2-G. UNDERSTANDING HIS TIMES | காலங்களில் அவர் திட்டங்கள்

EXPLORING THE SCRIPTURES BASED ON TIME PERIODS

EXPLORING THE SCRIPTURES BASED ON TIME PERIODS

1. 🎼 காலங்களில் அவர் திட்டங்கள்...
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாம் பைபிளை படிக்கும் போது பல இடங்களில் கால இடைவெளிகளும், வருடங்களும், நாட்களும், மணி நேரங்களும், வயதும் கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.
எடுத்துக்காட்டுகள்
120
ஆதியாகமம் 6:3
அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை.அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்” என்றார்.
இங்கு ஏன் கடவுள் 120 வருடங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்?

600
ஆதியாகமம் 7:6
மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
இங்கு ஏன் நோவாவின் வயதை கடவுள் தந்திருக்கிறார்?

40
  • எண்ணாகமம் 14:34
    நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்:
    ஏன் இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகள் சினாய் பாலைவனத்தை சுற்றி நடந்தார்கள்?
    நேராக நாட்டுக்கு சென்றிருந்தால் 3 - 6 நாட்களில் சென்றிருக்கலாமே!

  • யாத்திராகமம் 24:18
    மோசே மேகத்தின் இடையே புகுந்து, மலைமேல் ஏறிச் சென்றார்.மோசே மலையில் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார்.
    ஏன் மோசே குறிப்பாக 40 நாட்கள் சினாய் மலையில் இருந்தார்?

  • ஏன் அரசர் சவுல், அரசர் தாவீது மற்றும் அரசர் சாலமன் - ஒவ்வொருவரும் சரியாக 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?

  • லூக்கா 4:1,2
    இயேசு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.
    ஏன் நம் ஆண்டவரும் 40 நாட்கள் உபவாசித்தார்?

6
யோவான் 12:1
பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார்.
இங்கு நம் ஆண்டவர் குறிப்பாக 6 நாட்களுக்கு முன்பு பெத்தானியாவுக்கு சென்றார்?
இதில் மறைந்துள்ள விடயம் என்ன?
இது போல நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? 🙂

9 & 3
மாற்கு 15: 25
அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.

மாற்கு 15: 34,37
பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார்.
இயேசு உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
ஏன் நம் ஆண்டவர் காலை 9 AM (3ஆம் மணிவேளை) சிலுவையில் அறையப்பட்டு மதியம் 3 PM க்கு (9 ஆம் மணிவேளை) உயிர் நீத்தார்?

சிலுவை நிகழ்வில் நேரம் குறிப்பாக ஏன் சொல்லப்படுகிறது?

1260
திருவெளிப்பாடு 12:6
அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்: அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இங்கு 1260 நாட்கள் என்பது எதை குறிக்கும்?
அதில் மறைந்துள்ள காலங்கள் எங்கு துவங்கி இங்கு முடிகிறது?

1335
தானியேல் 12: 12
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்வரை காத்திருப்பவரே பாக்கியவான்.
1335 நாட்கள் காத்திருப்பவர் பாக்கியவான் என்றால் முதலில் அது என்னவென்று தெரிந்திருக்க வேண்டாமா?
இந்த நாட்களில் மறைந்துள்ள அர்த்தம் என்ன?

மேலே நீங்கள் வாசித்த ஒவ்வொரு எண்கள் மற்றும் கேள்விகளுக்கும், இன்னும் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு எண்கள், அளவுகள், காலங்கள் ஒவ்வொன்றிற்கும் பின் வரும் பாடங்களில், அதில் மறைந்துள்ள அழகான அர்த்தங்களையும் கடவுளின் திட்டங்களையும் அறிந்து கொள்ள போகிறோம்.
வாழ்த்துக்கள். 🙂
2. காலங்களை கணக்கிட பைபிள் தரும் விதிகள்
பைபிளில் உள்ள நாட்களை/ எண்களை புரிந்து கொள்ள, இறை வார்த்தைகளே நமக்கு சில விதிகளை அளிக்கிறது.
அவற்றை அறிந்திருப்பதன் மூலம், மிகவும் எளிதாக இறைத்திட்டத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
🕰️ கணக்கீட்டு அடிப்படைகள்
▪️ ONE YEAR = 12 MONTHS
▪️ ONE MONTH = 30 DAYS
▪️ HEBREW CALENDER MONTHS
▪️ ONE DAY = 1000 YEARS
▪️ ONE YEAR = 360 DAYS
▪️ ONE DAY = ONE YEAR
▪️ ஜாமங்கள் & மணிவேளைகள்
3. ONE YEAR = 12 MONTHS
ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உண்டு என்று நாம் அனைவருமே அறிவோம். ஆனால் காலங்களை உண்டாக்கிய கடவுள் அதற்கு பைபிளில் சான்று தந்திருக்கிறார்.
வாசிக்கலாம் -
1 இராஜாக்கள் 4:7
ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள்.
இங்கு ஒவ்வொரு மாதமும் ஒருவராக வருடத்திற்கு 12 நபர்கள் சாலமன் அரசருக்கு மளிகை பொருள் சேகரிக்கும் பணிவிடைக்காரர்களை பற்றி கூறப்பட்டுள்ளது.
இதே வருடத்திற்கு 12 மாதங்கள் தான், நாம் பின் அறிந்து கொள்ள போகும், தீர்க்க தரிசன கணக்கீடு அனைத்திலும் பயன் படுத்த போகிறோம்.

