THE ROYAL CUPBEARER AND THE CHIEF BAKER | அரசருக்கு திராட்சை பழச்சாறு பரிமாறுகிறவரும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனும் - GENESIS Ch. 40
THE ROYAL CUPBEARER AND THE CHIEF BAKER
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
இந்த பாடத்தில், யோசேப்பு போத்திபாரின் மனைவியால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, (ஆதியாகமம் 39ம் அதிகாரம்)
எகிப்து மன்னனுக்கு
1. திராட்சை பழச்சாறு பரிமாறுகிறவரும்,
2. ரொட்டி (அப்பம்) சுடுபவர்களின் தலைவனும் மன்னருக்கு எதிராக முறைகேடில் ஈடுபட்டதற்காக, யோசேப்பு அடைக்கப்பட்டு இருந்த அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, சிறையில் அவர்கள் கண்ட கனவுகளை யோசேப்பு விளக்கியது பற்றியும், அதில் மறைந்துள்ள கடவுளின் திட்டத்தையும் அறிய போகிறோம்.
ஒருமுறை, ஆதியாகமம் 40ம் அதிகாரத்தை முழுவதும் வாசித்து சம்பவங்களை நினைவில் கொள்வோம்.
1. ஆதியாகமம் 40ம் அதிகாரம்
2 பார்வோன் தன் பழச்சாறு பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் தயாரிப்போரின் தலைவனும் ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு,
3 காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில் அவர்களை அடைத்து வைத்தான். யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே.
4 காவலர் தலைவனோ, அவர்களை யோசேப்புடன் சிறையிருக்குமாறு குறித்தான்.யோசேப்பும் அவர்களைக் கண்காணித்து வந்தார்.அவர்கள் பல நாள்கள் சிறையில் இருந்தனர்.
5 எகிப்திய மன்னனால் சிறைப்பட்டிருந்த மது பரிமாறுவோன், அப்பம் தயாரிப்போன் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டனர்.ஒவ்வொரு கனவும் வௌவேறு பொருள் கொண்டிருந்தது.
6 காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார்.
7 தம்முடன் தம் தலைவன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அதிகாரிகளைநோக்கி, அவர்,”இன்று உங்கள் முகம் இவ்வளவு வாடியிருப்பதேன்?” என்று வினவினார்.
8 அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்: அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை” என்று பதில் கூறினர்.யோசேப்பு அவர்களை நோக்கி,”கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்.
9 அப்போது பழச்சாறு பரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்: “என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.
10 அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன.அவை அரும்பிப் பூத்து, கொத்துக் கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன்.
11 கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது.நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன்” என்றான்.
12 யோசேப்பு அவனை நோக்கி,”கனவின் பொருள் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
13 இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான்.முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய் இருந்த காலத்தில் செய்ததுபோல அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்.
14 உனக்கு வாழ்வு நலமாய் அமைந்தபின், என்னை மறவாமல் எனக்குத் தயைகாட்ட வேண்டுகிறேன்.பார்வோனிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி.
15 ஏனெனில், நான் எபிரேயரின் நாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டேன்.என்னைக் காவற்கிடங்கில் தள்ளிவிடுமளவிற்கு நான் யாதொன்றும் செய்யவில்லை” என்றார்.
16 யோசேப்பு இவ்வாறு தகுந்த விளக்கம் அளித்ததைக் கண்டு, அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம்”நானும் ஒரு கனவு கண்டேன்.இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன.
17 மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன.பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன” என்றான்.
18 அதற்கு யோசேப்பு,”கனவின் பொருள் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
19 இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான்.பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும்” என்றார்.
20 மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா.அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான்.அந்த அலுவலர் முன்னிலையில் மது பரிமாறுவோரின் தலைவன், அப்பம் தயாரிப்போரின் தலைவன் ஆகிய இருவரின் தலைகளையும் நிமிர்த்தினான்.
21 மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உயர்த்த, முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்.
22 ஆனால், அப்பம் தயாரிப்போரின் தலைவனைப் பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான்.யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது.
