THE DISOBEDIENCE OF THE MAN OF GOD | இறையடியாரின் கீழ்ப்படியாமை - 1 KINGS Ch. 12,13

THE DISOBEDIENCE OF THE MAN OF GOD

THE DISOBEDIENCE OF THE MAN OF GOD



1. சூழ்நிலைகள்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
இந்த பாடத்தில், பழைய ஏற்பாடு காலத்தில், எரோபவாம் இஸ்ரேலின் அரசராக இருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், அதன் பொருள் மூலமாக, இக்காலத்தில் கிறிஸ்துவின் சரீரமாக அழைக்கப்பட்டிருக்கும் நமக்கு கடவுள் தரும் எச்சரிப்பையும் அறிய போகிறோம்.
நீதித்தலைவர்களும் (நியாயாதிபதிகள்) அரசர்களும்:
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு நாடு திரும்பி நாட்டை 12 பிரிவுகளாக பங்கிட்ட பின்பு, கடவுள், நியாயாதிபதிகள் (நீதித் தலைவர்கள்) மூலமாக இஸ்ரேல் மக்களை நியாயம் விசாரித்தார்.
முதல் நியாயாதிபதி - யோசுவா
கடைசி நியாயாதிபதி - சாமுயேல்
இந்த நியாயாதிபதிகள் காலத்தில், மக்கள் அவரவர் பார்வையில் சரி என பட்டதை செய்து வந்தனர் என்று வாசிக்கிறோம்.
நியாயாதிபதிகள் 21: 25
அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சரி எனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.
பின்பு மக்கள் தங்களுக்கும் பிற நாடுகளைப் போல அரசர் வேண்டுமென கேட்டதால், கடவுளும் அவர்களுக்கு பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த சவுலை அரசராக ஏற்படுத்தினார்.
இஸ்ரயேலின்,
முதல் அரசர் - சவுல் - 1050BC to 1010BC (40 ஆண்டுகள்)

இரண்டாவது அரசர் - தாவீது - 1010BC to 970BC (40 ஆண்டுகள்)

மூன்றாவது அரசர் - சாலமன் - 970BC to 930BC (40 ஆண்டுகள்)
அரசர் சாலமனின் அரசாட்சிக்கு பின்பு, இஸ்ரேல் நாடு - இரண்டாகப் பிரிந்தது.
பத்து கோத்திரங்கள் சேர்ந்து இஸ்ரயேல் (தலைநகர் = சமாரியா) என்றும்

யூதா பெஞ்சமின் ஆகிய இரண்டு கோத்திரங்கள் யூதேயா (தலைநகர் = எருசலேம்) நாடாக பிரிந்தது.

எரோபவாம் - JEROBOAM
10 கோத்திர இஸ்ரயேல் அரசராக, அரசர் சாலமனின் போர்தளபதி எரொபவாம் அரசரானார்.
(931BC TO 910BC)
(1 இராஜாக்கள் 12: 20)
ரெகபெயாம் - REHOBOAM
2 கோத்திர அரசராக, அரசர் சாலமோனின் மகன் ரெகபெயாம் அரசனாக இருந்தார்.
(931BC TO 913BC)
(1 இராஜாக்கள் 12: 17)
2. இரண்டு பொன் கன்று குட்டிகள்

12 கோத்திரத்தார், இரண்டு நாடுகளாக பிரிந்தாலும், சாலமன் கட்டிய கடவுளின் கோயில் ஜெருசலேமில் இருந்ததால், பத்து கோத்திரத்து மக்கள் பலி செலுத்த எருசலேம் செல்ல வேண்டியதாக இருந்தது.
தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள், ஜெருசலேம் செல்வது இஸ்ரயேலின் அரசனாக இருந்த எரோபவாமுக்கு பிடிக்கவில்லை.
அதனால், மக்கள் ஜெருசலேமின் கோயிலுக்கு செல்லாதவாறு, தந்திரமான ஒரு காரியம் செய்தார்.
அவர் இரண்டு பொன் கன்று குட்டிகளை செய்து, ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றை தானிலும் நிறுவினார்.
(1 இராஜாக்கள் 12: 29)
மேலும் அங்கு லேவியர் அல்லாத ஈனமானவர்களை ஆசாரியர்களை நியமித்தார்.
1 இராஜாக்கள் 12: 31
அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.

