வழிவழியாய் வந்தவினை...
வலிகலோடு விலகியதே;
பாரம்பரிய பழக்க வழக்கம்....
பாசம் நிறைந்த சுற்றமும்.. நட்பும்;
பற்றிப்பிடித்த.-லட்சியங்கள்;
நிரம்பப் பிடித்த... உயிராசைகள்.
இவைகள் எல்லாம், உளியின் உடைப்பில் உதிர்ந்து போயின;
ஆனாலும்.... கல் மேல் கொண்ட நோக்கம், கரையாமல் இருந்த சிற்பி;
உளியின் கூர்மையை உரசிக் கூட்டினாரே;
பட்ட அடியெல்லாம் பற்றாது என்று;
கொத்தும் உளியால் குத்திப் பெயர்த்தார்.
ஐயா;
'நான் ஒரு கல்.. அதனாலே எனக்குள் கடினமுண்டு உமது மனம் கருணையன்றோ...
ஆனாலும்... கடுமையான உளியாலே உலுக்குகிறீரே...
இப்படிக்கூறி... கல்லும் கரைந்தது [அழுதது]
கருங்கல்லான... வெறுங்கல்லே... நீ
இருக்கின்றாய் மங்கலாய்;
அங்கலாய்ப்பு இல்லாதிருந்தால்... நீ
அங்கமாவாய் என் ஆலயக்கல்லாய்!!
கொஞ்சம் பொறு....
உளியை மாற்றுகிறேன் என்று சொல்லி,
மிகச்சிறிய உளி ஒன்றை எடுத்தாரே;
அன்பான சிற்பாசாரியின்...
அக்கறையுள்ள உளி,
இலகுவான உளி..
கொஞ்சம் இனிமையான உளி
இனி பயயில்லை. வலியில்லை
ஆனாலும்... இதோ...
குருதிபொங்கும்.. இறுதிக் குத்தும்,
மன உறுதி கலங்கும் குத்தூசியுமான உளி இதுவே;
முந்தைய உளியோ...என் உடலைப் பெயர்த்தது;
இந்த பிந்தைய உளி.. என் உயிரையே அசைத்தது;
ஆம்.. இது என் நேச உளி:
நான் நேசித்த உளி
ஆனால்... யோசித்துக் கூடப் பார்க்கவில்லை.
இது பாசாங்கு உளி...என்று:
சிற்பாசாரி சொன்னார்...
சிரித்துக்கொண்டே...
உனக்கு வலித்தால் தான்...
நீ ஜீவனுள்ள கல்:
வலிக்க வில்லை என்றால்...
நீ வழிக்கல் [மைல்கல்] போல இருப்பாய்:
உன் கையே...உன் கண்ணைக் குத்தினாலும்
உடணிருப்போரே...
உன்னைத் துன்புறுத்தினாலும்,.
உண்மையாய் நீ இருந்தால்.--
உயர்த்தப்படுவாய் மகிமைக்கு
உளியின் கூர்மையைக் கண்டு கலங்காதே:
உன்னைக் கையில் எடுத்த என்னை நோக்கிப்பார்:
ஏனெனில்...நான் உன்னைக் காக்கின்ற இறைவன்!!
ஆமென்!!
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்

3. சந்தோஷம்



நீதியின் செயல்முறை விளைவே... சந்தோஷம்;
இருதய சமாதானத்தின் வெளிப்பாடு... சந்தோஷம்;
துன்மார்கன் பெறமுடியாத சொத்து... சந்தோஷம்;
பாவம் செய்யாமல் விலக்இருக்கும் போது வரும்; சந்தோஷம்.


