DEAR, UNBURNING THORNY BUSHES | நெருப்பில் எரியாத முட்புதர்களே - EXODUS 3: 1-10

THE UNBURNING THORNY BUSHES

THE UNBURNING THORNY BUSHES

அன்புடையீர்,வணக்கங்கள்.🙂🙏

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
இந்த பாடத்தில்,
மோசே கண்ட நெருப்பில் எரியாத முட்புதர் மூலம்,
  • கடவுள், மோசேக்கு வெளிப்படுத்திய திட்டத்தையும்
  • திருச்சபையாக அழைக்கப்பட்டுள்ள நமக்கு, அதில் மறைந்துள்ள மாபெரும் கடவுளின் திட்டத்தையும்,
  • அறிய போகிறோம்.
    விடுதலை பயணம் 3:1-10
    வாசிப்போம்:
    யாத்திராகமம் 3: 1-10
    1 மோசே மிதியான் நாட்டில் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.
    2 அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் ,அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
    3 “ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார்.
    4 அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ‘மோசே, மோசே’ என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார்.
    7 அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.
    9 இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.
    10 எனவே, இப்போதே போ; எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து (கானான் நாட்டுக்கு) நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.

    எகிப்து - மீதியான் வரைபடம்
    MOSES' JOURNEY BETWEEN EQYPT AND MIDIAN
    மோசே, எகிப்தில் இருந்து தப்பித்து மிதியானுக்கும், மிதியானில் இருந்து தனது குடும்பத்துடன் எகிப்துக்கு பயனம் செய்த உத்தேச வழித்தடம் மேலே வரை படத்தில் காண்பிக்கபட்டுள்ளது.
    மோசே - எகிப்தில் இருந்து மிதியான் செல்லுதல்
    வாசிப்போம்:
    யாத்திராகமம் 2: 12 - 15
    12 மோசே, எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
    14 செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான்.
    15 எனவே, மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
    மோசே - பாரோனின் அரண்மனையிலிருந்து, மிதியான் நாட்டுக்கு சென்றது, நம் ஆண்டவர் - பரலோகத்தை விட்டு வனாந்தரமான இந்த பூமிக்கு வந்ததற்கு நிழலான அடையாளமாக இருக்கின்றது.
    மோசே - மிதியானில் இருந்து எகிப்து திரும்புதல்
    வாசிப்போம்:
    19 மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, “எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்” என்றுரைத்தார்.
    20 எனவே, மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.
    மோசே - மீண்டும் எகிப்துக்கு திரும்பி அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரேல் மக்களை மீட்க வருதல், நம் ஆண்டவர் எகிப்தாகிய இந்த உலகில் அடிமைப்பட்டு இருக்கும் தம் இறை மக்களை விடுவிக்க வரும், அவரது இரண்டாம் வருகையை அடையாளப்படுத்துகிறது.
    மோசேயின் 40+40+40= 120 ஆண்டுகள்
    நாம் அறிந்திருக்கிற படி, மோசே வாழ்ந்த 120 ஆண்டுகளில்,
    (0-40) முதல் 40 ஆண்டுகள் - பாரோனின் அரண்மனையில் வாழ்ந்தார்.
    (41-80) 40 ஆண்டுகள் - மிதியான் நாட்டில் ஆடு மேய்ப்பவராகவும்,
    (81-120) 40 ஆண்டுகள் - வனாந்திர பயணத்தில், இஸ்ரயேல் மக்களை வழி நடத்தினார்.
    மிதியான் நாட்டில் இருந்த 40 ஆண்டு காலத்தில் அவருக்கு நடந்தவை
  • எகிப்து அரண்மனையிலிருந்து மிதியானுக்கு செல்லுதல்
  • இத்திரோவிடம் ஆடுமேய்ப்பவராக பணியாற்றுதல்
  • சிப்போராவை மணமுடித்தல்
  • அவரது இரண்டு மகன்கள்: கெர்ஷோம் மற்றும் எலியேசர் பிறந்தார்கள்
  • எகிப்தில் சிக்கி இருக்கும் எபிரேய மக்களை விடுவிக்க நெருப்பில் எரியாத முட்புதரில் அழைப்பு பெறுதல்
  • மக்களை மோசேயின் மீது நம்பிக்கை கொள்ள, கடவுள் மோசேயிடம் காண்பித்த 3 அடையாளங்கள்
  • இந்த பாடத்தில், மோசே நெருப்பில் எரியாத முட்புதர் அதிசயத்தை பற்றி படிக்க போகிறோம்.
    மோசேயும் எரியாத முட்புதரில் நின்ற தூதனும்