4. ONE MONTH = 30 DAYS
அது போல, ஒரு மாதத்திற்கு எத்தனை நாட்கள் என்று பைபிளில் குறிப்பு உண்டா?
நோவாவிடம் கடவுள் ஒரு பேழையை கட்ட சொன்னார். அதன் பின், 40 நாட்கள் தொடர்ந்து பெரு மழை பெய்தது.
இந்த பெரு மழை எந்த நாளில் துவங்கியது? வாசிப்போம் -
ஆதியாகமம் 7:11 - நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. 12. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
ஆக, பெரு மழை துவங்கியது = 2ம் மாதம் 17ம் தேதி
இப்போது பூமியில் அந்த வடியாத மழை தண்ணீர் எத்தனை நாட்கள் இருந்தது? வாசிப்போம் -
ஆதியாகமம் 7:24 - 24.ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
ஆதியாகமம் 8:3 - ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
தண்ணீர் வடியாமல் இருந்த நாட்கள் : 150 DAYS.
எந்த நாளில் தண்ணீர் வடிய துவங்கியது?
வாசிப்போம் -
ஆதியாகமம் 8:4 - ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
தண்ணீர் வடிய துவங்கியது : 7th மாதம் 17ம் தேதி.

ஆக, 7th Month 17 மற்றும் 2nd Month 17 - ஆகிய ஐந்து = 5 மாத இடைவெளி உள்ள நாட்களுக்கு இடை பட்ட நாட்கள் = 150.
அப்படி என்றால், ஒரு மாதத்திற்கு 150/5 = 30 நாட்கள்.



ஆக, பைபிள் தீர்க்கதரிசன கணக்கீடுகள் அனைத்திலும் நாம் மாதத்திற்கு 30 நாட்கள் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது உள்ள மாதத்திற்கு 28, 30, 31 நாட்கள் விவிலிய கணக்குகளில் பயன் படுத்தப்படவில்லை.
5. HEBREW CALENDER MONTHS
NO. HEBREW MONTH
1 NISAN
2 IYAR
3 SIVAN
4 TAMMUZ
5 AV
6 ELUL
7 TISHRI
8 CHESHVAN
9 KISLEV
10 TEVET
11 SHEVAT
12 ADAR
6. ONE DAY = 1000 YEARS

வாசிப்போம்
2 பேதுரு 3: 8
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.
இந்த வசனம் - கடவுளுக்கு,


என்ற முக்கிய தகவலை தருகின்றது.
இதன் மூலம், கடவுளின் கால அளவும் மனிதரின் கால அளவும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்கிறோம்.
இது இவ்வாறு இருக்க, எங்கெல்லாம் ஒரு நாள் என்று வருகிறதோ, அங்கெல்லாம் 1000 ஆண்டுகளாக புரிந்து கொள்ளவும் முடியாது.
கடவுளின் திட்டத்தோடு ஒத்துள்ளாதா என்றும் நிதானிக்க வேண்டும்.
பின் வரும் ஒரு வேதாகம கணக்கீட்டில் எவ்வாறு பயன் படுத்த போகிறோம் என்று அறிய போகிறோம்.
7. ONE YEAR = 360 DAYS
SOLAR CALENDER:
நாம் இப்போது பயன்படுத்தி வரும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட GREGORIAN CALENDER என்னும் ஆங்கில நாட்காட்டி வருடத்திற்கு 365/366 நாட்களைக் கொண்டது.
அதாவது நமது பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்தை அடிப்படையாகக் கொண்டது.
LUNAR CALENDER:
ஆனால் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள CALENDER, சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 360 நாள் CALENDER ஆகும்.
வரலாற்று நாட்காட்டியில், சந்திர Calender சூரிய காலண்டரோடு ஒத்து போக, ஒவ்வொரு 19 வருட சுழற்சியில் 7 முறை இரண்டாவது ADAR மாதம் சேர்க்கப்படும். (3, 6, 8, 11, 14, 17, 19 ஆகிய வருடங்களில்)
இந்த கூடுதல் மாதம் (ADAR 2) தீர்க்கதரிசன கால கணக்கீட்டில் பயன்படுத்தப்படுவதில்லை.