23 ஆனால் மதுபரிமாறுவோரின் தலைவன் யோசேப்பைப் பற்றிய நினைவேயில்லாமல் அவரை மறந்து விட்டான்.
2. பழச்சாறு பரிமாறுகிறவனின் கனவும் யோசேப்பின் விளக்கமும்
எகிப்து மன்னனுக்கு பழச்சாறு பரிமாறுகிறவன் தனது கனவில், ஒரு திராட்சை செடியும் அதில் மூன்று கிளைகளும், மேலும் அதில் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்திருக்க கண்டான்.
மேலும், அந்த பழங்களை கிண்ணத்தில் பிழிந்து பார்வோனின் கையில் கனவில் கொடுத்தான் என்று வாசிக்கிறோம்.
யோசேப்பு அதற்கு கொடுத்த விளக்கம்:
மூன்று கிளைகள் = மூன்று நாட்களுக்குள்
மூன்று நாட்களுக்குள் சிறையில் இருந்து விடுதலை பெற்று கனவில் கண்டது போல, மறுபடியும் முன்பு போல, பார்வோனுக்கு பழச்சாற்றை கிண்ணத்தில் கொடுப்பான்.
இங்கு பழச்சாற்றை பார்வோனுக்கு கொடுப்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக உள்ளது.
அவன் கனவில் கண்டபடியே அவனுக்கு நடந்தது.
3. ரொட்டி (அப்பம்) சுடுபவனின் கனவும் யோசேப்பின் விளக்கமும்
அதே போல, ரொட்டி (அப்பம்) சுடுபவரும் ஒரு கனவு கண்டார்.
கனவில், அவரது தலையில் மூன்று அப்பக்கூடைகள் இருந்தது. பறவைகள் வந்து அந்த அப்பங்களை தின்று விட்டன.
இந்த கனவிற்கு யோசேப்பு கூறிய விளக்கம்:
மூன்று கூடைகள்: மூன்று நாட்களுக்குள்
பார்வோன் அவனது தலையை வெட்டி, உடலை மரக் கம்பத்தில் தொங்கவிடுவார், மேலும் சதையைப் பறவைகள் தின்னும் என்றார்.
இந்த கனவின் விளக்கம், நினைத்து பார்க்கவே மிகவும் கொடுமையானதாக உள்ளது.
4. கனவுகளின் நிழல் - பொருள் விளக்கம்
யோசேப்பு, அரசருக்கு பழச்சாறு பரிமாறுகிறவன் & ரொட்டி சுடுபவர்களின் தலைவன்
யோசேப்பு நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறார்.
யோசேப்புக்கும் நம் ஆண்டவருக்கும் உள்ள ஒத்த ஒப்புமைகள்
1. Beloved Son
Joseph was the beloved son of his father Jacob (Genesis 37:3)
Jesus is the beloved Son of our Heavenly Father (Matthew 3:17)
2. Sent by the Father
Joseph was sent by his father to check on his brothers (Genesis 37:13–14)
Jesus was sent by the Father into the world (John 3:17)
3. Rejected by His Own
Joseph’s brothers hated and rejected him (Genesis 37:4, 28)
Jesus was rejected by His own people (John 1:11)
4. Conspired Against
Joseph’s brothers plotted to kill him (Genesis 37:18)
Religious leaders plotted to kill Jesus (Matthew 26:4)
5. Stripped of His Garment
Joseph’s coat was stripped off (Genesis 37:23)
Jesus was stripped of His garments (Matthew 27:28)
6. The Pit and the Grave
Joseph was thrown into a pit by his brothers (Genesis 37:24)
Jesus was crucified and laid in the grave (Matthew 27:59–60)
7. Sold for Silver
Joseph sold for 20 pieces of silver (Genesis 37:28)
Jesus betrayed for 30 pieces of silver (Matthew 26:15)
8. Counted Among Criminals
Joseph imprisoned with offenders (Genesis 40:3)
Jesus crucified between two criminals (Luke 23:32–33)
9. One Saved, One Lost
Cupbearer restored, baker judged (Genesis 40)
One thief saved, one rejected (Luke 23:39–43)
10. Exalted After Suffering
Joseph exalted to ruler after suffering (Genesis 41:41)
Jesus exalted after resurrection (Philemon 2:8–9)
11. Given a Name Above Others
Joseph receives authority and a new name (Genessis 41:42–45)
Jesus receives the Name above every name (Philippians 2:9)
12. Savior of the World
Joseph saves nations from famine (Genesis 41:57)
Jesus saves the world from sin (John 4:42)
13. Gentile Bride
Joseph takes a Gentile bride (Genesis 41:45)
Christ takes a bride from the nations (Ephesians 5:25–27)
14. Revealed in the Second Encounter
Joseph reveals himself later to his brothers (Genesis 45)
Christ will be revealed to Israel in the future (Romans 11:26)
