TAMIL PROSE POETRY - PAGE 2
SELECT YOUR PSALM HERE
நீதிமான்: சிங்கம் போல தைரியமானவன்.
யூதா கோத்திரத்து சிங்கத்தின் சாயலாய் - நீதியின்
கம்பீர சத்தத்தோடு நிமிர்ந்து நிற்பான்
நீதிமான்: செம்மறி ஆட்டை போல தாழ்மையும்
கனிவும் உடையவனாக இருப்பான்.
எதிர் பேசாமல் எஜமானனுக்கு கீழ்ப்படிகிறதும்,
அவருடைய சத்ததுக்கு மட்டும் செவி கொடுத்து,
யதார்த்தமாக பின் செல்லும் ஆட்டைப் போலிருப்பான்.
நீதிமான்: புறாவை போல கபடற்று இருப்பான்.
இருதயத்தில் கசப்பில்லமலும்,
தன் ஜீவியத்தில், மாற்று துணையை தேடாத,
கற்புள்ள கண்ணிகையை போல இருப்பான்.
நீதிமான்: பலவர்ண பறவையை போல விசேஷித்தவன்.
அரிய வகை பறவையை போல, மற்றவர்களுக்கு அருமையானவன்.
வேட்டைக்காரனின் கண்ணுக்கும் இலக்கானவன்.
நீதிமான்: ஒட்டகங்களை போல ஒத்தாசை காரனாய் இருப்பான்.
சத்தியத்தை உறிஞ்சி சேகரித்து, உலகப்
பாலைவனத்தில் தானும் கடந்து,
மற்றவர்களும் கடக்க உதவும் பாலைவன கப்பல் போன்றவன்.
நீதிமான்: மான்கள் போல அழகானவர்கள்.
ஆபத்தை கண்டு தாவிக் குதித்து,
ஆத்தும தாகத்தின் நீரோடையை ஆர்வமாக தேடுகிறவர்கள்
நீதிமான்கள்: எறும்பை போல எழுச்சி உடையவர்கள்.
காலத்தை அறிந்து கணமிக்க காரியங்களை
கவனத்தோடு களைப்பில்லாமல் செய்கின்றவர்கள்.
உடனிருப்பவரோடு உரிமையாய் உறவாடுபவர்கள்.
நீதிமான்கள்: கருத்தான கருப்புக் குதிரைகள்.
வட தேசத்தை நோக்கி, வாஞ்சையுடன் ஓடுபவர்கள்.
உண்ட உணவு விஷமேயானாலும், அதை
வாந்தி எடுக்காமல் உள்ளுக்குள் வைத்தே,
உபத்திரவத்தை சகிக்கும் உத்தமர்கள்.
நீதிமான்கள்: கழுகைப் போல, சிறகை விரித்து பறப்பவர்கள்.
சிறகுகள் உதிர்ந்து தன்னை புதுப்பிக்கும் சிரத்தை உள்ளவர்கள்.
உயரப் பறக்கும் கழுகைப் போல,
உலக ஞானத்துக்கு அப்பாற்பட்டவர்கள்.
பெருங் காற்றின் செட்டையை பெற்ற பெண்ணை போன்றவர்கள்.
நீதிமான்கள்: தேனியை போன்றவர்கள்.
தெளிதேனை கண்டறிந்து,
அதை தனக்கென்று வைக்காமல்,
தேன் கூட்டிலே சேர்க்கும் தேறின குணமுடையவர்கள்.
ஐக்கியமாகிய தேன் கூட்டிலே அடங்கி நடந்து,
அதை கலைத்து போடாத கண்ணியமிக்கவர்கள்.
ஆமென்
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்
அந்தப்படியே, நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.
ரோமர் 3:10
ஏதேனில் ஆதாம் ஏன் தான் ஏவாளின் பேச்சைக் கேட்டாரோ?
தெரிந்தும் ஏன் தான் பழத்தைப் புசித்தாரோ?
இப்படியான ஆதங்கம் நமக்கு எப்போதும் உண்டு;
ஒருவேளை கூழுக்கு ஆசைப்பட்டு இப்படியாக புத்திரபாக்கியத்தை அசட்டையாய் ஏன்தான் ஏசா நினைத்தாரோ?
தூக்கிச்சென்ற நாயகருக்கு, ஏன்தான் இஸ்ரேல் ஜனம் இப்படி துரோகம் செய்தார்களோ?
தான் சொல்வதெல்லாம் நடக்கும் என்று அறிந்திருந்தும்,
பிலேயாம்...ஏன்தான் பொருளாசை கொண்டாரோ?
தளவாடங்களுக்குள் ஒளியும் தாழ்மையிருந்தும்,
சவுல் ராஜா ஏன்தான் இப்படி அவசரப்பட்டாரோ?
இயேசுவை முகமுகமாய் கண்டிருந்தும் யூதாஸ் ஏன்தான்,
இப்படிக் குரூரமான துரோகத்தைச் செய்தாரோ?
அப்: பவுலின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தும்,
எப்படித்தான் ஐத்திகு தூங்கிக் கீழே விழுந்தாரோ?
அற்புதமான காரியங்களைக் கண்ணால் கண்டிருந்தும்,
ஏன்தான் தோமா உலகின் பக்கம் திரும்பிப் போனாரோ?
என்றெண்ணிப் பேசி, என்னையே நம்பி, அங்கலாய்த்து.-தோள் குலுகினேன்:
ஆனால், தனக்கென்று வந்தால்தான் தெரியும் வலியும்...
வேதனையும் என்பது போல,
பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்,
வழுக்கலும்..விழுதலும்.. அதில் வரும் சறுக்கலும்;
ஜாண் அளவு முன்னேறி முழம் அளவு வழுக்கி விழும்
"பலவீனமே எனக்குள் உண்டு;
ஆம்... உண்மையை நோக்கிப் போனால்,
சில சமயம் ஊமையாய் கூட இருக்கணுமே;
நன்மையே..ஆனாலும் சில சமயம் நாடாமலும் இருக்க வேண்டுமே;
சுற்றிச் சுற்றி திரும்பும் திசையெல்லாம்,
சத்திய ஒளி பிரகாசமாய் ஜொலித்தாலும்,
சூழ்நிலை யொன்று வந்து விட்டால் சுயநலத்தால் மனம் சுருங்கவே பார்க்கிறது.
ஒன்று போனால் மற்றொன்று என்று தொன்று தொட்டு தொடரும் மனச்சோர்வு,
புதுசு... புதுசாய் பூசல்கள் கிளம்பி! பூமராங் போல திருப்பி அடிக்கும் போலாகுதே;
அள்ள, அள்ள குறையாத குப்பைக் கிடங்கு போல,
அசுத்த இருதயத்தின் அகழ்வாராய்ச்சியில்,
அவ்வளவும் வெளியேற்றும் போது,
அசதி வருவதில் ஆச்சர்யமில்லையே!
எவ்வளவு பெலவீனன் நான்:
அன்றைக்கு இருந்தவர்களுக்கோ ஆண்டவருடைய
புண்ணியத்தின் ஆதரவு இல்லை:
‘ஆனால் இன்றைக்கு பெலனும் போஷிக்க சத்தியமும்,
புதுப்பிக்கிற புண்ணியமும் பூரணமாயுண்டு நமக்கு!
இவ்வளவு இருந்தும் இடறுகிறவர்களாய் நாமிருக்க,
இஸ்ரயேலர்களை குறைவாய் எண்ணுதல் சரியாகுமா?
அனுதினமும்... அணு, அணுவாய்க் கடந்து போவதே..
அனுபவக்கடலைக் கடப்பது போலாகிறது.
அதனால் தான் என் ஆண்டவர் சொன்னார்..
- அன்றன்றைக்கு அதனதின் பாடுகள் போதுமென்று!!
நொடி நொடியாய்...
கடந்தாலும் நெடிய வழி,
கடந்திடுவன்.
என்னை பெலப்படுத்தும் கிறித்துவினால்,
பெலவானாய் ஜெயமெடுப்பேன்!!
ஆமென்
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்
3. காலமும் வேளையும்
காலங்களுக்கும் வேளைகளுக்கும் அப்பாற்ப்பட்டவர்
தம்முடைய சிருஷ்டிகளுக்கு கால நிர்ணயம் செய்தார்.
அனந்த ஞானத்தின், ஆழ்ந்த துல்லிய கணிப்பினால்,
முன்னும், புன்னும் அறிந்தவர்க்கு காலக்குறிப்பு தேவையில்லை
எத்துணை காலம் தனிமையாய் இருந்தாரோ
யாமாலும், யாவராலும் அறிய முடியாது.
ஏக சுதனை ஜெனிபித்த பின்பே,
அவருக்கென்றும்...அவரைக் கொண்டும்
கால வரையறைகளைக் காட்சிப்படுத்தினார்.
பூமியை அஸ்திபாரப்படுத்திய காலத்தை நாம் அறியோம்.
ஆனால்,பூமியை அழகுபடுத்திய, காலத்தை நாம் அறிவோம்.
சர்வவல்லவருக்கு காலங்கள் மறைக்கப்படாதிருக்க,
அவரை அறிந்தவர்கள், அவர் நியமித்த காலத்தை,
அறியும்படிக்கு, ஆவியினால் அநுக்கிரகம் செய்தார்!
ஆறு இக்கட்டுகள் ஆதாமின் பாவ, சாப, காலம்,
ஏழாவதில் சாபம் எடுத்துப்போடும் காலம்.
எட்டாம் நாளாகிய புதுமை படைப்பின் காலம்;
ஒன்பதென பொருள்படும் நவரத்தினம் போல
-குணசீலம் பெருகும் காலம்,
பத்து முத்தான சத்தியங்கள் நிறைவு பெறும் காலம்:
இப்போது, ரட்சண்ய காலமென்னும் சுவிசேஷ காலம்:
நமக்கு, இனி காலம் செல்லாது எனும் எச்சரிப்பின் காலம்.
காலத்தைத் தனக்கென்று பிரயோஜனப் படுத்த தவறியவர்க்கு,
இது, நிச்சயமான நியாயத்தீர்ப்பின் காலம்..
ஐயா குறித்த காலத்தில் விசாரிக்கும் என் எஜமானனே!
என் காலங்கள் உமது கரத்திலன்றோ இருக்கிறது.
ராச்சாமத்திலே படுக்கையிலே உமது சிந்தை எனக்குள் இருக்கும்படி,
எப்போது விடியும் என்று காத்திருக்கிற ஜாமக்காரனாய்,
என் நாட்களை எண்ணும் [அறிகிற] அறிவைத் தாருமே;
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலத்தை நியமித்திருக்கிறவரே,
சகலத்தையும் அத்திைன் காலத்தில் நேர்த்தியாய்க்
செய்து கொண்டிருப்பவரே,
கோடைக்காலம் முடிந்து,.. மாரிக்காலம் வரும் முன்
களஞ்சியத்தில் என்னைச் சேருமையா!
