UNDERSTANDING SCRIPTURE - THE SEVEN METHODS - 4 of 7 (UNDERSTANDING SYMBOLIC LANGUAGE and NUMBERS)
1. அடையாளங்களும் எண்களும் கூறும் கடவுளின் திட்டம்
அன்புடையீர், வணக்கங்கள். 🙂
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
நாம் முந்தைய பாடத்தில், பைபிளில் உள்ள இறைவாக்குகளை (தீர்க்கதரிசனங்களை) புரிந்து கொள்வதை பற்றி முன்னோட்டமாக கடல் வனாந்தரத்தின் பாரம் = ஒழுங்கற்ற மக்களை தள்ளி விடுவேன் (தண்டிப்பேன்) - ஏசாயா 21:1 என்ற தீர்க்கதரிசன வார்த்தையை புரிந்து கொண்டோம்.
இந்த பாடத்தில், பைபிளில் நமது கடவுள் தமது திட்டத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும், விலங்குகள், பறவைகள், உலோகங்கள், உயிரற்ற பிற பொருட்கள், எண்களையும் குறித்து அறிவோம்.
இவற்றை அறிந்திருப்பதன் மூலம், பின் வரும் பாடங்களை புரிந்து கொள்வதற்கும், இறைவார்த்தைகளுக்குள் மறைந்திருக்கும் ஆச்சரியமான கடவுளின் திட்டத்தை திண்ணமாக புரிந்து கொள்ளவும் முடியும்.
2. விலங்குகள் மற்றும் பறவைகள்
சிங்கம்:
திருவெளிப்பாடு 5:5 - மூப்பருள் ஒருவர் என்னிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்:
ஆட்டுக்குட்டி:
யோவான் 1:29 - இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
ஆடுகள்:
யோவான் 10:27 - என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.
காளை:
யாத்திராகமம் 29:10,11 - சந்திப்புக் கூடாரத்தின் முன் காளையைக் கொண்டு வருவாய்.
அக்காளையைச சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.
அக்காளையைச சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.
பாம்பு:
ஆதியாகமம் 3:1 - ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது.
வெண்கல பாம்பு:
யோவான் 3:14 - பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
காகம்:
1 இராஜாக்கள் 17:6 - காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன.
புறா:
பரிசுத்த ஆவி / கடவுளின் சக்தி
லூக்கா 3:22 - தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது.
கழுதை, குதிரை, ஒட்டகம்:
மத்தேயு 21:5 - கழுதையின் மேல் ஏறி வருகிறார்.
நாய்
பிலிப்பியர் 3:2 - அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்: அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்.
3. உயிரற்ற பொருட்கள்
மலை:
திருவெளிப்பாடு 17: 9
இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவைப்படுகிறது: அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்: ஏழு அரசர்களையும் குறிக்கும்.
இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவைப்படுகிறது: அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்: ஏழு அரசர்களையும் குறிக்கும்.
தானியேல் 2: 35,36,44
35 ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.
36 அரசரே! இதுவே நீர் கண்ட கனவு: அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம்.
45 மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையுயம் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது.

கடல் / நீர்த்திறள்:
திருவெளிப்பாடு 17: 15
15 வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: “அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.
15 வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: “அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.
தண்ணீர்:
எபேசியர் 5: 26
கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால் சபையைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக அவர் அப்படிச் செய்தார்.
கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால் சபையைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக அவர் அப்படிச் செய்தார்.
எண்ணெய்:
1 சாமுயேல் 16: 13
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகேதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

மரம்:
மாற்கு 8: 24
அந்த மனிதன் நிமிர்ந்து பார்த்து, “ஆட்கள் நடமாடுவது தெரிகிறது; ஆனால், அவர்கள் மரங்களைப் போல் தெரிகிறார்கள்” என்று சொன்னான்.
அந்த மனிதன் நிமிர்ந்து பார்த்து, “ஆட்கள் நடமாடுவது தெரிகிறது; ஆனால், அவர்கள் மரங்களைப் போல் தெரிகிறார்கள்” என்று சொன்னான்.
தானியேல் 4: 20,22
20 நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய் வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்திருந்தது.
22 அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல: மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம்.
சங்கீதம் 1:322 அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல: மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம்.
மத்தேயு 3:10
வாசல்:
யோவான் 10:9
இயேசு: நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்: வெளியே வருவர்: மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.
இயேசு: நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்: வெளியே வருவர்: மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.
ஒளி:
யோவான் 8:12
இயேசு மறுபடியுமாக மக்களிடம், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்.
இயேசு மறுபடியுமாக மக்களிடம், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்.
நட்சத்திரம்:
தானியேல் 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
விடிவெள்ளி நட்சத்திரம்:
ஏசாயா 14:12
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
சூரியன்:
மல்கியா 4:2
நீங்கள் என்னுடைய பெயரை மகிமைப்படுத்துவதால், உங்கள்மேல் நீதியின் சூரியன் பிரகாசிக்கும். அதன் கதிர்கள் உங்களைக் குணமாக்கும்.
