RANSOM
1. ஒருவரும் கெட்டுப் போகாதபடி, இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
சில கேள்விகளுடன் இந்த பாடத்தை துவங்கி, அதற்காக பதில்களை இந்த பாடத்தில் அறிவோம்.
நம் ஆண்டவர் கிறிஸ்தவர்களை மட்டும் இரட்சிக்க வந்தாரா?
அல்லது எல்லாரையும் இரட்சிக்க வந்தாரா?
இறை வார்த்தைகள் மூலம் பதில் பெறுவோம்.
வாசிப்போம்
2 பேதுரு 3: 9
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
ஒருவர் கூட கெட்டுப் போக கூடாதென்பது நமது பரமதந்தையின் சித்தமாக இருக்கிறது.ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
அதற்காக தான்,
யோவான் 3:16
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே தந்தருளி கடவுள் உலகின்மேல் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்.
இவ்வசனம், நம் கடவுளாம் பரமதந்தை இந்த உலகின் மேல் (உலக மக்கள் மேல்) வைத்திருக்கும் மாபெரும் அன்பை எடுத்துரைக்கின்றது.தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே தந்தருளி கடவுள் உலகின்மேல் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்.
அந்த அன்பை, நம் கடவுள் தம் மகன் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த பாடத்தில், நாம்
- நம் ஆண்டவரின் சிலுவை மீட்பு மரணத்தின் பலனாக யாரெல்லாம் காப்பாற்றப்படுவார்கள்.
- எதில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்
- நம் ஆண்டவர் எப்படி உலக இரட்சகரானார்?
- கடவுள் மனுகுலத்திற்கு வைத்திருக்கும் மாபெரும் திட்டம் என்ன?
- பைபிள் கூறும் நற்செய்தி என்ன?
2. யாருக்கு இரட்சகர்? (காப்பாற்றுகிறவர்)
முதலில், இரட்சகர் என்ற வார்த்தையின் பொருளை பலரும் அறியாமலேயே பயன்படுத்தி வருகிறார்கள்.
இரட்சிப்பு என்றால் காப்பாற்றப்படுதல் என்று அர்த்தம்.
இரட்சகர் என்றால் காப்பாற்றுகிறவர் - SAVIOUR என்று அர்த்தம்.
நம் ஆண்டவர் யாரை எல்லாம் காப்பாற்றுகிறார்?
எல்லா மக்கள்
வாசிப்போம்
லூக்கா 2: 10,11
வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

யோவான் 12: 32
இயேசு கிறிஸ்து: நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
இவ்வசனம், நம் ஆண்டவர் எல்லா மக்களையும் காப்பாற்றுகிறார் என்று கூறுகிறது!
இயேசு கிறிஸ்து: நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
தமது மக்கள்
அடுத்து வாசிப்போம்...
மத்தேயு 1: 21
அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்றார்.
இந்த வசனம், நம் ஆண்டவர் தமது மக்களை மட்டும் காப்பாற்றுகிறார் என்று கூறுகிறது!!யார் அந்த தம் மக்கள்?
அது யூத மக்களை மட்டும் குறிக்கிறதா? அல்லது தம்மை விசுவாசிக்கிறவர்களை பற்றி கூறுகிறதா?
பலர்
அடுத்து வாசிப்போம்
மாற்கு 10:45
ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் என்று கூறினார்.
ரோமர் 5: 19
ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
இந்த வசனங்கள், நம் ஆண்டவர் பலரை மீட்க வந்தார் என்று கூறுகிறது.
ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் என்று கூறினார்.
ரோமர் 5: 19
ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
உலகம்
யோவான் 1: 29
மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
யோவான் அவர்கள் கூறிய இந்த வசனம்,நம் ஆண்டவர் உலகத்தை காப்பாற்றுகிறார் என்று கூறுகிறது.
மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
அப்படி என்றால், நம் ஆண்டவர்
- பலருக்கு இரட்சகரா?
- தமது மக்களுக்கு இரட்சகரா?
- உலகத்துக்கு இரட்சகரா?
- எல்லாருக்கும் இரட்சகரா?
3. பலருக்கு, தமது மக்கள், உலகத்துக்கு, எல்லாருக்கும்?
வாசிப்போம்
1 தீமோத்தேயு 2: 6
எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.
அல்லேலூயா ✋🙂🤚எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.
இவ்வசனம் நம் ஆண்டவர் எல்லாரையும் மீட்கும் இரட்சகர் என்பதை நமக்கு உறுதிபடுத்துகிறது.