போரடிக்கிற காலத்தில் நான் பொறுமையாயிருந்து,
களஞ்சியத்தில் சேர்க்கின்ற காலம் வரை உலர்த்தப் பட்டு,
எனக்குள்ளருக்கும் பச்சையங்கள் எல்லாம்
பட்டுப்போகும் வரை,
கோதுமை அம்பாரத்தைப் பாதுகாத்த போவாஸைப் போல, என்னைக் காத்தருளும்;
பூமியின் சிருஷ்டிப்புல்:- யா-வே இறைவனுக்கு,
இது ஏழாம் நாளாகிய கடைசி நாள்;
இயேசு கிறிஸ்துவுக்கும் இது ஏழாம் நாளாகிய கடைசி நாள்;
சபையின் பார்வையிலும் இது ஏழாம் சபையின் கடைசிகாலம்,
சரீரப்பார்வையில் இது குதிகால் வகுப்பினரின் குறுகிய காலம்:
கடைசி நாளின் கொடிய காலத்திலே நானிருந்தாலும்,
ஏற்றகால சத்தியமாகிய கூர்மையான பட்டயத்தால்,
சம்பத்துக்களைச் சேர்க்கும் காலத்தின்,
சத்துவத்தை நான் பெற்றேன்.
எப்போது பார்ப்பேன் என் எஜமானரை ?
எனக்கு அதன் காலம் தெரியாது;
ஆனால்... அவர் இருக்கிற வண்ணமாகவே
நிச்சய, நிச்சயமாய் அவரைத் தரிசிப்பேன்!!
சுற்றி நடக்கும் காட்சியெல்லாம்...சடுதியான
பிரசவ வேதனையின் காலத்தை எனக்கு சுட்டிக்காட்டுகிறது;
இதோ. என்தலையை உயர்த்திப்பார்க்கின்றேன்;
என் ரட்சிப்புன் காலம் எனக்கு,
வெகு சமீபமாய் இருக்கின்றது;
என் நேசர் எனக்கு, தம் மலர்ந்த
முகத்தை எனக்குக் காண்பிக்கிறார்!!!
கவிஞர் வேளாங்கன்னி.
திண்டுக்கல்
தலைக்கல்:
ஆம் இது விந்தையான கல்.
மேலிருந்து துவங்கி, கீழ் மட்டத்தில் முடியும் கல்.
பரலோகத்திலிருந்து இறங்கி வந்த பரிசுத்தமான கல்;
மேலான மகிமையைப் பெற்ற மேன்மையான கல்:
தகுதிப்படுத்தப்பட்ட, பாத்திரமான, பக்திவைராக்ய கல்
கோபுர உச்சியில் உயர்த்தப்பட்ட கல்,
கோபுரம் கட்ட மனதானவர்கள்,
நிமிர்ந்து பார்த்து நிதானிக்க வைக்கும் கல்.
கோணல் மாணல் இல்லாதபடி கெம்பீரமாய் நிற்கும்,
யூதா கோத்திர சிங்கமே இந்த தலைக்கல்.
தலைக்கல்லின் தடங்களில்லா தாழ்மையும்,
தலைப்படும் இடத்தில் எல்லாம் மாண்பையும்,
நீதியோடு கூடிய அன்பின் அரவணைப்பையும்,
நீங்காமல் நீடித்திருக்கும் ஸ்திரத்தன்மையும்,
தொடர்ந்து வரும் ஜீவனுள்ள கற்களுக்கு,
மாதிரியாய் வைக்கப்பட்ட தலைக்கல்இது.
மூலைக்கல்:
இருபுறக் கற்சுவர்களை இணைக்கும் கல்இது;
என்னதான் உறுதியிருந்தாலும்,
இந்த இணைப்புக்கல் இல்லை யென்றால்,
பக்கவாட்டு சுவர்களுக்கு பங்கம் வந்து சேருமே:
இழுத்துப் பிடித்து கொக்கயைப் போல் இணைக்கும் கல்,
இது இருப்பதாலேயே அதிஉயரக் கோபுரம் கூட அசையாமல் இருக்குமன்றோ!
கரடு, முரடாய், துண்டு துண்டானதும்,
தன்னில் தானே வைராக்யமுள்ள பாறையுமான நம்மை,
உடையாமல் உரசித்தேய்த்து, கொத்துளியால் காடிபண்ணி,
அசைவில்லாமல் இணக்கமுண்டாக்கும் கல்லே மூலைக்கல்.
ஆரோனின் தலையில் ஊற்றின தைலம் போல,
யாராக இருந்தாலும் அன்பாலே மொழுகிச் சேர்க்கும் கல்;
அன்பர்களோடு இணைந்த அன்பின் ஜீவியமே,
அத்துனை ஆபத்தையும் கடந்து போகச்செய்யும்:
மூலைக்கல்லானவரின் முத்தான ஐக்கியமும்,
உடனிருப்பவரோடு உண்மையான ஒருமனமும்,
உயர்கோபுரத்தில் நம்மை உச்சிதமான அங்கமாக்கும்,.
அஸ்திபாரக்கல்:
ஆலயத்தின் அழுத்தம் அணைத்தையும்,
தாங்கிப் பிடிக்கும் கல்லே இந்த அஸ்திபாரக்கல்:
கண்ணுக்குத் தெரியாது இந்த அஸ்தி பாரக் கல்.
கட்டிடத்தைக் காண்போர் அனைவரும் மெச்சிப்பேசும், கல்.
ஆசிர்வாதம் அனைத்துக்கும் ஆதாரமான கல்இதுவே;
ஆண்டவராம் இயேசுவின் புண்ணியமே இந்தக் கல்.
இறைவனால், நமக்காகப் போடப்பட்ட திட அஸ்திபாரக் கல்.
கன்மலையில் வீட்டைக் கட்டுவோர்க்கான,
கல் விசுவாசக் கல் இந்த அஸ்தி பாரக்கல்.
சரீரமாகிய சபைக்கு தலையான தலைக்கல்!
சபையின் மூலமாய் சகலத்தையும்,இணைக்கும் மூலைக்கல்!
சத்திய தாக முள்ளவர்களுக்கு,
பிளக்கப்பட்ட கன்மலையாகிய கல்:
நம் கால்கள் வழுவாதபடி பாதுகாக்கும்,
திட அஸ்திபாரக்கல் இவரே!!
தலைக்கல்லும், மூலைக்கல்லும், திட அஸ்திபாரக்கல்லும் நம்மை நிலைப்படுத்தியிருக்க,
அத்தனையும் மறந்தால் நமக்கு வருவது சிக்கல்!!!
தலைக்கனத்தால் உளறித்திரிந்து,
மூலைக்கல்லின் இணக்கக்த ஒதுக்கி,
விசுவாச அஸ்திபாரமில்லாமல், ஆட்டம் கொண்டு அலையவர்க்கு,
அவனே தனக்கு எதிர்த்து நிற்கும்,
இடறுதலின் கல்!
ஆமென்!
கவிஞர் திண்டுக்கல் வேளாங்கண்ணி
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன்
கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர்; ஆலோசனைக் கர்த்தா;
வல்லமையுள்ள தேவன்; நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும்.
ஏசாயா: 9:6.
நமக்கொரு பாலகன்;
நமக்கொரு குமாரன்.
ஆதாமைப் போல் மண்ணினால் பூரண மனுஷனையல்ல,
ஒரே மனுஷனுடைய ஒரே குமாரனாய்,
[பரியூரண ஆதாம்]
[பரியூரண இயேச]
மாயத்தோற்றத்தில் அல்ல, மனுஷ நடைமுறையில்,
கேட்டுப்பெறாத தேவ அன்பின் வெகுமதியாய்---
இறைவன்பால் தாமே நமக்காய்க் கொடுக்கப்பட்டார்!
அவர் அதிசயமானவர்:
வேற்றுக்கிரகவாசி பூமியில் தங்குவது அதிசயமே,
பரலோக வாசி, பரதேசிகள் மத்தியில் வந்திருப்பது அதிசயமே;
கன்னிப் பெண் கருவுற்று ஆண் மகவைப் பெறுவதும் அதிசயமே;
பூரணவளர்ச்சியிலும், ஞானத்திலும் வளர்ந்ததும் அதிசயமே.
அதிசயமே! பன்னிரண்டு வயதில் அறிஞர்கள் அசந்த அறிவு, அதிசயமே;
முப்பதாம் வயதில் வானம் திறக்கப்பட்டதும்--அதிசயமே!
ரகசிய ஆளுகையே மனித ராஜதந்திரம்.ஆனால்-நம்மை,
பரலோக ராஜ்யத்தின் ரகசியம் சொல்லி அழைத்ததும். அதிசயமே
கூன், குருடு, செவிடு நீக்கி குணப்படுத்தியது.. அதிசயம்!
மூச்சாறி, நாறிப்போன சரீரத்தை...
சிதிலத்தைச் சீராக்கி ஜீவன் தந்து எழுப்பினது. அதிசயமே!!
அழுத இழவு வீடு ... சிரித்து பரிகாசிக்க.
தலித்தாகூம்- என்றுசொல்லி கூடு துளிர்க்க ஜீவன் கொடுத்ததும்
அதிசயமே !!
முதன் நிறைந்த இதழோடு செந்தாமரை நறுமலர்,
சேறு நிறைந்த குளத்தினில் சாறு கொண்டு இருந்தாலும்,
செந்தேன் சுவையறியா மண்டூகம் மலரடியில் இருப்பது போல்,
செங்கோலின் யூத சிங்கம், ஆட்டுக்குட்டியானதை அறியாத,
மண்டுகள் மத்தியில் மங்களன் இருப்பதும் அதிசயமே!!
குடிகளுக்காய் கோனுயிரைக் கொடுப்பதும் அதிசயமே!
குறையில்லாக் கொற்றவனாய் மீண்டும் உயிர்பெற்றெழுந்ததும், அதிசயத்திலும்.. அதிசயமே!
கூட இருந்து நம்மில் குறை நீக்குதல்.அதிசயமே;
அவர் கூடவே இருக்க நமக்கு அரியாசனம் தருவதும் அதிசயம்!!
செயற்கரிய செயலே அதிசயமாகும்--இனியாரும்,
படற்கரிய பாடுகளும்,... பார்க்கரிய செயல்களும்,
விடற்கரிய உயிரின் இழப்பும் -- யாரும்,
பெறற்கரிய உயிரின் உயர்வும்.--அதிசயதிசயமே!!
நித்திய பிதா
நித்திய ஜீவன் பெறக் காரணமானவர்.. இந்த நித்தியப்பிதா!
மரித்தோரைச் சுமந்து அடக்கம் பண்ணும்,
மரித்தோர் கூட்டமே, குடும்பமே.- மனுக்குலம்:
பாவம் செய்து மரணச் சம்பளம் பெற்ற மனிதனுக்கு,
பரிகாரம் செய்து ஜீவனாதாரம் பெற வழியில்லையே!
வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்,
மரணத்திலிருந்து நீங்க தன்னைப் புசிக்கக் கொடுத்து,
புசிப்போரெல்லாம் மீண்டும்--வசிப்போராகும்படி,
ஜீவன் தந்தெழுப்பி- ஜீவன் நிலைக்க செய்கிறதால்,
அவர் நித்திய பிதா!!
ஆபிரஹாமின் முன்னிருந்தவர் - அவரின் ஜீவ ஆதாரமாயும்,
தாவீதின் குமாரானானவர்_-- அவரின் ஆண்டவராயும் --
யோசேப்பாகிய வளர்ப்புப் பிதா... தான் வளர்த்த இயேசுவினால்..
ஜீவன் பெற்று மேன்மையுற ஆதாரமானதினால்-..
அவர்---நித்தியப் பிதா!!
செம்மறியாடு வகுப்பாரெல்லாம் --
செம்மையான ஜீவனைப் பெற்று,
என்றென்றும் நிலைத்திருக்கும் பூமியிலே-
தொன்று தொட்டு வாழும் ஜீவனே.. நித்தியஜீவன்!
கடவுள் சகலத்திலும் கடவுளாயிருப்பதற்கும்,
பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டான பின்பு,
நித்தியப் பிதாவின் உத்தியோகம் நிறைவேற்றி பின்பு,
நித்தம்..நித்தம் தேவ சமுகத்தில் மன மிகழ்ச்சியாய் இருப்பார்!!
சமாதானப் பிரபு:
பிரிந்தவரை இணைப்பதே- சமாதான வேலை;
துரத்தப்பட்ட ஆதாமின் சந்ததி..மீண்டும்;
கூட்டப்பட்ட குடும்பமாய் சேர்க்கப்பட செய்யும் வேலையே-- சமாதானப் பிரபுவின் வேலை:
நீதிமாறா சிருஷ்டிகர்.. தீமை மாறா மனுசர்கள்;
ரத்தம் சிந்துதல் இல்லாமல் -- பாவமண்னிப்பில்லை;
பாவநிவாரண பலியாகி-பின்பு பலி செலுத்தும் ஆசாரியராய்,
ரத்தம் தெளித்து சுத்திகரித்து, - சமாதானக் கரம் உயர்த்தி
ஆசிர்வதிக்கும் ஆசாரியரே...நம் சமாதானப் பிரபு!!
இப்போது சமாதானமல்ல--- பட்டயமே அவராயுதம்!!
பிரித்தெடுக்கும் லேவியரின் பட்டயமே -சுவிசேஷ யுகம்;
-விசுவாசத்தினால் பெறப்படும் புத்திக்கெட்டா சமாதானம்!!
புதிய பூமியில் பனையைப் போல் செழிக்கும் நீதிமான்களுக்கு,
நீதியரரின் தொடர்பினால் உண்டாகும், நித்திய சமாதானம்!!
அங்கே : மிருகத்தோடும் உண்டாகும் சமாதானம்,
சிறுபையன் சிங்கத்தை நடத்தும் சமாதானமும்,
மண்ணோடு ஏற்படும் சமாதானத்தால்-
ஒரு கைப்பிடி தானியம் லீபனோன் போல் விளையும்;
சக மனிதருக்கு கேடும்...
உடனிருப்பவர்க்கு தீங்கும், எண்ணாமல்;
சிந்தையில் உண்டாகும் சுத்த சமாதானம்.
சமாதானப் பிரபுவின் சட்டதிட்டத்தால்--- பூமி,
தன் குடிகளோடும் -- குடிகள் தன் குயவரோடும்,
சஞ்சலமும், தவிப்புமின்றி,
சம்பூரண சமாதானத்தில் சங்கமித்திருக்கும்!!
“நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே என் -
ஊழியக்காரனும் இருப்பான்.
திண்டுக்கல்
9789387638
மனுஷரில் ஒருவரும் கண்டிராதவர்;
இனிமேலும், காணக்கூடாதவர்...
நமது யாவே கடவுள்.
மகா பரிசுத்தமும் மகாநீதியும் இசைந்த,
இவ்விரண்டின் அழுத்தப் பெருக்கே;
அத்தமான ஜீவாலிக்கும் ஜோதிப் பிரகாசம்;
எண்ண முடியாத திவ்ய பிரகாசமே மகிமையின் ரூபம்.
சொன்ன சொல் மாறாத தன்மையும்,
செய்யும் செயலில் மாசற்ற தன்மையும்,
நிலைமாறாத நீதியின் நிறைவும்,
சுத்த பரிசுத்தமும். அவரைச்
சுற்றிப் பிரகாசிக்கும் பேரொள/யாகும்.
ஆயிரம் கோடி சூரியன்களின் ஆதிக்க வெப்பம் கூட,
அவரின் திவ்யபிரகாசத்துக்கு முன்நிற்க முடியாதே;
எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிகிற சுத்தக்கண்ணன்,
பாவத்துக்கும் அநீதிக்கும் பட்சிக்கிற அக்கினி அவர்;
கொதிக்கும் சூளையின் வெப்பத்தால்,
தூரத்திலேயே கருகும் சருகைப்போல,
பரிசுத்தமற்ற அனைத்தும் பஸ்பமாகிப்போகும்.
இயல்பில் குறைவான மனுஷர்கள் தன்னைக்-
காண முடியாது... என்று அவர் சொன்னது,
ஏதோ, அதிகாரத்தின் ஆணவமல்ல..
இதுதான் நம் இறைவனின் இயல்பு:
அது, மாறாதது.
தனக்குமுன் தரம் தாழ்ந்த சிருஷ்டிகளின் மேல்,
தன்னுடைய பயங்கரத்தைக் கூட பவ்யமாய் காட்டும் கடவுள், நம் யா-வே
ஆம்.நாம் கூட உணர்கிறோமே...
கொஞ்சமாக நீதியை நடப்பித்தாலும்,
சந்தேகமின்றி பரிசுத்தமாய் நடக்கும் போதும்,
சத்திய ஒளியாய் நமக்குள் பரவும்,
சந்தோஷ மின்னூட்டத்தை நாம் பெறுவோமே.-
மோசேயின் முகமும்... ஸ்தேவானின் முகமும்,
பிரகாசித்து ஜொலித்தவிதம் இப்படித்தானே;
தேவ பிரசன்னமும், கர்த்தரின் முகப்பிரகாசமும்,
நம் இருதயத்தில் பட்டு முகத்திலே ஜொலிக்கும்.
உண்மையும், நேர்மையும், உயர் மட்ட விசுவாசமும்,
உள்ளாக இருதயத்தில் உற்பத்தியாயிருந்தால்,
உலகம் முடிவுவரை நம்மோடிருப்பேன் என்றவர்,
இப்போதே நம்முடன் தொடர்பில் இருப்பதை
உள்ளபடி நம்மால் தரிசிக்க முடியும்;//
யோகாவின் மூலம் பெற முடியாது,
யா - வே யின் தரிசனத்தை;
"யெஷ்வா". வின் முக அறிவொளியால்,
இருதயத்தில் சுத்த முள்ளவர்கள் மட்டுமே பரிசுத்தர்க்கு....
பாக்கியவான் ஆக முடியும்;
நாம் விரும்பும் திவ்ய சுபாவம் என்றாவது,
நமக்கு கிடைத்துவிடும்... என்ற ஈர்ப்பைக் காட்டிலும்,
நாம் விரும்புவது.... இப்போதே நம்மிடம் இருக்கிறது.
என்கிற உள்ளார்ந்த விருப்பம்,
நமக்குள் உன்னதமானவரை தரிசிக்கச் செய்யும்!!
"அவர்கள் கடவுளை தரிசிப்பார்கள்: மத்தேயு :5:8
ஆமென்
சகோதரர் அருள் வேளாங்கண்ணி
திண்டுக்கல்
9789387638
குறையொன்றும் இல்லை, யா - வே
மனுஷரின் கண்ணுக்கு புலப்படாத இறைவன்.
மனிதரில் ஒருவரும் கண்டிராத இறைவன்
அதனாலே எனக்கு குறை ஒன்றும் இல்லை;
குமாரனில் வெளிப்பட்ட என் சிருஷ்டிகரே..
குமாரனுக்குள்ளே நீர் மகிமைப்பட்டீரே.
குறை ஒன்றும் இல்லை நிறைவான இறைவா!
நன்மைகளைச் செய்திடும் நல்லவராய் நீர் இருக்க.
வேறொரு நன்மையில்லை, ஜோதிகளின் பிதாவே;
குறை ஒன்றும் இல்லை நிறைவான இறைவா...
குறை ஒன்றும் இல்லை யா-வே
குறை ஒன்றும் இல்லை. தேவா
ஒன்றும் இல்லை - யா - வே " ஒரு மனமாய் நிற்கிறீர்... இறைவா!
நீர்..ஒரே மனதாய் இருக்கின்றீர்- இறைவா...[2]
உம்மை ஒருமனப்பட்டவர்கள் மட்டுமே காண்பார்
ஒன்றாக இருக்க.. குறை ஒன்றுமில்லை;
நீதியில் அரசாட்சி செய்கின்ற "யா - வே"-[2]
இறை இயேசு நடந்திட்ட பாதை தான் அதுவே...
நிறைவாக வைத்திட்ட மாதிரியும் இதுவே...
குறை ஒன்றும் இல்லை... பூரண சற்குணா
குறை ஒன்றும் இல்லை இறைவா!
குறை ஒன்றும் இல்லை யா-வே
பாவியர்க்கிறங்கி... கிருபையை பெருக்கி
நிலையான ஜீவனை கொடுக்கின்ற நித்தியா[2]
குறை ஒன்றும் இல்லை பூரண சற்குணா
யாரும்... வெறுக்காத சத்தியரே [2]
உம் வழியில்...
ஏது இடை நிற்கும்
கருணைக் கடல் அன்றோ...
என்றும் இருந்திட.. ஏது குறை எனக்கு...
என்னோடு இருந்திட.. ஏது குறை எனக்கு...
ஒன்றும் குறைவில்லை.. நிறைவான இறைவா!
ஒன்றும் குறைவில்லை நிறைவான "யா-வே"
குறை ஒன்றும் இல்லை பூரண சற்குணா..
நிறைவான எந்தன் இறைவா
குறை ஒன்றும் இல்லை யா-வே"
சகோதரர் அருள் வேளாங்கண்ணி
திண்டுக்கல்
9789387638
அண்ட சராசரங்கிளை உண்டாக்கினவராகிய
உமக்கு முன்பாக இந்த பூமி எம்மாத்திரம்! பூமியின் பிரமாண்டத்துக்கு முன்பாக
மனிதனுடைய மண்ணால் ஆன சரீரம் எம்மாத்திரம்!
மரிக்கும் படியான பாவ சாயலிலே
மனுஷீக ஞானம் எம்மாத்திரம்? உண்டாக்கப்பட்ட வஸ்துவாகிய நான்... என்னை
உருவாக்கின சிருஷ்திகருக்கு முன் எம்மாத்திரம்?