நீங்கள் என்னுடைய பெயரை மகிமைப்படுத்துவதால், உங்கள்மேல் நீதியின் சூரியன் பிரகாசிக்கும். அதன் கதிர்கள் உங்களைக் குணமாக்கும்.
4. உலோகங்கள்
தங்கம்
யாத்திராகமம் 25:10
பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தில் இருக்கும் பரிசுத்த ஸ்தலம் மற்றும் மஹா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்படும் பொருட்கள், வெளிப்புறம் தங்கத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.அதுபோல, அரசர் சாலமன் கட்டிய கடவுளின் ஆலயத்திலும் தங்கம் பயன் படுத்தப்பட்டது.
பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.
1 இராஜாக்கள் 6: 21,22
21 ஆலயத்திலுள்ள பரிசுத்த அறையின் உட்சுவர்கள் முழுவதற்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். தங்கத் தகடு அடிக்கப்பட்ட மகா பரிசுத்த அறையின் முன்பகுதியில் தங்கச் சங்கிலிகளை இணைத்துக் கட்டினார்.
22 ஆலயம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார். மகா பரிசுத்த அறைக்கு வெளியே இருந்த தூபபீடம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார்.

வெள்ளி
சங்கீதம் 12: 6
ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை.
ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை.
வெண்கலம்
எண்ணாகமம் 21:9
மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்: பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
இங்கு மரத்தில் பொருத்தப் பட்ட வெண்கலப் பாம்பு, நம் ஆண்டவர் மனிதனாக வந்த போது, மனுகுலத்தின் பாவத்தை சிலுவையில் ஏற்றுக் கொண்டதை அடையாளப் படுத்தும்.
இரும்பு
எரேமியா 28:14
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன்.
5. மனிதர்கள்
சாரா மற்றும் ஆகார்
கலாத்தியர் 4: 22-26
22 ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்,+ இன்னொருவன் சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவன்.
23 அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன் இயல்பான முறையில் பிறந்தான்,+ சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவனோ கடவுளுடைய வாக்குறுதியால் பிறந்தான். இந்தப் பெண்கள் இரண்டு ஒப்பந்தங்களைக் குறிக்கிறார்கள்.
24 அவற்றில் ஒரு ஒப்பந்தம் சீனாய் மலையில்+ செய்யப்பட்டது, இந்த ஒப்பந்தத்துக்கு உட்பட்ட எல்லாரும் அடிமைகளாக இருக்கிறார்கள்; இந்த ஒப்பந்தம் ஆகார் என்பவள்தான்.
25 அரேபியாவில் இருக்கிற சீனாய் மலையை+ ஆகார் குறிக்கிறாள்; இப்போது இருக்கிற எருசலேம் ஆகாருக்கு ஒப்பாக இருக்கிறாள். ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடுகூட அடிமையாக இருக்கிறாள்.
26 ஆனால், மேலான எருசலேம் சுதந்திரமாக இருக்கிறாள், அவள்தான் நமக்குத் தாய்.
இந்த வசனங்கள் மூலம், கடவுள், பைபிளில் பயன்படுத்திய மனிதர்களையும் அவரது திட்டத்தை வெளிப்படுத்த அடையாளங்களாக பயன்படுத்தி உள்ளார் என்பதை அறிகிறோம்.22 ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்,+ இன்னொருவன் சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவன்.
23 அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன் இயல்பான முறையில் பிறந்தான்,+ சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவனோ கடவுளுடைய வாக்குறுதியால் பிறந்தான். இந்தப் பெண்கள் இரண்டு ஒப்பந்தங்களைக் குறிக்கிறார்கள்.
24 அவற்றில் ஒரு ஒப்பந்தம் சீனாய் மலையில்+ செய்யப்பட்டது, இந்த ஒப்பந்தத்துக்கு உட்பட்ட எல்லாரும் அடிமைகளாக இருக்கிறார்கள்; இந்த ஒப்பந்தம் ஆகார் என்பவள்தான்.
25 அரேபியாவில் இருக்கிற சீனாய் மலையை+ ஆகார் குறிக்கிறாள்; இப்போது இருக்கிற எருசலேம் ஆகாருக்கு ஒப்பாக இருக்கிறாள். ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடுகூட அடிமையாக இருக்கிறாள்.
26 ஆனால், மேலான எருசலேம் சுதந்திரமாக இருக்கிறாள், அவள்தான் நமக்குத் தாய்.
ஆதாம்
1 கொரிந்தியர் 15: 47
முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்: அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர்.
முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்: அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர்.
மோசே
அப்போஸ்தலர் 3: 22
மோசேயும், “உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச்செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள்.
மோசேயும், “உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச்செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள்.