ஆம். எல்லாரையும்...
இந்தியர்,
சைனாக்காரன்,
ஜப்பான்காரன்,
அரேபியர்,
கருப்பர்,
வெள்ளையர்,
பிராமணர்,
ஆண், பெண்,
அரசியல்வாதி,
டுபாக்கூர் சாமியார்கள்,
கள்ள தீர்க்கதரிசிகள்,
தசமபாக பாஸ்டர்கள்,
குடிமகன்கள்,
நாத்திகர்கள்,
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,
இந்துக்கள்,
இஸ்லாமியர்,
போப் ஆண்டவர்கள்,
ஹமாஸ் தீவிரவாதிகள்,
ஹிட்லர், ராஜபக்சே,
கருவில் இறந்த குழந்தை,
போரில் உயிரிழந்த வீரர்கள்,
இறந்து போன நம் தாத்தா பாட்டி,
நம் ஆண்டவரை சிலுவையில் அறைந்தவரகள்,
பெரு வெள்ளத்தில் உயிரிழந்த அப்போதிருந்த மக்கள்
என எல்லாரையும் நம் ஆண்டவர் இரட்சகர் காப்பாற்றுகிறார்.
எதில் இருந்து காப்பாற்றுகிறார்? 🤔
எப்போது காப்பாற்றப் போகிறார்?
இந்த பாடத்தில் முடிவில் அறிய போகிறோம். 🙂
4. மீட்கும் பொருளும் கடவுளின் நீதியும்
வாசிப்போம்
1 தீமோத்தேயு 2: 6
எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.
எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.
மாற்கு 10: 45
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.
இவ்வசனங்கள் கூறும் மீட்கும் பொருள் என்றால் என்ன?அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.
மீட்கும் பொருள் என்பதன் மூல கிரேக்க வார்த்தை,
ANTI LUTRON ἀντίλυτρον என்பதாகும்.
இது சரி நிகரான விலை கொடுத்து மீட்டல் என்று பொருள் படும்.
அதாவது, ஒரு பொருளுக்கு சமமான பொருள், அல்லது ஒரு எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையை குறிக்கும்.
ஆங்கிலத்தில்,
RANSOM = EQUAL CORRESPONDING PRICE
என்று பொருள் படும்.
எதன் அடிப்படையில், ஒரு பொருளுக்கு சமமான பொருள் தர வேண்டும்?
வாசிப்போம்
யாத்திராகமம் 21: 23,24,25
23 கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர்,
24 கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்:
25 சூட்டுக்குச் சூடு: காயத்துக்கு காயம்: கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.
ஆம். ஒரு உயிரை மீட்க சரிசமமான இன்னொரு உயிர் ஈடாக தரப்பட வேண்டும் என்பது23 கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர்,
24 கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்:
25 சூட்டுக்குச் சூடு: காயத்துக்கு காயம்: கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.
நியாயப்பிரமாண கட்டளை = கடவுளின் நீதி
அப்படி என்றால்,
நம் ஆண்டவர் மனுகுலத்தை, தமது உயிரை சிலுவை மீட்பு மரணத்தின் மூலம் தந்து மீட்கும் படி, நாம் எதை இழந்தோம்?
5. நாம் எதை இழந்தோம்?
லூக்கா 19: 10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
ஆதாமின் சந்ததியான நாம் எதை இழந்து போனோம்?இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
ஆதாம் உருவாக்கப்பட்ட போது, அவர் பரிபூரணமாக உருவாக்கப்பட்டிருந்தார். அதாவது,
அவர் மரணமில்லாத நிலையில் = நிலை வாழ்வுடன் = நித்திய ஜீவன் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடவுள் தவிர்க்க கூறிய நன்மை தீமை அறியதக்க "மரத்தின் கனி"யை? உண்டு, கடவுளின் வார்த்தைக்கு கீழ்படியாது உண்டதால், பாவமும், பாவத்தின் தண்டனையாக மரணமும் வந்து, ஆதாம் தனது நித்திய ஜீவனை இழந்தார். என்று நாம் அறிந்திருக்கிறோம்.
ரோமர் 5: 12
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
1 கொரிந்தியர் 15: 21
ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது
ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது
ஆதாமின் கீழ்ப்படியாமையின் தண்டனையாக வந்த சாவு, மொத்த மனுகுலத்தையும் ஆட்கொண்டுள்ளது.
கடவுள், ஆதாமிற்கு தந்த நித்திய ஜீவனை இழந்து போனார்.