ஜெருசலேமில் 7ஆம் மாதம் 15ஆம் நாள் பண்டிகை கொண்டாட கடவுள் ஏற்படுத்தினார்.

ஆனால் எரோபவாம், 8 ஆம் மாதம், 15 ஆம் நாளில் பண்டிகை கொண்டாடுமாறு ஏற்படுத்தினார்.

ஜெருசலேம் ஆலயத்தில் பலி செலுத்துவது போல, பெத்தேல், தாணிலும் பலியிட மேடைகளை கட்டினார் என்று வாசிக்கிறோம்.
(1 இராஜாக்கள் 12: 32,33)
3. இறையடியாரும் மரத்து போன எரோபவாமின் கையும்
இவ்வாறு எரோபவாம் கடவுளின் நியமங்களுக்கு எதிராக செய்து வருகையில்,
யூதேயா நாட்டில் உள்ள ஒரு மனிதனுக்கு கடவுளின் வார்த்தைகள் அருளப்பட்டு, பெத்தேலில் எரோபவாம் ஏற்படுத்திய பலி பீடத்துக்கு அனுப்பப் பட்டார்.
(1 இராஜாக்கள் 13:1)
அவரது பெயர் பைபிளில் கொடுக்கப்படவில்லை.
"இறையடியார் = கடவுளின் மனிதன்" என்றே கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல, லோத்தின் மனைவி பெயரும் பைபிளில் தரப்படவில்லை.
யோபுவின் மனைவி பெயரும் தரப்படவில்லை.
ஏன்?

இறையடியார், இந்த பலிபீடத்தில், எரோபவாமின் ஈனமான ஆசாரியர்களை, தாவீதின் வம்சத்தில் இருந்து வரும் யோசியாவால் பலி கொடுக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்து,
(1 இராஜாக்கள் 13:2)
அதற்கு அடையாளமாக, இப்போது இந்த பலிபீடம் இரண்டாக பிளக்கப்பட்டு, சாம்பல் வெளியே வரும் என எச்சரித்தார்.
(1 இராஜாக்கள் 13: 3)
கை மரத்து போதல் + பலி பீடம் வெடித்து சிதறல்

இதை கேட்டு, கடும் கோபம் கொண்ட எரோபவாம், கடவுளின் மனிதன் மீது "அவனை பிடியுங்கள்" என்று தன் கைகளை நீட்டி, கட்டளை கொடுக்க அவன் கை திரும்ப எடுக்க முடியாதவாறு மரத்து போனது.
(1 இராஜாக்கள் 13: 4)
அதே சமயம், இறையடியார் கூறியவாறே பலிபீடம் உடைந்து பிளந்து, உள்ளிருந்த சாம்பலும் வெளியே வந்தது.
(1 இராஜாக்கள் 13: 5)
குணமடைந்து உணவுக்கு அழைத்தல்
(1 இராஜாக்கள் 12: 6-7)
இதனால், பயந்து போன எரோபவாம், தனக்காக கடவுளிடம் வேண்டி, மரத்து போன கைகளை சீராக்க வேண்டினார்.
இறையடியார், கடவுளிடம் மன்றாடி, கடவுளும் செவி சாய்த்து, மரத்து போன, கைகளை சீராக்கினார்.
இதனால், மகிழ்ந்து போன எரோபவாம் கடவுளின் மனிதனிடம்,
தன்னுடன் உணவருந்துவதற்கும், பரிசளிப்பதற்கும் அழைக்கிறார்.
1 இராஜாக்கள் 13: 7
அப்பொழுது அரசன் இறையடியாரிடம்,“நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன் “ என்றான்.