எபிரேயர் 3: 2
கடவுளுடைய வீட்டில் மோசே சேவை செய்தபோது அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தது போலவே, இவரும் தன்னை அப்போஸ்தலராகவும் தலைமைக் குருவாகவும் நியமித்த கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
கடவுளுடைய வீட்டில் மோசே சேவை செய்தபோது அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தது போலவே, இவரும் தன்னை அப்போஸ்தலராகவும் தலைமைக் குருவாகவும் நியமித்த கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
6. எண்களில் ஞான அர்த்தங்கள் - NUMBER ONE
பைபிளில் அநேக எண்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் படுவதை நாம் கவனித்திருப்போம்.
இந்த எண்களில் கடவுள் அவரது திட்டத்தை மறைத்து வைத்திருக்கிறார்.
பின் வரும் பாடங்களை புரிந்து கொள்ளும் விதமாக, அவற்றை சுருக்கமாக இங்கு அறிவோம்.
NUMBER ONE
ஒன்று = நம் கடவுளாம் பரம தந்தையை குறிக்கும்.
மாற்கு 12: 29
இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
யோவான் 17: 3
உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.
உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.
1 தீமோத்தேயு 6: 16
அவர் ஒருவரே சாவை அறியாதவர்:
அவர் ஒருவரே சாவை அறியாதவர்:
7. NUMBER TWO
2 = கடவுளின் வார்த்தையை குறிக்கும்
யாத்திராகமம் 31: 18
ஆண்டவர் சீனாய்மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.
ஆண்டவர் சீனாய்மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.
லேவியராகமம் 24: 6
அவற்றை நீ ஆண்டவர் திருமுன் பசும்பொன் மேசையில் அடுக்குக்கு ஆறு வீதம் இரண்டு அடுக்காக வைக்க வேண்டும்.
இங்கு இரண்டு அடுக்குகளாக வைக்கப்படும் ஆறு அப்பங்கள், நமது வேதாகமத்தில் இருக்கும் 66 புத்தகங்களை குறிப்பதாக உள்ளது.
அவற்றை நீ ஆண்டவர் திருமுன் பசும்பொன் மேசையில் அடுக்குக்கு ஆறு வீதம் இரண்டு அடுக்காக வைக்க வேண்டும்.
எண்ணாகமம் 10: 2,3
இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்:
அவை இரண்டும் ஊதப்படும்போது மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சந்திப்புக்கூடார வாயிலில் உன்முன்னே ஒன்றுகூட வேண்டும்.
நாம் ஏற்கனவே உலோகங்கள் பகுதியில் அறிந்தது போல, வெள்ளி என்பது கடவுளின் வார்த்தையை குறிக்கும்.(சங்கீதம் 12: 6)இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்:
அவை இரண்டும் ஊதப்படும்போது மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சந்திப்புக்கூடார வாயிலில் உன்முன்னே ஒன்றுகூட வேண்டும்.
இரண்டு வெள்ளி எக்காளங்கள், பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடுகளை குறிக்கும்.
8. NUMBER THREE
3 - மீட்பு
நமது பைபிளில் பல இடங்களில் 3 என்கிற எண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யாத்திராகமம் 2: 2
மூன்று மாதங்களாக அதனை (குழந்தை மோசே) மறைத்து வைத்திருந்தாள்.
மூன்று மாதங்களாக அதனை (குழந்தை மோசே) மறைத்து வைத்திருந்தாள்.
யோனா 1: 17
யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.
யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.
மத்தேயு 12: 40
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
யோவான் 2: 19
இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார்.
மேலும்,
இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார்.
- நம் ஆண்டவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
- 30 வெள்ளிக் காசுகளுக்கு காட்டி கொடுக்கப் பட்டார்.
- மரியாள், நம் ஆண்டவரின் பாதங்களில் பரிமள தைலத்தை ஊற்றும் போது, யூதாஸ் அதை 300 பணத்திற்கு விற்கலாமே என்கிறார்.
- நம் ஆண்டவர் சிலுவையில் அறையப் படுவதற்கு கொண்டு செல்லப் படும் போது, அவர் ஏற்கனவே கூறிய படி, பேதுரு அவர்கள் மூன்று தரம் மறுதலித்தார் என்பதை அறிவோம்
- நம் ஆண்டவர் மரித்த போது, நேரம் மாலை மூன்று மணி
10. NUMBER FOUR
4 = சோதனை /உபத்திரவம்
இங்கு தரப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளில் 4 என்ற எண் சோதனையை குறிப்பதாக உள்ளதை கவனியுங்கள்.
தானியேல் 7: 2
தானியேல் கூறியது: “இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
தானியேல் கூறியது: “இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
திருவெளிப்பாடு 7: 1
இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.
இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.
