WHO IS NEAR ME? என் அருகில் இருப்பவர் யார்? - LUKE 10: 25-37

WHO IS NEAR ME?

WHO IS MY NEAR ME

1. பிறன் ❌
அருகில் இருப்பவர் ❤️

அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
கலாத்தியர் 1:3
இந்தப் பாடத்தில் நாம் லூக்கா 10 ஆம் அதிகாரத்தில்,
  • திருசட்ட அறிஞர் ஒருவர், நம் ஆண்டவரிடம் கேட்ட கேள்வியும்,
  • அதற்கு நம் ஆண்டவர் பதிலாக கூறிய நல்ல சமாரியன் உவமையையும்,
  • அதில் மறைந்துள்ள கடவுளின் திட்டத்தையும் அறிந்து,
  • நாம் அன்பு கூற வேண்டிய அருகில் இருப்பவர் யார்
என்பதையும் அறிய போகிறோம்.
உன்னை போல் பிறனை நேசி
LOVE YOUR NEIGHBOUR
பொதுவாக "பிறன்" என்கிற வார்த்தை சீகன்பால்கு தமிழ் பைபிள் மொழி பெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருவிவிலியத்தில் "அடுத்திருப்பவர்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மூல கிரேக்க வார்த்தை
"πλησίον = plisíon"
என்பதன் அர்த்தம்
"அருகில் இருப்பவர் =NEAR" என்பதாகும்.
அதனால், இந்த பாடத்தில்,
"உன்னை போல் பிறனை நேசி"
"LOVE YOUR NEIGHBOUR"
என்பதற்கு பதிலாக

"உன்னை போல் அருகில் இருப்பவரை நேசி"
"LOVE THE PERSON NEAR YOU"

என்று சரியான மொழி பெயர்ப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்றி. 🙂
முதலில் அந்த அதிகாரத்தில் உள்ள வசனங்களை முழுவதுமாக படித்து விடுவோமா? 🙂
2. லூக்கா 10: 25-37
25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
26 அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.
27 அவர் மறுமொழியாக, “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உன் அருகில் இருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று எழுதியுள்ளது” என்றார்.
28 இயேசு, “சரியாய்ச் சொன்னீர்: அப்படியே செய்யும்: அப்பொழுது வாழ்வீர்” என்றார்.
29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு plision = அருகில் இருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.
30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.
32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.
34 அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.
35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, “இவரைக் கவனித்துக் கொள்ளும்: இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” என்றார்.
36 “கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார்.
37 அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.
3. உவமை கூறிய சூழ்நிலை

லூக்கா 10: 25-29
திருசட்ட அறிஞர் (நியாய சாஸ்திரி) ஒருவர், நம் ஆண்டவரை சோதிக்கும் பொருட்டு ஒரு கேள்வி எழுப்புகிறார்.
திருசட்ட அறிஞர்: போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

இயேசு: திருச் சட்ட நூலில் என்ன எழுதி இருக்கிறது?

திருசட்ட அறிஞர்: உன் முழு இருதயத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனதோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக.
உன் மீது அன்பு கூறுவது போல், அருகில் இருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக என்று எழுதியுள்ளது.

இயேசு: சபாஷ்! சரியாக சொன்னீர். அப்படியே செய்யும்.

(தன்னை நேர்மையாளர் என்று காட்ட விரும்பி)
திருசட்ட அறிஞர்: நான் அன்பு கூற வேண்டிய என் அருகில் இருப்பவர் யார்?
இவ்வாறு என் அருகில் இருப்பவர் யார் என்ற மிக மிக முக்கியமான கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல், நம் ஆண்டவர் பின்வரும் "நல்ல சமாரியன்" உவமை வாயிலாக பதில் கூறுகிறார்.
இதே கேள்விதான் நமக்கும் எழுகிறது.
நாம் கடவுளுக்கு அடுத்த படியாக அன்பு கூற வேண்டிய நமது அருகில் இருப்பவர் யார் என்று இந்தப் பாடத்தில் கண்டுபிடித்து அவரை அன்பு கூற போகிறோம். 🙂