அவருடன் சேர்ந்து நாமும் நித்திய ஜீவனை இழந்து போனோம்.
ஆதாம் பாவம் செய்தார்.
அதனால், அவர் மரித்தார்.
ஆனால் நாம் எப்படி / எப்போது பாவிகளானோம்?
தவறு அறியாத சிறு குழந்தைகள் கூட மரிக்கிறார்களே! வாசிப்போம்
சங்கீதம் 51: 5
இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
ஆம். நாம் அனைவரும் ஆதாமின் வம்சா வழியினர் ஆதலால், இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
ஆதாமின் பாவ மரபணு நம்மிடமும் உண்டு.
அதனால், நாம் பிறக்கும் போதே, பாவமும் மரணமும் நமக்கு நிச்சயக்கப்பட்டிருக்கிறது.
6. மரணத்தில் இருந்து மீட்கும் திட்டம் ஏன் இஸ்ரயேல் நாட்டில்?
வாசிப்போம்
யோபு 33:24
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் (மரணத்தில்) இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் (மரணத்தில்) இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
ஒசியா 13: 14
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே?
இந்த வசனத்தில், பாதாளம் என்பது மரணத்தை குறிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம்.
மனிதனை மரணத்தில் இருந்து மீட்க,அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே?
கடவுளாம் பரமதந்தை ஆதாமின் மரணத்திற்கு ஈடாக தமது ஒரே மகனாரான இயேசுவை அனுப்பினார் என்பதை அறிந்து கொண்டோம். ஆனால்
ஏன் அவரை இஸ்ரயேல் நாட்டில் பிறக்க வைக்க வேண்டும்?
ஏன் கடவுள், தம் மகனை அனுப்ப வேண்டும்?
தாமாக ஏன் வரவில்லை?
ஏன் அவர் மரணித்து தான் மனுக்குலத்தை மீட்க வேண்டுமா?
என்கிற கேள்விகள் நமக்கு எழுகிறது.
கலாத்தியர் 4: 4
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை கடவுள் அனுப்பினார்.
ஆம். நியாயப்பிரமாணம் மூலம் கடவுளின் நீதி வெளிப்படுகிற படியால், அவரது மனுக்குல மீட்பு திட்டமும் நியாயப்பிரமானத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை கடவுள் அனுப்பினார்.
அதனால் தான், கடவுள் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களிடம் தம் மகனை அனுப்பினார்.
7. ஏன் இறைமகன்? வேறொருவரால் மீட்கும் பொருள் கொடுக்க முடியாதா?
முதலாம் உலகத்தில், தேவ தூதர்களுக்கு வாய்ப்பு தந்தார்.
ஆனால், அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை மறந்து மனித பெண்களை விவாகம் செய்து கொண்டனர் என்று வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 6: 2
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
சாத்தானுக்கும் வாய்ப்பு தரப்பட்டது
வாசிப்போம்
எசேக்கியேல் 28: 14
13 கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய்!
14 காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்: கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்: ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.
15 நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.

பின் தீர்க்கதரிசிகளை கடவுள் அனுப்பினார்.
ஆனால், அவர்களும் மனிதர்களே = பாவிகளே!
அதனால், அவர்கள் பரிபூரணமாக இருந்த ஆதாமுக்கு சரிநிகர் சமானம் விலையை கொடுக்க முடியாது.
வாசிக்கலாம்
சங்கீதம் 49: 7,8
7 உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது: தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது.
8 மனித உயிரின் ஈட்டுத்தொகை மிகப் பெரியது: எவராலும் அதனைச் செலுத்த இயலாது.
7 உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது: தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது.
8 மனித உயிரின் ஈட்டுத்தொகை மிகப் பெரியது: எவராலும் அதனைச் செலுத்த இயலாது.
ஏன் கடவுள் தாமே வரவில்லை?
மனிதனை மீட்க ஏன் நம் கடவுளாம் பரமதந்தை, தம் திருமகன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்?
ஏன் தாமே வரவில்லை?
வாசிப்போம்
1 தீமோத்தேயு 6: 16
அவர் ஒருவரே சாவாமை உடையவர்: அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்: அவரைக் கண்டவர் எவருமிலர்: காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.
ஆம். நம் கடவுள் - சாவாமை உடையவர்.அவர் ஒருவரே சாவாமை உடையவர்: அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்: அவரைக் கண்டவர் எவருமிலர்: காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.
அவரால் சாக முடியாது.
