THE RIGHT OF THE FIRST BORN
1. திரு ஈசாக்கு குடும்பத்தார்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
கலாத்தியர் 1:3
இந்தப் பாடத்தில் நாம்,
ஈசாக்கு - ரெபேக்கா தம்பதியின் இரெட்டை பிள்ளைகளான ஏசா மற்றும் யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த
ஒரு முறை, இந்த பாடத்தில் நாம் அறிந்து கொள்ள போகும் வசனப் பகுதிகளை முழுவதுமாக வாசித்து சம்பவங்களை நினைவில் கொள்வோம்.
2. ஆதியாகமம் 25: 19-34, 26: 34
19 ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர்.ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
20 ஈசாக்கிற்கு நாற்பது வயதானபோது பதான் அராமைச் சார்ந்த அரமேயன் பெத்துவேலின் மகளும் அரமேயன் லாபானின் சகோதரியுமான ரெபேக்காவை மணந்துகொண்டார்.
21 ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார்.ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார்.அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.
22 ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர்.அதை உணர்ந்த அவர்”எனக்கு இப்படி நடப்பது ஏன்?” என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.
23 ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன: உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர்.ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும்.மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார்.
24 அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது, இரட்டைப் பிள்ளைகள் கருப்பையில் இருந்தன.
25 முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது.எனவே அவனுக்கு”ஏசா” என்று பெயர் இட்டனர்.
26 இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான்.எனவே அவனுக்கு”யாக்கோபு” என்று பெயரிடப்பட்டது.அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.
27 இருவரும் வளர்ந்து இளைஞரானபோது, அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய், திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான்.ஆனால் யாக்கோபு பண்புடையவனாய், கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.
28 ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார்.ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.
29 ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக்கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான்.
30 அவன் யாக்கோபிடம், “நான் களைப்பாய் இருக்கிறேன்.இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு,” என்றான்.அவனுக்கு”ஏதோம்” என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.
31 யாக்கோபு அவனை நோக்கி, “உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு” என்றான்.
32 அவன், “நானோ சாகப்போகிறேன்.தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?” என்றான்.
33 யாக்கோபு, “இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றான்.எனவே ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.
34 யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க, அவனும் தன் வழியே சென்றான்.
34
ஏசா நாற்பது வயதானபோது, இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும் இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்துகொண்டான்.
35
இவர்களால் ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தனர்.
3. ஆதியாகமம் 27: 1-40
1 ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று.அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து,”என் மகனே” என்றார்: ஏசா,”இதோ வந்துவிட்டேன்” என்றான்.
2 அவர் அவனை நோக்கி, “இதோ பார்: எனக்கு வயதாகிவிட்டது.சாவு எந்நாள் வருமோ என்றறியேன்.
3 இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக்கூட்டையும் எடுத்துக்கொள்.காட்டுக்குப் போ.வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா.
4 நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா.நான் அவற்றை உண்பேன்.நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்” என்றார்.
5 ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக் கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன்,
6 அவர் தம் மகன் யாக்கோபை நோக்கி, “உன் தந்தை உன் சகோதரன் ஏசாவுக்குச் சொன்னது என் காதில் விழுந்தது.அவர் சொன்னது:
7 “நீ போய் வேட்டையாடி, வேட்டைக்கறியை சமைத்துக் கொண்டு வா.நான் உண்பேன்.நான் சாவதற்கு முன் ஆண்டவர் திருமுன் உனக்கு ஆசி வழங்குவேன்.”
8 இப்பொழுது என் மகனே, நான் கட்டளையிடுவதைக் கருத்தாய்க் கேள்.
9 உடனே மந்தைக்குப் போ, அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா.நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன்.
10 நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்” என்றார்.
11 யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், “என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன்: நானோ மிருதுவான உடல் கொண்டவன்.
12 என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? அவரை நான் ஏமாற்றுவதாகத் தெரிந்துவிட்டால், என்மேல் ஆசிக்குப் பதிலாக சாபத்தையல்லவா விழச் செய்துகொள்வேன்” என்றான்.