பூஜ்யத்தில் பூஜ்ஜியம் தானே நான்!
ஆனாலும் நீர் என்னை பிரமிக்கத்தக்க
அதிசயமாய் உண்டக்கினீர்.
அதிலும் விசேஷமாக என்னை பிரித்தெடுத்து
உருவேற்படுத்துகின்றீர்
அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை பிரிக்கும்
அதிசயத்தை செய்கிறவர் நீரன்றோ!!
ஆம். விஷமகாரனாகிய என்னை விசேஷித்தவனாக்கினீர்;
கசப்பான கீரையை கொடுத்தது.. எண் ஜீவனுக்கு,
காப்புரிமையை அளித்திட்டீர்.
நான் உமக்குள் இருப்புக் கொள்ளும் படிக்கு
என்னை இருப்பு ஆயுதம் போல உருக்கி வார்த்து
என் ஆண்டவரின் சாயலை எனக்குள் அச்சுப் பதித்தீர்.
நீர் என்னைக் கையிலெடுக்க நான் எம்மாத்திரம்?
நீர் என்னை கருப்பிடிக்க நான் எம்மாத்திரம்
குலைத்து போடத்தக்க பாத்திரமான என்னை
குறைவுகளை நீக்கி குதூகலம் காணச் செய்தீர்!
இந்நேரம் மாத்திரம்... நீர் என் கூட இல்லாமல் இருந்திருந்தால்
கணநேர மாத்திரத்தில் நான் இடம் மாறிப் போயிருப்பேன்;
பிறந்த ஊரை மாற்றி.. புது சிருஷ்டியாக என்
பெயரை மாற்றி... உருமாற்றி... உமக்கு முன்பாக,
என்னை... நிறைவாக்கி நிலைநிறுத்த
என்றைக்குமே, நான் எம்மாத்திரம்
அம்மாத்திரம்... இம்மாத்திரம் எப்போதுமே
எதிராளியின் ஆத்திரமும் உம்முன் எம்மாத்திரம்?
சானைக் கல்லால் அரைக்கப்பட்டும்,
நொறுங்கி போகாமல்,
சாதனைக் கல் எட்டும் வைரக்கல்லாம்
சபையின் வெற்றியும் அதற்கு காரணமும் நீர் மாத்திரமே
எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம்
என்னதான் சிறந்ததானாலும் சரீரம் எம்மாத்திரம்?
ஆம். என் ஆண்டவரின் பாத்திரம்
அதிலே பங்கெடுப்பதில் மாத்திரம்
நானும் ஆவேன்... அதில் ஒரு கோத்திரம்!!
எப்போதுமே நான் எம்மாத்திரம்!
எப்போதுமே ஆசீர்வதிக்க ப்படுவதினால்
என்றும் சொல்வேன்... நன்றி!! ஆமென்
நீங்கள் அல்ல... கடவுளே என்னை இங்கே (எகிப்துக்கு)
அனுப்பினார்;
கவலைப்படாதீர்... என்ற யோசேப்பு:
என்னை கட்டுங்கள்... அவர்களை போகவிடுங்கள்;
சகோதரருக்காக தன்னையே கட்டக் கொடுத்த யூதா;
இவர்களை நானா பெற்றேன்?
என்னை கொன்று போடும்;
இசுரயேலர் வழிநடத்தும் என்று வேண்டிக் கொண்ட மோசே;
இந்த ஆடுகள் என்ன செய்தது...
தவறு என்னுடையதே;
என்னை தாண்டியும் என்று தாழ்ந்து பேசின தாவீது.
தனது நண்பனை காப்பாற்ற சில நேரம்,
தன்னையே பணயம் வைத்த யோனத்தான்;
நான் தான் உங்களுக்கு தேவை: எண் சீஷர்களை
போகவிடுங்கள்... என்றே சொன்னார் என் கர்த்தர்;
இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும்... என்று
தன்னை கொன்றவர்களுக்காக பேசின ஸ்தேவான்.
தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களும்,
தம்மாலே உண்டானதல்ல,
தன்னை எதிர்க்கிறவர்களாலும்... அல்ல;
தம்முடைய பிதாவே அனுமதித்திருக்கிறார்!
இதுவே நம் கர்த்தருடைய உத்தம நிதானிப்பு,
ஆம்... அதனாலேயே
அவர் வையப்படும் போது பதில் வையவில்லை:
பாடுபடும்போது...
பொறுங்கள் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என்று...
அவர்களை பயமுறுத்தவும் இல்லை;
என் இறைவனே... என் சிருஷ்டிகரே...
இந்த உணர்வுள்ள இருதயத்தையும்
உத்தம நிதானிப்பையும்... எனக்குள் உறுதிப்படுத்தும்.
இந்த நிலையிலேயே, மன ரம்மியமாயருக்க எனக்கு கற்றுதாரும்.
மனுஷர் எனக்கு என்ன செய்ய முடியும்?
நீர் அறியாமல் எனக்கு என்ன நேர்ந்து விடும்?
மனிதர்களின் கோபம் உன் மகிமையை விளங்க பண்ணும்;
மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர்!!
ஒருவரை தாழ்த்தவும்... அதே ஒருவரை
உயர்த்தவும் உம்மால் தானே கூடும்!
நல்லது அல்லாத எதையும்... எப்போதும்,
நீ எனக்கு செய்ய மாட்டீர்... ஆம்,
நடக்கிறது எல்லாமே... எனக்கு நல்லது மட்டும் தானே;
குறையே சொல்ல முடியாத சுத்தவான் நான் இல்லையே
மறைவானது உமக்கு முன் ஒன்றும் இல்லையே;
நீதி மாறாத மகா இறைவனே... என்னில் நீர் செய்வது,
நீதியின் சுத்திகரிப்புகள் தானன்றோ!
உம்முடைய புடமிடுதலினால்... நான்
பொன்னாக விளங்குவேன்!
அப்பா... நீ அடிக்கும் சிறு அடிகள் கூட,
இவ்வளவு ஆசிர்வாதமாய் உள்ளது;
இனி... நீர் அரவணைத்தால், அது
இன்னும் எவ்வளவு ஆச்சரியமாய் இருக்குமோ!!!
கவிஞர் அருள் வேளாங்கன்னி,
திண்டுக்கல்
புளிப்பில்லாத அப்பமே...
சுவையில்லாத அப்பமே...
இந்த சிலுவையின் அப்பம்:
கடவுளின் பார்வையில் இதுவே சிறந்த அப்பம்:
புளிப்புடன்... லேசான உப்பும் கலந்து,
நெருப்பினால் முருவலாக சுடப்பட்டதும்,
புளிப்பின் நொதியினால்... உள்ளாக
புகுத்தப்பட்ட காற்றின் வினையினால்
உண்டான உப்புதலும்... கூடிய
மென்மையும், நாவுக்கு மேன்மையுமான அப்பம் இதுவே;
ஆனால்... புளிப்பு சுவை சேர்க்கப்படாவிட்டால்,
அப்பம், உப்பு சப்பில்லாத, சுடப்பட்ட மாவு மட்டுமாமே;
அதிலே நொடியும் இல்லை, உப்புதலும் இல்லை;
கடிப்பதற்கும், சுவைப்பதற்கும் இது,
கொஞ்சம் கடினமான அப்பம் தானே;
ஏன் இது சிறுமையின் அப்பம்?
நிசான் 14ல், பஸ்கா ஆடு பலியானது:
மீசர்களுக்காக தேவ ஆட்டுக்குட்டி தன்னையே பலியாக்கியது;
நிசான் 15ல் புளிப்பில்லா அப்பா பண்டிகை துவங்கியது;
யூதர்களின் கொண்டாட்டமும் அங்கே விளங்கியது.
இதோ, தங்களின் மெய்ப்பன் கொல்லப்பட்டு
சிதறடிக்கப்பட்ட சிறுமந்தை,
சிறைக்கும், சித்தரவதைக்கும் பயந்து ஓடி, ஒளிந்து;
பூட்டின வீட்டுக்குள்ளும், புகலிடமான இடங்களிலும்,
முடங்கிப் போய்... ,
எதிர்கால பயத்துடனும், ஏமாந்த பதட்டத்துடனும்,
ஏங்கி அழுது, ஏனென்று கேட்க ஆளில்லாமல்,
ஏக்கத்தோடும், என்ன முடியாத துக்கத்துடனும்,
உண்ண முடியாத உணர்வுகளை,
உள்ளடக்கிய அப்பம் தான்... இந்த
புளிப்பில்லாத அப்பம் ஆகிய சிறுமையின் அப்பம்.
ஊருக்கெல்லாம் இது கொண்டாட்டமான பண்டிகை தான்;
உடனாசாரியர்கோ, சுய விருப்பங்கள்.
கொல்லப்பட வேண்டிய பண்டிகை;
உலக கொண்டாட்டங்களின் கொட்டங்கள்
நமக்குள் அடங்கி முடக்கப்படும் பண்டிகை;
எனவே தான்... இது உலகப்பிரகார சந்தோஷங்களுக்கு
உப்பு சப்பில்லாத பண்டிகையாமே!
உயர்ந்த பக்குவத்தை நமக்குள் வளர்க்கும்... இந்த
சிறுமையின் அப்பமே நமக்கு மிகச்சிறந்த அப்பம்.
வெறும் மூன்று நாட்களே, நீடித்திருந்த இந்நிலை
வரும் மூன்றாம் நாளிலே, நிறைந்த மகிழ்ச்சியானது.
சிறுமையின் அப்பம் போன்ற இந்த அருமை ஜீவியம்,
மறுமையில் நிற்கத்தக்க மகிமையில் போய் முடியும்.
இதுவே, சிறுமையின் அப்பம்...
கூடவே கசப்புக்கீரை! ஏன்?
ஆம். அப்பம் பிட்டவருக்கே ஆசீர்வாதமான துன்பக் கிண்ணம்.
எரியும் நெருப்பில் என்னை ஊற்றி எரிப்பதைப் போல,
இவரா தேவகுமாரன்?
இவரை இறைவன் ரட்சிக்கட்டுமே!
இப்படி நம்மை மனம் கசந்து அசந்து போக செய்யும்
அவமான பேச்சே, இந்த கசப்பு கீரை!
சிறுமையின் அப்பமோ, கசப்புக்கீரையோ,
சிரசிலே முள்முடி தரித்தவர் முன்னே நடக்கையில் சிரேனே ஊர் சீமோனாகிய எனக்கு
சிலுவை ஓர் பாரமில்லையே!! இதே
சிந்தை எனக்குள் தொடர்ந்தால்
போகுமிடம் வெகு தூரம் இல்லையே!!! ஆமென்.