    இந்த அதிசய எரியாத முட்புதரை கண்ட மோசே, அது என்னவென்று பார்ப்போம் என்று அதன் மேல் ஆர்வம் கொண்டார்.
    அவர் பார்ப்பதை அறிந்து கொண்ட தூதர் அவருடன் பேசத் துவங்கினார்.
    ஒருவேளை மோசே அந்த அதிசயத்தை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால், அந்த தூதர் அவருடன் பேசி இருக்க மாட்டார்.
    அதுபோல நாமும், கடவுள் நமக்கு தந்திருக்கும் இறை வார்த்தைகளில் ஆர்வம் கொள்ளாமலும் அதன் மகத்துவத்தை உணராமலும் இருந்தால் அதில் மறைந்துள்ள இறைத் திட்டம் நமக்கு வெளிப்படாது.
    எகிப்தில் எபிரேயன் அடிக்கப்படுதல்

    நிழல்:
    அரண்மனையில் வளர்ந்த மோசே, எகிப்தியன் ஒருவனால் தனது இனமான எபிரேயன் அடிக்கப்படுவதை கண்டது,
    பொருளில்,
    பரலோகத்தில் இருந்த நம் ஆண்டவர், உலகத்தின் (எகிப்தின்) அதிபதியான சாத்தானின் நிறுவனமயமாக்கப்பட்ட மத அமைப்புகளிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படும் மனு குலத்தை ஒப்புமையாக உள்ளது.
    நிழல்:
    மோசே சென்று எபிரேயனை விடுவித்து எகிப்தியனை கொல்லுதல்.
    பொருளில் கிறிஸ்து இறை மக்களை சாத்தானின் மத அமைப்புகளை அழித்து, மனுகுலத்தை விடுவித்தலுக்கு உருவகபடுத்தலாம்.
    தங்கள் கருத்துக்களையும் கண்டிப்பாக பகிரவும். நன்றி 🙂
    மோசேயும் சண்டையிட்ட இரு எபிரேயர்களும்

    வாசிப்போம்:
    யாத்திராகமம் 2: 13,14
    13 அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி “உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார்.
    14 அதற்கு அவன், “எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?” என்று சொன்னான்.

    மேலுள்ள இதே சம்பவத்தை நாம், திருத்தூதர் பணிகள் 7:25-28 வசனங்களிலும் படிக்கிறோம்.
    வாசிப்போம்:
    திருத்தூதர் பணிகள் 7:25
    தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை
    இங்கு மோசே = கிறிஸ்துவுக்கு நிழலான அடையாளமாக இருக்கிறார்.
    நிழலில்,
    மோசே, இரு எபிரேயர்கள் சண்டையிட்டதை கண்டு, அவர்களுக்குள் சமாதானம் ஏற்படுத்த, அந்த இருவருள் - குற்றவாளியை நோக்கி கேள்வி எழுப்பினார். ஆனால் அவன், மோசேயை சமாதானத்தை ஏற்படுத்தும் நடுவராக ஏற்று கொள்ள மனதில்லாததால், கடுமையாக பேசினதாக வாசிக்கிறோம்.
    பொருளில்
    அந்த சண்டையிட்ட இரு எபிரேயர்கள், எபிரேயர்களுக்குள் இருந்த இரு வகுப்பாரை அடையாளப் படுத்துகிறார்கள்.
    குற்றவாளியானவன்: தங்கள் சொந்த இன மக்களை, நியாய பிரமாணத்தை கொண்டு அடக்கிக் ஒடுக்கிய அன்றைய பரிசேயர் மற்றும் சதுசேயர்களை அடையாளப்படுத்துவான்.
    ஒடுக்கப்பட்ட எபிரேயன்: நியாய பிரமானத்திற்கு உட்பட்ட பிற சாதாரண மக்கள்.
    அந்த குற்றவாளியான எபிரேயன் கேட்ட அதே கேள்வியை பரிசேயர் சதுசேயரும் கேட்டார்கள்.
    மத்தேயு 21:23, யோவான் 11:48, லூக்கா 20:2
    இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள்.