13 ஆனால் அவன் தாய் அவனிடம், “மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்: நான் சொல்வதை மட்டும் செய்: போ: அவற்றை என்னிடம் கொண்டு வா” என்றார்.
14 அவனும் அவ்வாறே போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார்.
15 மேலும் ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார்.
16 அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார்.
17 அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.
18 அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று,”அப்பா” என்று அழைத்தான்.அவரும் மறுமொழியாக,”ஆம் மகனே, நீ எந்த மகன்?” என்று கேட்க,
19 யாக்கோபு தன் தந்தையிடம், “நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா.நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்” என்றான்.
20 ஈசாக்கு தம் மகனை நோக்கி, “மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?” என்று கேட்க, அவன், “உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது,” என்றான்.
21 ஈசாக்கு யாக்கோபிடம், “மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப்பார்த்துத் தெரிந்துகொள்வேன்” என்றார்.
22 யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான்.ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து,”குரல் யாக்கோபின் குரல்: ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்” என்றார்.
23 அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.எனவே அவனுக்கு ஆசி வழங்கினார்.
24 மீண்டும் அவர்”நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?” என்று வினவ, அவனும்”ஆம்” என்றான்.
25 அப்பொழுது அவர், “மகனே உண்பதற்கு வேட்டைப்பதார்த்தங்களைக் கொண்டு வா.மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்” என்றார்.அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார்.பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார்.
26 அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி”மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றார்.
27 அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே: “இதோ, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்!
28 வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக!
29 நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிவிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!”
30 இவ்வாறு ஈசாக்கு யாக்கோபிற்கு ஆசி வழங்கி முடிந்ததும், யாக்கோபு தந்தையின் முன்னிலையிலிருந்து விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான்.
31 அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி,“என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு, மனமார எனக்கு ஆசி வழங்குவாராக” என்றான். 32 அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி:”நீ யார்”என, அவன்:”நான் தான் உங்கள தலைப்பேறான மகன் ஏசா” என்றான்.
33 ஈசாக்கு மிகவும் நடுநடுங்கி, “அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன்.அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்” என்றார்.
34 ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் மனக்கசப்படைந்து பெருங்குரலெழுப்பிக் கதறி அழுதான்.அவன் தன் தந்தையை நோக்கி, “அப்பா! எனக்கும் ஆசி வழங்குவீர்” என்றான்.
35 அதற்கு அவர்: “உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்” என்றார்.
36 அதைக் கேட்ட ஏசா, “யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே.ஏனெனில், அவன் இருமறை என்னை ஏமாற்றிவிட்டான்.ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான்.இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்” என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி:”நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?” என்று கேட்டான்.
37 ஈசாக்கு ஏசாவிடம், “நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன்.அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன்.இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?” என்று சொல்ல,
38 ஏசா அவரை நோக்கி, “அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா” என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்.
39 அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக, “உன் குடியிருப்புக்கு நிலத்தின் செழுமையோ மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.
40 நீ உன் வாளினால் வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்: நீ கிளர்ந்து எழும்போது உன் கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை முறித்து விடுவாய்” என்றார்.
41 தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு,”என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன.அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
4. அம்மா வயிற்றில் முட்டி மோதிய இரட்டையர்கள்
ஆதியாகமம் 25: 19-22
ஈசாக்கு - ரெபேக்கா திருமணம் நடந்த போது, ஈசாக்கிற்கு 40 வயது. (BC 1810) 19 ஆண்டுகள் குழந்தை இல்லை.
பின்பு கடவுள், ஈசாக்கின் மன்றாட்டை கேட்டு ரெபேக்கா கருவுற்றார்.
ஆனால், கருவிலேயே பிறக்க போகும் புதல்வர்கள் முட்டி மோதி கொண்டதால், ரெபேக்கா - கடவுளிடம் இது குறித்து கேட்டார்.
அதற்கு, கடவுள் அளித்த பதில் -
ஆண்டவர் அவரை நோக்கி,
"உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன;
உன் வயிற்றில் இருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர்.