இது சிந்தனையை குறைக்கும் சித்ரவதை;
பரிபூரண இயேசுவின் பழுதில்லா சிந்தையை
பலநேரம் குலைத்து போட பகீரத்தனம் செய்து,
திட்டமிட்டு பின்னிய சதியே... முள்முடி:
கல்லை அப்பமாக்கு... என்பது சோதிக்கிற சிந்தனை;
வார்த்தையாகிய உணவே ஜீவன் அளிக்கும்... என்பது
ஜெயம் கொள்ளும் சிந்தனை;
கோபுரத்திலிருந்து தாளக்குதியும்... இது சோதிக்கின்ற சிந்தனை.
உன் இறைவனை பரிச்சை பார்க்காதே என்பது ஜெயம் கொள்ளும் சிந்தனை;
என்னை பணிந்து கொள் எல்லாம் உமக்குரியதாகும் என்பது சோதிக்கிற சிந்தனை.
இறைவனை மட்டுமே பணிந்து கொள் என்னை விட்டு தனித்து நில் இது ஜெயம் கொள்ளும் சிந்தனை;
தான் மரிப்பதற்காகவே வந்தேன் என்பது தெளிந்த சிந்தனை.
நீர் மரிக்கவே கூடாது என்று பேதுரு சொன்னது அறியாமையான அற்ப சிந்தனை;
அப்பாலே போ... சாத்தானே என்றது அற்புத சிந்தனை;
நல்ல போதகரே... இது சோதிக்கின்ற சிந்தனை;
நல்லவர் ஒருவரே... இது ஜெயம் கொண்ட சிந்தனை:
உமக்கும் ஓசைக்கும் ஆலயம் கட்டுவோம்... இது சோதிக்கிற சிந்தனை;
இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் மூன்று நாளில் அதை கட்டுவேன்.. இது ஜெயம் கொண்ட சிந்தனை.
நீர் எந்த அதிகாரத்தில் இதை செய்கிறீர்... என்பது போட்டு வாங்கும் சோதிக்கிற சிந்தனை:
யோவானும் தீர்க்கதரிசிகளும் எப்படி செய்தனர் என்பது பதில் அடங்கிய கேள்வியின் சிந்தனை
நீர் இறைவனின் குமாரனா? மனம் நோகும் சோதிக்கின்ற சிந்தனை:
உன் சித்தப்படியே ஆகட்டும்... என்பது மனதார ஜெயம் கொண்ட சிந்தனை:
தங்களின் யார் பெரியவன் என்ற சிஷ்யரின் முறுமுறுப்பு சோதிக்கின்ற சிந்தனை;
தாலத்தில் தண்ணீர் எடுத்து பாதங்களை கழுவினது ஜெயம் கொள்ளும் சிந்தனை;
மல்கூஸின் காதை வெட்டி யுத்தகளம் ஆக்க பார்த்தது சோதிக்கின்ற செயல்பாடு;
தேவை நான் தானே அவர்களைப் போக விடுங்கள்; இது ஜெயம் கொண்ட சிந்தனை.
சாத்தானின் உச்சகட்ட பகை... சோதிக்கிற;
கர்த்தரின் உன்னதமான அன்பு ஜெயம் கொண்ட சிந்தனை
சிலுவையின் உச்சத்தில்... சிரசினில் முள்முடி... இது ஏன்?
நற் சிந்தையை கெடுக்க... கடவுளின் சித்தத்தை மறக்க,
சித்திரம் போல தீட்டப்பட்ட, தீமை காரனின் திட்டமே இந்த முள்முடி;
சிறிதான தலை நோவும் பெரிதான மனநோவை ஏற்படுத்துமே...
வேதனையின் உச்சத்தில் இறைவனை மறக்கவும்,
கசப்பு கலந்த காடியின் சுவையால் கருத்தை மாற்றவும்,
அழுத்தி திணித்து பதிக்கப்பட்டதே,
இந்த அச்சமூட்டும் முள்முடி.
கூரான முள்... குத்தி பதிந்ததை காட்டிலும்,
சீரான இறை பக்தி ஆழப் பதிந்து இருந்ததினால்,
என் ஆண்டவரின் முள்முடி...
அதுவே அவருக்கு மணி முடி ஆகிப்போனது.
ஆமென்.
கவிஞர் அருள் வேளாங்கன்னி
அற்புதம் அதிசயம்
மோசேயின் வேண்டுகோளுக்கு
செங்கடலை பிளந்து வழி ஏற்படுத்தினீர்!
யோசுவாவுக்கு, சூரியன் சந்திரனை தரித்து நிற்க செய்தீர்???
தெப்போராள் காலத்திலே, வானத்து நட்சத்திரங்களை யுத்தம் செய்ய வைத்தீர்!
ஆகாஷ் ராஜாவுக்காக சூரிய ஒளியை
பத்துப் பாகை பின்னிட்டு விழச்செய்தீர்.
எசக்கியா ராஜாவுக்கு வாழ்நாளை நீட்டிப்பு செய்து பிழைக்க செய்தீர்!
எலியாவுக்கு வானத்திலிருந்து அக்கினியை விலை செய்து, வலியை எரித்தீர்!
தம்மைப் பற்றி உத்தம இருதயம் உடையவர்களுக்கு இப்படியாக அதிசயங்கள் செய்து காட்டினீர்!!
இதோ...
அதிசயமானவரின் வெளியேறப்பெற்ற ரத்தத்தால்
நாங்கள் எங்கள் கடவுளின்
அதிசயமாயும், அற்புதங்கள் ஆயும் இருக்கின்றோம்.
இல்லாதவைகளை இருக்கிறவைகளை போல
அழைக்கின்ற இறைவனாலே...
இல்லாதவர்களும் இழிவானவர்களுமான நாங்கள்,
விசுவாசத்தில் ஐஸ்வர்யவான்கள் ஆனோம்!
தரித்தவர்கள் ஆன நாங்கள், யா - வே யின்
சொந்த சம்பத்துகள் ஆனோம்!
என்னிலும் பெரிய காரியங்கள் செய்வீர்கள், என்று
உற்சாகப்படுத்தின, கற்ச்சாடி அற்புதர்
உன்னத பலனாய், என் கூட இருப்பதினால்,
அற்பமான நானும் அற்புதம் செய்பவர் ஆனேன்!
சர்வ
அற்புதம் அதிசயம்
மோசேயின் வேண்டுகோளுக்கு
செங்கடலை பிளந்து வழி ஏற்படுத்தினீர்!
யோசுவாவுக்கு, சூரியன் சந்திரனை தரித்து நிற்க செய்தீர்???
தெப்போராள் காலத்திலே, வானத்து நட்சத்திரங்களை யுத்தம் செய்ய வைத்தீர்!
ஆகாஷ் ராஜாவுக்காக சூரிய ஒளியை
பத்துப் பாகை பின்னிட்டு விழச்செய்தீர்.
எசக்கியா ராஜாவுக்கு வாழ்நாளை நீட்டிப்பு செய்து பிழைக்க செய்தீர்!
எலியாவுக்கு வானத்திலிருந்து அக்கினியை விலை செய்து, வலியை எரித்தீர்!
தம்மைப் பற்றி உத்தம இருதயம் உடையவர்களுக்கு இப்படியாக அதிசயங்கள் செய்து காட்டினீர்!!
இதோ...
அதிசயமானவரின் வெளியேறப்பெற்ற ரத்தத்தால்
நாங்கள் எங்கள் கடவுளின்
அதிசயமாயும், அற்புதங்கள் ஆயும் இருக்கின்றோம்.
இல்லாதவைகளை இருக்கிறவைகளை போல
அழைக்கின்ற இறைவனாலே...
இல்லாதவர்களும் இழிவானவர்களுமான நாங்கள்,
விசுவாசத்தில் ஐஸ்வர்யவான்கள் ஆனோம்!
தரித்தவர்கள் ஆன நாங்கள், யா - வே யின்
சொந்த சம்பத்துகள் ஆனோம்!
என்னிலும் பெரிய காரியங்கள் செய்வீர்கள், என்று
உற்சாகப்படுத்தின, கற்ச்சாடி அற்புதர்
உன்னத பலனாய், என் கூட இருப்பதினால்,
அற்பமான நானும் அற்புதம் செய்பவர் ஆனேன்!
சர்வ சிருஷ்டியும் அதன் சாதகமான நிலையில் ஜீவிக்க
சாதகமில்லாத உலகிலே புது சிருஷ்டியாய்
நான் உருவாவதும் சர்வ வல்லவரின் அற்புதம் தானே!
எத்துணை செயற்கை கோள்களாலும்
எட்டாவது தூரத்தில் அவர் இருந்தாலும்,
என் உள்ளம் திரியங்களையும், அதன் உணர்வுகளையும்
என்னில் உதிக்கிறதுக்கு முன்னரே, அதை உள் உணர்ந்து,
உடனடி நிவாரணம் செய்வதும், என்
உன்னதமானவரின் அற்புதம் தானே!!
கண்காணாத தம் வல்லமையை
கருத்தாளமிக்க சத்திய வசனத்தின் மூலம், என்
கருத்துக்கள் அனுப்பி, அது கரு உண்டாகி
நாடி நரம்பு எல்லாம் புத்துணர்வு உண்டாக்கி
புது பலன் அடைய செய்வது, எத்துணை ஆச்சரியம்
எப்பேர்பட்ட அற்புதம்!!
சிந்தையை மாற்றி... அதன் சித்தத்தை மாற்றி,
முந்தையப் பாவம் அகற்றி...
பந்தய பொருளை அடைய
பக்குவப்படுத்தும், பரிகாரியின் புண்ணியம்.
காலா காலத்துக்கும் விளங்கப் போகும் அதிசயமே!
முடவன் மர குச்சியில் இருக்கும்
கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டு,
மரம் ஏறி
அதைப் பெற முடியுமோ?
இதோ, டிஸ்காவின் கொடுமுடியில் (அழியாமை) நான்,
உயர்த்தப்படுவது அற்புதத்திலும்
அற்புதம் தானே!!
ஆமென்.
சிருஷ்டியும் அதன் சாதகமான நிலையில் ஜீவிக்க
சாதகமில்லாத உலகிலே புது சிருஷ்டியாய்
நான் உருவாவதும் சர்வ வல்லவரின் அற்புதம் தானே!
எத்துணை செயற்கை கோள்களாலும்
எட்டாவது தூரத்தில் அவர் இருந்தாலும்,
என் உள்ளம் திரியங்களையும், அதன் உணர்வுகளையும்
என்னில் உதிக்கிறதுக்கு முன்னரே, அதை உள் உணர்ந்து,
உடனடி நிவாரணம் செய்வதும், என்
உன்னதமானவரின் அற்புதம் தானே!!
கண்காணாத தம் வல்லமையை
கருத்தாளமிக்க சத்திய வசனத்தின் மூலம், என்
கருத்துக்கள் அனுப்பி, அது கரு உண்டாகி
நாடி நரம்பு எல்லாம் புத்துணர்வு உண்டாக்கி
புது பலன் அடைய செய்வது, எத்துணை ஆச்சரியம்
எப்பேர்பட்ட அற்புதம்!!