சந்தேக உள்ளம் பெறமுடியாது...சந்தோஷம்;

சங்கீத புஸ்தகத்தின் சத்தியம்... சந்தோஷம்; கசப்பான வேப்ப மரத்தின் பழம் இனிப்பதுபோல

துன்பத்தின் ஆழத்திலும் சுகமான... சந்தோஷம்:


தெலீலாளின் மடியில் சிம்சோனின்--- சந்தோஷம்:

தெளியாத மயக்கத்தில் வந்த, அந்த சந்தோஷம்;

உயிரைப் பறித்த கண்ணி அந்த, சந்தோஷம்;

உண்மையுள்வர்க்கு ஆபத்து இந்த...சந்தோஷம்;


பரலோகத்தில் மிகுந்து வரப்போகும் சந்தோஷம்.--அது,

காணாமல் போன ஆடு [மனுக்குலம் ] கண்டு பிடிக்கப்பட்டதால் வரும் சந்தோஷம்.

ராஜ்ஜியத்தை நமக்குக் கொடுப்பதனால் பிதாவுக்கு  சந்தோஷம்.

மகிமையுள்ள சந்நிதானத்தில் ..நம்மை மாசற்றவர்களாய் நிறுத்துதில் சந்தோஷம்.


குமாரனை சகல பரியூரணத்துக்கும் உயர்த்துவதில், அப்பாவுக்கு சந்தோஷம்

குமாரனுக்குள் சகலமும் கூட்டிச் சேர்க்கப்படுவதில் சர்வ மகா சிருஷ்டிகருக்கு..சந்தோஷம்; குமாரனின் கீழ்ப்படிதலே பிதாவுக்கு மிகுந்த சந்தோஷம்,

குமாரனுக்குள்---குணசாலிகளை கூட்டிச் சேர்ப்பதால்,

சர்வ குடும்பத் தலைவருக்கு சம்பூரணமான.... சந்தோஷம்;


என்... கர்த்தரின் சந்தோஷம்...இதோ!

பேசி சில தீர்க்கதரிசனம் நிறைவேற்றினார்.

பேசாமல் நின்ற போதும் தீர்க்கதரிசனம் நிறை வேற்றினார்.

கிரியைகளினால் சில தீர்க்கதரிசணம் நிறைவேற்றினார்.


அமைதியாய் இருந்து தீர்க்கதரிசனம் நிறைவேற்றினார்.

அவமானப்பட்டும். சில தீர்க்கதரிசனம் நிறைவேற்றினார்.

அங்கமெல்லாம் கிழிக்கப்பட்டும் . சில தீர்க்கதரிசனம் நிறை வேற்றினார்;


தமக்கு முன்பாக பிதாவினால் வைக்கப்பட்ட சந்தோஷம்,

தமக்குள்ளாக அதை தரிசித்து நடந்ததினால் பெற்றார் அந்த சந்தோலும்;

ஆபிரஹாயின் சந்தோஷம் விசுவாசத்தின் மூலமே;

யோபுவின் சந்தோஷம் பொறுமையாய் சகித்தபோதே;

தானியேலின் சந்தோஷம் சிங்கத்தின் நடுவில் பக்திவைராக்கயமே;


அப். பவுலின் சந்தோஷம சிறைச்சாலையில் பட்ட

அடிகளின் மத்தியில் தானே;

அற்ப சந்தோஷமும் உண்டு, ஆனந்த சந்தோஷமும் உண்டு;

உழைப்பில்லாமல் பெறும் சந்தோஷம்... தண்ணீரில் உப்பைப்போல கரைந்துபோகும். உபத்திரக்குகையிலே உணர்ந்து பெறும் சந்தோஷம்,

அதுவே... உலகம் எடுக்க முடியாத சந்தோஷம்:


"உள்ளதல் நிறைவு கொண்டால்,

அது, உள்ளத்தின் சந்தோஷம்.

என் ஆண்டவரின் பெயரை நினைக்கும் போதெல்லாம்....

இருதயத்தில் தேன் தடவினது போல இனிமையான ஒரு சந்தோஷம்!.

நான்...புது சிருஷ்டியாய் வளர்ச்சி அடைவதில் தான்,

என்னை ஜெநிப்பித்தவருக்கு சந்தோஷம்:

ஆம். "உங்கள் துக்கம் சந்தோஜமாய் மாறும்" என்று

: சந்தோஷக்காரணர் சொல்லியிருக்கிறார்!!.

ஆமென்!