ஓர் இனம் மற்றதை விட வலிமை மிக்கதாய் இருக்கும்.
மூத்தவன் இளையவனுக்கு பணிந்திருப்பான்" என்றார்.
இது ஒரு மாபெரும் தீர்க்கதரிசனம் ஆகும்.
அதை குறித்து தான் பின் வரும் பகுதியில் படிக்க இருக்கிறோம்.
குழந்தைகள் பிறக்கும் முன்பே ரெபேக்காவிடம் இளையவனுக்கு மூத்தவன் பணிந்திருப்பான் என்று அறிவிக்க பட்டதால், ரெபேக்காவுக்கு இளையவன் யாக்கோபு மீது தனி கண்ணும் பாசமும் இருந்திருக்க வேண்டும்.
ஆதியாகமம் 25: 24-26
குழந்தைகள் பிறந்த போது, ஈசாகிற்கு வயது 60. (BC 1750)
முதலில் பிறந்த ஏசா செந்நிறமாகவும், உடல் முழுவதும் முடியுடன் பிறந்தார்.
இதற்கு என்ன அர்த்தம்?
இரண்டாவது பிறந்த யாக்கோபு, ஏசாவின் குதிங்காலை கையால் பற்றி கொண்டு வெளிவந்தான் என்று வாசிக்கிறோம்.
இதற்கு என்ன அர்த்தம்?
கடவுள், ரெபேக்காவிடம் கூறிய வார்த்தைகளுக்கும் அவர்கள் பிறந்த விதத்திற்கும் உள்ள அர்த்தங்கள் பின் வரும் பகுதியில் அறிவோம்.
5. கூழுக்காக முதல் மகன் உரிமையை அலட்சியமாய் விற்ற ஏசா
ஆதியாகமம் 25: 27 - 34
வளர்ந்து இளைஞர்களானவுடன், ஏசா வேட்டையில் வல்லவராய் இருந்ததால், அவர் வேட்டையாடி தந்த உணவின் பொருட்டு, ஈசாக்குக்கு அவன் மேல் அதிக அன்பு கொண்டிருந்தார்.
ஆனால், யாக்கோபு கூடாரத்தில் உறைபவராய் இருந்து அம்மா ரெபேக்காவுக்கு செல்ல பிள்ளையாக இருந்தார்.
ஒரு முறை, ஏசா வேட்டையாடி விட்டு, மிகவும் களைப்பாக வந்த போது, தம்பி யாக்கோபிடம் அவர் சமைத்து கொண்டிருந்த செந்நிற கூழை கேட்டார்.
ஆனால், சமயத்தை எதிர்பார்த்திருந்த யாக்கோபு கூழுக்கு விலையாக அவரது முதல் மகன் உரிமையை கேட்க, ஏசாவும் அலட்சியமாக யாக்கோபு வைத்திருந்த சிவப்பான கூழுக்காக தனது, முதல் மகன் உரிமையை விற்று போட்டான் என்று வாசிக்கிறோம்.
செந்நிற கூழை கேட்டு குடித்ததால், அவருக்கும் அவரது சந்ததிக்கும் ஏதோம் (சிவப்பு) என்று வழங்கப்பட்டது. (ஆதியாகமம் 25: 30)
அதுவும் பசிக்காக கேட்டதற்கு, இவ்வாறு யாக்கோபு செய்யலாமா! 🤨
மேலும், ஏசா மணமுடித்த இரு பிற இன பெண்கள் (யூதித் & பாசமத்), ஈசாக்கிற்கும் ரெபேக்காவுக்கும் மனகசப்பை உண்டாக்கினார்கள் என்று அறிகிறோம்.
6. கடவுளுக்கு ஏமாற்றுகிறவர்களை பிடிக்குமா?
யாக்கோபு என்ற பெயருக்கு எத்தன் - ஏமாற்றுக்காரன் என்று அர்த்தம் என்பதை நாம் அறிவோம்.