ஆனால், இறையடியார் - கடவுள் அவரை அங்கு அனுப்புவதற்கு முன் இட்ட 3 கட்டளைகளை கூறி,
மூன்று கட்டளைகள்
1. செல்லும் இடத்தில் அப்பம் புசிக்க கூடாது.
2. தண்ணீர் குடிக்க கூடாது.
3. சென்ற வழியில் திரும்பாமல், வேறு வழியாக திரும்ப வேண்டும்.
அங்கிருந்து போன வழி அல்லாமல், வேறு வழியில் திரும்பி யூதேயா செல்ல புறப்படுகிறார்.
4. கர்வாலி மரத்தில் உட்கார்ந்த இறையடியார்

பின்பு, பெத்தேலில் உள்ள ஒரு கிழட்டு தீர்க்கதரிசிக்கு, இறையடியார் வந்தது பற்றியும், எரோபவாமுக்கு நடந்ததையும் பலிபீடம் வெடித்தது பற்றியும் அவரது மகன்களால் தெரிவிக்கப்பட்டது.
1 இராஜாக்கள் 13: 11-12
அந்த கிழட்டு தீர்க்கதரிசி, இறையடியார் சென்ற வழியை கேட்டறிந்து, அவரை சந்திப்பதற்காக தனது கழுதையில் சென்று, இறையடியார் ஒரு கர்வாலி மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறதை கண்டார்.
1 இராஜாக்கள் 13: 13,14
இறையடியாரிடம் சென்ற கிழட்டு தீர்க்கதரிசி, தன்னுடைய வீட்டுக்கு வந்து உணவருந்துமாறு அழைக்க, மீண்டும் கடவுளின் கட்டளை நினைவில் கொண்டு வர மறுத்தார்.
1 இராஜாக்கள் 13: 15-16-17
ஆனால், கிழட்டு தீர்க்கதரிசி,
1 இராஜாக்கள் 13: 18,19
அதற்கு கிழட்டு தீர்க்கதரிசி, “உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். 'உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார் “ என்றார்.
ஆனால் அவர் சொன்னதோ பொய்.
அவர் சொன்ன பொய்யை, உண்மை என்று நம்பிய இறையடியார், கிழட்டு தீர்க்கதரிசியுடன் சென்று அவரது வீட்டில் உணவருந்தி தண்ணீரும் குடித்தார்.
கிழட்டு தீர்க்கதரிசி கூறிய கடவுளின் வார்த்தை

டேபிளில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, கடவுளின் வார்த்தை கிழட்டு தீர்க்கதரிசிக்கு உண்டாகி
1 இராஜாக்கள் 13: 21,22
21 அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில்,“ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்: உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை.
22 நீ உணவு அருந்தவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டிருக்க, நீ அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து உணவு அருந்தித் தண்ணீர் குடித்ததால், உனது சடலம் உன் மூதாதையரின் கல்லறையில் வைக்கப்படமாட்டாது “
என்று கூறினார்.
5. இறையடியார் சிங்கத்தால் கொல்லப்படுதல்