கவிஞர் வேளாங்கன்னி.
திண்டுக்கல்
4. கடலிலே வீசப்பட்ட வலை

கடலிலே வீசப்பட்ட வலையில் சிக்கிய மீன்..நான்;
அது பரலோக ராஜ்யத்தின் கண்ணுக்குத் தெரியாத வலை;
வலை கரைக்கு வர வர பிடியும் இறுகியது.
நான் வலைக்குள்..வளைக்கப்பட்டேன்.
அன்பின் கயிறுகளால் கட்டி இழுக்கப்பட்ட வலை...இது
ஆசை காட்டி மோசம் போக்கும் கண்ணி அல்ல இந்த வலை;
இதை வீசினவர் மீனவர் அல்ல... அவர் என் மீட்பர்;
ஆம்! அவர் என்னைப் பிடிக்கவில்லை - மீட்டுக்கொண்டார்.
அலையின் அலைக்கழிப்புக்கும்
ஆழியின் ஆழத்துக்கும்...
என்னைக் காப்பாற்றின... கர்த்தரின்
வனையும் வலையே இந்த ரட்சிப்பின் வலை;

கரையிலே என்னைப் பிரித்தெடுத்து...
கீழ்ப்படியும் நல்லமீன் என்று என்னைக் கண்டு,
வரப்போகும் ராஜ்யத்தின் சத்துணவாக என்னைப்
பதப்படுத்தும், பக்குவக்காரரே-என்னைப் பிடித்தார்;
கடலின் (உலகின் ] சந்தோஷம் அடிக்கடி எனக்குள்
வந்து... வந்து போனாலும்...
அவைகள் என்னை
வெறும் கருவாடாக மட்டுமே மாற்றும்:
நல்ல மீனையும். கெட்ட மீனையும் பிரிக்கிறவர்,
நம்பிக்கைக்கு உரியவராய் கையில் எடுத்துள்ளார்.
உருவம் பெருத்த நீர் ஜந்துக்கள் வலிமை உள்ளவைகள்;
ஆனால்- சில சிறுமீன்களும்.. சுவையுள்ளவைகளே;
எளிய மீனாகிய என்னையும் கண்டு,
எப்படித்தான்...என்னையும் நம்பினாரோ...!!!
நான் எப்படிப்பட்ட மீனாக இருந்தாலும்,
ஒருநாள்... வீணாகத்தான் போயிருப்பேன்;
கடல்நீரை விட்டு...கரையேறி திரு வசன தண்ணீரில்
என்னை நீந்த விட்டவர்...
தண்ணீரில் கழுவி...கழுவி, என்னை நல்ல மீனாக மாற்றுகின்றார்!!

வழுக்கும் தன்மை எனக்கிருப்பதால்...அவரின்
வனையும் கையைவிட்டு...துள்ளி துள்ளி ஓடினாலும்,
அள்ளி.. அள்ளி.. கையில் எடுத்து,
சிறு கள்ளுகளால். கிள்ளிக் கிள்ள செல்லமாய்ச் செதிலைத் தட்டி..குத்தும்
முள்ளைக் கூட புல்லைப் போல் ஆக்குகிறார்.
ஈன மீனுக்கெல்லாம் இரக்கம் கிடைக்குமோ?
வலையில் பிடித்த மீனவர் வருடிக் கொடுப்பாரோ?
துள்ளத்துடிக்கும் மீனை அள்ளி அணைப்பாரோ?
இதோ...மனுஷரைப் பிடிக்கும் இந்த மகா மீட்பர்
வரப்போகும் மீன்களுக்கு வழிகாட்டி ஆக்குகிறார்:
சிறு மீன்களை ஓட விட்டு... பெருமீன்களை கொத்திப் பிடிக்கும் கொக்குகளின் [சாத்தான்)
கொடுக்குக்கு..விடுவித்து..
என்னைக் கொள்ளைதரம் காப்பாற்றி
நல்ல மீனாய்க் கூடையில் சேர்த்து
நறுமணம் [அழியாமை ] வீசச் செய்தார்!!
வலையின் இறுக்கத்தை விட.. அவரின்
இரக்கம் பெரிதாய் இருக்கின்றதே!!
அல்லேலூயா
கவிஞர் திண்டுக்கல் வேளாங்கண்ணி
5. யோசனையில் பெரியவர்