அதனால், அந்தப் பெயருக்கு ஏற்றபடி அவர் தன் சகோதரர் ஏசாவை ஏமாற்றி, அவரது சொத்துக்களை அபகரிப்பதற்காக ஏசாவின் முதல் மகன் உரிமையை (சேஷ்ட புத்திர பாகத்தை) வாங்கினார் என்று நாம் எண்ணம் கொண்டிருப்போம்.
அப்படி என்றால், நமக்கு ஒரு கேள்வி எழ வேண்டும். கடவுளுக்கு ஏமாற்றுகிறவர்களை பிடிக்குமா?
வாசிப்போம்
திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழி தூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறை ஆட்சியை உரிமையாக்கி கொள்வதில்லை.
11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில்
13 யாக்கோபுக்கு நான் அன்பு காட்டினேன். ஆனால், ஏசாவை வெறுத்தேன்.
குழந்தைகள் பிறக்கும் முன்பே, அவர்கள் நன்மை தீமை செய்யும் முன்பே - கடவுள் இவ்வாறு பாகுபாடு காட்டியது ஏன்? இதற்கு என்ன அர்த்தம்?
வாருங்கள் அறிவோம்.
7. முதல் மகன் உரிமை (சேஷ்டபுத்திர பாகம்) என்றால் என்ன?
இந்த பாடத்தின் தலைப்பை நாம் முதலில் புரிந்து கொள்வோம்.
முதல் மகன் உரிமை என்பது ஒரு தந்தை, தனது வயதான காலத்தில், தன் மூத்த மகனுக்கு அவரது சொத்தில் தரும் முன்னுரிமை ஆகும்.
ஒருவன் தன் தலைச்சன் புதல்வனுக்கு சொத்துக்களில் இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில், அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற்கனி.
ஏன் முதல் மகனுக்கு சொத்தில் பிரதானமாக இரண்டு பாகங்கள் கொடுக்கப்படுகிறது?
ஏனென்றால், சொத்தில் இரண்டு பாகம் வாங்கிய முதல் மகனுக்கு, தன் பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் கொடுக்கப்படுகிறது. அதற்காகத்தான் இரண்டு இரண்டு பாகங்கள்.
இப்போது சொல்லுங்கள்... யாக்கோபு, முதல் மகன் உரிமையை வாங்கியது சொத்துக்காகவா? அல்லது தன் தந்தையையும் தாயையும் கவனித்துக் கொள்ளவா?
வாசிப்போம்
35 இவர்களால் ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தனர்.
இந்த புரிதலோடு, மேற்கொண்டு வாசிப்போம்.
8. அம்மா ரெபேக்காவின் பிரத்யேக மட்டன் மசாலா
அப்பா ஈசாக்கு, முதல் மகன் உரிமையை ஏசாவுக்கு அளிக்கும் முன்பு, ஏசாவிடம் அவர் விரும்பும் முறையில் சமைக்கப்பட்ட சுவையான வேட்டைக்கறி கேட்கிறார்.
இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த அம்மா ரெபேக்கா, முதல் மகன் உரிமையை தன் இரண்டாவது மகன் யாக்கோபிற்கு பெற்ற தரும் பொருட்டு, யாக்கோபை அழைத்து, மந்தையில் உள்ள இரண்டு ஆடுகளை கொண்டு வர செய்து,
யாக்கோபிற்கு ஏசாவை போலவே ரோமத்தை உண்டு பண்ணி, ஈசாக்கிற்கு பிடித்தபடி மட்டன் கறியை பிரத்யேக மசாலா போட்டு சமைத்து யாக்கோபிடம் கொடுத்து அனுப்புகிறார்.
மேலும், இதனால் ஏதும் சாபம் ஏற்படுமானால் , அது என் மேல் வரட்டும் என்று யாக்கோபை தைரியப்படுத்துகிறாள் என்று வாசிக்கிறோம்.
குழந்தைகள் பிறக்கும் முன்பு, ரெபேக்காவுக்கு கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனம், அவர் மூலமாகவே நிறைவேறுகிறது.
9. யாக்கோபு - கண் தெரியாத ஈசாக்கிடம் முதல் மகன் உரிமையை பெறுதல்
ஆதியாகமம் 27: 18-27
யாக்கோபு தன் தந்தையை அழைத்ததும் ஈசாக்கிற்கு சந்தேகம். குரல் யாக்கோபை போல உள்ளது. ஆனால், தான் ஏசா என்று பதில் வருகிறதே!!!
