EPHRAIM
எப்பிராயீம் – ஒரு பெயரின் பின்னால் இருக்கும் கதை
📖 வாசிக்க வேண்டிய முக்கிய வேத பகுதிகள்:
ஆதியாகமம் 41:50–52
ஆதியாகமம் 48:1–20
எமது பூமிக்குரிய வாழ்வில், மனிதர்களாகிய நாம், ஒருவரில் இருந்து மற்றோரை வேறுபடுத்திக் காணவும், துல்லியமாக ஒருவரை அடையாளங்கண்டுகொள்ளவும் வேண்டி, குழந்தைப் பருவத்திலேயே ஒருவருக்குப் பெயர் சூட்டுகிறோம்.
இது முழுக்க முழுக்க பெரியோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் செயற்பாடாக இருக்கிறது. ஒருவர் பெரியவராகிய பின், தனக்குச் சூட்டப்பட்ட பெயரில் அவருக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் வேறு பெயரைத் தமக்கு மாற்றிக்கொள்ள அரசாங்க அனுமதி உண்டு. சில வேளைகளில் பெரியவர்கள் கூட ஒருவரின் பெயரை மாற்றிவிடுவதும் உண்டு.
ஆனால், வேதாகமத்தில் சில பெயர்கள் அடையாளங்களாக மட்டுமின்றி, அந்தப் பெயர்களுக்குப் பின்னால் ஒரு வரலாறும், அனுபவமும், ஆவிக்குரிய செய்தியும் கூட மறைந்திருக்கின்றன.
வேதாகமத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தாது. ஆனால் சிலரில் இது செயல்பாட்டில் இருந்ததை வேதாகம வரலாறு மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஒரு பெயர்தான் “எப்பிராயீம்.”
இந்த எப்பிராயீம் என்பவர் யார்?
அவர் ஏன் அந்தப் பெயரைப் பெற்றார்?
அவருடைய பெயருக்குப் பின்னால், யாக்கோபின் 11வது குமாரன் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்தது என்ன?
எப்படி யாக்கோபின் ஆசீர்வாதத்தில் எப்பிராயீம் தனது மூத்த சகோதரனான மனாசேவுக்கு முன்னால் வைக்கப்பட்டான்?
போன்ற இவை யாவும் வெறும் குடும்ப வரலாற்றைக் குறித்த கேள்விகள் மட்டும் அல்ல.
எப்பிராயீமின் வாழ்க்கையைத் தொடர்ந்து நாம் வேதாகமத்தில் வாசிக்கும்போது, ஒரு மனிதனின் பெயரிலிருந்து ஒரு கோத்திரம் உருவாகி, பின்னர் அந்தக் கோத்திரத்தின் பெயரே ஒரு பெரிய தேசத்தின் அடையாளமாக மாறுவதையும், அதன்பிறகு அந்தப் பெயர் தேவனை விட்டு விலகிய ஒரு நிலையைச் சுட்டிக்காட்டுவதையும் நாம் காணப்போகிறோம்.
எனவே, எப்பிராயீமின் வரலாற்றை / கதையை அவரது வீழ்ச்சியிலிருந்து தொடங்கப் போவதில்லை. மாறாக, அவர் பெற்ற ஆசீர்வாதத்திலிருந்தே தொடங்கப்போகிறோம்.
ஏனென்றால், கடவுள் உயர்த்திய ஒருவன் எவ்வாறு வாழ்ந்தான் என்பதையும், அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் எவ்வாறு அவனுடைய தலைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் புரிந்துகொள்ளாமல், பின்னர் நாம் காண இருக்கும் எப்பிராயீமின் வரலாற்றையும் தீர்க்கதரிசனங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.
இந்த ஆய்வில்,
🍁 எப்பிராயீம் என்ற பெயரின் தோற்றம்,
🍁 அதன் பொருள்,
🍁 அவன் பிறந்த சூழ்நிலை,
🍁 யோசேப்பின் வாழ்க்கையோடு அவனுடைய தொடர்பு,
மற்றும்
🍁 யாக்கோபின் விசேஷ ஆசீர்வாதம் ஆகியவற்றை ஆராயப்போகிறோம்.
ஒரு பெயரிலிருந்து தொடங்கும் இந்தப் பயணம், இறுதியில் ஒரு ஆவிக்குரிய எச்சரிக்கையிடம் நம்மைக் கொண்டு போய் சேர்க்க இருப்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.
வாருங்கள்....
“எப்பிராயீம் — ஒரு பெயரின் பின்னால் இருக்கும் கதை” எனும் இக்கட்டுரையை வேதாகமத்தின் வழியாக ஆராயத் தொடங்குவோம்.
பகுதி – 1
“எப்பிராயீம்” என்ற பெயர் முதலில் எப்படி வந்தது?
இதை அறிந்துகொள்ள நாம் ஆதியாகமம் 41:50–52 பகுதியை வாசித்தோமானால் அறிந்துகொள்ளலாம்.