சிந்தையை மாற்றி... அதன் சித்தத்தை மாற்றி,
முந்தையப் பாவம் அகற்றி...
பந்தய பொருளை அடைய
பக்குவப்படுத்தும், பரிகாரியின் புண்ணியம்.
காலா காலத்துக்கும் விளங்கப் போகும் அதிசயமே!
முடவன் மர குச்சியில் இருக்கும்
கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டு,
மரம் ஏறி
அதைப் பெற முடியுமோ?
இதோ, டிஸ்காவின் கொடுமுடியில் (அழியாமை) நான்,
உயர்த்தப்படுவது அற்புதத்திலும்
அற்புதம் தானே!!
ஆமென்.
வாட்ட சாட்டமான உடலமைப்பும்
வாளெடுத்து போர் புரியும் திறமையும்
வாயினால் அனைத்தையும் அடக்கும் ஆணவமும்
வரப்போகிற தங்களின் மெசியாவின் ரூபமென்று
வணங்கா கழுத்துள்ள இசுரயேலர் எண்ணியிருந்த
தாங்கள் விரும்பத்தக்க ரூபமொன்றை எதிர் பார்த்திருந்தனர்.
இதோ.. எதிர் பார்த்த மெசியா வந்தார்;
வந்தவர் .. அடிக்கு அடி கொடுக்கிறவராய் இராமல்,
மனு கன்னத்தை திரும்பி காட்டும்
மாண்பு மிக்கவராய் இருந்தார்.
அவர்கள் விரும்பத்தக்க ரூபம் அவருகில்லை;
அவர்களின் விரும்பத்தக்க கேற்றவரை
இன்று வரை விரும்பித் தேடுகிறார்கள்.
சந்தை வெளியில் சத்தமிட்டு
வந்தனங்களை விரும்பி ஏற்று
சுயநிதி பரிசுத்தர் களாய் தங்களை எண்ணி
காசுக்கும், கனதுக்கும் கவனம் தந்து,
தங்களை கொண்டு, தங்களையே அளந்து கொண்ட,
மதியற்ற மத அதிகாரிகள் விரும்பின மெசியா ரூபம்,
இதோ... இந்த மனுஷ குமாரனுக்கில்லை.
இதோ... இவர் தச்சனுடைய குமாரன்... என்று
அவரை... தண்டிக்கவே சமயம் கண்டவர்களுக்கும்
அவர்கள் விரும்பத்தக்க ரூபம் அவரில் காணவில்லை.
ஆனாலும், இதோ என் ரூபா சௌந்தர்யர்
மற்றோர் விரும்பத்தக்க ரூபமாய் காணப்படாமல்,
தான் விரும்பத்தக்க ரூபமாய் - பிதாவின் மகிமையை கண்டு
அவர், விரும்பத்தக்க விதமாய்... நடந்து கடந்து போனாரே!!
இதோ.. விரும்புகிறதற்கு பதிலாய், வெறுக்கத்தக்க ரூபம்,
எனக்குள் இருந்த போதும்... பரந்த மனதுடனும்
திறந்த வசனத்துடன்... சிறந்த சீருக்கு... என்னை
சீர்படுத்தி... தான் விரும்பத்தக்க ரூபத்தை,
எனக்குள் பதிக்கும் என் ஆண்டவர் நாமம் வாழியவே!
நான்...இரும்புக்கொத்த இருதயமாயிருந்தும்... அதிலே,
கருபுக்கொத்த இனிமையை கூட்டி... தான்,
விரும்பத்தக்க ரூபத்தை... உருக்கின வெள்ளிச் சாறில்
பதிக்க தக்கதாக்கி... அதை மதிக்கத்தக்க தாக்கினார்.
என் பழைய முகம் உற்றுப்பார்க்க
எனக்கே பிடிக்கவில்லை.
அள்ளி .. அள்ளி.. அழகூட்டினாலும், பாவத்தோடு
அழுத முகமே.. எனது சுயரூபமாகும்;
எனக்கே பிடிக்காததை...எனது
உடனிருப்போர்... விரும்புவாரோ?
பூவோடு சேர்ந்த நாறும் மணப்பது போல்
பூரித்த புது முகரூபம்... என் நேசரோடு,
இணைந்ததினால் நான் பெற்றேன்!!
ஆம். அவர் இருக்கிற வண்ணமாகவே...
நான் அவரைத் தரிசிப்பேன்;
நான் விரும்பத்தக்க ரூபம் எண்ணில் வளர்கிறேன்;
இதோ... சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவராய்
என் கர்த்தர் மகிமையில் வெளிப்படுவார்!!
அப்போது... எல்லோரும் விரும்பத்தக்க ரூபம்
எனக்குள் இருக்கும்!!
ஆமென்.
மாம்சத்தில் வந்த கர்த்தரை கானாதவர் பவுல்
கெத்சமனேயில் கூட இல்லாதவர், பவுல்;
மகிமையில்உயிர்த்த இயேசுவை முகமகமாய் தரிசித்தவர் பவுல்.
அகால பிறவி என்று அறிக்கையிட்டு அத்தாட்சி பெற்றவர் பவுல்;
நியாயப் பிரமானத்தில் வைராக்கியமுள்ள, சவுல்
நியாயமான பக்தி கேதுவாக திருப்பட்ட பவுல்;
நியாய சங்கத்தின் வாதத்தில் சாதுர்யமான.. பவுல்;
நியாத்தீர்ப்பு தேவ சபையில் துவங்குகிறது என்று அறிக்கையிட்டு பவுல்.
பழைய பஸ்காவின் பேசும் பொருளாக பல இருந்தாலும்,
புது சிருஷ்டியின் பாஸ்கா பற்றி புதிய அர்த்தம் பேசும் சீஷன், அப். பவுல்;
தலைமுறை தலைமுறையாக மறைவாயிருந்த தேவ ரகசியத்தை...
இறை முறை தவறாமல் விளக்கை காட்டினவர் பவுல்;
அவனுடைய உத்தியோகத்தை வேறொருவன் பெறுவான்
என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேறும் பொருளானவர் அப். பவுல்.
வசதியில் தாழ்ந்திருக்க தெரிந்த பவுல்,
குறைவுகளில் வாழ்ந்திருக்கும் தெரிந்த பவுல்;
பாவிகளில் பிரதானமானவன் என்ற பவுல்;
பாவங்களின் வகையை பட்டியலிட்ட பவுல்.
வலதுபுறம் நான்.. இடது புறம் நீ... என்று
போட்டி போட்டவரெல்லாம் போக முடியாத இடத்துக்கு
வலது பாரிசத்தில் வீற்றிறுருப்பவரின் வலது கரத்தில்
வசீகரா நட்சத்திரமாக முதலிடம் பெற்றவர், அப். பவுல்.
ஆம். போட்டியினாலும், வாதினாலும் ஒன்றையும்
ஒன்றையும் பெற முடியாது என்ற போதனையின்
பொருளடையாளம் ஆனவர்... அப். பவுல்
பெயரையும் மதிப்பையும் இழந்து
துடைத்து போடப்பட்ட அழுக்கை போல், எண்ணப்பட்டவர
பந்தையப் பொருளை அடையும் படிக்கு அனைத்தையும்
நஷ்டமும் குப்பையும் என்று எண்ணி தள்ளியவர் அப். பவுல்
மூன்று வானங்களை கடந்தவர், அப். பவுல்
மூன்றாம் வானமாகிய பரதீசை கண்டவர், பவுல்
மூன்று யுகங்களின் தீர்மானத்தை, அரபு தேசத்தில்,
மூன்று வருஷமாய் காற்று கொண்டவர் அப். பவுல்
புற ஜாதிகளுக்கான புனிதராம், அப். பவுல்
ஒரு ஜாதியாம் யூதர்களுக்கு மரிக்கவும் துணிந்தவர் பவுல்
தன்னை பின் பற்றுங்கள் என்ற தைரியசாலி, பவுல்;
தான் ஆகாதவனாய் பொகாதபடிக்கு பயந்திருக்கும் பவுல்;
படிப்பு திறன் இருந்தாலும்,
அந்த பெலத்தினால் அல்ல;
பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால்;
ஜெயம் கொண்டவர் அப். பவுல்
விசுவாச வீரர்களின் பட்டியலை விளக்கி காட்டினவர் பவுல்;
கர்த்தருடைய பாடுகளில் குறைவானதே பட்டவர், அப். பவுல்;
காலமெல்லாம் கண்களில் நீர் வழிந்து உறுத்தினாலும்;
கர்த்தரை மட்டுமே நோக்கி பார்த்து;
உடன் கர்த்தரானவர் அப்போஸ்தலர் பவுல் அடிகளார்!!
ஆமென்.
கவிஞர் அருள் வேளாங்கன்னி
காணிக்கை பெட்டியில் அள்ளிப் போட்டது போல,
கருத்தாய் பலி செலுத்தும் உமது கண்ணியவான்கள் மத்தியிலே;
இதோ... இக்கட்டான இடுக்கண்களுக்கு மத்தியில்,
இரண்டு காசுகள் போட்ட ஏழை விதவை போல,
இயன்றதைச் செலுத்துகிறேன் ஏற்றுக்கொள்ளும்,
என் எஜமானரே.
கூப்பிட்டவுடன் கதவை திறக்கும் உமது சமூகத்தில்,
தகுதியுள்ள விருந்தினர்களுக்கு தடையில்லாமல் போஷிப்பவரே.
இதோ... விடாமல் கதவை தட்டும் ஏழைப் பெண் போல,
பெனவீனமான மாம்சக் குறைவுகளுடன் நான் இருந்தாலும்,
பெலமுள்ள இருதய தைரியத்தால்...
உம் பெலன் வேண்டி தயவை கேட்கும் எனக்கு
கருணை காட்டுங்கள் இயேசு நாதரே.
கணமிக்க பரிசேய கனவான்கள் மத்தியிலே
கபடமில்லா பரிசுத்த சீஷர்களின் அருகாமையில்,
பந்தியிலே நீர் பசியமர்கையிலே.. இதோ
பாவியாகிய பெண்ணின் கண்ணீருக்கு இறங்கி,
பாவத்தை மன்னித்து சமாதானத்தை பரிசளித்தவரே.
நொருங்குண்ட எண் இருதயத்தையும்
நருங்குண்ட எண் நிலைமையையும்,
கண்ணோக்கி பார்த்து உயிரூட்டுங்கள் என் ஆத்தும நேசரே
இதோ... இஸ்ரயலை மீட்டு இரட்சிபார்,
நாங்களும் அவரோடே இருக்கையில் அமைர்வோம்.
என்று, எண்ணி இருந்தவர்களுக்கு,
எம்மா போகிற வழியில்,
இருதயம் கொழுந்து விட்டு எரியும் அளவுக்கு
இரகசியத்தை விளக்கி சொல்லி தேற்றினவரே...