எப்படி இவ்வளவு சீக்கிரம் வேட்டைக்கறி அகப்பட்டது என்று ஈசாக்கு கேட்க, யாக்கோபு, கடவுள் தந்தார் என்று (உண்மையை) கூறி சமாளிக்கிறார்.
சந்தேகத்துடன் இருந்த ஈசாக்கு வந்தது யார் என்று அறிய, உடலில் ரோமம் (முடி) உள்ளதா என்று தடவி பார்த்து - வந்தது "ஏசா" தான் என்பதை உறுதி செய்கிறார்.
வந்தது ஏசா தான் என்று உறுதி படுத்திய பின்பு, ஈசாக்கு இவ்வாறாக முதல் மகனுக்குரிய ஆசீர்வாதத்தை அளிக்கிறார்.
26 அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி”மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு” என்றார்.
27 அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே: “இதோ, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்!
28 வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக!
29 நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிவிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!”
10. வேட்டைக்காரன் ஏசா வேட்டைக்கறியுடன் வருகிறார்
ஆதியாகமம் 27: 30-40
முதல் மகனுக்குரிய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு யாக்கோபு சென்ற பின்பு, ஏசா மகிழ்ச்சியுடன் தன் தந்தையை சந்திக்க உள்ளே நுழைந்து,
அப்பா! என்னை ஆசீர்வதியும்
என்றார்.
அதிர்ச்சி அடைந்த ஈசாக்கு, ஏற்கனவே வந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டது யார் என்று வினவ,
தம்பி யாக்கோபு, முதல் மகன் உரிமையை தன் தந்தையிடம் ஏமாற்றி பெற்றுக் கொண்டதை புரிந்து அழுகையும் கோபமும் அடைகிறார்.
பின்பு இரண்டாவது மகனுக்குரிய ஆசிர்வாதத்தை, தன் தந்தையிடம் பெற்றுக் கொள்கிறார்.
வாசிப்போம்
39 அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக, “உன் குடியிருப்புக்கு நிலத்தின் செழுமையோ மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.
40 நீ உன் வாளினால் வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்: நீ கிளர்ந்து எழும்போது உன் கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை முறித்து விடுவாய்” என்றார்.
41 தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு,”என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன.அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
தாயின் வயிற்றில் துவங்கிய சண்டை, வளர்ந்தும் முடிந்த பாடில்லை. 😕
இந்த பாடத்தில், இது வரை பார்த்த சம்பவங்களில் கடவுள் மறைத்து வைத்து உள்ள சத்தியத்தை, நிழல் பொருள் அடிப்படையில் அறிந்து கொள்ள போகிறோம்.
11. நிழல் பொருள்
முதல் மகன் உரிமையையும் ஆசீர்வாதத்தையும் இழந்த ஏசாவிற்கு ஏதாவது குறைவு இருந்ததா?
யாக்கோபு ஏசாவிடம் இருந்து தப்பித்து பதான் அரம் சென்று தனது மாமா லாபானின் மகள்களை திருமணம் செய்து பிள்ளைகளை பெற்று, பல ஆண்டுகளுக்கு பின் ஏசாவை சந்தித்தார்.
அப்போது ஏசா எப்படி இருந்தார்?
வாசிப்போம்
1 யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார்.
9 ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் மிகுதியாக உள்ளது.உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றார்.
அப்படி என்றால் அவர் உண்மையில் எதை இழந்தார்?
அவர் எதை இழந்தார் என்று தான் இந்த பாடத்தில் நாம் நிழல் - பொருள் அடிப்படையில் அறிய போகிறோம்.
வாசிப்போம்
முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன.
அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.
வாருங்கள்... நாம் இதுவரை படித்த நிழலான சம்பவங்களில் மறைந்துள்ள பொருளை அறிந்து கொள்வோம். 🙂
12. யார் கடவுளின் முதல் மகன்?