உணவருந்திய பின், தன் கழுதையில் ஏறி திரும்பி செல்லும் வழியில், ஒரு சிங்கம் எதிர்கொண்டு வந்து, இறையடியாரை கொன்று போட்டு, அவரது உடல் சாலையில் விடப்பட்டது.
இதை கேள்வியுற்ற கிழட்டு தீர்க்கதரிசி, கடவுளின் கட்டளையை அவர் மீறியதினால், சிங்கம் அவரை கொன்று போட்டது என்று கூறி, தனது கழுதையில் சென்று, இறையடியார் சாலையில் இறந்து கிடந்த இடத்திற்கு சென்ற போது
1 இராஜாக்கள் 13: 28
அவர் புறப்பட்டுச்சென்று வழியில் அந்த இறையடியாரின் சடலம் கிடப்பதையும் அதனருகில் கழுதை, அந்தச் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சடலத்தைத் தின்னவுமில்லை: கழுதையைப் பீறிப் போடவுமில்லை.
இது நம்மை யோசிக்க வைக்கிறது!
ஏன் சிங்கம் சடலத்தை தின்னவில்லை?
ஏன் அருகிலிருந்த கழுதையை பீறிப் போடவில்லை?
பின் வரும் பொருளில் அறிய போகிறோம். 🙂
6. இறையடியாரின் உடலை கிழட்டு தீர்க்கதரிசி அடக்கம் செய்தல்
அதன் பின், அந்த உடலை கிழட்டு தீர்க்கதரிசி எடுத்து தனது சொந்த கல்லறையில் அடக்கம் செய்து, தனது மகன்களிடம் கூறியதாவது,
1 இராஜாக்கள் 13: 31
அவர் அவரை அடக்கம் செய்தபின் தம் மைந்தரை நோக்கி,“நான் இறந்த பின் இறையடியாராகிய இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள்.
ஏன் இறையடியாரின் எலும்புகளோடு தனது எலும்புகளையும் வைக்க சொன்னார்? 👇🏿
1 இராஜாக்கள் 13: 32
பெத்தேலில் இருக்கும் பலிபீடத்தையும் சமாரியாவின் நகர்களிலிருக்கும் எல்லாத் தொழுகை மேட்டுக் கோவில்களைப் பற்றியும் அவர் கூறிய ஆண்டவரின் வாக்கு திண்ணமாக நிறைவேறும் “ என்றார்.
ஆம். இறையடியார் கூறியபடியே, எரோபவாம் ஆண்ட 930BC to 910BC காலப்பகுதியில் நடந்த இந்த சம்பவம்,

300 ஆண்டுகளுக்கு பின்பு அனைத்து தொழுகை மேட்டுக் கோவில்களை, யூதேயா அரசர் யோசியா (640BC to 609BC = 31 YEARS) அனைத்தையும் ஒழித்துப் போட்டார்.
இது நிழலாக நடந்த ஒரு சம்பவம். கடைசி காலங்களில் வாழும் நமக்கு இதன் மூலம் அறியப்படும் எச்சரிக்கை / பொருள் என்ன? 🙂
வாருங்கள் அறிவோம்.
7. நிழலும் பொருளும்
எரோபவாம்


பழைய ஏற்பாட்டில் நடந்த இந்த சம்பவத்தை நாம், நிழலும் பொருளும் அடிப்படையில் அறிந்து கொள்ள போகிறோம்.
வாசிப்போம்
1 கொரிந்தியர் 10: 11
அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.
ரோமர் 15: 4
முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன.

ஜெருசலேம்: எரோபவாம் யாரை அடையாளப்படுத்துவார்?
10 கோத்திரத்தின் அரசனான எரோபவாம், முன்பு அரசர் சாலமனின் போர்த் தளபதியாக இருந்தவர்.

பின்பு, அவரது எஜமானனுக்கு எதிராக கலகம் செய்து, பிரதானமான 10 கோத்திரத்துக்கு இராஜாவானான்.
1 நாளாகமம் 13: 6
நெபாற்றின் மகனும் தாவீதின் மகன் சாலமோனின் அலுவலனுமான எரொபவாம் தன் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்:

அரசர் சாலமோன் = நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறார்.
பிசாசும், கடவுளின் பிரதான தூதர்களில் ஒருவனாக இருந்தவன்.

