[2] WHO IS THAT IMMORAL WOMAN? | யார் அந்த விலைமாது? [REVELATION 17:1]

அன்பானவர்களே
கேள்வி
🌸 திருவெளிப்பாடு 17:1🌸
immoral woman revelation
1 திருத்தூதர் யோவானிடம் -  வான தூதர் :  "வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பெரும் விலைமாதுக்கு வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். 
திருவெளிப்பாடு 17:1

1️⃣ யார் அந்த பெரும் விலைமாது?
2️⃣ ஏன் விலைமாது என்று அழைக்கப்படுகிறார்?

பதில்:
1️⃣ யார் அந்த பெரும் விலைமாது?  
வசனத்தில் அந்த விலைமாது, நீர்த்திறள் மேல் அமர்ந்திருக்கிறாள் என்று குறிப்பிடபட்டுள்ளது. 
நீர்த்திரள் என்பது விவிலியத்தில் திரளான மக்களை குறிக்கும். 
(15 வானதூதர்:  அந்த விலைமாது நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும். 
திருவெளிப்பாடு 17:15)

ஆக, பெரும் திரளான மக்கள் மேல் அமர்ந்திருக்கும் விலை மாது யார்? 
உண்மைக்கு புறம்பான, தவறான போதனைகள் மூலம் மக்களை இறைவார்த்தைகளுக்கு எதிராக திசை திருப்பி கொண்டிருக்கும்  அமைப்புகள். 

2️⃣ ஏன் விலை மாது என்று அழைக்கப்படுகிறார்?
 மணமகனாக ஏற்றுக் கொள்ள வேண்டியவரை மறுதலித்து தந்தை தான் மகன், மகன் தான் தந்தை போன்ற மாறுபட்ட  
சொந்த உணவுகளையும் (போதனைகள்), ஆடைகளையும் (மீட்புக்குறிய நம்பிக்கைகள் ) ஏற்படுத்தி 

உலக அரசாங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்குள்ளும், ஆளுகைக்குள்ளும் சென்றதால் விலைமகள் என்று அழைக்கப்பட்டது.

திரித்துவம், நரகம் போன்ற பைபிள் கூறாத மாற்று போதனைகளை கொண்டிருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு  விலைமாது என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை மாது என்பது அப்படிப்பட்ட தவறான போதனைகளை கொண்டிருக்கும் அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட பெயரே தவிர தனி நபருக்கு இது பொருந்தாது.

இந்த விலை மாதுவையே விவிலியம் பாபிலோன் என்றும் அழைக்கிறது. 
பாபிலோன் என்கிற பெயர் ஒரு அமைப்புக்குரிய பெயர், தனி நபரை சார்ந்தது அல்ல.

காரணம், பாபிலோனுக்குள் இருக்கும் சில நல்ல உள்ளம் படைத்தவர்களை என் மக்கள் என்று நம் பரமதந்தை குறிப்பிடுகிறார் - (திருவெளிப்பாடு 18:4)

வேதாகமத்தில் தனி ஒரு மனிதனை பாபிலோன் என்று எங்கும் சொல்லப்படவில்லை. 

இந்த பாபிலோன் அமைப்பின் சில தவறுகள்:
திருவெளிப்பாடு 17 - ல் சொல்லப்பட்ட காரியங்கள் நடந்து நிறைவேற தொடங்கிய வருடம் AD 539 - இந்த காலப்பகுதியில் திரித்துவம் என்கிற மாறுபட்ட மூன்று கடவுள் கோட்பாடு முழுமை அடைந்து போதிக்கப்பட்டது. 

திரித்துவம் அவர்களின் முக்கிய அடையாளமாகும். 
அது போன்று மேலும் பல குழப்பமான போதனைகளும் அடங்கும்.

மணமகனாகிய கிறிஸ்துவும் தந்தையாம் 
பிதாவாகிய கடவுளும் ஒருவ (ர்களே)ரே என்ற குழப்படிகள் நமது விவிலியத்தில் இல்லை. 

5"கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்." 1 திமொத்தேயு 2:5


கிறிஸ்துவுக்குள் 


Comments