ரெபேக்காவிடம் கடவுள், உனக்கு இரண்டு மகன்கள் பிறப்பார்கள் என்றும் அவர்கள் இரு பெரும் ஜாதிகளாவார்கள் என்றும் அவர்களில் மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று இறைவாக்கு உடைக்கப்பட்டது.
(ஆதியாகமம் 25:2)
இங்கு தந்தை ஈசாக்கு = கடவுளாம் பரம தந்தைக்கு அடையாளமாக இருக்கிறார்.
ஈசாக்கு = பரமதந்தை என்றால், நம் பரம தந்தையின் சேஷ்டபுத்திரன் யார்?
வாசிக்கலாம்
யாத்திராகமம் 4:22
இஸ்ரயேல் என் மகன். என் தலை பிள்ளை.
நீங்கள் என் சொந்த சம்பத்து.
(யாத்திராகமம் 19:5
மல்கியா 3:17
உபாகமம் 7:6)
ஆம்.
ஏசா = இஸ்ரயேல் மக்கள்
அப்படி என்றால், யாக்கோபு யாரை அடையாளப்படுத்துவார்?
யாக்கோபு = புறஜாதியார் = நாம்.
ரெபேக்கா = நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
வாசிப்போம்
உபாகமம் 32:18
உன்னை ஈன்ற பாறையை புறக்கணித்தாய். உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்.
1 கொரிந்தியர் 10:4
அவர்கள் பின் தொடர்ந்து வந்த பாறையிலிருந்து குடித்தார்கள். கிறிஸ்துவே அப்பாறை.
முதல் மகனாகிய இஸ்ரேல் மக்களுக்கும், புறஜாதியாராகிய நமக்கும், அப்பாவும் அம்மாவும் ஆக இருப்பவர்கள், நம் கடவுளாம் பரமதந்தையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்.
அல்லேலூயா 🙂
13. அப்பாவிடம் ஆசீர்வாதம் பெற அம்மா பேச்சை கேட்க வேண்டும்
பொருளில்:
புறஜாதியாராகிய நாம் (யாக்கோபு), நம் பிதாவிடம் (ஈசாக்கு) சென்று ஆசீர்வாதம் பெற வேண்டுமென்றால், நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் (ரெபேக்கா) பேச்சை கேட்க வேண்டும்.
ஏசாவிற்கு ரோமம் இருந்தது -
இஸ்ரேல் மக்கள் முரட்டாட்டம் உள்ளவர்களாகவும்,
வணங்கா கழுத்துள்ளவர்களாகவும்
இருந்ததை அடையாளப்படுத்துகிறது.
இந்த ஜனம் வணங்கா கழுத்துள்ள ஜனம்.
(யாத்திராகமம் 32:9, 33:3, 33:5, 34:9,
உபாகமம் 9:6, 9:13,
திருத்தூதர் பணிகள் 7:51)
ஏசா எப்படி அவரது அப்பா அம்மா பேச்சை கேட்காமல் அவர்களுக்கு நோவாக இருந்தாரோ,
அவ்வாறே இஸ்ரயேல் மக்களும் தந்தையாம் யாவே கடவுளை அறிந்திருந்தும் அவருக்கு செவி சாய்க்கவில்லை;
வாசிப்போம்
கடவுள்மேல் அவர்களுக்குப் பற்று உண்டு என்பதற்கு நானே சாட்சி. ஆனால் அப்பற்று உண்மையான அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல.
தாய் போல இருந்து வழிநடத்திய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கும் செவி சாய்க்கவில்லை.
ஏசு கிறிஸ்து: கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!
14. உனக்குரிய சாபம் என் மேல் விழட்டும்
கண் தெரியாத தந்தையிடம், ஏசாவிர்க்கு பதிலாக யாக்கொபை அனுப்பும் போது, ரெபேக்கா யாக்கோபிடம்
“மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்"
அப்பா ஈசாக்கு, கண் தெரியாமல் இருந்தது, நம் தந்தையாம் பரமபிதா, நாம் அறியாமையுள்ள காலங்களை கடவுள் கண் கானாதவர் போல் இருந்தார் என்பதற்கு ஒப்புமை படுத்தலாம்.