ஈசாக்கைப் பலியிடச் சொன்ன இறைவன்..
அதற்கு முன்பாகவே, முட்புதரில் ஆட்டை சிக்கவைத்து ஈடுசெய்தார்.
யோசேப்பைக் குழியில் போடுவதற்கு முன்பாகவே..
அவரை வாங்கும்படி இஸ்மயேலரை வியாபாரத்துக்கு புறப்படச் செய்தார்;

மோசேயை நதியில் தனித்து விடுகிறதற்கு முன்னே,
பார்வோனின் குமாரத்தியை ஆற்றுக்கு புறப்படச் செய்தார்: 
அதே மோசே காணானுக்குள் பிரவேசிக்க ...
முடியாமல் போகு முன்பே
யோசுவாவை,  தேசத்தைப் பங்கிடும்படி ஆயத்தம் பண்ணினார்.
தாவீது இருதயத்துக்கு ஏற்றவராயிருந்தாலும், 
தேவாலயம் கட்ட.. சாலமோனை பரம தந்தை ஆயத்தம் பண்ண வைத்தார்;
தாவீதின் கண்ணயம் பரி சோதிக்கப் படும்படி
முன்னதாகவே..சவுலுக்கு நித்திரை வரச்செய்தார்;
யூதா கோத்திர சாலமோனின் சந்ததி வீழ்ச்சியடையும் முன்னே...
தாவீதின் குமாரன் நாத்தானின் வம்சத்தை தொந்தெடுத்தார்.
மொர்தகாய் உயர்த்தப்படும்படி முன்னதாகவே, நினைவு புத்தகத்தில் குறிப்புகளை எழுதி வைக்கச் செய்திருந்தார்.
பெத்லகேமில் ரட்சகர் பிறக்கும்படிக்கு
தீர்க்க தரிசனம் நிறைவேற -
அகுஸ்து ராயனால் குடி மதிப்பு எழுதும் கட்டளை பிறக்கச் செய்தார்;
உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே...
குமாரன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஆகும்படிக்கு. - அனைத்தையும்..ஆயத்தப்படுத்தி வைத்தார்:
கர்த்தர் பேதுருவைப் பிடிக்கும்படிக்கு... வலையில் சிக்காத படிக்கு... 
இரவு முழுவதும் மீன்களுக்கு தடை செய்திருந்தார்.
அப்: பவுலைப் பிடிக்கும்படி தமஸ்கு நகருக்குச் நியாய சங்கத்தின் கடிதம் கிடைக்கச் செய்தார்:
நாம் தெளிவடையும்படி,
இஸ்ரயேலின் ஜீவியத்தை திருஷ்டாந்தமாக முன்னமே ஏற்படுத்தியிருந்தார்; 
கர்வம் கொண்ட பாபிலோனை பிடிக்கும் படிக்கு, முன்பாகவே...
கோரேஸ் ராஜா மூலம்...
ஐபிராத் நதியை கால்வாய்களாய் பிரித்து வற்றச்செய்தார்.
மைதீட்டி... அழகுடன் மயக்கிய யேசபேல் அழியும் படிக்கு
அவள் கூடவே இருந்த சிலரை,
யெகூ ராஜாவுக்காக முன்னரே ஏற்படுத்தி வைத்திருந்தார்.
அப். பவுலின் ஊழியப்பாதை திறக்கும் படிக்கு லீதியாளை முன்பாகவே வரச் செய்திருந்தார்.
நாகமான் இஸ்ரயேலின் கடவுளால் குணமாகும்படி, 
அவரின் வீட்டுக்கு ஒருசிறுபெண்ணை வேலைக்காரியாக
முன்னரே அனுப்பு வைத்திருந்தார்.
தானியேல் சிங்க கெபிக்குள் தள்ளப்படுவதற்கு முன்பாகவே...சிங்கங்களின் பசியற்றுப் போக
அவைகளின் வாயை கர்த்தர் கட்டினார்:
அக்கினியின் உக்கிரத்தை அவித்த மூன்று புருஷர்கள்,
தீயில் போடப்படுவதற்கு முன்பாகவே,
கர்த்தர் அவர்களோட கூடப் போனார்;
அர்ப்பணிக்கப்பட்டவர்கள்  நடந்து கடக்கும்படிக்கு,
தலையானவர் - முன்னரே அடிச்சுவடுகளை ஏற்படுத்தி
கடந்து போய்க் காட்டியுள்ளார்.
நான் வெய்யிலில் நடக்கும் போது, எனக்காக கன்மலையின் தண்ணீர் விசுவாசக் கண்ணில் தென்படச் செய்துள்ளார்.
என் வழிகளெல்லாம் அடைக்கப்படும் போது... என்னை அழைத்துச் செல்ல அம்மினதாபின் ரதம் ஆயத்தமாய் உள்ளது:
எனவே... அவரில்லாமல்...
அவருக்குத் தெரியாமல் ....
அவருடையவர்களுக்கு....
எதுவும்... எப்போதும். நடப்பதுமில்லை, கடப்பதுமில்லை. கைப்பிசகாய் எதுவும் நடக்காமல்,
அவரின் கை, அசைவால் மட்டுமே எல்லாம் நடக்கும்.
ஆகாயத்தில் ஏறுவதோ....
ஆழத்தில் இறங்குவதோ... எதுவாயினும்
திடப்படுத்துகிறவரின் தீர்மானமே!!!
எனவே, இப்போதும்... எப்போதும்...
எந்தச் சூழ்நிலையிலும் நாம் சொல்லலாம்.
கர்த்தர் கொடுத்தார்,
கர்த்தர் எடுத்தார்.
ஆண்டவரின் பெயருக்கு
மாட்சி உண்டாவதாக!!!
ஆமென்!!
கவிஞர் வேளாங்கன்னி
திண்டுக்கல்
9789387638
6. சாத்தானே சாத்தானை துரத்தினால்!