எதிர்கால பயத்தினால்.. அப்படியே
ஏமாற்றும் சுயத்தினாலும்.. சில நேரம்
கலங்கி தவித்து,நான் கவலை படுகையில்,
உமது புண்ணியத்தின் பூரணத்தால், நான்
புத்துணர்வு அடையும் படி, என்னை
புதுப்பியும் என், மணவாளரே.
பொய்க்காத கிருபாசன கிருபையும்
பொங்கி வழியும் இரக்கத்தின் அருமையும்
ஓங்கி செழிக்கும் நீதியின் நிச்சயமும்,
கொடுத்து என்னை தாங்கி பிடித்து,
நீர்... கொள்ளும் வரை, என்னை
காப்பாற்றும், எண் தயாபரரே!!
ஆமென்.
கவிஞர் அருள் வேளாங்கன்னி
ஐயா, பேதுரு அவர்களே...
ஆர்வமுள்ள பேதுரு நீர்
ஆசீர்வதிக்கபட்ட பேதுரு
கபடமில்லா பேதுரு,
கட்டுக்கடங்காத பேதுரு;
முந்திப்பேசும் பேதுரு,
முதிர் வயது பேதுரு;
கணம் பெற்ற பேதுரு,
கடிந்து கொல்லப்பட்ட பேதுரு;
தைரியமான பேதுரு,
மறுதலிக்கும் பேதுரு.
தன்னம்பிக்கை பேதுரு,
தன்னலம் அற்ற பேதுரு;
பட்டயம் வீசும் பேதுரு,
பதறியோடும் பேதுரு;
அனுபவமிக்க பேதுரு,
அதை மறந்து போகும் பேதுரு;
தண்ணீர் மேல் நடந்த முதல் அபூரன மனிதன் பேதுரு,
தன்னிலை உணர்ந்து உதவி தேடும் பேதுரு.
நீர் ஜீவனுள்ள கடவுளின் இறைமகன் என்று அறிக்கையிட்ட பேதுரு,
ஜீவ வசனம் உம்மிடமுண்டு;
யாரிடத்தில் நாங்கள் போவோம்?
யார் இருக்கிறார் எங்களுக்கு...
என்று அடைக்கலமான பேதுரு.
குருவை மிஞ்சி பேசும் குறும்பு சீடன் பேதுரு,
குற்றம் உணர்ந்தால், நீரே அறிவீர்
என்று நீர்த்து போகும் பேதுரு.
பரிபூரண கண்களின் கருணைப் பார்வையை
கடைசியாய் பார்த்த பேதுரு
உற்றுப் பார்த்த உளிப் பார்வையால்,
செதுக்கப்பட்டு மனம் கசந்து அழுத்த பேதுரு.
முடங்கி போன பேதுரு,
மீண்டும் மீன் பிடித்த பேதுரு;
திறந்த கள்ளை செய்தி கேட்டு விரைந்து ஓடிய பேதுரு;
எம்மாவு வழியிலே, இருதயம் கொழுந்து விட்டு எறிந்த பேதுரு;
ஜீவாதிபதியை கொலை செய்தீர்
என்று சாட்சி யிட்ட பேதுரு;
இரண்டு சாவி பெற்ற பேதுரு... அதை
இரு திறத்தாருக்கு (யூதர் + புறஜாதி) திறந்து விட்ட பேதுரு.
தலை கீழாய் சிலுவை மரணம் கண்ட பேதுரு;
மகிமையில் கர்த்தரோடு மகிழ போகும் பேதுரு;
நிருபங்கள் வழியாய் நமக்கு புரியவைக்கும் பேதுரு;
ஐயா பேதுரு...
மனித பெலவீனத்தையும்
அசட்டு தைரியத்தையும்
சுய நம்பிக்கையும்
மறுதலிக்கும் மீருதலையும்
மனம் கசந்து அழுதலையும்
புனிதமான புதுப்பித்தலையும்
இதோ... உம்மைப் காண்கிறோம்,
பாஸ்கா காலத்தின் பேசும் பொருள் நீர்
சகோதரனாகிய பேதுரு அய்யா,
நம் ஆண்டவர் பரிபூரணமான முன்னடையாளம்,
நீர்... அபூரணதிற்கு முன் உதாரணம்;
பூரணத்தை உயர்த்தி.. பூரணத்தை அரவணைக்கும்
நம் கடவுளின் திவ்ய பிரகாசத்தை
நீர் இப்போது தரிசிப்பது போல,
நாங்களும் தரிசிப்போம், நம்முடைய
தலையானவரின் தலையீட்டினாலே!!
உம்மோடு உறுதியாய் நிற்கும்
மீதி பதினொரு அஸ்திபார கற்களுக்கும்
எங்கள் வாழ்த்துதலை பகிருங்கள்
சகோதரனாகிய பேதுரு அய்யா அவர்களே!
ஆமென்.
கவிஞர் அருள் வேளாங்கன்னி
இனிப்பு OR இனிமை
இனிப்பு... இது சந்தோஷத்தின் வெளிப்பாடு
பிறந்தாலும், ஜெயித்தாலும், பூமிக்குரிய
மகிழ்ச்சியின் வெளிப்பாடே - இனிமை
இடுக்கமான பாதையில் விரும்பிப் பிரவேசித்தவருக்கு
இறுக்கமான தருணங்கள் அதிகம் வருகையில்,
தேன் போன்ற ஆசை வார்த்தைகளும்தற்காலிக நிவாரணமாக சிற்றின்ப சந்தோஷங்களும்
சிறு பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும்வழியோர மிட்டாய் கடைகளைப் போல
நமது கவனத்தை மாற்றும் கண்ணிகளே;
நமது ஆண்டவரும் காடியை குடிக்க மறுத்துவிட்டாரே!
மரண வேதனையானாலும், காடியின் சுவை கருத்தை மாற்றுமே;
வலியும் வேதனையும் மறக்க செய்தாலும், அவை
தேவ தொடர்பை துண்டிக்க செய்யுமே!
தெளிதேனாகிய சத்தியம் தரும் இனிமையே, அன்றி,
சிற்றின்ப சந்தோஷ தேன்... அது நமக்கு என்றும் வீண்.
மயக்கும் மாய இன்பங்கள், நம்மை நாசமாக்கி போடும்.
கசப்பு
ஒவ்வாமை போல ஒதுக்கப்படுதலே - கசப்பு
கசப்பை போல விரும்பப் படாத சூழ்நிலையும்
சாதகமில்லாத கசப்பான அனுபவங்களும்
நம்மை... பாப்பில்லாத வாழ்வுக்கு வழிநடத்தும்.
வேப்பங்காய் கடந்தாலும், அதுவே
பழுக்கும் போது இனிக்கும்: அதுபோல,
அதிக கசப்பு, வினை மாறி இனிப்பு சுவையை தரும்.
கசப்பு கீரையை தொட்டுக் கொண்டால் மட்டுமே,
அந்த கசப்பை மாற்ற அதிக அப்பம் உண்ண முடியும்.
அதுபோலவே, கசப்பும் - கசக்கிப் பிழியும் துன்பமும்மன்னாவை அதிகதிகமாய்த் தேடச் செய்யும்.
ஆம். உபத்திரவம் - மாறு வேடத்தில் வரும் ஆசீர்வாதங்களே.
புளிப்பு
நம்மை ஈர்க்கும் சுவை இது
நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சுவை இது.
ஆனால், உடலுக்கும் குடலுக்கும் ஆபத்தான சுவை இது.
கொஞ்சமாக இருந்தாலும்... நஞ்சாக மாற்றும் வஞ்சக சுவை புளிப்பு;
சிருபுள்ளியான பாவமும், நம்மிலே
கரும்புள்ளியை உண்டாக்கும் சூழ்ச்சியான சுவை இது.
சில நேரம் புளிப்பு மருந்து ஆவதைப் போல,
பாவ அனுபவம் நம்மை, பரிசுத்தமாக பக்குவப்படுத்தும்.
பாவமாம்ச புளிப்பு... நடிக்கும் பரிசேயப் புளிப்பு;
சாதுர்யமான பேச்சு என்னும் சதுசேயப் புளிப்பு;
சுயநலத்துக்காக ஏமாற்றும் ஏரோதின் புளிப்பு;
பரம்பரையாக பழகிப்போன பழைய புளிப்பு.
இப்படி புளிப்பை அகற்றினால் வருவது அக்களிப்பு.
உப்பு
சேர்க்கப்பட வேண்டிய சுவை
தான் கரைந்தாலும்... மற்றவை
கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் பண்பே உப்பின் தன்மை.
உப்பு... உணவின் சுவையை கூட்டும்,
பூமிக்கு உப்பான உண்மை உள்ளோரின் நற்செயல்,
வரப்போகும் மனுகுலத்தை காப்பாற்றப் பயன்படும் கருவியாகும்.
சாத்தியமாகிய உப்பு, புது தோண்டியாம்;
புது சிருஷ்டியின் மூலம் கொட்டப்படும் போது,
குடிக்க முடியாத துவர்ப்பு நீர்.(அசத்தியம்)
தெளிந்த நதி நீராய், பூமியின் குடிமக்களை போஷிக்கும்;
ஆம்... உப்பிட்டவரை (கடவுளை) உலகம் உள்ளளவும் மறக்காது.
சேர்க்கப்பட கூடாத சுவை - தேனும் புளிப்பும்.
சேர்க்கப்பட கூடிய சுவை: உப்பு.
பிடிக்காவிட்டாலும் ஏற்க கூடிய சுவை: கசப்பு
காரமும் துவர்ப்பும் கடுஞ் சுவை ஆனதைப் போல,
எரிச்சலும் சகோதரப் பகையும்;
சுயநலத்தின் சூனியமான சுவைகளாகும்.
ஆமென்.
கவிஞர் அருள் வேளாங்கன்னி
திண்டுக்கல்
நன்மையல்லாத எதையும்... எப்போதும்
செய்யாதவர் யா - வே கடவுள்,
நல்ல மேய்ப்பராக கூடவே இருந்து... நம்மை
நன்றாக விசாரிக்கிறவர் , நமது இயேசு நேசர்;
சாகாவே சாவாய் என்ற தண்டனை மட்டுமில்லாதிருந்தால்,
இந்நாள் வரை, உயிரோடும் நீங்காத வலியின்
வேதனையோடும்... ஈனக் குரலோடும்...