வாசிப்போம்
அறியாமையுள்ள காலங்களை கடவுள் காணாதவர்போலிருந்தார்.
வாசிப்போம்
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரயேலரிலொரு பங்கு கடினமான மனதுண்டாயிருக்கும்.
15. மட்டன் கறி ஆன இரண்டு வெள்ளாடுகள்
ரெபேக்கா யாக்கோபிடம் இரண்டு வெள்ளாடுகளை அப்பா ஈசாக்கிற்கு அவர் விரும்பியவாறு மட்டன் கறி சமைப்பதற்காக எடுத்து வர சொல்கிறார்.
அப்பா ஈசாக்கிற்கு எப்படி சமைத்தால் பிடிக்கும் என்பதை அம்மா ரெபேக்கா எவ்வாறு அறிந்திருந்தாரோ,
நம் கடவுளாம் பரமதந்தைக்கு எது பிடிக்கும் என்பதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே தெரியும்.
வாசிப்போம்
கிறிஸ்து உங்களுக்காக தம்மை நறுமணம் வீசும் வலியும் காணிக்கையுமாக கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூறுவது போல நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
இரண்டு வெள்ளாடுகள் எதை குறிக்கும்?
நமது பைபிளில், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கடவுளின் ஆட்டுக்குட்டி என்று குறிப்பிடுகிறது.
ஆம், முதல் வெள்ளாடு = நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
திருச்சபை, கரைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்க தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
இரண்டாவது வெள்ளாடு = கிறிஸ்துவோடு சிலுவையை சுமக்க அழைக்கப்பட்டுள்ள நாம்.
நம் ஆண்டவர் எப்படி தம் வாழ்க்கையை பிதாவிற்கு சுகந்த வாசனையாக ஒப்புக்கொடுத்தாரோ, நாமும் நம் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.
16. ஏசாவின் ஆடை யாக்கோபு உடுத்துவிக்கப்பட்டது
தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்க சென்ற யாகொபுக்கு, அம்மா ரெபேக்கா, ஏசாவின் ஆடைகளை உடுத்துவித்து, ஆட்டு தோலினால் கைகளையும் கழுத்தையும் மூடினார். (ஆதியாகமம் 27: 15,16)
பொருளில்
இது, இஸ்ரயேல் மக்களின் பிதாக்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்ட உரிமைகளை அடையாளப்படுத்துகிறது.
அவர்களது பிதாக்களுக்கு தந்த வாக்குதத்தங்களை தான் புறஜாதியாரான நாம் அணிந்து இருக்கிறோம்.
இந்த வாக்குதத்தங்களின் அடிப்படையில் தான், நம் பரமதந்தையும் நமக்கு ஆசீர் அளிப்பார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
இதற்கு பின் நடந்த சம்பவங்களை வாசிக்கவே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
அதன் பொருளை உணர்ந்து படித்தால் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
17. வானத்தின் பனியும் பூமியின் கொழுமையும்
அப்பா ஈசாக்கு, வந்தது ஏசா தான் என்று உறுதி செய்து கூறிய ஆசீர்வாதம், கடவுள் - ஆபிரகாமுக்கு தந்து (ஆதியாகமம் 22:17), பின் அது ஈசாக்கிற்கு மாற்றப்பட்டு (ஆதியாகமம் 26:3,4), இப்போது யாக்கோபுக்கு வந்துள்ளது. அதாவது புறஜாதியாரான நமக்கு. வாசிப்போம்
கடவுள் ஆபிரகாமிடம்: நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்
நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
பின், ரெபேக்கா மூலமாக யாக்கோபுக்கு வந்தது
பொருளில்,
அதே வானத்து நட்சத்திரமாக =
கிறிஸ்துவின் திருச்சபையாக =
சிறு மந்தையாக =
கிறிஸ்துவின் மணவாட்டியாக =
144000 இல் ஒருவராக =
ராஜ ரீக ஆசாரியனாக கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் பங்கு கொள்ளும் மாபெரும் ஆசீர்வாதம் தான், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாக நமக்கு இப்போது கிடைத்திருக்கிறது.