அதனால் தான், தம் ஒரே மகனை, மனுக்குலத்தை மீட்க சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்.
வாசிப்போம்
ஏசாயா 53: 10
அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.
அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.
யோவான் 3: 16,17
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

8. இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே மீட்பு
வாசிப்போம்
1 கொரிந்தியர் 1:30
அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.
அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.
திருத்தூதர் பணிகள் 4: 12
இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.
நம் கடவுளாம் பரமதந்தை, நம் ஆண்டவர் மூலமாக நாம் மீட்பு பெறுமாறு ஏற்படுத்தி உள்ளார் என்றால்,இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.
நம் ஆண்டவரின் நிலை என்ன?
எபேசியர் 1: 22
அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார்.
அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார்.
1 கொரிந்தியர் 15: 27
கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்.
கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்.
கொலோசேயர் 1: 16
ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
இந்த பூமி, வான்வெளி, மனிதர்கள் என்று அனைத்தையும் உருவாக்கியது நம் ஆண்டவர் தான்.ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
இத்தனை மகிமையை நம் ஆண்டவருக்கு பரமதந்தை தந்திருந்தாலும்,
அவர் நம் மீது இரக்கம் கொண்டு - பிதாவின் சித்தத்தின் படி, தன்னை மரண பரியந்தம் தாழ்த்தினார்.
9. சாவாமை / நித்திய ஜீவன்
இங்கு நாம் இந்த இரு வார்த்தைகளை பார்க்கிறோம்.
பரமதந்தை = சாவாமை உடையவர்
1 தீமோத்தேயு 6:16
இயேசு கிறிஸ்து = நித்திய ஜீவன் உடையவர்
இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம் / வேறுபாடு?
சாவாமை = எந்த காரணத்தை கொண்டும் எந்த சூழ்நிலையிலும் யாராலும் அழிக்க முடியாது / மரிக்க முடியாது.
நித்திய ஜீவன் = சாவதில்லை. ஆனால், பாவம் செய்தால் சாவு வரும்.
இயேசு கிறிஸ்துவிடம் நித்திய ஜீவன் = நிலை வாழ்வு கொடுக்கப்பட்டிருந்தது.
அப்படி என்றால், அவர் பாவம் எதுவும் செய்யவில்லையே!
அப்படி இருந்தும் எப்படி மரித்தார்?
10. பாவமறியாத இறைமகன் எப்படி மரித்தார்?
தேவ தூதரிலும் சிறியவரானார்
வாசிப்போம்
சங்கீதம் 8: 4,5
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்: மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
இவ்வசனங்கள் மூலம், மனிதர்கள் தேவதூதரிலும் சற்று சிறியவர்கள் என்று அறிகிறோம்.4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்: மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
அப்படி என்றால், ஆதாமினால் மரண தண்டனை பெற்ற மனுக்குலத்தை மீட்க, நம் ஆண்டவரும் தேவ தூதர்களின் நிலையிலும் சிறியவராக வேண்டும்.
வாசிப்போம்
எபிரேயர் 2: 9
நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.
ஆம். அனைத்தையும் படைத்த நம் ஆண்டவர், நம்மை மீட்பதற்காக அவரது உயர்ந்த நிலையை விட்டு, நம்மை போல மனிதரானார்.
நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.
தரித்திரனானார்
ஆதாம் - உருவாக்கப்பட்ட போது, பரிபூரணமான மனிதனாக இருந்தது போல,
நம் ஆண்டவரும், ஆதாமின் பாவ மரபணு இல்லாமல் பரிசுத்தராக இருந்தார்.
லூக்கா 1: 35
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது இறைமகன் என்னப்படும்.
ஆதாம் எப்படி தன் பரிபூரண நிலையில் இருந்து விழுந்து போனாரோ,தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது இறைமகன் என்னப்படும்.
அதே போல, நம் ஆண்டவரும் உயர்ந்த நிலையில் இருந்து தரித்திரனானார்.
வாசிப்போம்
2 கொரிந்தியர் 8: 9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
அடிமையின் ரூபமெடுத்தார்
வாசிப்போம்
பிலிப்பியர் 2: 6,7,8
6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
நம் ஆண்டவர் பரலோகத்தில் உயர்ந்த இடத்தை விட்டு, ரோம போர் சேவர்களால் நொறுக்கப்பட நம்மை மீட்கும் பொருட்டு ஒப்புக் கொடுத்தார்.6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
வாசிப்போம்
சங்கீதம் 22: 16,17,18
16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது: நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்: என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
17 என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.
