FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




2-A. THE SIX METHODS - METHOD 1: TOPIC STUDY | ஒரு தலைப்பின் கீழ் படித்தல்

HOW TO STUDY THE BIBLE? THE SIX METHODS

UNDERSTANDING SCRIPTURE - THE SIX METHODS

1. திறவுகோல்களைப் பயன்படுத்துதல்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!
1 கொரிந்தியர் 1:3
நாம், முந்தைய பாடத்தில், பைபிளில் மறைந்துள்ள சத்தியங்களை அறிந்து கொள்ள - பைபிள் நமக்கு தந்திருக்கும் நான்கு திறவு கோல்களை அறிந்து கொண்டோம்.

இந்த திறவு கோல்களை பயன்படுத்தி எவ்வாறு மறைந்துள்ள சத்தியங்களை வெளிக்கொணர்வது?
அதை யார் நமக்கு கற்று தருவது? வாசிப்போம்,
ரோமர் 10:14
14அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
நாம் அனைவரும் பைபிள் படிக்கிறோம். ஆனால், அதிலுள்ள பல விடயங்கள் அனைவருக்கும் புரிவதில்லை. அதனால் தான், அதை கற்று தருபவரின் முக்கியத்துவத்தை இவ்வசனத்தில் பவுல் அடிகளார் கூறுகிறார்.
மத்தேயு 13:16 உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
வாழ்த்துக்கள். 🙂
2. பைபிள் ஆராய்ச்சிக்கு ஆறு வழிமுறைகள்
பைபிளை படிப்பதற்கு அல்லது ஆராய்வதற்கு இந்த 6 வழிமுறைகளை என்றும் நாம் நினைவில் கொள்வோம்.
1. தலைப்பின் கீழ் படிப்பது

2. வசனத்தின் கருப்பொருளை உணர்ந்து/ அறிந்து படிப்பது

3. உவமைகளை மையமாக கொண்டு படிப்பது

4. தீர்க்கதரிசனங்களையும் அடையாள மொழிகளை படிப்பது

5. நிழல் - பொருள் அடிப்படையில் படிப்பது

6. காலங்களை மையமாக கொண்டு படிப்பது
நாம் அறிய போகும், பின் வரும் பாடங்கள் அனைத்தும், மேல் குறிப்பிட்டு உள்ள வழிமுறைகளில் ஒன்றை அடிப்படையாக கொண்டு இருக்கும்.

இந்த பகுதியில், ஒரு தலைப்பின் கீழ் எவ்வாறு படிப்பது என்று அறிந்து கொள்வோமா? 🙂
3-A) தலைப்பின் கீழ் படிப்பது
வேதாகமத்தில் உள்ள பல்வேறு தலைப்புகளில் ஒன்றை எடுத்து, அதை குறித்த இறை வார்த்தைகளை சேகரித்து, அதை பற்றி முழுமையாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அறிவது.

உதாரணமாக -
  • ஆத்துமா என்றால் என்ன?
  • நரகம்
  • பரலோக ராஜ்ஜியம்
  • உயிர்த்தெழுதல்
  • ஆதாம்
  • ஆசரிப்புக் கூடாரம்

  • பின் வரும் பாடங்களில், இது போன்று பல தலைப்புகளில் நாம் நமது பைபிளை தேடி ஆராய போகிறோம்.
    இப்பொழுது, நாம் இந்த பகுதியில், அனைவரும் அறிந்த ஆதாம் என்கிற தலைப்பில் சில உண்மைகளை கண்டறிவோம்.
    3-B) உடன்படிக்கையை மீறிய ஆதாம்
    வாசிப்போம்:
    ரோமர் 5:19 19. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
    இந்த உலகம் கீழ்படியாமைக்குள் செல்வதற்கு காரணமான ஆதாமை குறித்து சில கேள்விகள்:
    ஏதேன் தோட்டத்தில் பல மரங்களும் பழங்களும் இருந்தாலும், கடவுள் புசியாதே என்று கட்டளையிட்ட பழத்தை உண்டதால், ஆதாமும் ஏவாளும் ஏதேனை விட்டு வெளியே அனுப்பப்பட்டார்கள்.
    வாசிப்போம்:
    ஆதியாகமம் 2:17 ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே: ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார்.
    இங்கு பழத்தை உண்ணாதே என்று கடவுள் கட்டளையிட, அதற்கு ஆதாம் பதில் ஏதும் கூறினாரா? இங்கு ஆதாம் பதில் ஏதும் கூறியது போல தெரியவில்லை. அப்படி இருந்தும் அவர் ஏன் தண்டிக்கப்பட்டார்?
    வாசிப்போம்:
    ஒசியா 6:7
    அவர்களோ - ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்.
    ஆம். இவ்வசனத்தில் ஆதாம், கடவுளோடு, அவர்களை போல, பழத்தை உண்ண மாட்டேன் என்று ஒரு உடன்படிக்கை செய்தார் என்பதை அறிகிறோம்.