பின்பு, தன் எஜமானாராகிய நம் ஆண்டவருக்கு எதிராக கலகம் செய்து,உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று தன்னை கடவுளுக்கு நிகராக எண்ணி கொண்டான் என்று வாசிக்கிறோம்.
ஏசாயா 14: 12,13,14
12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே,
13'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்: இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்: வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.
14 மேகத்திரள்மேல் ஏறி, உன்னதமானவருக்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே!
அதிகாலை என்பது நம் ஆண்டவரை குறிக்கும்.
அதிகாலையின் மகன் என்று இங்கு பிசாசை குறித்து பேசப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
எவ்வாறு உயர்த்தி விட்ட சாலமோன் அரசருக்கு விரோதமாக கலகம் செய்து பெரும் திரளான நாட்டை தன் வசம் எரோபவாம் ஆக்கி கொண்டானோ,

அது போல, பிசாசும் தன்னை உண்டாக்கிய நம் ஆண்டவருக்கு எதிராகவும், அவரை விட உயர்ந்தவராகவும் காட்டி கொள்ள, உலகத்தின் பெரும் திரளான மக்களை தன் வசம் ஆக்கி கொண்டு,

இவ்வுலகத்தின் அதிபதி = இராஜாவானான்.
ஆம். எரோபவாம் = பிசாசுக்கு அடையாளமாக இருக்கிறார்.

எப்படி இயேசு + கிறிஸ்து என்பது தலை ஆகிய நம் ஆண்டவரையும், சரீரமாக இணையப்போகும் திருச்சபையாரையும் குறிக்குமோ, அதுபோல

பிசாசு என்பது சாத்தானை மட்டும் அல்ல, அவனை தலையாக கொண்டுள்ள நிறுவனமயமாக்கப்பட்ட மத அமைப்புகளையும், அதில் அங்கமாக இருந்து செயல்படும் தசமபாகம், காணிக்கைகளுக்காக (அட்)ஊழியம் செய்து வரும் டுபாக்கூர் பாஸ்டர்களையும் குறிக்கும்.
8. இரண்டு பொன் கன்று குட்டிகள்

ஜெருசலேம்:
இறையடியார் ஜெருசலேம் நகரில் இருந்து பெத்தேலில் இருந்த எரோபவாமிடம் அனுப்பப்பட்டார்.

ஜெருசலேம் எதை குறிக்கும்?
வாசிப்போம்
சகரியா 8: 3
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம். ஜெருசலேம் = சத்தியத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

உண்மையான கடவுளின் திருக்கோவில் ஜெருசலேமில் இருந்தாலும், மக்கள் அங்கு செல்லக்கூடாது என்று இரண்டு பொன் குட்டிகள் பெத்தேடிலும் தானிலும் அமைக்கப்பட்டது.
கடவுளின் திருக்கோவில், சத்திய நகரத்தில் = ஜெருசலேமில் இருக்கையில், மக்கள் உண்மை கடவுளாம் நம் பரம தந்தையாம் யா - வே வை அறிந்து கொள்ளக்கூடாது என்று பிசாசு இரண்டு பெண் கன்று குட்டி போல இருக்கும் இரு பெரும் கிறிஸ்தவ மத நிறுவனங்களை உண்டாக்கி வைத்துள்ளான்.
உண்மையான கடவுளை அறிந்து கொள்ள விளையும் மக்களை, பொன் கன்று குட்டிகள் மூலமாகவும் பொய்யான மதப் பண்டிகைகள் மூலம் எரோபவாம் திசை திருப்பியது போல,

பிசாசும் மக்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள கூடாது என்று, பொய்யான மத நம்பிக்கைகளையும், பைபிளில் கூறப்படாத ஈஸ்டர், கிறிஸ்துமஸ் பண்டிகைகளும், கூறப்படாத நாளில் GOOD FRIDAY, MONTY THURDAY போன்ற நினைவு கூறுதல்களையும்

ஒவ்வொரு இறந்து போன POPE ஆண்டவர்களுக்கும் புனிதர் பட்டங்கள் கொடுத்து அவர்களுக்கு FEAST கொண்டாடுவது போன்ற பைபிளில் கூறப்படாத விழாக்களையும், விசேஷ நாட்களையும் ஏற்படுத்தி மக்களை திசை திருப்பி வருகிறான்.
அந்த இரண்டு பொன் கன்று குட்டிகள்

