THE PARABLE OF THE SOWER | விதைப்பவர் உவமை - MATTHEW 13: 1-23, MARK 4: 1-20, LUKE 8: 1-18

THE PARABLE OF THE SOWER

THE PARABLE OF THE SOWER

அன்புடையீர்,வணக்கங்கள்.🙂🙏

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாம் அறிந்திருக்கிற படி உவமைகளில் பரலோக அரசாட்சியை குறித்த ரகசியங்கள் உள்ளது.
வாசிப்போம்
மத்தேயு 13: 10,11
10 சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “ஏன் அவர்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
11  அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
இந்தப் பாடத்தில், நாம் நன்கு அறிந்த விதைப்பவர் உவமையில் மறைந்துள்ள இறைத் திட்டத்தை கூடுதல் விபரங்களோடு அறிவோம்.
நம் ஆண்டவர், அநேக உவமைகள் கூறியிருந்தாலும் இந்த உவமையின் அர்த்தத்தை அவர் சீடர்களிடம் நேரடியாக கூறியது பதியப்பட்டுள்ளது.
இந்த விதப்பவன் உவமையை அங்கு திரளான மக்கள் (யூத மக்கள்) கூடியிருந்து கேட்டார்கள்.
மத்தேயு 13:2 மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே திரண்டு வந்ததால், அவர் ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; அந்த மக்கள் எல்லாரும் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார்கள்.
இந்த உவமையை அவர் கூறி முடித்த போது, "கேட்கக் காதுள்ளவன் கேட்கடவன்" என்றார்.

என்ன கேட்கக்கடவன்?🙂
உவமையின் பொருளை கேட்கக்கடவன்.

அதன்படி, உவமையின் பொருளை கேட்டது யார்?
மத்தேயு 13: 10 சீஷர்கள் அவரிடம் வந்து, “ஏன் அவர்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
ஆம். இந்த உவமையை கேட்ட திரளான மக்களில் (யூத மக்களில்), அதன் விளக்கத்தை கேட்டது அவரது சீடர்கள் மட்டுமே. அதாவது அவரது சீடர்கள் தவிர வேறு ஒருவரும் அதை அர்த்தத்தை அறிய முடியும் முன் வரவில்லை.
எனவே சீடர்களே அந்த காது உள்ளவர்கள் ஆவார்கள்.

நாமும் இந்த உவமையின் பொருளை அறிய முன் வந்துள்ளதால், நாமும் அவரது சீடர்களே.
முதலில், இந்த உவமையை வாசித்து அதற்கு நம் ஆண்டவர் தந்த அர்த்தத்தை நினைவில் கொள்வோம்.
1. மத்தேயு 13: 1-23, மாற்கு 4: 1-20, லூக்கா 8: 1-18
மத்தேயு 13: 1-23
1 அதே நாளில் இயேசு வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக உட்கார்ந்திருந்தார்.
2  மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே திரண்டு வந்ததால், அவர் ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; அந்த மக்கள் எல்லாரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.
3  அப்போது, உவமைகளாக அவர்களுக்கு பல விஷயங்களைச் சொன்னார்.
“இதோ! விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் போனான்.
யார் அந்த விதைக்கிறவன்?
அவர் விதைத்த விதை என்ன?
4  அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன.
பறவைகள் எதை குறிக்கும்?
5  வேறு சில விதைகள் மண் அதிகமாக இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன; அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் வேர்பிடிக்கவில்லை.
6  அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கி காய்ந்துபோயின.
பாறை எதை குறிக்கும்?
வெயில் எதை குறிக்கும்
7  இன்னும் சில விதைகள் முட்செடிகள் இருக்கிற நிலத்தில் விழுந்தன; அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன.
8  மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தர ஆரம்பித்தன; அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன.
100 எதை குறிக்கும்?
60 எதை குறிக்கும்?
30 எதை குறிக்கும்?
9  காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்என்று சொன்னார்.

2. உவமைக்கு நம் ஆண்டவர் கூறிய விளக்கம்
10  சீஷர்கள் அவரிடம் வந்து, “ஏன் அவர்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
11  அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
18  இப்போது, விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்.
19  பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டும் அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை; பொல்லாதவன் வந்து அவருடைய இதயத்தில் விதைக்கப்பட்டதைக் கொத்திக்கொண்டு போய்விடுகிறான்.
20  பாறை நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்டு, அதை உடனே சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.
21  ஆனால், அது அவருக்குள் வேர்விடுவதில்லை; அதனால், அவர் கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கிறார்; அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன் விசுவாசத்தை விட்டுவிடுகிறார்.
22  முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்கிறார், ஆனால் இந்த உலகத்தின்* கவலையும் செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அது பலன் கொடுப்பதில்லை.
23  நல்ல நிலத்தைப் போல் இருப்பவரோ அந்தச் செய்தியைக் கேட்டு அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பலன் தருகிறார்; அவர் 100 மடங்காகவும், இன்னொருவர் 60 மடங்காகவும், வேறொருவர் 30 மடங்காகவும் பலன் தருகிறார்கள்” என்று சொன்னார்.
3. நான்கு வித நிலங்கள் = நான்கு வித மனிதர்கள் = நான்கு வித யூதர்கள்
நிலம் எதை அடையாளப்படுத்தும்?