    எவ்வாறு, சண்டையிட்ட இரு எபிரேயர்களும், அரண்மனையில் இருந்து இறங்கி வந்த மோசே அவர்களுக்குள் சமாதானம் கொண்டு வரும் எண்ணத்தை புரிந்து கொள்ளாமல், ஏற்றுக் கொள்ளாமல் - அவர் கொல்லப் படுவதற்கு, பாரோனிடம் மாட்டி விட்டார்களோ
    அவ்வாறே, பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த நம் ஆண்டவரின் சமாதானம் உண்டாக்கும் நல்ல எண்ணத்தை - அன்றைய பரிசேயாரும் சதுசேயரும் புரிந்து கொள்ளாமல், கிறிஸ்துவை ரோம அரசாட்சி யாளர்களிடம் மாட்டி விட்டு சிலுவையில் ஏற்றி கொன்றனர்.
    வாசிப்போம்:
    யோவான் 1:11
    அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்.
    அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
    40 வருட மிதியான் காத்திருப்பு
    ஏன் மோசே, மிதியான் நாட்டுக்குப் போன பின்பு, 40 வருடம் தன் மக்களை விடுவிக்க வரவில்லை?
    மோசே - மிதியான் நாட்டிற்கு சென்றிருந்தாலும், அவரது நினைவு நிச்சயமாக தன்னுடைய மக்கள் மீதே இருந்திருக்கும்.
    மோசே அவர்கள் பயத்தினால், எகிப்தை விட்டு சென்றார் என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால், அவர் நம்பிக்கையினால் தான் எகிப்தை விட்டு வெளியேறினார் என்பதை இவ்வசனம் தெளிவு படுத்துகிறது.
    வாசிப்போம்:
    எபிரேயர் 11:26
    அரசனுடைய சீற்றத்திற்கு அஞ்சாது, அவர் எகிப்தைவிட்டு வெளியேறியதும் நம்பிக்கையினால்தான்; கண்ணுக்குப் புலப்படாதவரைக் கண்ணால் பார்ப்பவர் போன்று உறுதியாய் இருந்தார்.
    அந்த நம்பிக்கையை அவர் 40 வருடங்கள் காத்துக் கொண்டார்.
    இந்த நிழலான சம்பவம்,
    கிறிஸ்து காலம் நிறைவேறின பின்பே தமது இரண்டாம் வருகையின் மூலம், தமது மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க பூமி திரும்புகிறார் என்பதை அடையாளப்படுத்துகிறது.
    வாசிப்போம்:
    கலாத்தியர் 4: 4,5,7
    ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். அவ்வாறே, நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகின் (எகிப்தின்) போதனைகளுக்கு அடிமைப்பட்டிருந்தோம். ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
    சகோதரர் CARL HAGENSICK இவ்வாறு எழுதுகிறார்:
    Moses correctly deduced that it was not yet God's Time to deliver Israel, because they were not ready to receive him as their deliverer.
    It is also possible that Moses's Character needed futher training for the formiddable task ahead.

