2-D. METHOD 4: UNDERSTANDING PROPHETIC LANGUAGE | இறைவாக்கு (தீர்க்கதரிசனம்) மொழியைப் புரிந்து கொள்ளுதல்
UNDERSTANDING SCRIPTURE - THE SEVEN METHODS - 4 of 7 (UNDERSTANDING PROPHETIC LANGUAGE)
1. முன் வார்த்தைகள்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
கலாத்தியர் 1:3
நாம் முந்தைய பாடத்தில், உவமைகளில் மறைந்துள்ள ரகசியங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்று நம் ஆண்டவர் கூறிய ஊசியின் காதில் நுழைந்த ஒட்டகம் உவமை வாயிலாக சிலவற்றை அறிந்தோம். ஏனைய உவமைகளின் விளக்கம், மெனோரா வலைபதிவேட்டில் எழுதப்பட்டு வருகிறது. கண்டிப்பாக வாசித்து பயன் பெறவும். நன்றி. 🙂
நாம் அறிந்துள்ள படி, நமது பைபிளில் - பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இறைவாக்கு/ தீர்க்கதரிசன புத்தகங்கள் உள்ளன. சங்கீதங்கள் முதலிய பிற புத்தகங்களிலும் தீர்க்கதரிசனங்கள் உண்டு.
பழைய ஏற்பாடு காலத்தில், ஒவ்வொரு சூழ்நிலையிலும் கடவுள் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவார்.
இக்காலத்தில், நாம் பார்க்கும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் 10-15 தீர்க்கதரிசிகள், கடவுள் கூறியதாக மழை வரும், முடி வளரும், கல்யாணம் ஆகும் என்று தொடங்கி அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
அவர்கள் மட்டும் எவ்வாறு இந்த விசேஷ தீர்க்கதரிசன வரத்தை பெற்றார்கள் என்று பின் வரும் பாடத்தில் நாம் இறை வார்த்தைகளை ஆராய்ந்து அறிய போகிறோம்.
நாம் இந்த பாடத்தில் இறைவாக்கு/ தீர்க்கதரிசனம் என்றால் என்ன?
பைபிளில் உள்ள இறைவாக்குகளை / தீர்க்கதரிசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்று அறிய போகிறோம். 🙂
2. இறைவாக்கு (தீர்க்கதரிசனம்) என்றால் என்ன?
இந்த கேள்விக்கு பலரது பதில் என்னவென்றால், பின் நடப்பவைகளை முன் அறிவிப்பது என்பதே.
இப்போது, தீர்க்கதரிசனம் குறித்து பைபிள் நமக்கு கூறுவது என்ன வென்று பார்ப்போம். வாசிப்போம்...
2 பேதுரு 1: 20
பைபிளில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
தீர்க்கதரிசனம் சுய தோற்றமான பொருளை உடையதாய் இராது என்றால் என்ன?பைபிளில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
அதாவது, தீர்க்கதரிசனம் என்றாலே அது உருவகங்களால் மட்டுமே இருக்கும். நேரடியான வார்த்தைகள் இராது.
இக்கால தீர்க்கதரிசிகள் மேடையில் நேரடியாக மழை வரும், ஷேமம் வரும் என்று நேரடியாக கூறுவது தீர்க்கதரிசனம் அல்லவே அல்ல என்று இந்த இறை வார்த்தை நமக்கு உறுதி படுத்துகிறது.
பைபிளில் உள்ளவை மட்டுமே தீர்க்கதரிசனம். வேறெதுவும் தீர்க்கதரிசனம் ஆகாது.
1 கொரிந்தியர் 13:8,9,10
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்,...
நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
முதலாம் நூற்றாண்டில் பவுல் அடிகளார் எழுதிய இவ்வசனம், தீர்க்கதரிசனம் கூறும் வரம் ஒழிந்து போகும் என்கிறார்.தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்,...
நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
எப்போது ஒழிந்து போகும்?
நிறைவானது வரும் போது ஒழிந்துபோம்.
எது நிறைவானது?
நமது பைபிள்.
ஆம். பைபிளில் உள்ள 66 புத்தகங்கள் நிறைவடைந்த பின்பு, குறைவான தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் ஒழிந்துபோம் என்று அப்போஸ்தலர் பவுல் அடிகளார் கூறுகிறார்.
எப்போது 66 புத்தகங்கள் எழுதப்பட்டு நிறைவானது?
நமது பைபிளின் கடைசி புத்தகமான, அப்போஸ்தலர் யோவான் அவர்கள் எழுதிய திருவெளிப்பாடு புத்தகம் கிபி 95 இல் பத்மு தீவில் எழுதப்பட்டது.