சகரியா 6: 1
மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்:
இந்த தீர்க்கதரிசனங்களின் விளக்கங்கள், நாம் பின் வரும் பாடங்களில் திட்டமாக அறிய போகிறோம்.மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்:
மேலும்,
மேலும்,
- எப்தாவின் மகளுக்காக ஆண்டுதோறும் 4 நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள் என்று வாசிக்கிறோம். (நியாயாதிபதிகள் 11: 40)
- நோவாவின் காலத்தில் 40 நாட்கள் மலை வெள்ளத்தால் அப்போதிருந்த மனிதர்கள் அழிவுற்றனர் என்பதை நாம் அறிவோம்.
- எண்ணாகமம் 14ஆம் அதிகாரத்தில், 40 நாட்கள் உளவு பார்த்ததையும், அதற்கு தண்டனையாக 40 வருடங்கள் பாலைநிலத்தில் அலைந்து திரிந்ததையும் வாசிக்கிறோம்.
எண்ணாகமம் 14: 34
நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்: - நம் ஆண்டவர் 40 நாட்கள் உபவாசம் இருந்ததையும் நாம் அறிவோம். (மாற்கு 1: 13)
400
மேலும்,
இஸ்ரயேல் மக்கள் 400 ஆண்டுகள் எகிப்துக்கு அடிமையாக செல்வர் என்பது ஆபிரகாம் அவர்களுக்கு கடவுளால் முன் அறிவிக்கப்பட்டது.
ஆதியாகமம் 15: 13
ஆண்டவர் ஆபிராமிடம், “நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர்.அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர்.
ஆண்டவர் ஆபிராமிடம், “நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர்.அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர்.
4000
நம் ஆண்டவர் செய்த அற்புதத்தின் பலனாக 4000 ஆண்கள் பாலை நிலத்தில் (மத்தேயு 13: 33) உண்டனர் என்று வாசிக்கிறோம்.
மத்தேயு 15: 38
பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.
இங்கு பாலை நிலம் (வனாந்திரம்) என்பது இவ்வுலக வாழ்வை குறிக்கும்.பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.
ஆக, இது இவ்வுலகத்தின் அறுவடை காலத்தின் முடிவில் நடக்க போகும் காரியத்தின் நிழல்.
இங்கு, 4000 ஆண்கள் உண்டனர் என்று அறிகிறோம்.
இது குறித்தும், பின் வரும் பாடத்தில் விரிவாக அறிய போகிறோம்.
மேலுள்ள வசன குறிப்புகள் அனைத்தையும் நாம் நிதானிக்கும் போது, 4, 40, 400, 4000 என்பது சோதனையான இவ்வுலக வாழ்வை குறிப்பதாக உள்ளதை நாம் அறிய முடிகிறது.
11. NUMBER FIVE
ஐந்து = கிறிஸ்துவாக மாறும் புது சிருஷ்டி
இந்த பகுதியில், 5, 50 ,500, 5000 என்ற எண்களில் உள்ள இறை திட்டத்தை அறிந்து கொள்வோம்.
5 அப்பமும் 5000 ஆண்களும்
மத்தேயு 14 ஆம் அதிகாரத்தில், நம் ஆண்டவர் 5 அப்பங்களை கொண்டு 5000 ஆண்களுக்கு உணவளித்தார் என்று வாசிக்கிறோம்.
மத்தேயு 16: 9
இயேசு கிறிஸ்து: இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? ஐந்து ரொட்டிகளை 5,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது மீதியானதை எத்தனை கூடைகளில் சேகரித்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
நம் ஆண்டவர் செய்த இந்த அற்புதத்தில், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உண்டிருந்தாலும், 5000 ஆண்கள் மட்டுமே கணக்கில் உள்ளது.இயேசு கிறிஸ்து: இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? ஐந்து ரொட்டிகளை 5,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது மீதியானதை எத்தனை கூடைகளில் சேகரித்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
ஏன்?
ஆண்கள் என்பதில் உள்ள ஞான அர்த்தம் என்ன?
வாசிப்போம்
எபேசியர் 4: 11
மேலும் நாம் அனைவரும் கடவுளின் குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்
ஆம். ஆண் = என்றால் கிறிஸ்துவுக்குள் நிறைவான வளர்ச்சியை நோக்கி செல்பவர்கள்.மேலும் நாம் அனைவரும் கடவுளின் குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்
5 அப்பங்களை 5000 ஆண்கள் உண்ட அற்புதத்தில் மறைந்துள்ள இறை திட்டத்தை, நாம் பின் வரும் பாடத்தில் விரிவாக அறிய இருக்கிறோம்.
5 கன்னிகைகள்
10 கன்னிகள் குறித்த உவமையில், 5 புத்தியுள்ள கன்னிகைகள் குறித்து வாசிக்கிறோம்.
மத்தேயு 25: 2
அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்கள், ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள்.
புத்தியுள்ள அந்த 5 கன்னிகை களிடம், எண்ணெய் = இருந்தது.அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்கள், ஐந்து பேர் புத்தியுள்ளவர்கள்.