    அப்படி என்றால், இவ்வசனத்தில், கடவுளோடு உடன்படிக்கை செய்து மீறிய அந்த "அவர்கள்" யார்?

    ஆம் - இஸ்ரயேல் மக்கள்.

    இஸ்ரயேல் மக்களும், கடவுளோடு உடன்படிக்கை செய்தார்கள்.
    எங்கே?
    வாசிப்போம்:
    யாத்திராகமாம் 19:5,8
    5இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. 8அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
    கடவுளோடு உடன்படிக்கை செய்த இஸ்ரயேல் மக்கள், அதை மறந்து கீழ்படியாமையினால், உடன்படிக்கையை மீறினார்கள்

    ஆதார வசனங்கள்:
    Judges 2:11-13
    Judges 3:5-7
    2 Kings 17:7-20
    Nehemiah 9:16-17
    Nehemiah 9:26
    Psalms 78:10
    Psalms 78:56-57
    Jeremiah 7:24-26
    Jeremiah 9:13-14
    Daniel 9:11
    2 Kings 17:15-16.
    இவ்வாறு, இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு உடன்படிக்கை செய்து மீறினது போல, ஆதாமும் கடவுளோடு உடன்படிக்கை செய்து மீறி உள்ளார் என்பதை அறிகிறோம்.
    3-C) உண்ணும் நாளில் சாகவே சாவாய்
    வாசிப்போம்:
    ஆதியாகமம் 2:17
    கடவுள் ஆதாமிடம்: நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
    இங்கு கடவுள், ஆதாமிடம் - அவர் அந்த பழத்தை புசிக்கும்/ உண்ணும் நாளில் சாகவே சாவாய் (For IN THE DAY YOU EAT IT,YOU SHALL SURELY DIE.) என்று சொல்லி இருக்க, பழத்தை உண்டும் ஆதாம் பல ஆண்டுகள் வாழ்ந்தாரே! எப்படி?
    வாசிப்போம்:
    ஆதியாகமம் 5:5
    ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம் = 930 YEARS. அவன் மரித்தான்.
    பதில் தெரியாத பலர் -
    அவர் ஆத்துமாவில் இறந்தார், ஆவியில் செத்தார் என்று ஆதாரம் அற்ற பதில் கூறுவர்.

    ஆனால், ஒருவன் போதித்தால், வேத வாக்கியங்களின் படி போதிக்ககடவன் என்று கட்டளை நமக்கு இருக்க, நமது பதில் சுயமாக இல்லாமல், பைபிள் ஆதாரத்தோடு இருத்தல் வேண்டும்.
    வாசிப்போம்:
    2 பேதுரு 3:8
    பிரியமானவர்களே, கர்த்தருக்கு
    ஒருநாள் = ஆயிரம் வருஷம் போலவும்,
    ஆயிரம் வருஷம் = ஒருநாள் போலவும்
    இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
    ஆம். பூமியில் இருக்கும் நமக்கு, ஒருநாள் என்பது 24 மணி நேரமாக இருப்பது போல், கடவுளுக்கு ஒரு நாள் என்பது 1000 வருடங்கள் என்பதை இவ்வசனம் மூலம் அறிகிறோம்.
    ஆதாம் - 930 வருடங்கள் வாழ்ந்திருக்க, அது கடவுளின் பார்வையில் - ஒரு நாளுக்கு உள்ளாகவே தான்.
    ஆம். ஆதாம் - கடவுள் கூறியது போலவே "பழத்தை புசித்த/உண்ண நாளில் தன் உயிரை இழந்து மரித்தார்.

    வாசிப்போம்:
    1 கொரிந்தியர் 2:7 உலகத்தோற்றத்திற்கு முன்னே கடவுள் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
    அடுத்த பாடத்தில்,
    எவ்வாறு ஒரு வசனத்தின் கருப்பொருளை அறிந்து/புரிந்து படிப்பது
    என்று அறிவோம்.
    நம் பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.

    Comments