இந்த உவமையில், நான்கு வித நிலங்களையும் அதில் விழுந்த விதைகளின் நிலைமைகளையும், நம் ஆண்டவரே சீடர்களிடம் விளக்கினார்.
விதைப்பவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
நிலம் வசனத்தை கேட்கும் மனிதர்கள்
விதை வசனம்
இந்த நான்கு வித மனிதர்கள், பொதுவாக உலக மக்களின் 4 வகுப்பாரை ஒப்பிட்டு பார்க்கும் அதே சமயம்,

நம் ஆண்டவர் இந்த உவமையை முக்கியமாக அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு ஒப்பிட்டு உள்ளார்.
ஏனெனில், கடவுளின் அரசாங்கத்தின் நற்செய்தி முதலில் யூதர்களுக்கு மாத்திரமே பிரசங்கிக்கப்பட்டது.
பிற இனத்தாருக்கு (புற ஜாதியார்) அறிவிக்கப்படவில்லை.
நம் ஆண்டவரும், முதலில் தம்முடைய சீடர்களை காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கு போங்கள் என்று கூறினார்.
வாசிப்போம்
மத்தேயு 10: 5-7
5 அந்த 12 பேருக்கும் இயேசு இந்த அறிவுரைகளைக் கொடுத்து அனுப்பினார்: “மற்ற தேசத்தாரின் பகுதிக்குள் போகாதீர்கள்; சமாரியர்களுடைய எந்த நகரத்துக்குள்ளும் நுழையாதீர்கள்.
6 வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் தேசத்தாரிடமே போங்கள்.
7 அப்படிப் போகும்போது, ‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று பிரசங்கியுங்கள்.
எனவே, இந்த உவமையில், நிலம் எனபது குறிப்பாக இதை கேட்டுக் கொண்டிருந்த யூதர்களை குறித்தே ஆண்டவர் கூறுகிறார்.
4 வித நிலங்கள் = 4 வித யூதர்கள்
4. ஏன் கடவுளின் அரசாட்சியை பற்றிய நற்செய்தி யூதர்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்டது?
இஸ்ரயேலர்களே, முதலில் மோசே மூலமாக நியாயப்பிரமாணங்களை பெற்றனர்.
அதன் கட்டளைகளை கடைபிடிக்கவும், அதை மீறினால் தண்டிக்கப்படவும் உட்பட்டார்கள்.
எனவே கடவுளின் சட்டம் - விதை, பழைய ஏற்பாடு காலத்திலேயே அவர்களிடம் விதைக்கப்பட்டது.
ரோமர் 9: 4.5
4 அவர்கள்தான் இஸ்ரயேலர்கள், அவர்கள்தான் கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டவர்கள், மகிமையையும் ஒப்பந்தங்களையும் திருச்சட்டத்தையும் பரிசுத்த சேவை செய்கிற பாக்கியத்தையும் வாக்குறுதிகளையும் பெற்றவர்கள்.
5  அவர்கள்தான் முன்னோர்களின் வழியில் வந்தவர்கள்; அவர்களுடைய வம்சத்தில்தான் கிறிஸ்து வந்தார்.
அதனால் அவர்களே இறையாச்சியின் நற்செய்தி முதலில் தூவப்பட சிறந்த இடமாக கடவுள் தேர்ந்தெடுத்தார்.
ஆனால், முன்பே நியாய பிரமாணத்தை கடைபிடித்து உழப்பட்டிருந்த யூத இருதயங்கள், நான்கு விதமாக இருந்தது.
5. யூதர்களில் நான்கு வகுப்பார்
நடைபாதையில் விழுந்த இறை வார்த்தைகள் (லூக்கா 8:11)

The Seeds on the Path

நடப்பாதையில் விழும் விதைகள், மண்ணிற்குள் செல்வதில்லை.
அதுபோலவே, நடைபாதை போல இருக்கும் யூதர்களின் மனதில் நம் ஆண்டவர் விதைத்த விதை ஆனது இருதயத்திற்குள் செல்லாததினால், அது வளர தொடங்கும் முன்பே, பறவைகள் = பொல்லாங்கன் (பிசாசு) வந்து அவன் இதயத்தில் விதைக்கப்பட்டதை பறித்துக் கொள்கிறான்.
6. கற்பாறையான இடங்களில் விழுந்த விதைகள்

கற்பாறை போல இருதயத்தை கொண்டவர்கள் நம் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தனர். நியாயப்பிரமாணத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் இயேசு கூறினவைகள் அவர்களின் சுமையை குறைப்பதாயும் ஆறுதல் தருவதாகவும் இருந்ததினால் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாலும்,
தண்ணிலே வேர் கொள்ளாத காரணத்தினால் வெயில் ஏறினவுடன் கருகினதைப் போல,
நம் ஆண்டவரின் போதனைகளை பின்பற்றுவதினால் வந்த துன்பங்களையும், சோதனைகளையும் அவர்கள் சந்திக்கும் போது,
அதன் வெப்பம் (எதிர்ப்புகள்) தாங்காமல் பின்வாங்கி போனார்கள்.
7. முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகள்