ராஜாவே தன் ராஜ்யத்தை கலைப்பானோ...?
தானே தனக்கு சதி செய்வானோ?

மரக்கிளையில் அமர்ந்து கொண்டு ஒருவன்.

அடிமரத்தை வெட்டுவானோ? செய்யமாட்டாரே!!

சாத்தானே சாத்தானை துரத்துவது எங்ஙனம்?

பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் - லூசிபர்.

குறை காணப்படுவதற்கு முன்பு நிறைவாகவே வசித்தார்;
அழகின் மினுக்கினால் மேட்டிமையாய் யோசித்தார்;
சிருஷ்டித்தவரின் சாயலை அடைவதற்கு பதிலாய்,
சிருஷ்டிகரின் ஸ்தானத்தை இச்சித்ததால், தனக்கு தானே சதி செய்தார்.

காப்பாற்றுகிற கேரூப் இவரே.
ஆதாமின் பொறுப்பு:
பிரமிக்கதக்க அதிசய சிருஷ்டியை, அபகரித்து பிரமிப்பை ஏற்படுத்த விரும்பிய போது தன் பொறுப்புக்கு தானே வெறுப்பை தேடினார்.

அந்தகார ஆகாசத்தில் தள்ளப்பட்டு.
ஆசையால் விழுந்த அசுத்த ஆவிகளோடு அபூரண மனிதரிடம் ஆர்ப்பாட்டம் செய்து அகங்கார ஆட்சி அமைக்க போராடி.....

நிறைந்த தன் ஞானத்தை குறைந்த தன் செயலால் விரயமாக்கி,
கட்ட நினைத்த தன் பாவராஜ்யத்தின் அஸ்பாரத்தை தானே இடிக்க துவங்கினான்!

அனந்த ஞானத்துக்கு முன்னாலே...