வாருங்கள்! நம் ஆண்டவர் பதிலாக கூறிய உவமையை நிதானிப்போம்.
4. எருசலேமில் இருந்து எரிகோவுக்கு சென்ற மனிதன்
லூக்கா 10: 30
ஓரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவுக்கு சென்றார்.
எருசலேம் என்றால் சமாதானமான இடம் / சத்திய நகரம் என்று அர்த்தம்.
வாசிப்போம்
சகரியா 8:3
எருசலேம் 'சத்திய நகர்' என்றும், படைகளின் ஆண்டவரது மலை 'திருமலை' என்றும் பெயர்பெற்று விளங்கும்.
சங்கீதம் 132: 13
ஆண்டவர் சீயோனைத் (எருசலேமில் உள்ள மலை) தேர்ந்தெடுத்தார்: அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.
2 சாமுயேல் 5:7, 1 அரசர்கள் 8:1, 2 நாளாகமம் 6:6, சங்கீதம் 87:2,3
எரிகோ என்றால் சாபமான இடம் என்று அர்த்தம்.
யோசுவா 6:26
அச்சமயம் யோசுவா எழுந்து,”எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன்.
ஆம்.
ஒரு மனிதன் - சமாதானமான இடத்தில் இருந்து சாபமான இடத்திற்கு சென்றார்.
யார் அந்த மனிதன்?

ஆதாம் - ஏதேன் என்கிற சமாதானமான இடத்தில் இருந்து தனது கீழ்படியாமையினால் சாபத்தில் மாட்டி கொண்டு, வெளியே சாபமான இவ்வுலகத்திற்கு வெளியேற்றப்பட்டார்.
அவருடன் சேர்ந்து, மொத்த மனுக்குலமும் ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
அந்த மனிதன் = மனுக்குலம்
5. கள்வரிடம் அகப்படும் மனிதன்

லூக்கா 10:30
“ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
எருசலேமில் இருந்து எரிகோவுக்கு சென்ற மனிதன் - வழியில் கள்ளர்களிடம் அகப்பட்டு, திருடப்பட்டு, அடிக்கப்பட்டு குற்றுயிர் ஆக்கப்பட்டான்.
அதுபோல, சமாதானமான இடமான ஏதேனில் இருந்து சாபமான இவ்வுலகத்திற்கு வெளியேற்றப்பட்ட மனுக்குலம் திருடனாகிய சாத்தானிடம் அகப்பட்டு, நித்திய ஜீவன் திருடப்பட்டு, வாழ முடியாத நிலையில் மரணத்தை எதிர் நோக்கி உள்ளது.
வாசிப்போம்
யோவான் 10:10
திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை.

6. கண்டும் காணாமல் சென்ற ஆசாரியன்

லூக்கா 10: 31
குற்றுயிராக இருந்த மனிதனை கண்ட அவ்வழியில் சென்ற ஆசாரியன், உதவி ஏதும் செய்ய மனமில்லாமல் கண்டும் காணாமல் சென்ற ஆசாரியன் போல,

குற்றுயிராக மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மனுக்குலத்தை காப்பாற்றுவதற்கு முதலில் நியாயப்பிரமாணம் வந்தது.
ஒருவர் நியாயப் பிரமானத்தில் உள்ள 613 கட்டளைகளையும் கடைபிடித்து விட்டால், அவர் நித்திய ஜீவன் அடைந்து விடலாம்.
லேவியர் 18:5
நெகேமியா 9:29
எசேக்கியேல் 18:9, 20: 11
லூக்கா 20: 28
கலாத்தியர் 3:12
ரோமர் 10:5

என் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார்.நானே ஆண்டவர்!
ஒரு நியாயப் பிரமாண கட்டளையை மீறினாலும், மொத்த கட்டளையை மீறிவதற்கு சமம்.
யாக்கோபு 2:10
ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும் அவர் அனைத்தையும் மீறிய குற்றத்துக்குள்ளாவார்.
சட்டம் இப்படி கடுமையாக இருக்க, ஒருவராலும் நியாயப் பிரமாணத்தை முழுவதுமாக கடைபிடிக்க முடியவில்லை.
வாசிப்போம்
கலாத்தியர் 2: 16
நியாயப் பிரமாணத்தினால் ஒருவரும் நீதிமானாக்கப்படுவதில்லை.
எபிரேயர் 10: 1
வரப்போகும் நலன்களின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை: அது அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. எனவேதான், பலிகளால் வழிபட வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்க அதற்கு வலிமையில்லை.
எபிரேயர் 7: 18,19
18இவ்வாறு, முந்திய கட்டளை வலிமையும் பயனும் அற்றுப் போனதால், அது நீக்கப்பட்டு விட்டது.
19ஏனெனில், திருச்சட்டம் எதையும் முழு நிறைவுள்ளதாய் ஆக்கவில்லை.
ரோமர் 10: 4
கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு: அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார்.
ஆக, எவ்வாறு ஆசாரியன் குற்றுயிராக இருந்த மனிதனை கண்டும் காணாமல் போனாரோ, நியாயப் பிரமாணமும் யாருக்கும் வாழ்வு கொடுக்க முடியாமல் கடந்து சென்றது.
ஆசாரியன் = நியாயப்பிரமாணம்
7. கண்டும் காணாமல் போன லேவியன்
குற்றுயிராக இருந்த மனிதனை, இரண்டாவதாக வந்த லேவியன் ஒருவனும் உதவி செய்ய முன்வரவில்லை.
யார் அந்த வழிபோக்கன்?
நியாயப் பிரமாணத்தை தந்த பின், கடவுள் மக்களை நல்வழிப்படுத்தும் எச்சரிக்கவும் வரிசையாக பல தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.
ஆனால், அவர்களாலும் குற்றுயிராக உள்ள மனுகுலத்திற்கு ஜீவன் அளிக்க ஏதும் செய்ய முடியவில்லை.

அந்த லேவியனை போல வந்து கடந்து சென்று விட்டார்கள்.
லேவியன் = தீர்க்கதரிசிகள்
8. தூரத்திலேயே பார்த்து மனதுருகிய நல்ல சமாரியன்
குற்றுயிராக இருந்த மனிதனை, தூரத்தில் இருந்த போதே பார்த்து, மனதுருகி, கிட்டவந்த சமாரியன்
எண்ணெய் ஊற்றி, திராட்சை ரசம் கொடுத்து, காயங்களுக்கு கட்டு போடுகிறார்.
அதே போல, சாத்தானிடம் அகப்பட்டு குற்றுயிராக இருக்கும் மனுகுலத்தின் மீது,
பரலோகத்தில் இருந்து (தூரத்தில்) பார்த்து, நம் ஆண்டவர் மனதுருகினார்.
பரலோகத்தில் நம் கடவுளாம் பரமதந்தையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பேசிக் கொண்ட இந்த உரையாடலை கவனிப்போம்.
ஏசாயா 6:8
பரமதந்தை: “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?
இயேசு கிறிஸ்து: இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

குற்றுயிராக நித்திய ஜீவனை இழந்து தவிக்கும் மனுக்குலத்தை மீட்க, நம் ஆண்டவர் பரலோகத்தில் (தூரத்தில்) இருக்கும் போதே மனதுருகி, இறங்கி (கிட்ட) வந்தார்.
9. ஏன் சமாரியன்?
ஏன் இந்த உவமையில் சமாரியாவை சேர்ந்த சமாரியன் வந்தார் என்று குறிப்பிடபட்டுள்ளது?
வாசிப்போம்:
யோவான் 8:48
யூதர்கள் இயேசுவைப் பார்த்து, “ நீ சமாரியன், பேய் பிடித்தவன் என நாங்கள்”சொல்வது சரிதானே?” என்றார்கள்.
மத்தேயு 15:27
சமாரிய பெண், “ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே “ என்றார்.
இந்த வசனங்களில், அன்றைய யூதர்கள் "சமாரியர்களை" கீழ்த்தரமாகவும், சமாரியன் என்ற பெயரை தரம்தாழ்த்தி திட்டுவதற்கு பயன்படுத்தி உள்ளார்கள் என்று புரிந்து கொள்கிறோம்.
அப்படி என்றால்,
யார் இந்த சமாரியர்கள்?