அல்லேலூயா ✋🙂🤚
18. மனம் கசந்து துக்கிப்பார்கள்
கடவுள் ஆபிரகாம் அவர்களுக்கு அளித்த வானத்தின் நட்சத்திரமாக மாறும் மாபெரும் வாய்ப்பு முதலில் இஸ்ரயேல் மக்களுக்கு தான் சென்றது.
வாசிப்போம்
4 அவர்கள் இஸ்ரயேல் மக்கள். அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில் தான் கடவுள் தம் ஆட்சியை விளங்க செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
5 பிதாக்கள் அவர்களுடையவர்களே. மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார்.
ஆனாலும், இஸ்ரயேல் மக்கள், அவர்களுக்கு கிடைத்திருந்த கடவுளின் முதன் மகன் உரிமையை, ஏசாவை போல் அசட்டை செய்ததாலும், கடவுள் அனுப்பிய தம் இறைமகனார் இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக் கொடுத்ததாலும், கடவுள், முதல் மகன் உரிமையை அவர்களிடமிருந்து புறஜாதியாரான நமக்கு உரிமையாக்க சித்தம் கொண்டார்.
தீர்க்கதரிசனம்:
எப்படி, முதல் மகன் உரிமையை இழந்தது அறிந்த பின் ஏசா மனம் கசந்து அழுதாரோ, அதேபோல, இசுரயேலரும் கடவுளிடம் மீண்டும் வந்து ஆசீர்வாதத்திற்கு அழும் காலம் வரும்.
வாசிப்போம்
எனக்காக புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காக துக்கிக்கிறது போல எனக்காக மனம் கசந்து துக்கிப்பார்கள்.
இஸ்ரேல் புத்திரர் தங்கள் வலியை மாறுபாடாக்கி, தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தது நிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பம் செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
19. கடவுள் இஸ்ரயேலரை தள்ளிவிட்டாரா?
வாசிப்போம்
அப்படியானால் கடவுள் தம் மக்களை தள்ளிவிட்டார் என்று சொல்லலாமா? ஒருபோதும் இல்லை.
அப்படியானால் அவர்கள் தடுமாறியது அழிந்து போவதற்கா? ஒருபோதும் இல்லை. அவர்கள் தவறு செய்ததால் யூதர் அல்லாதாருக்கு மீட்பு கிடைத்தது. அவர்கள் தவறியதால் உலகம் அருள் வளம் பெற்றது. அவர்கள் வீழ்ச்சியுற்றதால் பிற இனத்தார் அருள் வளம் பெற்றனர்.
ஏன் கடவுள் இஸ்ரயேலரை மட்டும் தேர்ந்தெடுத்தார்?
வாசிப்போம்
எல்லா மக்களிலும் நீங்கள் கொஞ்சமாக இருந்தீர்கள்.
எப்படி கொஞ்ச மக்களாக இருந்த இஸ்ரயேலரை, எவ்வாறு பாலும் தேனும் ஓடும் செழிப்பான கானானுக்கு வழிநடத்தினாரோ, சத்தியத்தை அறிய வாஞ்சிக்கும் கொஞ்ச மக்களாக இருக்கும் நம்மை, கடவுள் இந்த செழிப்பான சத்தியங்கள் மூலமாக பரம கானானுக்கு வழிநடத்தி வருகிறார்.
20. செந்நிற கூழும் பசியும்
செந்நிறம் என்பது உலக காரியங்களை அடையாளப்படுத்துகிறது. (ஆதியாகமம் 25: 30)எப்படி ஏசா, தன் அப்போதைய பசியை ஆற்ற, கூழுக்காக தனது முதல் மகன் உரிமையை (சேஷ்ட புத்திர பாகத்தை) அசட்டையாக விற்று போட்டாரோ,
அதுபோல, நாமும் நமக்கு இப்போது கடவுளின் முதல் மகனாக (திருச்சபை = 144000) மாறும் வாய்ப்பை, இவ்வுலகத்தின் (கூழ் போன்ற) அற்ப காரணங்களுக்காக இழந்து போகாமல் காத்துக் கொள்வோம்.
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.
ஆமென்.




Comments
Post a Comment