WHY IS THIS VERSE IN BRACKETS? | ஏன் இந்த வசனம் அடைப்பு குறிக்குள் போடப்பட்டுள்ளது? - 1 JOHN 5: 7

WHY IS THIS VERSE IN BRAKCETS

WHY IS THIS VERSE IN BRAKCETS

அன்புடையீர்,வணக்கங்கள்.🙂🙏

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
1 யோவான் 5: 7
7 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 8 பூலோகத்திலே]
  • இந்த வசனம் ஏன் அடைப்பு குறிக்குள் போடப்பட்டுள்ளது என்று யோசித்திருக்கிறீர்களா?
  • BSI தமிழ் வேதாகமத்தில் காணப்படும் இந்த வசனம், ஏன் கத்தோலிக்க திருவிவிலியத்தில் இல்லை?
  • தமிழ் பைபிளில் காணப்படும் இந்த வசனம், ஏன் பரவலாக பயன்படுத்தப்படும் ஆங்கில பைபிள்கள் NIV, ESV, ASV, ROTHERHAM, WEYMOUTH, NLT, RSV ஆகியவற்றில் (KJV தவிர) இவ்வசனம் இல்லை.
வாருங்கள் அறிவோம்.
மூல பைபிளில் இல்லாத வசனம்
1 யோவான் 5: 7
7 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 8 பூலோகத்திலே]
இந்தப் பகுதி COMMA JOHANNEUM என்று அழைக்கப்படும் இந்த வசனம்,
பழைய தமிழ் மொழிபெயர்ப்புகளில் மட்டுமே காணப்படும்.
புதிய மொழி பெயர்ப்புகளில் இந்த வசனம் நீக்கப்பட்டுள்ளது. ஏன்?
ஆரம்ப கால கையெழுத்துப் பிரதிகளில் இல்லாத வசனம்
முதல் 3–4 நூற்றாண்டுகளின் எல்லா கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில்
(Sinaiticus, Vaticanus, Alexandrinus போன்றவை)
இந்த வசனம் இல்லவே இல்லை.
ஆரம்ப கால திருச்சபை பாதிரிமார்கள் (Irenaeus, Origen, Athanasius)
திரித்துவம் குறித்து விவாதித்தபோதும், இந்த வசனத்தை ஒருபோதும் மேற்கோள் காட்டவில்லை.
ஏன் மேற்கோள் காட்டவில்லை?
இருந்தால் நிச்சயம் மேற்கோள் காட்டி இருப்பார்கள்.
ஆனால், இல்லாத வசனத்தை எப்படி மேற்கோள் காட்ட முடியும்? 🙂
அப்போ இது எப்போது தோன்றியது?
கி.பி. 4–5 ஆம் நூற்றாண்டுகளில்,
லத்தீன் (Latin) வேதாகமங்களில்
விளக்கக் குறிப்பாக (margin note) முதலில் தோன்றியது.
பின்னர், அந்த விளக்கம் தவறுதலாகவோ, வேண்டும் என்றோ உரைப்பகுதிக்குள் சேர்க்கப்பட்டது.
எராஸ்மஸ் (1466–1536) மற்றும் கிரேக்க புதிய ஏற்பாடு
1516ல், எராஸ்மஸ் என்கிற கத்தோலிக்க பாதிரியார் தனது கிரேக்க புதிய ஏற்பாட்டை வெளியிட்டபோது
இந்த வசனத்தை நீக்கினார்,
ஏனெனில் எந்த கிரேக்க கையெழுத்துப் பிரதியிலும் அது இல்லை.
பின்னர், கடும் அழுத்தத்தின் காரணமாக,
“ஒரு கிரேக்க பிரதியில் இருந்தால் சேர்ப்பேன்” என்று கூறியதன் பேரில்

அதன் பிறகு, 16ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கிரேக்க பிரதியை (Codex 61) காட்டினர்.
அதனை அடிப்படையாக கொண்டு, எராஸ்மஸ் தனது 3ஆம் பதிப்பில் (1522) இந்த வசனத்தை சேர்த்தார்.
இந்த பிரதியே பின்னர் Textus Receptus மற்றும் King James Version வழியாக பிற மொழிகளில் புகுந்தது.
ஏன் இன்றைய புதிய வேதாகம மொழி பெயர்ப்புகளில் நீக்கப்பட்டது?
19–20ஆம் நூற்றாண்டுகளில் பழமையான, நம்பகமான கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட நவீன மொழிபெயர்ப்புகள் (NIV, ESV, NASB, RSV) இந்த வசனத்தை முழுமையாக நீக்கியும் அல்லது அடைப்புக்குறிக்குள் மட்டும் வைத்தது.
ஏனென்றால் அவற்றில் இந்த வசனம் காணப்படவில்லை.

எந்தக் கிறிஸ்தவ போதனையும் ஒரு சந்தேகத்திற்குரிய வசனத்தின் மீது கட்டப்படக் கூடாது என்பதில் மொழி பெயர்ப்பாளர்கள் கவனமாக இருந்தார்கள்.
திரித்துவம்
ஆம். மூன்று கடவுள் கோட்பாடான திரித்துவம், ஒரு கடவுள் மூன்றாக இருக்கிறார் கோட்பாடான திரியேகம் என்பவைகள் பைபிள் கூறாத குட்டி பிசாசுகளின் உபதேசம்.
இது கிறிஸ்தவத்தில் திருத்தூதர் பவுல் அடிகளாரின் காலத்திற்கு பின்பு, மனசாட்சியில் சூடுண்ட பொய்யர்களால் உள்நுழைந்த கோட்பாட்டு.
வாசிப்போம்
அப்போஸ்தலர் 20: 29,30 29 உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30 உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
வேறொரு இயேசு
2 கொரிந்தியர் 11: 4
ஒருவன் உங்களிடம் வந்து நாங்கள் பிரசங்கித்த இயேசுவைத் தவிர வேறொரு இயேசுவைப் பற்றிப் பிரசங்கித்தால்,
அல்லது நீங்கள் பெற்றுக்கொண்ட சிந்தையை தவிர வேறொரு சிந்தையைப் பெற வைத்தால்,
அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியைச் சொன்னால்,
அவனை எளிதில் பொறுத்துக்கொள்கிறீர்கள்.
ஆம். இயேசு கிறிஸ்து = கடவுளின் மகன் என்பதே பைபிள் கூறும் அடிப்படை உண்மை.
பிதா தான் இயேசு, இயேசு தான் பிதா, மூன்றாவதாக பரிசுத்த ஆவியானவர் என்ற கடவுள் உண்டு என்ற பிற அந்நிய மத கோட்பாடுகள் பிற்காலத்தில் உள்நுழையும் என்பதை பவுல் அடிகளார் அறிந்திருந்தார்.
தண்டனை இது போல, துணிகரமாக வசனத்தை பைபிளில் உள்நுழைக்கப்படும் என்பதை கடவுளும் அறிவார்.
வாசிப்போம்
திருவெளிப்பாடு 22: 18,19
18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார். 19 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.
பைபிள் கூறும் உன்மை வாசிப்போம்
யோவான் 17: 3
உண்மையான ஒரே கடவுளாகிய பரமதந்தையையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.
1 தீமோத்தேயு 2: 5
ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
பரமதந்தை = கடவுள்
இயேசு கிறிஸ்து = இறைமகனார்
தூய சக்தி = கடவுளின் வல்லமை = உன்னதமானவரின் பெலன்
தனி நபர் அல்ல.
லூக்கா 1: 35
அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்; உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்

நம் கடவுளாம் பரமதந்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உங்களை வழி நடத்துவார்களாக. ஆமென்.


Comments