1. கத்தோலிக்க திருச்சபையும்
2. ப்ராட்டஸ்டண்ட் அமைப்புகள்
இந்த சபைகளுக்கும், பிற நிறுவனமயமாக்கப்பட்ட சபைகளும், விசுவாசிகளை சுதந்திரமாக சுயமாக சிந்திக்க விடாமல், அங்கு செல்லும் மக்களை தெளிவான சிந்தனை இல்லாமல், குழப்பி, பொய்யான கோட்பாடுகளையும், பொய்யான மத வழிபாடுகள் மூலமாக, பொய்யான பண்டிகைகள் மூலம் சத்தியத்தை அறிய விடாமல் பிசாசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறான்.
9. ஈனமான ஆசாரியர்கள்
வாசிப்போம்
எபிரேயர் 5: 4
யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்.
கடவுள், லேவி கோத்திரத்தில் வந்த கேர்சோன், மெராரி, கோகாத்து என்பவர்களில் கோகாத்து குடும்பத்தில் வந்த ஆரோனின் வம்சத்தில் வருபவர்களே, பிரதான ஆசாரியர் ஆக முடியும்.
ஏனென்றால், அது மிகவும் மதிப்புக்குரிய ஒரு பொறுப்பாக இருந்தது.
அனைவராலும் ஆசாரியர் ஆக முடியாது.
urim thumim

இந்த கேர்சோன், மெராரி, கோகாத்து என்பவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மற்றும் உண்மை உள்ளவர்களுக்கு அடையாளமாக இருக்கிறார்கள்.
இத்தனை மேன்மை உள்ள ஆசாரியர் பொறுப்பை, எரோபவாம் - ஆரோனும் அல்லாத, கோகாத்தும் அல்லாத, லேவியரும் அல்லாத ஈனமானவர்களுக்கு கொடுத்தான். அதாவது, பணத்துக்காக வேலை செய்பவர்களுக்கு.

பொருளில், இதே போல தான், பிசாசின் இன்றைய நிறுவனமயமாக்கபட்ட கிறிஸ்தவ சபைகளில் காணிக்கைகாகவும், தசமபாகத்திற்காகவும், மாத சம்பளத்திற்காகவும், பெயருக்காகவும், பெருமைக்காகவும் ஆசாரியர்கள் போல நடித்து வரும் பாதிரிமார்கள், ஐயர்வால்கள், டுபாக்கூர் பாஸ்டர்கள் இருக்கின்றார்கள்.
2 பேதுரு 2: 1,3
1 முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர்.
அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள்.
அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்:
தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்:
விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள்.
3 பேராசை கொண்ட அவர்கள் கட்டுக் கதைகளைச் சொல்லி உங்கள் பணத்தைச் சுரண்டுவர்.
பழங்காலத்திலிருந்தே அவர்களுக்குத் தண்டனை தயாராய் உள்ளது.
அழிவு அவர்களுக்காக விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

நமக்கான அறிவுரை
1 தீமோத்தேயு 6:11
10 பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்.
11 கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு.

10. இறையடியார்
இறையடியார் தைரியமாக அரசரிடமே சென்று, நேரடியாக அவரது தவறை கூறினார்.
அந்த இறையடியார் = கடவுளின் மனிதன் - சத்தியத்தை தைரியமாக கூற அழைக்கப்பட்டிருக்கும் நாம் தான்.
1 தீமோத்தேயு 6: 11,12
11 கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு.
12 விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக் கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்.
1 தீமோத்தேயு 3: 16,17
11 மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.
12 இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
கடவுளின் மனிதன், வேத வாக்கியங்களை ஆராய்ந்து அறிந்து, அதை பிறருக்கு கற்பிப்பதற்கு தேரினவர்கள்.
எரோபவாம் கை மரத்து போனது
எவ்வாறு எரோபவாமின் கைகள் கடவுளின் மனிதனை துன்பப்படுத்த முடியாதவாறு மரத்துப்போனதோ, சத்தியத்தை நாம் கூற விளையும் போது எந்த துன்பமும் நம்மை அணுகாது.