ஆம். அதன் பின் தனி நபர்கள் தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் நின்று போனது.
அப்படி என்றால், இப்போது இருக்கும் தீர்க்கதரிசிகள் கூறுவது என்ன?
இறை வார்த்தைகளோடு சிந்திப்போம். 🙂
3. பைபிளில், கடவுள் மனிதரிடம் உறவாடும் முறைகள் -
கனவுகள்
நாம் அறிந்துள்ள படி, பழைய ஏற்பாடு காலத்தில், கடவுள் கனவுகள் மூலமாக பேசியுள்ளார். அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
| Person | Reference | Purpose of the Dream |
|---|---|---|
| Abimelech (King of Gerar) |
Genesis 20:3 | Warned not to take Sarah, Abraham’s wife |
| Jacob | Genesis 28:10–17 | Saw the ladder to heaven; assurance of God’s covenant |
| Joseph (son of Jacob) |
Genesis 37:5–10 | Dreams of future leadership and family bowing to him |
| Pharaoh’s Cupbearer & Baker |
Genesis 40 | Dreams interpreted by Joseph, foretelling their fates |
| Pharaoh | Genesis 41 | Cows and grain dreams; warning of famine |
| Solomon | 1 Kings 3:5–15 | God offered him wisdom in a dream |
| Nebuchadnezzar | Daniel 2; 4 | Dreams of kingdoms and a great tree, interpreted by Daniel |
| Daniel | Daniel 7 | Dreams of beasts symbolizing future empires |
| Joseph (Mary) | Matthew 1:20; 2:13, 19, 22 | Guided to marry Mary, flee to Egypt, and return safely |
| (Wise Men) | Matthew 2:12 | Warned not to return to Herod |
| Pilate’s wife | Matthew 27:19 | Dream warning about Jesus’ innocence |
4. ஊரீம் தும்மிம்
ஆசாரியரின் ஆடையில் அணியும் மார்பதக்கத்தில் உள்ள ஊரீம் தும்மிம் கற்கள் மூலமாக பேசியுள்ளார்.
விடுதலைப் பயணம் 28:30, லேவியர் 8:8
தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில், ஊரிமையும் தும்மியையும் இட்டு வைப்பாய். ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில், அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும். இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான்.

லேவியர் 8:6-10
ஆரோனையும், அவர் புதல்வரையும் வரவழைத்து ஏப்போதை அவர்மேல் போட்டு, மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து, அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து,தலையில் பாகை அணிவித்தார்.
ஆரோனையும், அவர் புதல்வரையும் வரவழைத்து ஏப்போதை அவர்மேல் போட்டு, மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து, அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து,தலையில் பாகை அணிவித்தார்.
ஊரிம், தும்மிம் என்றால் என்ன?
ஊரீம் - ஒளி
தும்மிம் - சத்தியம்
கடவுளின் பதிலை பெற்றுக் கொள்வதற்கு, சரியான வழிகாட்டுதலை இந்த ஊரீம், தும்மீம் கொடுத்தது என்று வாசிக்கிறோம். ஆனால், இது எவ்வாறு செயல் பட்டது என்ற குறிப்பு நமக்கு பைபிளில் கொடுக்கப்படவில்லை.
ஊரீம், தும்மீம் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் கீழே தங்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
| Event / Context | Reference | Purpose / Outcome |
|---|---|---|
| High priest instructed to wear Urim and Thummim |
Exodus 28:30 | Placed in the breastpiece of judgment over Aaron’s heart to seek God’s will |
| Consecration of Aaron |
Leviticus 8:8 | Moses places Urim and Thummim in Aaron’s breastpiece during ordination |
| Joshua’s leadership |
Numbers 27:21 | Joshua to stand before Eleazar the priest, who would inquire by Urim for guidance |
| Blessing of Levi | Deuteronomy 33:8 | Urim and Thummim associated with the tribe of Levi’s priestly role |
| Saul’s inquiry in battle |
1 Samuel 14:41 | Saul seeks guidance |
| Saul seeks God’s guidance |
1 Samuel 28:6 | God does not answer Saul by dreams,prophets, or Urim |
| Return from exile | Ezra 2:63 | Priests with uncertain lineage told to wait until Urim and Thummim could decide |
| Parallel account | Nehemiah 7:65 | Same as Ezra: decision about priestly lineage deferred until Urim and Thummim available |
ஏன்?