15. Forgiveness Instead of Vengeance.
Joseph forgives those who betrayed him (Genesis 50:20)
Jesus forgives His enemies (Luke 23:34)
யோசேப்பு சிறையில் அடைக்கப்படும் போது அவருக்கு வயது 17.
17= 10+7
10 எதை குறிக்கும்?
பைபிளில், 10 என்கிற எண் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 10 கட்டளைகள் (Exodus 20:1-17)
- 10 வாதைகள் (Exodus 7-12)
- தசமபாகம் (1/10)
- 10 வெள்ளி காசு உவமை
- 10 நரம்பு வீணை (Psalms 33:2, 144:9
- 10 கன்னிகைகள் (Mathew 25: 1-13)
- 10 கால் விரல்கள் (நேபுகாத்நெக்சாரின் சிலை) = 10 உலக ராஜ்ஜியங்களை குறிக்கும் (Daniel 2:41,42)
- 10 கொம்புகள் (Daniel 7: 7,24 | Revelation 13:1, 17:12)
10= உலகத்தை குறிக்கும் எண்
7= முழுமையை குறிக்கும் எண்
ஆக, 17 வயது யோசேப்பு, பாரோனின் அரண்மனையில் இருந்து, சிறைக்கு சென்றது
நம் ஆண்டவர், கடவுள் வாசம் செய்யும் பரலோகத்தில் இருந்து, சோதனையான இந்த பூமிக்கு வந்ததை அடையாளப்படுத்துகிறது.
யோசேப்பு சிறையில் இருக்கும் போது, பழச்சாறு பரிமாறுகிறவரும் அப்பம் சுடுபவரும் அவரின் கண்காணிப்பில், அவருடன் சிறையில் அடைக்கப்படுவது
நம், ஆண்டவர், இந்த பூமிக்கு வந்திருந்த போது, அவருடன் இருந்த இரண்டு வித சீடர்களை குறிக்கிறது.
1. அரசருக்கு பழச்சாறு பரிமாறும் சீடர் = அரசரை மகிழ்ச்சி படுத்தும் சீடர்
2. பறவைகளிடம் இருந்து அப்பத்தை காப்பாற்றாத சீடர் = நித்திய ஜீவனை இழக்கும் சீடர்
5. திராட்சை செடியும் கிளைகளும்
நாம் அறிந்திருக்கிறபடி, திராட்சை செடி = நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்தும்.
கிளைகள் = அவருடன் இணைக்கப்பட்டிருக்கும் சீடர்கள்
வாசிப்போம்
நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள். ஒருவன் என்னோடும் நான் அவனோடும் நிலைத்திருந்தால் அவன் அதிகமாகக் கனி தருவான்.
எவ்வாறு கிளை, திராட்சை செடியில் நிலையாக இருந்தால், கொழுத்த கனிகளை கொடுக்குமோ,
அது போல, நாமும் நம்முடைய ஆண்டவரோடு இணைக்கப்பட்டிருந்தால், திராட்சை பழம் கொடுப்போம்.
திராட்சை பழம் எதை அடையாளப்படுத்துகிறது? திராட்சை பழம் என்பது திராட்சை செடி மற்றும் அதன் கிளைகளும் இணைந்து செய்யும் தியாகத்தின் பலன்.