நாம் மேலே கண்டவாறு,
வருடத்திற்கு 12 மாதங்களும்,
மாதத்திற்கு 30 நாட்களும்,
வருடத்திற்கு:


வருடத்திற்கு 360 நாட்கள் என்ற நிலையான கணக்கீடே தீர்க்கதரிசன கணக்கீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
8. ONE DAY = ONE YEAR
வாசிப்போம்
எண்ணாகமம் 14: 34
நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக -
நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்: என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.
எசேக்கியேல் 4: 6
இதை நீ செய்தபின், மீண்டும் உன் வலப்பக்கமாய்ப் படுத்து, யூதா வீட்டாரின் குற்றத்தை ஓர் ஆண்டுக்கு ஒரு நாளென நாற்பது நாள்களுக்குச் சுமக்கவேண்டும். ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன்.
ஆகவே, வேதாகம தீர்க்கதரிசனங்களில் ஒரு நாள் = ஒரு ஆண்டு என்ற கணக்கீடு கடவுள், தாமே நிறுவிய அடிப்படை விதியாக விளங்குகிறது.



இந்த கணக்கீட்டு விதி, தானியேல் மற்றும் திருவெளிப்பாடு போன்ற தீர்க்கதரிசன நூல்களை புரிந்துகொள்ள அடிப்படையாக அமைகிறது.
இப்போது, இதுவரை நாம் அறிந்து கொண்ட இந்த கால கணக்கீட்டு அடிப்படைகளை கொண்டு, பைபிளில் மூன்று இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள "காலம், காலங்கள், அரைக்காலம்" என்கிற தீர்க்கதரிசனத்தை நாம் கணக்கீடு செய்து புரிந்து கொள்வோம்.
9. காலம், காலங்கள், அரைக்காலம்

வாசிப்போம்
தானியேல் 7: 25
உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
திருவிவிலியம்:மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.
தானியேல் 12: 7
அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும் காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றான்.
திருவிவிலியம்: இன்னும் மூன்றரை ஆண்டுகள் கடந்தபின்...
திருவெளிப்பாடு 12: 14
ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
திருவிவிலியம்: அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார்.
இந்த வசனங்கள், கத்தோலிக்க திருவிவிலிய மொழி பெயர்ப்பில், மூன்றரை ஆண்டுகள் என்றே ஏற்கனவே கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு,
வேதாகம சொல் கால அளவு
காலம் 1 YEAR
காலங்கள் 2 YEARS
அரைக்காலம் ½ YEAR
மொத்தம் 3½ YEARS
நாம் முன்பு அறிந்த படி,

கால அளவு கணக்கீடு நாட்கள்
3 YEARS 360 × 3 1080 DAYS
½ YEAR 360 ÷ 2 180 DAYS
மொத்தம் 1260 DAYS
தீர்க்கதரிசன அடிப்படை கணக்கீடு படி,

ஆக, 1260 DAYS = 1260 YEARS
இங்கு நாம் கணக்கிட்ட இந்த காலம், திருவெளிப்பாடு 11:3, 12:6 இல் நேரடியாக 1260 வருடம் என்று நமக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
திருவெளிப்பாடு 13:5 இல், 42 மாதங்கள் (42 × 30 = 1260)என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்க்கதரிசன காலங்கள் நிறைவேறி விட்டதா?
நிறைவேற போகிறதா?
எங்கு துவங்குகிறது?
எங்கு முடிகிறது?
என்று நாம் விரிவாக பின் வரும் பாடங்களில் அறிய போகிறோம். 🙂
10. ஜாமங்களும் மணிவேளைகளும்