எண்ணெய் என்பது கடவுளின் தூய வல்லமை/ சக்தி / ஆவியை குறிக்கும்.
நாமும், 5 கன்னிகைகள் போல, கடவுளின் தூய ஆவி = வல்லமையை பெற்றிருந்தால், ஆண்களாக = புது சிருஷ்டியாக வளர்வோம்.
எண் 5, 2 + 3 என்று பிரிக்கலாம்.
2 = இறை வார்த்தையை குறிக்கும்.
3 = மீட்பை குறிக்கும்.
அதாவது, 5 எண்ணுக்குள் இருப்பவர்கள், இறைவார்த்தை மூலம் மீட்பு அடைந்தவர்கள்.
வாசிப்போம்
2 கொரிந்தியர் 5: 17
எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
5 தூண்கள்எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
வாசிப்போம்
யாத்திராகமம் 26: 37
திரையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தில் ஐந்து தூண்களைச் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். அவற்றுக்காக, செம்பில் ஐந்து பாதங்களை வார்க்க வேண்டும்” என்றார்.
இந்த வசனத்தில், திருத்தூயகத்தில் = ஆசரிப்புக் கூடாரத்தில், லேவியர் ஒருவர் மகா பரிசுத்த அறையில் நுழைய வேண்டும் என்றால், 5 தூண்களை கடந்து செல்ல வேண்டும் என்பதை அறிகிறோம்.
இவ்வசனங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது,திரையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தில் ஐந்து தூண்களைச் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். அவற்றுக்காக, செம்பில் ஐந்து பாதங்களை வார்க்க வேண்டும்” என்றார்.
5 என்கிற எண் = கிறிஸ்துவாக மாறும் புது படைப்புகளை / சிருஷ்டிகளை குறிக்கிறது என்பது அறிந்து கொள்கிறோம்.
12. NUMBER SIX
6 = அபூரணம், கடவுளுக்கு எதிரானவன்
பைபிளில் 6 என்கிற எண் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
அவற்றும் சிலவற்றை இங்கு ஒருங்கிணைந்து ஆராய்வோம்.
666
திருவெளிப்பாடு 13: 18
விவேகம் உள்ளவர்கள் அந்த மூர்க்க மிருகத்தின் எண்ணைக் கணக்குப் போட்டுப் பார்க்கட்டும்; அது ஒரு மனிதனுடைய எண்; அந்த எண் 666.
கடவுளுக்கு எதிரானவனின் எண் = 666
விவேகம் உள்ளவர்கள் அந்த மூர்க்க மிருகத்தின் எண்ணைக் கணக்குப் போட்டுப் பார்க்கட்டும்; அது ஒரு மனிதனுடைய எண்; அந்த எண் 666.
600
கடவுள் விரும்பாத சந்ததியை அழிக்க கடவுள் மழை வெள்ளத்தை அனுப்பிய போது,நோவாவின் வயது 600.
ஆதியாகமம் 7:6
மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
600 சேக்கல்மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
1 சாமுயேல் 17: 7
கோலியாத் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல்.
கோலியாத், கடவுளாம் மக்களாகிய இஸ்ரயேல் மக்களை அழிக்க வந்த பிலிஸ்தியர்களை கொல்லுவதற்கு பயன் படுத்திய ஆயுதத்தின் எடை 600 சேக்கல் என்று வாசிக்கிறோம்.கோலியாத் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல்.
6 விரல்கள்
2 சாமுயேல் 21: 20,21
20 மறுபடியும் காத் நகரத்தில் போர் நடந்தது. அங்கே ரெப்பாயீம் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவன் மிக மிக உயரமாக இருந்தான். அவனுடைய கைகள் கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறாறு விரல்கள் இருந்தன. மொத்தம் 24 விரல்கள் இருந்தன.
21 அவன் இஸ்ரயேல் மக்களை கேலி செய்துகொண்டே இருந்தான்
இங்கு கடவுளின் மக்களான இசுரயேலர்களுக்கு எதிரான, கோலியாத்தின் காத் ஊரை சேர்ந்த ஒரு உயரமான மனிதனை பற்றி கூறப்பட்டுள்ளது.20 மறுபடியும் காத் நகரத்தில் போர் நடந்தது. அங்கே ரெப்பாயீம் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவன் மிக மிக உயரமாக இருந்தான். அவனுடைய கைகள் கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறாறு விரல்கள் இருந்தன. மொத்தம் 24 விரல்கள் இருந்தன.
21 அவன் இஸ்ரயேல் மக்களை கேலி செய்துகொண்டே இருந்தான்
அவனுக்கு ஒவ்வொரு கை, காலிலும் 6 விரல்கள் இருந்ததை அறிகிறோம்.
6 ஆம் நாள்
நாம் ஆதியாகமத்தில், மனிதன் 6 ஆம் நாளில் உருவாக்கப்பட்டதை அறிகிறோம்.