    ஆடுகள் போன்ற சாந்த குணம்
    நாம் முன்பு அறிந்தது போல, 40 ஆண்டுகள் மோசே மிதியான் நாட்டில் இருந்தாலும், அவரது நினைவு நிச்சயமாக எகிப்தில் அடிமைத்தனத்தில் இருக்கும் தம் மக்களின் நினைவாக இருந்திருக்க வேண்டும்.
    ஒரு மனிதனை கொலை செய்யும் அளவு மூர்க்க கோபமுடையவராக இருந்த மோசே அவர்களை, கடவுள் இந்த 40 வருடங்கள் அவரது உள்ளத்தை ஆடுகள் மூலமாக பண்படுத்தினார்.
    நம் ஆண்டவரை, பைபிள் கடவுளின் ஆட்டுக் குட்டி என்று குறிப்பிடுகிறது அல்லவா!
    அதனால், நம் ஆண்டவரை நிழலாக பிரதிபலிக்கும் பாத்திரமும், அவ்வாறே இருக்க நம் கடவுள் திருவுளம் கொண்டார்.
    வாசிப்போம்:
    எண்ணிக்கை 12:3
    பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்.
    மோசே கண்ட எரியாத முட்புதர்
  • புதர் என்பது மிகவும் அனைவராலும் தாழ்வாக எண்ணப்படும் ஒன்று.
  • அது இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.
  • அதுவும் முட்புதர் என்றால் கேட்கவே வேண்டாம். அது தீங்கு விளைவிக்க கூடியதாக, தேவையற்ற ஒன்றாகவும், தாழ்வாகவும் கருதப்படுவது.

  • நிழலில்
    அது போல தான், எகிப்தில் இருந்த இஸ்ரயேல் மக்களும் எண்ணப்பட்டார்கள்.
    பொருளில்,
    திருச்சபையாக அழைக்கப் படுகிறவர்களும் எண்ணப்படுவார்கள் என்பதை தான் எரியாத முட்புதர் விளக்குகிறது.
    BROTHER CHARLES: "IS NOT THE BURNING BUSH A GOOD ILLUSTRATION OF THE EXPERIENCE OF CHRIST AND ALL OF HIS MEMBERS?"
    RP 3989


    நெருப்பில் அழியாமல் இருந்த முட்புதர் / செடி = எகிப்தில், அடிமைத்தன நெருக்கடியில் / நெருப்பில் இருந்த இஸ்ரேல் மக்களை மோசேக்கு அடையாளப்படுத்தியது.
    பொருளில்:
    உலகத்தின் அதிபதியான சாத்தானின் நிறுவனமயம் ஆக்கப்பட்ட மத அமைப்புகளில் மாட்டி நெருக்கடியில் இருந்தும், அழியாமல் இருக்கும் அழைக்கப்பட்ட திருச்சபை மக்களை குறிக்கும்.
    எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்த, இசுரயேல் மக்களை விடுவிக்க, கடவுளாம் பரமதந்தை - மோசேயை அனுப்பியது போல, இந்த சுவிசேஷ காலத்தில், இந்த உலகத்தின் நிருவனமயமாகப்பட்ட மத அமைப்புகளில் இருந்து, நம் கடவுளாம் பரமதந்தை - கிறிஸ்து மூலமாக அவர் அருளும் சத்தியத்தின் மூலமாக விடுவித்துக் கொண்டிருக்கிறார்.
    வாசிப்போம்:
    திருவெளிப்பாடு 18:4
    பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
    மூன்று அடையாளங்கள்
    இந்த முட்புதர் அதிசயத்திற்கு பின், இஸ்ரேல் மக்களும் பாரோனும் மோசே அவர்கள் மீது நம்பிக்கை கொள்வதற்காக இறைத் தூதன் மூன்று அடையாளங்களை அவரைக் கொண்டு செய்து காட்டினார். அதன் விளக்கத்தை, நாம் அடுத்த பாடத்தில் அரிய இருக்கிறோம்.
    (யாத்திராகமம் 3: 7 to 4:17)
    இந்த பாடம் குறித்து, மேல் விளக்கம் தேவைபட்டால், கீழுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
    பொறுமையுடன் படித்த உங்களுக்கு, நம் கடவுள் தாமே ஆசீர் அளிப்பாராக.
    நமது பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.
    ஆமென்.



    Comments