நாம் பைபிள் படிக்கும் போது, அன்றைய எபிரேயர்களால் பயன்படுத்தப்பட்ட கடிகார முறைமையை அறிந்திருக்க வேண்டும்.
அன்றைய வழக்கப்படி, ஒருநாளில் 24 மணி நேரங்கள்,
[EVENING 6 PM TO MORNING 6 AM] இடையில் உள்ள 12 மணி நேரங்கள்,
ஜாமம் இன்றைய நேரம் வேதாகம வசனம்
1 ஜாமம் 6:00 PM – 9:00 PM மாற்கு 13:35 (மாலை)
2ம் ஜாமம் 9:00 PM – 12:00 AM மாற்கு 13:35 (நள்ளிரவு)
3ம் ஜாமம் 12:00 AM – 3:00 AM மாற்கு 13:35 (கோழிக்கூவல்)
4ம் ஜாமம் 3:00 AM – 6:00 AM மத்தேயு 14:25
ஆகவும்
[MORNING 6 AM TO EVENING 6 PM]
இடையில் உள்ள 12 மணி நேரங்கள்,
மணிவேளை இன்றைய நேரம் வேதாகம வசனம்
3ம் மணிவேளை 9:00 AM மாற்கு 15:25
6ம் மணிவேளை 12:00 PM மாற்கு 15:33
9ம் மணிவேளை 3:00 PM மாற்கு 15:34–37
11ம் மணிவேளை 5:00 PM மத்தேயு 20:6
12ம் மணிவேளை 6:00 PM யோவான் 11:9 (நாள் அமைப்பு)
ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பார்வைக்கு: நம் ஆண்டவரின் இரண்டாம் வருகையை பற்றி கூறும் வசனம்.
மாற்கு 13: 35
அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.
இதுவரை, நாம் அறிந்து கொண்ட இந்த கால அடிப்படைகளை பைபிள் படிக்கும் போது, நினைவில் கொண்டால்தான், இறை வார்த்தைகளும், அதில் மறைந்துள்ள இறை திட்டமும், சத்தியமும் புரியும்.
11. மூன்று உலகங்கள்

நம் கடவுள், இவ்வுலகத்தின் காலத்தை, மூன்று காலப் பகுதிகளாக பிரித்துள்ளார்.
வாசிப்போம்

முதல் காலப்பகுதி
2 பேதுரு 3: 6
அப்போதிருந்த உலகம், அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால் அழிவுற்றது.
இரண்டாம் காலப்பகுதி
இப்போதுள்ள வானங்களும் மண்ணுலகும் அதே வார்த்தையினாலே தீக்கிரையாவதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் காலப்பகுதி
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய வானங்களும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

12. முதல் காலப்பகுதி = அப்போதிருந்த உலகம்

2 பேதுரு 3: 6
அப்போதிருந்த உலகம், அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால் அழிவுற்றது.
இங்கு உலகம் என்பது, பூமியை குறிக்காமல், அப்போது பூமியில் வாழ்ந்த மக்களை குறிக்கிறது.
ஏனென்றால், பூமி என்றுமே அழியாது.
வாசிப்போம்
பிரசங்கி 1: 4
ஒரு தலைமுறை மறைகின்றது: மறு தலைமுறை தோன்றுகின்றது: உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது.
ஏசாயா 45: 18
மண்ணுலகை வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.
இது, கடவுள் பெயரிட்ட முதல் மனிதன் ஆதாம் முதல், நோவா காலத்தில் வந்த பெரு வெள்ளத்தில், நோவா குடும்பத்தார் தவிர மற்ற அனைவரும் மடிந்து போன காலம் வரை உள்ள காலப்பகுதியை குறிக்கும்.
இந்த முதல் காலப்பகுதியை பற்றி, அப்போதிருந்த உலகம் பாடத்தில் விரிவாக அறிய இருக்கிறோம்.
13. இரண்டாம் காலப்பகுதி = இப்போதுள்ள உலகம்

இப்போதுள்ள வானங்களும் மண்ணுலகும் அதே வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இறைப்பற்றில்லாதோர் அழிவுற வேண்டிய நியாயதீர்ப்பு நாள் வரையிலும் அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.
இது நோவா கால பெருவெள்ளம் முதல் இவ்வுலகத்தின் முடிவு வரை உள்ள காலப்பகுதி.
இங்கு அக்னி என்பது, அதே வசனத்தில் பின்பகுதியில் கொடுத்துள்ள படி, கடவுளின் நியாய தீர்ப்பை குறிக்கும்.

இந்த இரண்டாம் உலக காலப்பகுதி பற்றி தான் பைபிளில் பிரதானமாக உள்ளது.