இஸ்ரயேல் நாடு, 10 கோத்திரத்து இஸ்ரயேல் + 2 கோத்திரத்து யூதேயா என்று பிரிந்த பின், இஸ்ரயேல் அரசர் ஓம்ரி என்பவர் செமேர் என்பவரிடம் சமாரியா என்ற மலையை 2 தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அம்மலை மீது ஒரு நகரை கட்டி, அதை இஸ்ரயேல் நாட்டுக்கு தலைநகர் ஆக்கினான். (1 அரசர்கள் 16: 23,24)

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு விரோதமான காரியங்கள் செய்ததால், அம்மக்களை சல்மனாசர் என்கிற அசீரியா மன்னனிடம் ஒப்புக்கொடுத்து, இஸ்ரயேல் மக்கள் அங்கு இராதபடி நாடு கடத்தி வேறு நகர்களில் குடியேற்றினான். (2 அரசர்கள் 17: 5,6)
பின்பு, அசீரிய மன்னன் பாபிலோன், கூத்தா, அல்வா, ஆமாத்து, செபர்வயிம் என்கிற இடங்களில் உள்ள மக்களை, சமாரியாவில் குடி அமர்த்தினான். (2 அரசர்கள் 17: 24, 25)
அவ்வாறு, சமாரியாவில் குடியேறின, கடவுளை பற்றி அறியாத வேற்று இன மக்களை, யூத மக்கள் இழிவாகவும், தாழ்வாகவும் கருதினர்.
இந்த உவமையை, கேட்டு கொண்டிருந்த நியாய சாஸ்திரியும் சமாரியர்களை இழிவாக கருதி கொண்டிருப்பவர் தான்.
அதனால் தான், நம் ஆண்டவர், உவமையில் இழிவாக கருதப்படும் ஒருவர் (சமாரியன்) உதவி செய்வதாக கூறுகிறார்.
10. கட்டு போட்டு எண்ணெய்யும் திராட்சை ரசம் வார்த்தல்

கள்வர்கள் தாக்கப்பட்டு குற்றுயிராக இருக்கும் மனிதன் அருகில் வந்த சமாரியன், அவனது காயங்களுக்கு எண்ணெய் போட்டு கட்டுகிறார்.

பின்பு குடிக்க திராட்சை ரசம் கொடுத்தார்.
இது, குற்றுயிராக இருக்கும் மனுக்குலம் மீது மனதுருகி, பரலோகத்தில் இருந்து பூமி வந்து,

நமது பாவங்களை (காயங்களை) மன்னித்து (மறைத்து), பரிசுத்த ஆவி (எண்ணெய்) தந்து, தமது சிலுவை மீட்பில் சிந்திய இரத்தத்தால் (திராட்சை ரசத்தால்) மரணத்தில் இருந்து மீட்டெடுப்பதை குறிக்கும்.
வாசிப்போம்
ஏசாயா 6:1
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.
11. விலங்கின் மேல் வந்த சமாரியன்
சமாரியன், ஒரு விலங்கின் மேல் வந்தார் என்று வாசிக்கிறோம்.
இது கழுதை, ஒட்டகம் அல்லது குதிரையாக இருக்க வேண்டும்.
பைபிளில், கழுதை, குதிரை, ஒட்டகம் ஆகிய பொதி / சரக்கு / மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் விலங்குகள், சத்தியத்தை அடையாளப்படுத்தும்.
இது நம் ஆண்டவர் கழுதை மேல் ஏறி வந்ததை நினைவூட்டுவதாக உள்ளது.
ஆம். நம் ஆண்டவர் சத்தியத்தின் மேல் ஏறி வந்தார் என்பதை விலங்கு = கழுதை அடையாளப்படுத்துகிறது.
சங்கீதம் 43: 3
உம் ஒளியையும் சத்தியத்யையும் அனுப்பியருளும்: அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
12. கழுதையில் ஏற்றப்பட்டு சத்திரத்தில் சேர்க்கப்பட்ட மனிதன்
அடிபட்ட மனிதனுக்கு, முதலுதவி அளித்த பின், சமாரியன் தான் வந்த கழுதையில் ஏற்றி, அம்மனிதனை சத்திரத்தில் சேர்த்து விடுகிறார்.
இது, நம் ஆண்டவர், நம்மை தமது சத்தியத்தில் வழிநடத்தி, சத்திரத்தில் = சத்தியம் கற்று தரும் இடத்தில் சேர்த்து விடுகிறார்.
சாத்திரம் என்பது தங்கும் இடம் மட்டும் அல்ல.
அது உணவு பரிமாறப்படும் இடம்.
அதாவது, இறை வார்த்தைகள் பகிர்ந்தளிக்கப்படும் இடம்.
அது காயங்கள் குணமாகும் இடம்.
அதாவது நம் பாவங்கள் நீக்கப்படும் இடம்.
இரண்டு வெள்ளி காசு