18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

பாவம் செய்யவில்லை
1 பேதுரு 2: 22,23
22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
இவ்வசனம் மூலம் அவர் பாவமே செய்யவில்லை என்று அறிகிறோம்.22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
அப்படி இருக்க...
எசேக்கியேல் 18: 4,20
பாவம் செய்யும் உயிரே சாகும்.
என்ற கட்டளை இருக்க,பாவம் செய்யும் உயிரே சாகும்.
பாவம் செய்யாத, பாவ மரபணு இல்லாத நம் ஆண்டவர் எப்படி மரிக்க முடியும் என்று கேள்வி எழுகிறது!!!
11. பாவம் என்றால் என்ன?
வாசிப்போம்
1 யோவான் 3: 4
பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை = நியாயப் பிரமாணத்தை மீறுவதே பாவம்.
இவ்வசனம் மூலம், நாம் நியாயப் பிரமாண கட்டளையை மீறுவதே பாவம் என்று அறிகிறோம்.பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை = நியாயப் பிரமாணத்தை மீறுவதே பாவம்.
அப்படி என்றால், நம் ஆண்டவர் நியாயப் பிரமாண கட்டளையை மீறினாரா?
12. நம் ஆண்டவர் நியாயப் பிரமாண கட்டளையை மீறினாரா?
நம் ஆண்டவரை குற்றப்படுத்த, அக்கால பரிசேயரும் சதுசேயரும் அவர் "ஓய்வு நாள்" கட்டளையை மீறினார் என்று குற்றப்படுத்தினார்கள்.
வாசிப்போம்
லூக்கா 6: 1-2, மாற்கு 2: 23-24, மத்தேயு 12: 1-2
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்.
2 பரிசேயருள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்.
2 பரிசேயருள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.
எதன் அடிப்படையில் அவர்கள் இயேசுவை குற்றப்படுத்தினார்கள்?
யாத்திராகமம் 20: 8
ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.
மேலும் நம் ஆண்டவர் செய்த பல அற்புதங்கள் ஓய்வு நாளில் செய்யப்பட்டவை தான்.
| MIRACLE | SCRIPTURE REFERENCE | |
|---|---|---|
| 1 | Healing the man with a withered hand | Matthew 12:9–13; Mark 3:1–6; Luke 6:6–11 |
| 2 | Healing the crippled woman bent over for 18 years | Luke 13:10–17 |
| 3 | Healing the man with dropsy | Luke 14:1–6 |
| 4 | Healing the paralytic at the Pool of Bethesda | John 5:1–18 |
| 5 | Healing the man born blind | John 9:1–16 |
நியாயபிரமாணத்தில் = திருச்சட்டத்தில் ஆசாரியனுக்கு உள்ள விதிவிலக்கு
வாசிப்போம்
மத்தேயு 5: 17
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்: அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்: அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
ரோமர் 10: 4
கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு
கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு
கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
இந்த வசனங்கள், எவ்வாறு நம் ஆண்டவருக்கு பொருந்துகிறது?
வாசிப்போம்
மத்தேயு 12: 5
மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் = ஆசாரியர்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?
மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் = ஆசாரியர்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?
மத்தேயு 12: 8
மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
ஆம். நம் ஆண்டவர் "ஒரு பிரதான ஆசாரியர்"மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
அதனால், ஓய்வு நாள் விலக்கு தனக்கு உண்டு என்று இவ்வார்தைகள் மூலம் பரிசேயருக்கும், இப்போது நமக்கும் தெளிவு படுத்துகிறார்.
13. எந்த வகையிலும் பாவம் செய்யாத, நியாயப் பிரமாணத்தை மீறாத நம் ஆண்டவர் எப்படி மரித்தார்?
நாம் இதுவரை அறிந்து கொண்ட இறை வார்த்தைகள் மூலம், நம் ஆண்டவர் எந்த பாவமும் செய்யவில்லை என்றும்,
நியாயப் பிரமாணத்தையும் மீறவில்லை என்றிருக்கும் போது,
ஆதாம் மூலம் வந்த பாவ மரபணு இல்லாமல்,
பிறக்கும் போதே கடவுளின் பரிசுத்த சக்தியால் உருவாக்கப்பட்டிருந்தும்,
எவ்வாறு சிலுவையில் மரித்தார்?