யோசேப்பின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்ட காலம் அது. அவன் எகிப்தில் உயர்த்தப்பட்டிருந்தான். பஞ்சம் வருவதற்கு முன்பாக, அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்.
“யோசேப்பு மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்... இரண்டாமவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்...” (ஆதி. 41:51–52)
இங்கு முதலில் கவனிக்க வேண்டியது பெயரின் பொருள்.
யோசேப்பு எப்பிராயீம் என்று ஏன் பெயரிட்டான் என்பதற்கான பதிலை அவரே கொடுக்கிறார். பாருங்கள்.
“கடவுள் என்னை என் வருத்தத்தின் தேசத்தில் பலுகப்பண்ணினார்.”
(ஆதயாகமம் 41:52)
“எப்பிராயீம்” என்ற பெயர், எபிரெய אֶפְרַיִם (Ephrayim) என்பதிலிருந்து வருகிறது.
இது “பலனளித்தல் / பலுகுதல் / கனிகொடுப்பது” என்ற கருத்தோடு தொடர்புடையது.
ஆனால் இங்கே ஒரு ஆழமான விஷயம் இருக்கிறது.
யோசேப்பு தனது கடந்த காலத்தை மறந்துவிடவில்லை.
சகோதரர்களால் வெறுக்கப்பட்டது. குழிக்குள் போடப்பட்டது. அடிமையாக விற்கப்பட்டது. போன்ற சொந்த சகோதரர்களால் அவருக்கு நேரிட்ட கொடுமையான வாழ்க்கைச் சூழ்நிலையினூடாக, பின்பு அவர் அந்நிய தேசத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். பொய்யான குற்றச்சாட்டால் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால்...
அங்கு ஓர் உயர்வு அவருக்கு பார்வோனால் வழங்கப்பட்டிருந்தும், தன் சகோதரர்களால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அவர் நினைவுக்குக் கொண்டு வருகிறார்.
அதினிமித்தம் அவருக்கு பல வருத்தங்கள் இதயத்தில் தேங்கி நின்றதை நினைவுகூர்ந்து, தான் அப்பொழுது அந்நிய தேசத்தில் உயர்வாய் வாழ்வது போல் இருந்தும், உள்ளுக்குள் இருந்த புளங்காகிதம் அந்த “வருத்தத்தின் தேசத்திலேயே” தேவன் அவரைப் பலுகப்பண்ணினார் என்பதின் “நினைவுகூரலாக,” தன் இளைய குமாரனுக்கு எப்பிராயீம் என்று பெயர் சூட்டுகிறார்.
அதனால், எப்பிராயீம் என்பது வெறும் ஒரு குழந்தையின் பெயர் மட்டுமல்லாது, அது யோசேப்பின் வாழ்க்கையில் தேவன் செய்த மாற்றத்திற்கான ஒரு நினைவுச் சின்னம்.
வருத்தம் இருந்த இடத்தில் பலன்.
இழப்பு இருந்த இடத்தில் பெருக்கம்.
அடிமைத்தனம் இருந்த இடத்தில் உயர்வு.
இதுதான் எப்பிராயீம் கதையின் ஆரம்பம்.
ஆகிலும், “எப்பிராயீம்” என்ற பெயரின் எபிரெய வடிவம் אֶפְרַיִם (ʾEfrayim). இப்பெயர் பலுகுதல், பெருகுதல், பலன் அளித்தல் போன்ற கருத்துகளுடன் தொடர்புடையதாக இருப்பினும், அந்தப் பெயரைத் தனது மகனுக்குச் சூட்டியதற்கான காரணத்தை யோசேப்பே “தேவன் என்னை என் வருத்தத்தின் தேசத்தில் பலுகப்பண்ணினார்” (ஆதி. 41:52) என்பதாக விளக்குவதாலும், பெயரின் பொருளையும், யோசேப்பு அந்தப் பெயருக்கு அளித்த தனிப்பட்ட அனுபவ விளக்கத்தையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இது மிக மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.
ஆனால், இன்னும் சுவாரஸ்யமான ஒன்று இருக்கிறது...
இந்தக் குழந்தைக்கு யோசேப்பு பெயர் வைத்தது ஒரு விஷயமாக இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய தாத்தாவான யாக்கோபு அவனை ஆசீர்வதித்த விதம் இன்னொரு மிகப்பெரிய விஷயம்.
அங்கேதான் எப்பிராயீமின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வருகிறது.
அடுத்ததாக....
“மனாசே பெரியவனா? இல்லை, எப்பிராயீம் பெரியவனா?”
ஆதியாகமம் 48:13–20 இதற்கான பதிலைத் தருகிறது.
தொடரும்.....
Sis. Martha Lazar
சிப்பிக்குள் முத்து ஆசிரியர்
மற்றும்
பெரோயா எழுத்துப் பணி வெளியீடு

Comments
Post a Comment