முள்ளுள்ள இடத்தை போன்ற எழுதியதை கொண்டவர்களின் நிலைமையை நாம் சற்று நிதானித்து கவனிக்க வேண்டும்.
இந்த இடம் ஒரு விதை வேரூன்றி வளர்வதற்கு ஏற்ற நிலமாய் இருக்கின்றது.
வசனத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டு அதன் வலியில் நடக்கவும் தொடங்குகின்றனர்.
ஆனால் நாள் செல்ல செல்ல, இவ்வுலகத்தின் கவலைகளும் பணத்தாசையும், சிற்றின்பங்களில் ஈடுபடுவதிலும் கவனத்தை செலுத்தி, வசனத்திற்கு செவி சாய்ப்பதை விட்டு விடுகின்றனர்.
அதினால் அந்த பயிரானது பலன் கொடுப்பதற்கு முன்பதாகவே நெருக்கப்பட்டு அழிந்து விடுகின்றது.
அதனால் அந்த பயிரானது பலன் கொடுப்பதற்கு முன்பாகவே நெருக்கப்பட்டு அழிந்து விடுகின்றது.
இவர்களுடைய நிலைமையானது முன்பு பார்த்த இரு வகுப்பறை நிலைமையை காட்டிலும் பரிதவிக்க படத்தக்கவர்களாய் இருக்கின்றனர்.
சத்தியத்தை அறிகின்ற அறிவை அடைந்து அதன் மகத்துவத்தை உணர்ந்த பின்பும், அதற்கேற்ற அர்ப்பணிப்பை கொடுக்க தவறி விட்டனர்.
நமக்குரிய பாடமானது, நாமும் நம்முடைய அழைப்பை, தெரிந்து கொள்ளுதலை உலக காரியத்திற்காக இழந்து விட வேண்டாம்.
8. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்

வசனத்தை கேட்டு உணர்ந்து இருதயத்திலே காத்து பொறுமையுடனே 30 ஆகவும் 60 ஆகவும் 100 ஆகவும் பலன் கொடுப்பவர்களே நல்ல நிலம் போன்றவர்கள்.
இவர்களே இயேசுவின் அடிச்சு சுவடுகளை பின்பற்றுகிற உண்மையான சீடர்கள்.

இவ்வாறு இருந்தவர்கள் யூதர்களின் மத்தியில் வெகு சிலரே இருந்தனர்.
12 அப்போஸ்தலர்களையும், 70 சீடர்களையும், சகேயு போன்ற ஒரு சிலரை நாம் குறிப்பிடலாம்.

இவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையில் வசனத்தை கேட்டு பலன் கொடுத்தவர்கள் யூதர்களிலே அப்போஸ்தலர்களும் சீஷர்களும் மாத்திரமே.
முதலாவது விதைப்பு யூதர்களிடத்தில் நடந்தது போலவே அறுவடையும் யூதர்கள் நடுவே நடந்தது.
9. 100, 60, 30 என்பது எதை குறிக்கும்?
பைபிளில் 10, 100, 1000 ஆகிய எண்கள், உலகத்தை குறிக்கும் எண்களாகும்.
60 என்பது - 6, 60, 600 ஆகியவை கடவுள் மனுக் குலத்திற்கு தந்திருக்கும் ஆதாம் ஏதேனுக்குள் நுழைந்தது முதல் மனுக்குலம் கடவுளின் அரசாட்சிக்குள் செல்லும் காலம் வரை = 6000 ஆண்டுகளை குறிக்கும்.
அதாவது, 3958BC முதல் AD2043 வரை உள்ள இடைப்பட்ட 6000 வருட காலம்.
3, 30, 300 ஆகிய எண்கள் நம் ஆண்டவரின் சிலுவை மீட்பு மரணத்தின் மூலமாக, நம்மை சாவில் இருந்து மீட்ட [மீட்கும் பொருள் = ஈடுபலி] யை குறிக்கும்.
ஆக, 100, 60, 30 ஆக பலன் கொடுப்பவர்கள் யார் என்றால், உலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 6000 வருடங்களில், ஈடுபலியினால் பலன்களாகும் 144000 திருச்சபையாரை குறிக்கும்.
யூதர்கள் மத்தியில் துவப்பட்ட விதைகளில், 12 அப்போஸ்தலர்களும், 70 சீடர்களும் நிக்கோதேமு, சகேயு போன்ற சிலரே நல்ல நிலமாக இருந்தனர்.
இவ்வுலக முடிவு வரை, அழைக்கப்பட்டிருக்கும் நம் மூலமாய் கோவப்படும் நற்செய்தியின் பலனாக, 144000 நல்ல நிலங்கள், பரலோகத்தில் ராஜா ரீக ஆசாரியர்களாக கிறிஸ்துவோடு ஆட்சி புரிவார்கள்.
உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக.
பரம தந்தைக்கும் இறை மகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.


Comments