100 percent voting
நமது பைபிளில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யோசேப்பு, தானியேல், கொர்னேலியு, மோர்த்தகாய், எஸ்தர் போன்றோர் உண்மை கடவுளை அறியாத மன்னர்களிடம் அரசு அதிகாரிகளாக சிறந்த முறையில் பணியாற்றி,
தங்கள் சமூக பொறுப்புகளில் முழு ஈடுபாடு கொண்டு, நல்ல குடிமகன் என்று பெயரெடுத்து,
கடவுளின் சித்தத்தை கைக்கொண்டு, அவர்கள் மூலமாக உண்மை கடவுளை அறியாத மக்களும் நன்மை பெற்றனர்.
புது சிருஷ்டியாக (உண்மை கிறிஸ்தவராக) தன்னை அடையாளம் கண்ட ஒருவரும், தான் இருக்கும் நாட்டுக்கும்,
அரசியல் சட்டத்திற்கும் உட்பட்டு, சமூக அக்கறையும் கொண்டு,
மற்றவர்களை விட சிறந்த குடிமகன்களாக நற்பெயர் எடுப்பது அவசியம்.
அதாவது, நாம் தான் பிறருக்கு நல்ல குடிமகனாக இருக்க வழி காட்டியாக இருக்க வேண்டும்.
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்.
உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?
அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?
அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
மத்தேயு 5:13, 14
மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
மத்தேயு 5:13, 14
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் நமது நாட்டின் நிலையை காப்பாற்ற,
வரப்போகும் ஆபத்துகளில் இருந்து காத்திடவும்,
யோசேப்பு போல நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு.
ஆம். நாம் தான் உலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருந்து நமது ஜனநாயக கடமையை ஆற்றி,
மற்றவர்களுக்கு சிறந்த மாதிரியாக இருந்து,
நல்லாட்சி தொடர வாக்களிப்போம்.
உங்களுடைய வாக்குகள் பற்றிய தகவலுக்கு தேர்தல் ஆணையத்தின் (ELECTION COMMISSION) ECINET APP டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
📱 Download ECINET App
THANK YOU
என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
மல்கியா 4: 2
மல்கியா 4: 2
உங்களை யாரேனும்
புது சிருஷ்டி ஒட்டு போடாது,
உண்மை கிறிஸ்தவர் ஒட்டு போட மாட்டார்
என்று நீங்கள் வாக்களிப்பதை தடுத்தால்,
அது IPC 171C படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
பகுத்தறிவோடு செயல்படுவோம்.

Amen Halleluiah!!
ReplyDelete