ஏனென்றால், சத்தியத்தை அறிவிக்கும் இறையடியார்கள் கடவுளாம் பரம தந்தையின் கண்ணின் இமையைப் போன்றவர்கள்.
சகரியா 2: 7,8
7 பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
8 பிற்பாடு மகிமையுண்டாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.
பாபிலோன் என்பது கத்தோலிக்க சபையையும்,
பாபிலோன் குமாரத்தி என்பது பிராட்டஸ்டன்ட் மற்றும் இதர சபைகளை குறிக்கும்.

இந்த சபைகளில் உள்ளவர்கள், சுதந்திரமாகவும் சுயமாகவும் சிந்திக்க தங்களை விடுவித்துக் கொண்ட பிறகு தான் மகிமை உண்டாகும்.நாமும் கடவுளின் கண்மணியாக இருப்போம் என்று இவ்வசனம் நமக்கு உறுதிபடுத்துகிறது.
ரோமர் 8:31
கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?
நமது பணி, கடவுள் தரும் பலத்தால் தைரியமாக சத்தியத்தை அறிவிப்பதே.
எந்த தீங்கும் நம்மை அணுகாது.
11. மூன்று கட்டளைகள்
பெத்தேலுக்கு கடவுள் இறையடியாரை மூன்று கட்டளைகளுடன் அனுப்பினார்.
1. போன வழியில் திரும்ப கூடாது.
2. சென்ற இடத்தில் உணவு எதுவும் உண்ண கூடாது.
3. சென்ற இடத்தில் தண்ணீர் குடிக்க கூடாது.
கடவுளின் மனிதனாக, இதே கட்டளைகள் தான் சத்தியத்தை அறிவிக்கும் பணிக்கு அர்ப்பணித்திருக்கும் நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
போன வழியில் திரும்ப கூடாது:
நாம் சத்தியத்தை நன்கு அறிந்த பின்பு, நமது விசுவாச பயணத்தில் நாம் பின்னிட்டு பார்க்க கூடாது என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது.

நாம் மீண்டும் பழைய தவறான விசுவாசங்களின் அடிப்படையில் தொடர்ந்தால், மீண்டும் நாம் திருச்சபை அழைப்பிற்குள் வருவது இயலாது.
உணவு + தண்ணீர் குடிக்க கூடாது
பைபிளில், நாம் அறிந்திருக்கிற படி, ஆகாரம் = உணவு என்பது கடவுளின் வார்த்தைகளை குறிக்கும்.
சத்தியத்தை அறிவிக்கும் நமது பயணத்தில், பழைய உபதேசங்களையும், போதனைகளையும் தவிர்க்க வேண்டும்.

இறை வார்த்தைகளுக்கு சத்தியத்தின் அடிப்படையிலேயே விளக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
12. கர்வாலி மரமும் கிழட்டு தீர்க்கதரிசியும்

இறையடியார் என்ன தான் தைரியமாக அரசர் எரோபவாமை நேரிலேயே அவரது தவறுகளைச் சுட்டி காட்டி அதிசயத்தை நிகழ்த்தி இருந்தாலும்,

அரசர் எரோபவாம் தன்னுடன் உணவருந்த அழைத்த போது, தவிர்த்த இறையடியார்,

வேறு வழிப் திரும்பி சென்றிருந்தாலும்,
வழியில் உடல் சோர்வின் காரணமாக ஒரு கர்வாலி மரத்தடியில் உட்கார்ந்தார்.
கர்வாலி மரம் எதை குறிக்கும்?
ஏசாயா 1: 29
நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
ஆம். கர்வாலி மரம் என்பது உலக ஆசைகளையும், கவலைகளையும் அடையாளப்படுத்துகிறது.