வாசிப்போம்
2 கொரிந்தியர் 5: 21
நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
நாம் அவருக்குள் கடவுளின் நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
ஆம். நம் பரமதந்தை - ஆதாம் மூலமாக வந்த பாவத்தினாலும், பாவத்தினால் வந்த மரணத்தினாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் மனுக்குலத்தை மரணத்தில் இருந்து விடுவிக்க,
நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
நாம் அவருக்குள் கடவுளின் நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
பாவமறியாத தம் ஒரே திருமகனாரை பாவமாக்கினார். வாசிப்போம்
யோவான் 1: 29
இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
14. இயேசு கிறிஸ்துவுக்கு சுயாதீனம் கொடுக்கப்பட்டிருந்ததா?
மனுக்குலத்தை மீட்க, சிலுவை மரணத்தை ஏற்கும் முன்,
நம் ஆண்டவருக்கு சுயாதீனம் கொடுக்கப்பட்டிருந்ததா என்ற கேள்வி எழுகிறது.
பரலோகத்தில் நம் பரமதந்தையும் நம் ஆண்டவரும் பேசிக் கொள்ளும் இந்த உரையாடலை கவனிப்போம்.
வாசிப்போம்
ஏசாயா 6: 8
பரமதந்தை: யாரை நான் அனுப்புவேன்? நமது காரியமாக யார் போவார்கள்?
இயேசு கிறிஸ்து: அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்.
பரமதந்தை: யாரை நான் அனுப்புவேன்? நமது காரியமாக யார் போவார்கள்?
இயேசு கிறிஸ்து: அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்.
இவ்வசனம், நம் ஆண்டவர் மனுகுலத்தை மீட்பதற்கு, நம் கடவுளாம் பரமதந்தையிடம் கொடுத்த ஒப்புதலை கூறுகிறது.
வாசிப்போம்
சங்கீதம் 40: 6-8, எபிரேயர் 10: 7-9
7 இதோ வருகின்றேன்: என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது:
8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்: உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான்.

கடவுளாம் பரமதந்தையிடம் நம் ஆண்டவர் சுயாதீனத்தோடு தந்த இந்த ஒப்புதலால் தான், நாம் அவரோடும் கடவுளோடும் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம்.
வாசிப்போம்
எபிரேயர் 10: 10
இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த ஒப்புதலின் படி, தந்தையாம் கடவுள் நம்மை மரணத்தில் இருந்து மீட்பதற்காக, தம் ஒரே மகனை சிலுவையில் நொறுக்க சித்தம் கொண்டார்.
வாசிப்போம்
ஏசாயா 53: 10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்;
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்;
15. உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்...
ஆதாம் - ஏதேனில் இருக்கும் வரை கடவுளோடும் நம் ஆண்டவரோடும் நேரடி தொடர்பில் இருந்து, உரையாடி கொண்டிருந்தார்.
ஆனால், அவருடைய கீழ்ப்படியாமையால் ஏதேனை விட்டு வெளியே அனுப்பப்பட்ட பின், அந்த நெருங்கிய தொடர்பை ஆதாம் இழந்தார்.
ஆதே போல, நம் ஆண்டவர் மேல் ஒட்டு மொத்த மனுக்குலத்தின் பாவமும் சுமத்தப்பட்டு சிலுவையில் தொங்கிய போது,
இறைவா! இறைவா!! என் என்னை கை விட்டீர் என்று கதறியபோது,
ஏன் தந்தையாம் பரமதந்தை அவருக்கு உதவவில்லை?
வாசிப்போம்
யோவான் 9: 31
பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை.
சிலுவையில் இருந்த நம் ஆண்டவரை - கடவுள் பாவியாகவே பார்த்தார். கருதினார்.பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை.
அதனால் தான், நம் ஆண்டவர் சிலுவையில் கதறி கூப்பிட்ட போது, பரமதந்தை செவி சாய்க்கவில்லை.
அதுவரை அப்பா - மகன் என்கிற நெருங்கிய உறவில் இருந்த நம் ஆண்டவர், இந்த பிரிவு வேதனைக்குள்ளாக்கியது.
இந்த நிலையை குறித்து தான், நம் ஆண்டவர்
லூக்கா 22: 42, மத்தேயு 26: 39
தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.
தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார்.
16. கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டோம்
ரோமர் 6: 4,5
4 இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.
5 அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.

சத்தியத்தில் உடன் பயணிக்கும் தங்களை கடவுளாம் பரமதந்தையும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஆசீர் அளிப்பார்களாக.
ஆமென்.

Comments
Post a Comment