அந்த வகையில், திராட்சை செடியாகிய நம் ஆண்டவரின் தியாகம் = அவர் நமக்காக தந்திருக்கும் சிலுவை மரணம் = ஈடுபலி = RANSOM
கிளையாக அவருடன் இணைந்திருக்கும் சீடர்கள் (நாம்!) செய்ய வேண்டிய தியாகம் = ஜீவபலி = LIVING SACRIFICE
அதாவது நமது வாழ்க்கையை அவருக்காக அர்பணித்தல்
திராட்சை பழச்சாறு எதற்கு அடையாளம்?
வாசிப்போம்
இயேசு கிண்ணத்தை கொடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படப்போகிற என் இரத்தத்தின் அடிப்படையிலான புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது.
அந்த மூன்று கிளைகளை, யோசேப்பு மூன்று நாட்களுக்குள் என்பதை அடையாளப்படுத்தினார்.
அதாவது மூன்றாம் நாளில் என்பதை குறிக்கிறது.
வாசிப்போம்
இயேசு: இன்று, நாளை, மூன்றாம் நாளில் நிறைவேறுவேன்
யோவான் 2:19
இந்த ஆலயத்தை இடித்தால், மூன்று நாளில் அதை எழுப்புவேன்
யோவான் 2:21
அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த உலகத்திற்கு நம் ஆண்டவர், AD முதல் நூற்றாண்டில் வந்தது, ஆதாமில் இருந்து 4000 வருடம் கடந்து 5 ஆவது 1000 ஆண்டு கால பகுதி நாள் ஆகும்.
அன்பானவர்களே, கடவுளுக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷங்கள் போலவும், ஆயிரம் வருஷங்கள் ஒரு நாள் போலவும் இருக்கிறது+ என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
இன்று = 5 வது நாள்
நாளை = 6 வது நாள் = 6000 வருட முடிவு
மூன்றாம் நாள் = 7 வது ஆயிரமாண்டு கால பகுதி = வரப்போகும் ஆயிரம் ஆண்டு கடவுளின் அரசாட்சி = மூன்றாம் உலகம்
கனவின் பொருள் இந்த 2000 வருட சுவிஷேக காலத்தில், கிறிஸ்துவோடு அவரது சீடர்கள் நிலையாக இணைந்திருந்தால், மூன்றாவது நாளாகிய வரப்போகும் இறையாட்சியில், மன்னரின் அரண்மனையில் அவருக்கு அருகே நின்று திராட்சை பழத்தை பிழிந்து கிண்ணத்தில் அவருக்கு கொடுப்போம்.
மன்னர் = கடவுளாம் பரமதந்தையை குறிக்கும்
அதாவது, இறையாட்சியில் கடவுளோடு தூய பணியாற்ற நமது ஜீவபலியின் பலனாக பரலோக வாய்ப்பு பெற்று கடவுளை மகிழ்விப்போம்.
6. ரொட்டிகளும் (அப்பங்களும்) பறவைகளும்
யோசேப்புடன் இருந்த இரண்டாவது நபரின் (BAKER) கனவின் படி, அவரது தலையில் மூன்று கூடைகளில், பார்வோனுக்காகச் சுட்ட எல்லா வகையான ரொட்டிகளும் இருந்தன. அவற்றை பறவைகள் தின்றன
இது போலவே, கிறிஸ்துவோடு இருந்த இரண்டாவது வகை சீடர்களிடமும், 3ம் நாள் வரை = இறையாட்சி வரும் வரை தேவைப்படும் அப்பம் = இறைவார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தது.
அவற்றை பறவைகள் கொத்தி தின்றன என்று வாசிக்கிறோம்.
அப்படி என்றால், இந்த பறவைகள் எதை குறிக்கும்?
சாத்தானின் ஊழியக்காரர்களாக செயல்படும் கள்ள போதகர்கள்.
30 உங்களிடமிருந்து சிலர் தோன்னறி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்."
இந்த மனசாட்சியில் சூடுண்ட பொய்யர்களால் (1 TIMOTHY 4:1) - நிறுவன மயமாக்கப்பட்ட கிறிஸ்தவ அமைப்புகளால், உண்மையான கிறிஸ்துவின் அரசாட்சி பற்றிய நற்செய்தி மறைக்கப்பட்டு, கிறிஸ்தவ மார்க்கம் உலகம் முழுவதும் பொய்களின் சங்கமமாக மாறிவிட்டது.