முதலில், கடவுளின் சாயலில் உருவாக்கப் பட்டிருந்தாலும், பின்பு ஆதாம், அபூரணமான நிலைக்கு சென்றார் என்று அறிகிறோம்.
6 மணி நேரம்
இந்த அபூரணமான மனிதனை மரணத்தில் இருந்து மீட்க, நம் ஆண்டவர் காலை 9 மணிக்கு சிலுவையில் அறையப்பட்டு, மத்தியானம் 3 மணிக்கு மரித்தார். அதாவது, 6 மணி நேரம் சிலுவையில் நம் ஆண்ட்வர் தொங்கினார்.
6 கல் ஜாடிகள்
நம் ஆண்டவர், கானானில் செய்த முதல் அற்புதத்தில், 6 ஜாடிகளில் உள்ள தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்.
(யோவான் 2: 1-11)
இந்த அற்புதத்தின் விளக்கத்தை நாம் "கானா ஊர் கல்யாணம்" பாடத்தில் அறியலாம்.
இங்கு 6 கல் ஜாடிகள், அபூரணமான நிலையில் இருக்கும் 6000 வருட காலத்தில் வாழும் மனுகுலத்தை குறிக்கிறது.
60 முழ உயரமும், 6 முழ அகலம்
தானியேல் 3:1
நெபுகனேசர் அரசன் அறுபது முழ உயருமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த “தூரா” என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான்.
இங்கு பாபிலோன் அரசர், கடவுளுக்கு நிகராக, மக்கள் தன்னை வணங்கும் படி செய்த சிலையும் 6,60 என்கிற எண்களை கொண்டதாக உள்ளது.
நெபுகனேசர் அரசன் அறுபது முழ உயருமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த “தூரா” என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான்.
ஆக, இந்த சுருக்கமான ஆய்வில், 6 என்கிற எண் அபூரணத்தையும், கடவுளுக்கு எதிரானதையும் குறிப்பதாக உள்ளதை நாம் நிதானிக்க முடிகிறது.
11. NUMBER SEVEN
7 = பரிபூரணம்
பைபிளில் 7 என்கிற எண் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 2:2 இல், கடவுள் தமது படைப்புகளை நிறைவேற்றி 7 ஆம் நாளில் ஓய்ந்திருந்தார்.
நோவாவும் அவரது குடும்பத்தாரும் பேழைக்குள் சென்று, 7 நாளுக்கு பின் மழை வெள்ளம் துவங்கியது.
மழை நின்றவுடன், நோவா 7 நாட்கள் இடைவெளியில் காகம், பின்பு புறா மற்றும் மீண்டும் புறாவை அனுப்பினார் என்று வாசிக்கிறோம். (ஆதியாகமம் 8: 6-12)
திருவெளிப்பாடு புத்தகத்தில், நாம் 7 ஆவிகள், 7 சபைகள், 7 குத்துவிளக்குகள், 7 எக்காளங்கள், 7 தூதர்கள், 7 கலசம், 7 முத்திரைகள் பற்றி வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 41ஆம் அதிகாரத்தில், பாரோன் கண்ட கனவை, யோசேப்பு விளக்கிய போது, 7 பஞ்சம் நிறைந்த ஆண்டுகளும், பின்பு அதை தொடர்ந்து, 7 அமோக விளைச்சல் உள்ள ஆண்டுகளை குறித்து வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 41: 29,30
29 எகிப்து தேசம் முழுக்க ஏழு வருஷங்களுக்கு அமோக விளைச்சல் இருக்கும்.
30 ஆனால், அதற்குப்பின் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் வரும்.
29 எகிப்து தேசம் முழுக்க ஏழு வருஷங்களுக்கு அமோக விளைச்சல் இருக்கும்.
30 ஆனால், அதற்குப்பின் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் வரும்.
இவ்வசனங்களை, நாம் நிதானித்து ஆராயும் போது, 7 என்பது முழுமையை, பரிபூரணத்தை அடையாளப் படுத்து வதை அறிகிறோம்.
வாசிப்போம்
ஏசாயா 30:26
ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்: கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்.
கடவுளின் அரசாட்சியில் சத்தியத்தின் வெளிச்சம், முழுமையாக (7) இருக்கும் என்பதை இவ்வசனம் விளக்குகிறது.ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்: கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்.
சங்கீதம் 12:6
ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை.
கடவுளின் வார்த்தைகள் - 7 முறை புடமிடப்பட்டவை என்றால் முழுமையாக உண்மையானவை என்று அறிந்து கொள்கிறோம். ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை.
7 = முழுமை = பரிபூரணம்
11. NUMBER EIGHT
8 = கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி
+
8 = பழைய ஏற்பாட்டு வாழ்ந்த விசுவாச வீரர்கள்
இந்த பகுதியில், எண் 8 இல், கடவுளின் திட்டம் என்னவென்று இறைவார்த்தைகளை ஆய்வு செய்வோம்.