அதன் பின், ஆரோன் போன்ற நிழலான பிரதான ஆசாரியர்கள் போய் உண்மையான பிரதான ஆசாரியன் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வந்ததினால்,
நம்மை வழிநடத்த உண்மையான ஊரீம் (ஒளி), தும்மீம் (சத்தியம்) ஆகிய இறைவார்த்தைகள் வந்தது.
ஆம், இப்போது கடவுள் நம்மோடு பேசுவது இறைவார்த்தைகள் மூலமாக மட்டுமே. 🙂
5. ஞான திருஷ்டிகாரர் / திருக்காட்சியாளர்
தீர்க்கதரிசிகள் அனுப்பப் படுவதற்கு முன்பு, ஞான திருஷ்டிகாரர்கள் / திருக்காட்சியாளர் என்பவர்கள் மூலம் கடவுளின் திருவுளத்தை இஸ்ரயேல் மக்கள் அறிந்து கொண்டனர் என்று வாசிக்கிறோம். வாசிப்போம்:
9 அக்காலத்தில் இஸ்ரயேலில், கடவுளின் திருவுளத்தை நாடிச் செல்வோர் “வாருங்கள், திருக்காட்சியாளரிடம் செல்வோம்” என்பர். ஏனெனில், இன்றைய இறைவாக்கினர் அன்று “திருக்காட்சியாளர்” என்று அழைக்கப்பட்டார்.
நமது பைபிளில் ஞான திருஷ்டிகாரர்கள் / திருக்காட்சியாளர்கள் விசாரிக்கப்பட்ட சில சம்பவங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
| Person | Reference | Purpose of Inquiry |
|---|---|---|
| Israelites | 1 Samuel 9:9 | Went to the seer to inquire of God; prophets were formerly called seers |
| Saul (before becoming king) | 1 Samuel 9:6–10 | Sought out Samuel the seer to learn the whereabouts of his father’s donkeys |
| Rebekah | Genesis 25:22–23 | Inquired of the Lord about the struggle of her children in the womb |
| Danite spies | Judges 18:5–6 | Asked a priest to inquire of God whether their journey would be successful |
| Israelites (choosing Saul) | 1 Samuel 10:22 | Inquired further of the Lord to locate Saul when he was chosen as king |
| Manoah (father of Samson) | Judges 13:8–18 | Asked the angel of the Lord for guidance about raising his son |
6. தீர்க்கதரிசனத்தை பற்றி பைபிள் கூறுவது என்ன?
வாசிப்போம்
2 பேதுரு 1: 19-21
19 அதனால், தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்கு இன்னும் உறுதியாகிவிட்டன; பொழுது விடிந்து விடிவெள்ளி உதிக்கும்வரை, இருட்டில் பிரகாசிக்கிற விளக்கைப் போல் உங்கள் இதயங்களில் பிரகாசிக்கிற அவற்றுக்கு நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது.
20 வேதவசனங்களில் இருக்கிற எந்தத் தீர்க்கதரிசனமும் தனி நபர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் சொல்லப்படவில்லை என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
20. வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
21 ஏனென்றால், மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.+ கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டு சொன்னார்கள்.
இந்த இறை வார்த்தைகள், தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.19 அதனால், தீர்க்கதரிசன வார்த்தைகள் நமக்கு இன்னும் உறுதியாகிவிட்டன; பொழுது விடிந்து விடிவெள்ளி உதிக்கும்வரை, இருட்டில் பிரகாசிக்கிற விளக்கைப் போல் உங்கள் இதயங்களில் பிரகாசிக்கிற அவற்றுக்கு நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது.
20 வேதவசனங்களில் இருக்கிற எந்தத் தீர்க்கதரிசனமும் தனி நபர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் சொல்லப்படவில்லை என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
20. வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
21 ஏனென்றால், மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.+ கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டு சொன்னார்கள்.
மேலும், பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்களுக்கு, நமது சுய கருத்துகள் அடிப்படையில் விளங்கி கொள்ளாமல், கடவுளின் திட்டத்தோடு, இறை வார்த்தைகளின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும் என்ற நமக்கு கூறுகிறது.
இறை வார்த்தைகளின் அடிப்படையில் எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை இந்த பாடத்தில் அறிய போகிறோம்.
7. இன்றைய கள்ள தீர்க்கதரிசிகளை பற்றி பைபிள் கூறுவது என்ன?
மேலுள்ள படத்தில் காட்டி உள்ளது போல, சுய லாபத்திற்காக கள்ள தீர்க்கதரிசன தொழில் செய்பவர்களும் கையில் பைபிள் வைத்திருப்பார்கள்.