சத்திரக்காரணுக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வெள்ளிக் காசு என்பது, நமது பைபிளில் இருக்கும் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் குறிக்கும். வாசிப்போம்
சங்கீதம் 12:6
ஆண்டவரின் வார்த்தைகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை.
சத்திரக்காரன்
நம்மை சத்தியத்தை கற்று தரும் அப்போஸ்தலர்களை சகோதரர்களை குறிக்கும். அவர்கள் மூலமாகவே, நமக்கு சத்திய ஆகாரம் பரிமாறப்படுகிறது.
நாமும், நமக்கு பின் சத்தியத்தை அறிய ஆவல் உள்ளவர்களுக்கு கற்று தரும் போது, நாமும் அவர்களுக்கு சத்திரக்காரன் ஆவோம். வாழ்த்துக்கள். 🙂
13. மறுபடியும் திரும்ப வருவேன்

லூக்கா 10: 35
சத்திரத்தில் இரண்டு பணம் கொடுத்து சேர்த்த பின், சமாரியன் தான் மறுபடியும் திரும்ப வருவேன் என்றும் அம்மனிதனுக்கு அதிகமாக செலவு செய்திருந்தால் அதை அப்போது தருவதாக வாக்களிக்கிறார்.
இது, நம் ஆண்டவரின் இரண்டாம் வருகையை குறிப்பதாக உள்ளது.
அப்போது நமக்கும் நமக்கு சத்திய உணவை தந்து குணமாக்கிய சகோதரர்களுக்கு, வெகுமதி தருவார் என்பதை அடையாளப்படுத்துகிறது.
வாசிப்போம்
மத்தேயு 10: 42
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

14. என் அருகில் இருப்பவர் யார்?

லூக்கா 10: 29
திருசட்ட அறிஞர் தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அருகில் இருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.
திருசட்ட அறிஞர் கேட்ட கேள்விக்கு, நல்ல சமாரியன் உவமையை கூறிய பின், நம் ஆண்டவர், உவமையில் அம் மனிதரிடம் மூவரில் அன்பாய் இருந்தது யார் என்று கேட்க மூன்றாவதாக வந்த நல்ல சமாரியன் என்று பதில் அளிக்கிறார்.
உன்னைப்போல் உன் அருகில் இருப்பவரையும் நேசி என்பதில் அருகில் இருப்பவர் என்பது அந்த நல்ல சமாரியனாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை குறிக்கும்.
நாம் கடைபிடிக்க வேண்டிய இரண்டு பிரதான கற்பனைகள்:
1. உன் முழு ஆத்துமாவோடும் முழு இருதயத்தோடும் கடவுளிடம் அன்பு கூறு.

இதற்கு ஒப்பான இரண்டாவது கற்பனை,

2. உன்னிடத்தில் அன்பு கூறுவது போல நமக்கு அருகில் இருக்கும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் அன்பு கூறுவாயாக என்பதே.

இதைத்தான் நம் ஆண்டவர் மறைமுகமாக உவமையில் கூறினார்.
வாசிப்போம்
யோவான் 17:3
ஒன்றான மெய்க் கடவுளாம் பரம பிதாவையும் அவர் அனுப்பின தம் திருமகனார் இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.
1 தீமோத்தேயு 2:5
கடவுள் ஒருவரே கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
15. சத்திரத்தில் தங்குவோம்

அன்புடையீர், பரலோகத்தில் இருக்கும் நம் கடவுளாம் பரம தந்தையையும், நம் அருகிலேயே இருக்கும் அவர் தம் திருமகனார் இயேசு கிறிஸ்துவையும் நேசித்து நிலைவாழ்வு பெற, நம் ஆண்டவர் நமக்கு தந்திருக்கும் சத்திரத்தில் தங்கி சத்திய உணவை உண்டு குணமாக அன்புடன் வாழ்த்துகிறோம்.
பரமதந்தைக்கும் இறை மகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.
ஆமென்

Comments