எட்டாம் நாளில் விருத்தசேதனம்
கடவுள், ஆபிரகாம் அவர்களுக்கு, பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையும் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று கட்டளை தந்தார்.
ஆதியாகமம் 17: 12
இனிவரும் காலமெல்லாம் உன்னுடைய சந்ததியில் பிறக்கிற ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும்.
நம் ஆண்டவரும் 8 ஆம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்.இனிவரும் காலமெல்லாம் உன்னுடைய சந்ததியில் பிறக்கிற ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும்.
லூக்கா 2:21
8வது நாளில் ஆசாரிய ஊழியம்
ஆசாரியர் ஊழியத்திற்கு தேர்ந்தெடுக்கபட்ட ஆரோனும் அவரது குமாரர்களும், 7 நாட்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 8 ஆம் நாளில், ஆசாரியர் ஊழியத்தை துவங்கினார்கள் என்று வாசிக்கிறோம். (லேவியராகமம் 8:1-35 , 9:1)
8 ஆம் நாளில் கூடார பண்டிகை
லேவியராகமம் 23: 39
ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து, அதாவது உங்களுடைய நிலத்தில் விளைந்ததைச் சேகரிக்கும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு கடவுளுக்கு பண்டிகை கொண்டாட வேண்டும்.+ முதலாம் நாளிலும் எட்டாம் நாளிலும் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும்.
வனாந்திர பயணத்தை நினைவு கூறும் படி, கடவுள் கூடார பண்டிகையை அனுசரிக்க நியமித்தார்.ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து, அதாவது உங்களுடைய நிலத்தில் விளைந்ததைச் சேகரிக்கும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு கடவுளுக்கு பண்டிகை கொண்டாட வேண்டும்.+ முதலாம் நாளிலும் எட்டாம் நாளிலும் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும்.
அந்த கூடார பண்டிகை, முதல் நாளும், 8 நாளும் முழுமையாக ஓய்ந்திருக்க கூறினார் என்று வாசிக்கிறோம்.
மேலே கூறப்பட்ட மூன்று காரியங்களையும் நாம் ஆய்வு செய்யும் போது,
- 8 ஆம் நாளில் நுனி தோல் நீக்கப்படுதல்
- 8 ஆம் நாளில் ஆசாரியர் ஊழியம்
- 8 ஆம் நாளில் கூடார பண்டிகை
அதற்கு முந்தைய 7 நாட்கள், அதற்கு தயார் செய்யும் நாட்களாக உள்ளதை நாம் காண்கிறோம்.
இந்த 7 நாட்கள் என்பது, சுவிஷேச காலத்தில் (இயேசு கிறிஸ்து பூமி வந்தது முதல் இப்போது வரை) உள்ள 7 காலப்பகுதியை அடையாளப்படுத்துகிறது.
இது குறித்து பின் வரும் பாடங்களில் விரிவாக அறிவோம்.
8 ஆம் நாள் என்பது, அதற்கு பின், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தலைமையில் இப்பூமியில் வரப்போகும் 1000 வருட அரசாட்சியை (புதிய துவக்கம்) குறிக்கும்.
இது குறித்து பின் வரும் பாடங்களில் விரிவாக அறிய போகிறோம்.
7 க்கு பின் 8
நாம், முந்தைய பகுதியில், 7 என்பது முழுமையை = பரிபூரணத்தை குறிக்கும் என்பதை அறிந்தோம்.
7 க்கு பின் 8 வருதல், என்பது பூரணமாக (7) கிறிஸ்துவோடு வாழ்ந்த கடவுளின் மக்கள், 8 நாளில் (1000 வருட அராட்சியில்) நிறைவடைதலை குறிக்கிறது.
8 = பழைய ஏற்பாடு காலத்தில் வாழ்ந்த விசுவாச வீரர்கள்
எவ்வாறு 8 என்கிற எண் புதிய தொடக்கத்தை குறிப்பது போல,
எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய ஏற்பாடு காலத்தில் வாழ்ந்த விசுவாச வீரர்களையும் (நோவா, ஆபிரகாம், தாவீது முதலானோர்) குறிக்கிறது.
எப்படி?
வாசிப்போம்
எபிரேயர் 11: 39,40
39 இவர்கள் (பழைய ஏற்பாடு காலத்தில் வாழ்ந்த விசுவாச வீரர்கள்) அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. 40 ஏனெனில், நம்மோடு (7) இணைந்துதான் அவர்கள் (8) நிறைவு பெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில்கொண்டு நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.
இங்கு, நம்மோடு என்பது இந்த சுவிசேஷ 7 காலப்பகுதியில் கிறிஸ்துவோடு வாழும் இறைமக்களையும், அவர்கள் என்பது பழைய ஏற்பாடு காலத்தில் வாழ்ந்த விசுவாச வீரர்களையும் குறிக்கிறது.39 இவர்கள் (பழைய ஏற்பாடு காலத்தில் வாழ்ந்த விசுவாச வீரர்கள்) அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். ஆயினும் கடவுள் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை. 40 ஏனெனில், நம்மோடு (7) இணைந்துதான் அவர்கள் (8) நிறைவு பெற முடியும் என்பதைக் கடவுள் கருத்தில்கொண்டு நமக்காகச் சிறந்த திட்டம் ஒன்றை வகுத்திருந்தார்.