நாம் விழிப்புடன் சத்தியத்தை அறியாதிருந்தால், இவர்கள் கூறுவது கடவுளின் இறைவாக்கு என்று எண்ணி, இந்த ஏழை தீர்க்கதரிசிகளின் (அட்)ஊழியம் வளர நமது பங்களிப்பை அனுப்பி வைப்போம்.
கள்ள தீர்க்கதரிசிகளை பற்றிய எச்சரிப்பு வசனங்கள் சிலவற்றை நாம் வாசித்து சிந்திப்போம்.
கட்டளையிடாத வார்த்தை
உபாகமம் 18: 20,21,22
20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
மிக தெளிவான ஒரு எச்சரிப்பு.20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
யூகித்த தரிசனம்
ஏரேமியா 23: 14,16,17,21
14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்;
16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள்
17 அவர்கள்,உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
21 அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

பொய்க்குறிகள்
எசேக்கியேல் 13ம் அதிகாரம்
2 மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது,
3தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
4 இஸ்ரயேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
7 நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
8நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்;
10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;
16 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரயேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள்.
இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறபடி, இன்றைய கிறிஸ்தவர்களும் தங்களுக்கு சமாதானம், ஷேமம் உண்டாயிருக்கும் என்று
கூறும் டுபாக்கூர் தீர்க்கதரிசிக்களை தான் நாடுகின்றனர்.2 மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது,
3தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
4 இஸ்ரயேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
7 நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
8நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்;
10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;
16 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரயேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள்.
திடுக்கிடத்தக்க காரியம்
ஏரேமியா 5: 30,31
30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது. 31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?

ஏசாயா 30:10
9 இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.
10 இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,
இந்த வசனங்கள் மிக தெளிவாக இன்றைய காலத்தில் நடக்கும் தீர்க்கதரிசன மோசடிகளை நம் கண் முன் நிறுத்துகிறது. 9 இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.
10 இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,
நாம் தெளிந்த பகுத்தறிவோடு கூடிய சிந்தை கொண்டிராவிட்டால், நாமும் கள்ள தீர்க்கதரிசிகளுக்கு இரையாவோம்.
8. நம் ஆண்டவர் மற்றும் அப்போஸ்தலர் பவுல் அடிகளாரின் எச்சரிப்புகள்
கள்ள தீர்க்கதரிசிகள் பின்னாளில் வஞ்சிக்கும் கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள் என நம் ஆண்டவரும், பவுல் அடிகளாரும் முதல் நூற்றாண்டிலேயே எச்சரிக்கிறார்.
வாசிப்போம்
நம் ஆண்டவரின் எச்சரிக்கை
மத்தேயு 7: 15
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
பவுல் அடிகளாரின் எச்சரிக்கை
2 தீமோத்தேயு 4: 2,3
2 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
3 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

9. கள்ள தீர்க்கதரிசிகளின் முடிவு
நாம் காணும் பிரபலமான கள்ள தீர்க்கதரிசிகளின் முடிவு என்னவாயிருக்கும்?வாசிப்போம்
ஏரேமியா 25: 34,35
34 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
இன்று மக்களை கள்ள தீர்க்கதரிசனங்கள் மூலம் கொள்ளை அடித்து கொண்டிருப்பவர்கள் தப்பிக்க வழியில்லாமல் போகும் காலத்தை பற்றி இவ்வசனம் உறுதியாக கூறுகிறது.34 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
வாசிப்போம்
மத்தேயு 7: 22,23
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இங்கு, அந்நாளில் என்பது நியாயத்தீர்ப்பு நாளை குறிக்கும்.22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இந்த வசனத்தில் கூறி உள்ளபடியே, இன்றைய கள்ள தீர்க்கதரிசிகளும், நம் ஆண்டவரின் பெயரை பயன்படுத்தியே தீர்க்கதரிசனங்கள் கூறுகிறார்கள்.
மிக தெளிவாக கள்ள தீர்க்கதரிசிகளுக்கு நடக்க போவதை கூறும்
இந்த வசனங்களை அவர்கள் ஒரு முறை கூட படித்தார்களா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது?
10. பைபிளின் முதல் தீர்க்கதரிசனம்
பைபிளில் 800 தீர்க்கதரிசனங்களுக்கு மேல் உள்ளது.
அதில் முதலில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் தான் கடைசியில் நிறைவேற போகும் தீர்க்கதரிசனம்.
வாசிப்போம்
ஆதியாகமம் 3: 14,15
14 பின்பு கடவுள் அந்தப் பாம்பிடம், “நீ இப்படிச் செய்ததால், வீட்டு விலங்குகள் எல்லாவற்றிலும் காட்டு மிருகங்கள் எல்லாவற்றிலும் நீ சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றில் ஊர்ந்து போவாய், உன் வாழ்நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.