இறையடியார் போல நாமும் நமது விசுவாச பயணத்தில், கர்வாலி மரத்தடியில் - அதாவது, உலக ஆசைகளிலும் கவலைகளிலும் சிக்கி கொண்டால்,

கிழட்டு தீர்க்கதரிசிகள் = உலகத்தின் கள்ள தீர்க்கதரிசிகள் தங்கள் நயவஞ்சக பேச்சுடன் நமது கவலைகளுக்கு தீர்வு தருவதாக
🎼 உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்... என்று பாட்டு பாடி கொண்டே வருவார்கள்.
அவர்களும் அன்பான முகத்தோடு பைபிள் வசனத்தை தானே போதிக்கிறார்கள் என்று நம்பி மீண்டும் அவர்களது டேபிளில் உட்கார்ந்து, அவர்களது போதனைகளை கேட்டால்,

எவ்வாறு கிழட்டு தீர்க்கதரிசி வாயாலேயே, இறையடியார் எச்சாிப்பு பெற்றாரோ, அதே போல நமக்கும் அவர்கள் மூலமாக, நாம் அறிந்த சத்தியத்தின் எச்சரிப்பு பெறுவோம்.
என்ன எச்சரிப்பு?
எபிரேயர் 6: 4,5,6
4 ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
5 கடவுளின் நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
6 மறுதலித்துப்போனவர்கள், இறைமகனாரை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
😕
13. சிங்கத்தின் தண்டனையும் அருகில் நின்ற கழுதையும்

கிழட்டு தீர்க்கதரிசியின் வீட்டில் உணவருந்திய போது பெற்ற எச்சரிப்பை தொடர்ந்து, இறையடியார் செல்லும் வழியில் சிங்கம் அவரை கொன்று போட்டது. ஆனால், அவர் ஏறி சென்ற கழுதையை சிங்கம் ஒன்றும் செய்ய வில்லை.
சிங்கம் என்பது கடவுளின் நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்தும்.
கழுதை என்பது சத்தியத்தை அடையாளப்படுத்தும்.
பொருளில்,
நாம், நமது விசுவாச ஓட்டத்தில் சத்தியத்தை விட்டு விலகினாலோ, அஜாக்கிரதையாக இருந்தாலோ, கடவுளின் நியாத்தீர்ப்பு பெறுவோம்.
அதாவது, நித்திய ஜீவன் பெற்று திருச்சபை வாய்ப்பை இழப்போம்.
ஆனால், கழுதையை சிங்கம் ஒன்றும் செய்யாதது போல, சத்தியம் என்றும் மாறாமல் இருக்கும்.
14. நீங்கள் வணங்கும் பொற்சிலை யார்?

எவ்வாறு அரசர் எரோபவாம் இரண்டு பொன் கன்று குட்டிகளை தனது நாட்டில் நிறுவி எருசலேமுக்கு செல்ல விடாமல் மக்களை வஞ்சித்தாரோ,

பாபிலோன் அரசர் நெபுகாத்நேச்சார், அவரை விட ஒரு படி மேலே சென்று, தனக்கே ஒரு மிகப்பெரிய பொன் சிலை செய்து மக்களை பணிந்திட செய்தார்.
(தானியேல் 3 ஆம் அதிகாரம்) என்று வாசிக்கிறோம்.
அரசரின் ஆணையை எதிர்த்து நின்ற தானியேலும் அவர்களும் நண்பர்களுக்கு நடந்தவை பற்றியும் அறிவோம்.
அது போலவே, இன்றும் பலர் தங்களை பொற் சிலையாக காட்டிக் கொள்கிறார்கள்.
1 யோவான் 4: 1,2,3
1 அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்: அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்: ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர்.
2 இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள்.
3 இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.

மத்தேயு 7: 15,16
15 போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.
16 அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள்.
நாம் பகுத்தறிவோடு, ஆள் பார்த்து செயல்படாமல், யாரையும் பொற் சிலையாக பார்க்காமல், இறைவார்த்தைகளுக்கு மட்டும் கீழ்படிகிறவர்களாய் 🙏 இருப்போம்.
நம் கடவுளாம் பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.

Comments

  1. Different insight in this old testament incident. Hallelujah

    ReplyDelete

Post a Comment