வாசிப்போம்
மீகா 5:5
இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.
ஆக, பைபிளில்
8 = கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி
+
8 = பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த விசுவாச வீரர்கள்
ஆகிய இரண்டையும் குறிப்பதாக உள்ளது.
12. NUMBER NINE
9 = நன்றியுணர்வு இல்லாத கடின இருதயம் உள்ளவர்களை அடையாளப்படுத்துகிறது.
இந்த பகுதியில், பைபிளில் உள்ள 9 என்கிற எண் பற்றி ஆய்வு செய்வோம்.
நன்றி சொல்லாத 9 குஷ்டரோகிகள்
லூக்கா 17: 12-18 வசனங்களில், நம் ஆண்டவர் 10 குஷ்டரோகிகளை குணப்படுத்தினார்.
அவர்களில் ஒருவர் மட்டும் நம் ஆண்டவரிடம் திரும்பி வந்து, நன்றி கூறினார்.
அப்போது நம் ஆண்டவர் இயேசு,
லூக்கா 17: 17,18
17 இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
10 பேரில், 9 பேர் நன்றி சொல்ல திரும்பி வரவில்லை என்று இங்கு காண்கிறோம்.17 இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
9 மணி வேளையில் ஏளனம்
9 மணி வேளையில், (பிற்பகல் 3மணி) நம் ஆண்டவர் சிலுவையில் வேதனையில், "ஏலி ஏலி லாமா சபக்தானி" என்று கூக்குரல் இட்ட போது, அங்கு இருந்தவர்கள் நம் ஆண்டவரை ஏளனம் செய்தார்கள். மத்தேயு 27: 46-49
9 மணி வேளையில் சிறையில் அடைக்கப்பட்ட பேதுருவும் யோவானும்
ஜெப ஆலயத்திற்கு, 9 மணி வேளையில் (பிற்பகல் 3 மணி) சென்ற பேதுருவும் யோவானும் அங்கிருந்த சப்பாணி ஒருவரை குணப்படுத்தினார்கள்.
இதை கண்டு பொறாமை கொண்ட, பரிசேயர், சதுசேயர், ஆசாரியர்கள் அவரகளை பிடித்த சிறையில் அடைத்தார்கள்.
அப்போஸ்தலர் 3:1, 4:2,3
1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.
2 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,
3 அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.

நாம் மேலே அறிந்து கொண்ட, மூன்று காரியங்களை நாம் ஆய்வு செய்யும் போது, 9 என்கிற எண் நன்றியுணர்வு இல்லாத கடின இருதயம் உள்ளவர்களை அடையாளப்படுத்துவதை புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும்,
நம் ஆண்டவர் மரித்ததும் 9 மணி வேளை தான். (மத்தேயு 27: 46)
கொர்நேலியுவின் ஜெபங்கள் கேட்கப்பட்டதும் 9 மணி வேளை தான்.(அப்போஸ்தலர் 10: 3)
இதை இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நன்றி உணர்வு இல்லாத நமக்காக நாம் ஆண்டவர் மரித்ததும் 9 மணி வேளை தான்,
மனுகுலத்திற்கு இரட்சிப்பு வந்ததும் 9 மணி வேளை தான். ஆமென். 🙂
9 = நன்றியுணர்வு இல்லாத கடின இருதயம் உள்ளவர்களை (நம்மை) அடையாளப்படுத்துகிறது.
13. NUMBER TEN
10 எதை குறிக்கும்?
பைபிளில், 10 என்கிற எண் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 10 கட்டளைகள் (Exodus 20:1-17)
- 10 வாதைகள் (Exodus 7-12)
- தசமபாகம் (1/10)
- 10 வெள்ளி காசு உவமை
- 10 நரம்பு வீணை (Psalms 33:2, 144:9
- 10 கன்னிகைகள் (Mathew 25: 1-13)
- 10 கால் விரல்கள் (நேபுகாத்நெக்சாரின் சிலை) = 10 உலக ராஜ்ஜியங்களை குறிக்கும் (Daniel 2:41,42)
- 10 கொம்புகள் (Daniel 7: 7,24 | Revelation 13:1, 17:12)
நாம் அடுத்த பாடத்தில், வேதாகமத்தில் நிழல் - பொருள் என்பது பற்றி அறிய போகிறோம்.
பொறுமையுடன் பைபிள் சத்தியத்தை அறிய உடன் பயணிக்கும் தங்களுக்கு நம் கடவுளாம் பரமதந்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஆசீர் அளிப்பார்களாக.
ஆமென்

Comments
Post a Comment