உலர்ந்த ஞானம் என்ன செய்யும்?

பாவ தீமை அதிகரிக்க திட்டமிட்டது..குறைந்த ஞானம் (சாத்தான்)
பாவ சம்பள மரணத்தில் தீமை அனுபவம்

பெறச் செய்தது நிறைந்த ஞானம் (இறைவன்)

மாட்டை விரட்டும் சாட்டை.
தன்னால் மாடு மிரளும் வல்லமை தனக்குண்டு - என்றென்னுமாப்போல்,
சாத்தான் தன் சேட்டையினால்,
கடவுளின் கை சாட்டைபோல் ஆனானே......

தான் தூண்டும் தீமை கொண்டு வரும் அனுபவ அறிவு;
இன்னதென்று அறியாமல்,

விஞ்ஞானி வீண் ஞானி ஆகிப் போனானே!

ஆயிரம் தேனிக்களின் பிரயாச தேன்கூடு ஒரு சிறுகல்லால் சிதறுவது போல்,
பிரமாண்ட தோற்றமான பலூன் ஒன்று,
சிறு குண்டூசி முனையால் உடைவது போல்,
சாத்தான் கட்டின சர்வாதிகார ராஜ்யம் சாதரணமாய் அகற்றப்படும்!

கர்த்தரை அழிப்பதாய் கர்வம் கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொண்டான்;
அழியாமைக்கு உயர்த்தப்பட்டார் ஆண்டவர்.
அழிவுக்கு நியமிக்கப்பட்டவன் அகங்காரன்!

அந்திகிறிஸ்து அமைப்பாக, அற்புதங்கள் செய்து பிசாசுகளை துரத்தும் புண்ணிய அமைப்பாய் எண்ணிக்கொண்டு தன் ஆதிக்க ராஜ்யத்தை தானே எதிர்த்தவன் சாத்தான்!

பொய்யின் தூதன் ஒளியின் தூதனாய் வேஷமிட்டு
பொய்யாய் கட்டின மாயராஜ்யம் தனக்குத்தானே விரோதமாயிருப்பதினால்..
நிலைநிற்காமல் போவது சத்தியம்தானே!

மரங்கள் காற்றை சலவை செய்யும் குணங்கள்,
மனதை சுத்தம் செய்யும் சத்துரு பெருவெள்ளம் போல் சபையின் மீது வீசினாலும்,
மெல்லியமாவை சலிக்கும் சல்லடை சாத்தான்தானே...

அடிமேல் அடிவிழும்போதே அரிவாள் கருக்காகும்;
அழித்தொழிக்க எண்ணும் சாத்தானால் சபை களஞ்சியம் சேரும்;
கதிராய், பக்குவப்படும்.

குதிகாலை கடிக்கும் சர்ப்பத்தால்,
சபை தலையோடு இணையும்
சீக்கிரத்தில் தன் தலையை தானே நசுக்கச் செய்யும் சத்துருவின் கோபத்தால்
இறைவன் தாமே மகிமைப்படுவார்.

மெசியாவின் யுகத்தில் மோசம் போகும் வஞ்சகத்தை மனதில் கொண்டு
ஜீவ நாசம் செய்யும் சுயநலத்தை -
விரும்பிச் செய்யும் - எதிராளி;
பரிசுத்த நகரத்தின் கறையை அகற்றும் பாத்திரமாய் செயல்பட்டு தனக்கு தானே அழிவை தேடும் சாத்தான்;
இப்படியாக தன்னைத்தானே துரத்திக் கொண்டான்!!

கீழ்ப்படிதல் காட்டாத எந்த சிருஷ்டியும்;
எப்போதும் சிருஷ்டிகருக்கு முன்பாக நின்று பிழைக்க வகையுமில்லை.
வாய்ப்பும்...... இல்லை!!

"பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்;
அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்;
அவருடைய கையைத் தடுத்து,
அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்."
(தானியேல் 4: 35)

ஆமென்!!

சகோதரர் அருள் வேளாங்கண்ணி
திண்டுக்கல்
9789387638


Comments