கெட்டுப் போன மனுக்குலம் மறுக்காமல்
பூமியெங்கும் - பழைய குப்பைகளை போல
பரவிக் கிடக்கும் கொடூரம் மிஞ்சி இருக்கும்;
ஆம்... மரணம் என்பது வேதனையின் முடிவே:
எழுபதோ அல்லது பெலத்தின் மிகுதியால் என்பதோ,
அதுவே போதும்... என்று கடவுள் இரங்கி சொன்னதே,
செத்துக் கொண்டே சாவை.. என்னும் ஞானமான தீர்ப்பு;
ஆம்... கர்த்தருடைய வார்த்தை என்னும் ஞானமான தீர்ப்பு;
நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு
உழைத்தே உன் உணவை பெறுவாய்
என்பதும் நல்ல வார்த்தை தானே;
எப்படி எனில்;
எல்லாத் தீமைக்கும் சோம்பேறித்தனம் தாய்;
சோம்பித்திரியும் மனிதர்களே தீமையின் கருவிகள்;
சுயநல சிந்தை, கடின உழைப்பின் மூலம் கவனம் மாறும்
அதனாலே பாவக் கருத்தும் மாறும், மனத்திருத்தமும் வரும்;
உணவுக்காக உழைத்து.. அதைப் பெறு என்ற
கர்த்தரின் கட்டளை.
பாவச் சந்ததியின் அழிவைக் கொஞ்சம் தள்ளி போடுதே;-
ஆம். பசியின் மூலம்...
பாவத்தின் தீவிரத்தைக் குறிக்கும் கர்த்தரின் வார்த்தை நல்லது தானே;
நற்குல திராட்சை செடியில் நான் ஒரு கொடியாக
சத்துவ சாரம் பெற்று செழித்தோங்கி
பற்றிப் பிடித்து படர்ந்த போது,
கனிதரும் அரும்பில்லாமல் கண்ணுக்கினிய
வெறுங் கொடியான என்னை திருத்தும் படி,
என் ஆதாரங்களை அறுத்துப் போட்டு
நற்பெயரையும், பற்றா தாரங்களையும் அவர்,
கலைந்த போது, உண்மையாகவே நான் களைத்து போனேனே!
பின்பு தான் கண்டேன்.. அதிக கனிகள் தரும் படி,
எனக்குள் அன்பு என்னும் அரும்புகள் அரும்பியது;
ஆம், என்னில் கிளை கழித்து, என் பிழை நீக்கி,
விளைச்சல் எடுக்க செய்த, எண் தோட்டக் காரரே!
நீர் எத்துணை நல்லவர்!!
இதோ, என் இனிய நேசர் இயேசு கிறிஸ்து,
யாக்கோபை புத்திர சுவிகாரத்துக்கு
ஆயத்தப் படுத்தின ரெபேக்கா போல,
எஸ்தர் ராஜத்தியை செங்கோலை உயர்த்தி,
ஆதரித்த அகஸ்வேரு ராஜாவை போல,
தன் கட்சிக் காரரை காப்பாற்றும் நீதிக்காக,
தமது புண்ணியத்தை தந்து பரிந்து பேசும் புண்ணியராக,
பதினொரு மணி ஆனாலும் தன்னுடைய வயலில்,
பணிபுரியும் வாய்ப்பை தந்து துரிதப்படுத்தும் தூயவரே!
கரடு முரடான கல்லாக நான் இருந்த போதும்,
கைக் கொண்டு மெருகேற்றி ஆலயக் கல்லாய்
என்னை அரங்கேற்றும் சிற்பாசாரியாக,
விசுவாசத்தை எனக்குள் துவக்கி
அதை என் சுவாசமாகவே விசாலமாக ஆக்கி
வெற்றி கரமாக அதை முடிக்கின்றவரே..
என் இனிய நேசர் இயேசு கிறிஸ்து!!
இங்கே திரும்பினாலும் எண் இயேசுவே...
எனக்கு தெரிகிறவராக இருக்கின்றார்!
காலப் போக்கில், அவருக்குள்ளாகவே
நான், அவராகவே மாறிக் கொண்டிருக்கிறேன்;
ஆம், என் நேசர் எனக்கு
இருதயத்தில் தடவப்பட்ட தேனைப் போல,
இயல்பாகவே எனக்குள் இனிக்கின்றார்!!
ஆமென்.
கை, கால்களை சுத்தம் செய்து,
தலையையும் உடையையும் சரி செய்து,
பார்வைக்கு ஒழுங்காய் ஒப்பனை செய்வது,
வெளிப்புறமான சரீர ஒழுக்கம்;
இருதயத்தில் பொல்லாப்பு தோன்றாமல்,
தோன்றினாலும் அதை தொடரவிடாமல் துரத்தி,
அடுத்த எண்ணங்கள் அலைபாய்வதை
அகற்ற துடிக்கும் ஒழுங்கே...
உட்புறமாக ஆத்தும ஒழுக்கம்;
உள்ளத்தின் உள்ளுக்குள்ளே,
உதிக்கின்றை உணர்வுகள் (நினைவுகள்)
சிந்தையிலே... சிறப்பாகி,
சொல்லாகி... பெருகிச் செயலாகி,
பாவம் செழிப்பாகி... அதுவே தொடர் விளைவாகி,
விரைவுமாகி போவதே ஆத்தும அசுத்தம்;
தனிமனித ஒழுக்கமே... சமூகத்தின் செழிப்பு:
புதிய மனதுக்கோ... இது ஜீவனுக்கான விழிப்பு:
மனதைக் கட்டுப்படுத்தி ஆளும் இந்த ஆத்தும ஒழுக்கமே,
பட்டனத்தைப் பிடிப்பதை பார்க்கிலும்
பராக்கிரமமான வெற்றியாகும்.
யாருமே பார்க்காத இடத்தில் நாம் எடுக்கும்,
இருதயத் தீர்மானம்... ஆத்தும ஒழுங்கின் அடையாளம்;
எவருக்குமே தெரியாது... என்றாலும் பாவம் செய்ய
நாம் தவிர்க்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் - அவை,
சமாதானத்தை மனதுக்குள் தரும்
சந்தோஷ கீதங்களாகும்.
சரீர ஒழுக்கம் சுத்தத்தை தருவது போல,
ஆத்தும ஒழுக்கம் சுகந்த வாசனையாம்
நீதியை மலரச் செய்யும்.
மலர்கள் மலர்ந்து விரிவதை போல,
மனதுக்குள் தேவ சமாதானம் இதமாய்ப் பரவும்;
சுத்தமான பார்வை இருதய ஒழுக்கத்தை,
பரிமளம் போல பரவச் செய்யும்.
தீமை பேசாத நாவு... மனதுக்குள் மறைந்திருக்கும்
பெருந்தன்மையை வெளிப்படுத்தும்,
புறம் பேசுதலை விரும்பாத காதுகள்,
அவை, ஆத்தும ஒழுக்கத்தின் அடைக்கப்பட்ட கதவுகள்.
சத்தமாய் கூட்டி பெருக்கின வீட்டில்,
அசுத்தமான அழுக்குகள் உடனே அகற்றப்படும்,
அது போல, ஆத்தும ஒழுங்குள்ள இருதயத்தில்,
அக்கிரமம் அடிக்கடி அகற்றப்படும்...
என் ஆண்டவருடைய புண்ணியத்தால்!
சுத்தம் செய்ய சத்தியமுண்டு... அதிலே
சுகந்த வாசனை வீச பரிசுத்த வல்லமையுண்டு,
நல் யுத்தம் செய்ய மனதானால்,
பரிசுத்த முத்தம் தரும் வாழ்த்துதல் நமக்கு உண்டு:
ஆம்; மனதின் ஒழுக்கமே...
மகிமையை பெற இலக்காகும்!
Br. Arul Velankanni,
Dindigul
இதோ நான் நீசன்;
நான் உமக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்:
என் கையினால் என் வாயை பொத்திக் கொள்கிறேன்.
யோபு 40:4
நீர் என்னை அந்நியரும், பரதேசியுமாய் இருக்கா சொல்லி இருக்க,
இங்கேயே நான் ஆட்சி அதிகாரமும், சொகுசும்
விரும்பியவனாய் இருந்தால் எப்படி ஆகும்?
பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க
நீர் சொல்லி இருக்க,
பூமியின் ஐஸ்வர்யங்களின் மேல் என் கவனம் திரும்பி,
விருதாவாய்ப் பாடுபடுவதின் பலன் என்ன?
சொந்த சம்பத்தாய் நீர் என்னை இருக்க சொல்ல,
உலக பொருளை சம்பாதித்து பொத்தாம் பையிலே,
அதைப் போட்டு வைப்பதால், பிரயோஜனம் எனக்கென்ன?
பூமிக்கு உப்பாயிருங்கள் என்று நீர் சொல்ல,
சத்தியத்தில் சாரமற்று உடன்படிக்கையை
முறித்து ஜீவிப்பதில் என்ன பலன் எனக்கு?
நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகள் என்று,
நீர்... எங்களை அழைக்க,
புது வெளிச்சம் தேடி , அது பார்வைக்கு இனிமை,
என்று ஏவாளைப் போல பேசுவது, பாவமன்றோ!
என்னை நோக்கி பாருங்கள் என்று நீர்,
என்னை பார்த்து சொல்லி இருக்க,
சூழ்நிலையின் கவர்ச்சியை விரும்பி நான்
பராக்கு பார்ப்பது ஆபத்தாகுமே;
அன்பாயிருங்கள் என்று நீர் அழுந்திச் சொல்லி இருக்கா,
வம்பலத்தினால் நான் தானே அம்பலப்படுவேன்!
ஒன்றாயிருங்கள் என்று நீர் சொல்லி இருக்க,
ஒவ்வொன்றிலும் நான் குறை கண்டால்,
குற்றம் பார்க்கின் சுற்றமில்லாமல் போகுமன்றோ!
விழித்திருங்கள் என்று என்னை எச்சரித்திருக்க,
கனவு காணும் கண் மயக்கத்தில் நானிருந்தால்,
கண் சொருகின குறுடனாவேன் அன்றோ!
கொடுங்கள் - உங்களுக்கு கொடுக்கப்படும்
என்று நீர் சொல்லி இருக்கா,
பிசினித்தனம் பண்ணி பளனத்று போவானேன்!
கிரமமாய் ஒழுங்கை நடப்பியுங்கள் என்று
நீர் கற்றுக் கொடுக்க,
அக்கிரமமே, எண் மனதின் விளைவானால்,
நான் ஆகாதவனாய் தானே போக வேண்டி இருக்கும்?
யாரையும் நியாயம் தீர்க்காத்ருங்கள் என்று
நீர்,
சொல்லி இருக்கும் போது,
குறை கண்டு பிடிப்பதே எண் கருத்தயிருந்தால்,
நிறைவை நான் அடைவதெப்படி?
பழி வாங்குதல் எனக்குறியது என்று நீர் சொல்ல,
கூட இருந்தே குழி பறிக்கும் சிறு நரியாய்,
நான் துணிந்தால், பிடிபட்டு போவேனே!
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து,
கர்த்தர் யார் என்று சொல்லாத படிக்கும்,
தரித்திரப் படுகிறதினால் திருடி, என் கடவுளின்
பெயரை வீனிலே வழங்காத படிக்கும்,
என் படியை எனக்கு அளந்து என்னை போஷித்தருளும்.
ஆமென்.









Comments
Post a Comment