15 உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று சொன்னார்.
இது கடவுள், சாத்தானுக்கு அளிக்க போகும் இறுதி தண்டனையை குறித்த தீர்க்கதரிசனம்.14 பின்பு கடவுள் அந்தப் பாம்பிடம், “நீ இப்படிச் செய்ததால், வீட்டு விலங்குகள் எல்லாவற்றிலும் காட்டு மிருகங்கள் எல்லாவற்றிலும் நீ சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றில் ஊர்ந்து போவாய், உன் வாழ்நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.
15 உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று சொன்னார்.
ஆனால் இது தான் பைபிளில் முதல் தீர்க்கதரிசனம்.
இங்கு அவர் உன் தலையை நசுக்குவார் என்பதில் அவர் யாரை குறிக்கும்?
அவரது குதிங்கால் யார்?
இந்த தீர்க்கதரிசனத்தை பற்றி விரிவாக நாம் பின்வரும் ஸ்த்ரீயின் வித்து = பெண்ணின் சந்ததி என்ற பாடத்தில் அறிய போகிறோம்.
11. கடல் வனாந்திரத்தின் பாரம்
இப்போது, பைபிளில் உள்ள ஒரு தீர்க்கதரிசன வாக்கியத்தை புரிந்து கொள்ள போகிறோம்.
வாசிப்போம்
ஏசாயா 21: 1
கடல் வனாந்தரத்தின் பாரம்.
இதற்கு என்ன அர்த்தம்? 🤔கடல் வனாந்தரத்தின் பாரம்.
நாம் அறிந்திருக்கிற படி, தீர்க்கதரிசனத்திற்கு சுய தோற்றமான பொருள் இராது.
கடல் = தண்ணீர் என்பது எதை அடையாளப்படுத்தும்?
வாசிப்போம்
திருவெளிப்பாடு 17: 15
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
ஏசாயா 57: 20
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்;
ஆம்.துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்;
வனாந்திரம் எதை குறிக்கிறது?
வனாந்திரம் (பாலைவனம்) என்பது ஒழுங்கில்லாமல் இருக்கும்.
ஏசாயா 27: 10
அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்;
NWT: மதில்கள் சூழ்ந்த நகரம் வெறுமையாக்கப்படும். மேய்ச்சல் நிலங்கள் கைவிடப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரம்போல் ஆகிவிடும்.
திருவிவிலியம்: அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது: குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது. பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது:

வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்;
இவ்வசனங்களை நாம் புரிந்து கொள்ளும் போது, வனாந்திரம் என்பது ஒழுங்கற்ற நிலைமையை குறிக்கிறது.வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்;
பாரம் என்பது எதை குறிக்கும்?
வாசிப்போம்
எரேமியா 23: 33,34
33 கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.
34 கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இவ்வசனங்களை நாம் தீர்க்கதரிசன மொழியில், பாரம் என்பது எதை குறிக்கும் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
33 கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.
34 கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இப்போது, கடல் வனாந்திரத்தின் பாரம் என்றால் என்ன?
கடல் = மக்கள்
வனாந்திரம் = ஒழுங்கற்ற நிலைமை
பாரம் = தண்டிப்பேன்
இதன் அர்த்தங்களை, நாம் பகுத்தறிந்து பார்க்கும் போது, கடல் வனாந்திரத்தின் பாரம் என்றால்
ஒழுங்கற்ற மனிதர்களை தண்டிப்பேன்
என்று அர்த்தம் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.
12. வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள்
இது போல, பைபிளில் உள்ள அனைத்து தீர்க்கதரிசனங்களும் சுயதோற்றமான பொருளை கொண்டிராமல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அதன் அர்த்தமும் பைபிளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
அதை தான் நாம் தேடி ஆராய வேண்டும்.
யோவான் 5: 39
வேதவசனங்களை ஆராய்ந்து பாருங்கள்.
இவ்வாறு பைபிளில் மனுகுலத்திற்கு கடவுள் வைத்திருக்கும் திட்டத்தை கூறும் தீர்க்கதரிசனங்களை நாம் பின் வரும் பாடங்களில் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.வேதவசனங்களை ஆராய்ந்து பாருங்கள்.
அடுத்த பாடத்தில், நாம் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அடையாள மொழிகளை பற்றி அறிய போகிறோம்.
பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக.
ஆமென்.

n
ReplyDeletesigma
ReplyDeleteGilette the best a man could get... for perfect shave and perfect shape
ReplyDelete