இந்த காலப்பகுதியில் தான் நம் ஆண்டவர் பிறந்தார்.

நம் ஆண்டவர் மரித்த 33BC காலத்திற்கு முன் உள்ள காலத்தை நாம் யூத காலம் என்று புரிந்து கொள்கிறோம்.
நம் ஆண்டவர் பரமேரிய பின் உள்ள இப்போதைய காலப்பகுதியை நாம் சுவிசேஷ காலம் என்று புரிந்து கொள்கிறோம்.
மேலும் இந்த இரண்டாம் உலக காலப்பகுதியை பற்றி நாம் விரிவாக இப்போதுள்ள உலகம் பாடத்தில் அறிய போகிறோம்.
14. வானம் என்பது எதை குறிக்கும்?
வாசிப்போம்
பிரசங்கி 5:2
கடவுள் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
இந்த வசனத்தில், வானம் என்பது கடவுள் இருக்கும் பரலோகத்தை குறிக்கிறது.
சங்கீதம் 19: 1
வானங்கள் கடவுளின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன: வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
இங்கு வானம் என்பது சூரியன் சந்திரன் இருக்கும் ஆகாயவிரிவை குறிக்கிறது.
மத்தேயு 24: 35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
இங்கு நம் ஆண்டவர், எந்த வானமும் பூமியும் ஒழிந்து போவதை பற்றி கூறுகிறார்?

இங்கு வானம் = பரலோகத்தை பற்றியோ, ஆகாயவிரிவை பற்றியோ கூறியிருக்க வாய்ப்பில்லை.
அப்படி என்றால், வானம்/ பூமி என்பது எதை குறிக்கும்?
15. வானம் & பூமி என்பது எதை குறிக்கும்?
பூமி

வாசிப்போம்
பிரசங்கி 1:4
ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 104: 5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
இவ் வசனங்கள் மூலம், பூமியும் ஒழிந்து போக வாய்ப்பில்லை என்பதை அறிந்து கொள்கிறோம்.

அப்படி என்றால் நம் ஆண்டவர் எந்த வானமும் பூமியும் ஒழிந்து போகும் என்கிறார்?
வாசிப்போம்
எபேசியர் 2: 2
அப்பொழுது நீங்கள் இவ்வுலகப்போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள்.
எபேசியர் 6: 12
ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.
இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும்,
ஆகாயத்து (வான்வெளியின்) அதிகார பிரபு யார்?
வானமண்டலங்களின் (வான்வெளியின்) பொல்லாத ஆவி யார்?
ஆம். சாத்தானும் அவனின் விழுந்து போன தூதர்களும்.
அப்படி என்றால், இங்கு வானம் என்பது அதிகாரத்தை குறிக்கிறது.

பூமி என்பது எதை குறிக்கும்?
பூமி என்பது அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கும் மக்களை குறிக்கும்.
நம் ஆண்டவர் கூறிய வானமும் பூமியும் ஒழிந்துப்போம் என்றால், இப் பூமியில் உள்ள அதிகாரங்களும் மக்களும் ஒழிந்து போவார்கள் என்று அர்த்தம்.
16. மூன்றாம் காலப்பகுதி = புதிய உலகம்
THE THIRD WORLD

2 பேதுரு 3: 13
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய வானங்களும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஏசாயா 65: 17
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
இப்போதைய இரண்டாம் உலக கால பகுதிக்கு பின், மகிழ்ச்சியான புதிய வானங்களும், புதிய பூமியும் வருகிறது என்று நமது பைபிள் வாக்களிக்கின்றது.
புதிய வானம் = புதிய அரசாட்சி
புதிய பூமி (மண்ணுலகு) = புதிய உயிர்த்தெழுந்த மக்கள்
மீண்டும் இழந்து போன ஏதேன் போன்று வரப்போகும், புதிய அரசாட்சியை பற்றி தான் நாம் உமது ராஜ்யம் வருவதாக என்று நம் ஜெபங்களில் கடவுளிடம் கேட்கிறோம்.
யார் அந்த புதிய மக்கள்? 🙂
இந்த வரப்போகும் மகிழ்ச்சியான மூன்றாம் காலப்பகுதி பற்றி நாம், புதிய உலகம் பாடத்தில் திட்டமாக அறியப் போகிறோம்.
இந்தப் பாடங்கள் மூலம் கடவுள் மனு குலத்திற்கு வைத்திருக்கும் அழகான இறைத் திட்டத்தையும் அத்திட்டத்தில் உங்களது பங்கையும் அறிந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.

Comments

Post a Comment