வாசிப்போம்
திருவெளிப்பாடு 18:2
"அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார் ”வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்."
அதுபோல, இந்த இரண்டாவது வகை சீடர்கள் அவர்களிடம் இருந்த இறைவார்த்தைகளை நாசம் செய்ய வந்த பிசாசின் தந்திரங்களை எத்ரிக்க தவற விட்டவர்கள்.
அதனால், அப்பம் சுடுபவர் மரணமடைந்தது போல, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பரலோகத்தில் நித்திய ஜீவன் பெற்று கொள்ளும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர்.
இது நமக்கும் எச்சரிப்பாக இருக்கிறது.
7. கனவுகளில் நமக்கான பாடம்
இந்த சோதனையான உலக காலங்களில், கிறிஸ்துவோடு ஞானஸ்நானம் மூலம் இணைந்து சத்தியத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும் நமக்குள்ளும், இரண்டு வித சீடர்கள் இருப்பார்கள்.
முதல் வகை - அரசருக்கு பழச்சாறு பரிமாறும் சீடர்கள் - கடவுளை சந்தோசப்படுத்தும் சீடர்கள், இறுதி வரை திராட்சை செடியாகிய, நம் ஆண்டவரோடு இணைந்து, நல்ல கனிகளை கொடுப்பவர்கள்.
அவர்கள் வரப்போகும் இறையாட்சி காலத்தில், பரலோகத்தில் திருச்சபையாக கடவுளுக்கு உகந்த காணிக்கையை தருவார்கள்.
இரண்டாவது வகை - தங்களிடம் இருக்கும் அப்பத்தை பறவைகளிடமிருந்து காத்துக் கொள்ளாத சீடர்கள், தங்களிடம் கொடுக்கப்பட்ட இறை வார்த்தைகளை (சத்தியங்களை) பிசாசின் கள்ள போதனைகள் நாசம் செய்யும் படி கவனக் குறைவாக இருப்பவர்கள்.
இவர்கள் வரப்போகும் இறையாட்சியில், இரண்டாம் மரணம் எல்லாம் அடையமாட்டார்கள். நித்திய ஜீவன் அடையும் வாய்ப்பை இழந்து; அதோடு கிறிஸ்துவோடு அரசாளும் வாய்ப்பையும் இழந்து, இப்பூமியில் நடக்கும் பொதுவான உயிர்த்தெழுதல் அடைந்து, தாங்கள் இழந்த நல் வாய்ப்பை எண்ணி துக்கிப்பார்கள்.
இந்த இரண்டு வகை சீடர்களை, நாம் சிலுவையில் நம் ஆண்டவரோடு அறையப்பபட்திருந்த இரண்டு கள்ளர்களுக்கும் ஒப்புமை படுத்தலாம்.
ஒருவர், அவரது கடைசி நிமிடங்களில் வாய்ப்பை பயன்படுத்தி, பரமஅழைப்பை நம் ஆண்டவர் மூலமாகவே உறுதி படுத்தும் பாக்கியம் பெற்றார்.
ஆனால், மற்றவரோ - தனது கடைசி நிமிடங்களில் கூட பிசாசுக்கு இடம் கொடுத்தார்.
அது போல, இரண்டாவது நாளின் கடைசி நிமிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும், இந்த அழகான வாய்ப்புகளை பயன்படுத்தி, திராட்சை செடியாகிய நம் ஆண்டவரோடு நிலையாக இணைந்திருந்து, மூன்றாம் நாளாகிய இறையாட்சியில் ராஜரீக ஆசாரியர்களாக பரமண்டலங்களில் நம் பரமதந்தைக்கு புது பாட்டை பாடுவோம்.
ஏதேனும் கேள்வி எழுந்தாலோ, தங்களுடைய புரிதல்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலோ, கண்டிப்பாக கீழுள்ள COMMENT BOX இல் பதிவு செய்யவும். நன்றி.
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்





Comments
Post a Comment