[3] THE FIRST BORN DONKEY AND THE LAMB | முதற்பேறு கழுதை குட்டியை மீட்கும் ஆட்டுக்குட்டி - [EXODUS 13:13]
கேள்வி
யாத்திராகமம் 13:13 இல்
மறைந்திருக்கும் ஞானத்தை வெளிக் கொணருங்கள்.

"கழுதையின் தலையீற்றையெல்லாம் (முதற்பேறு) ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு.
உன் ஆண் பிள்ளைகளுள் எல்லாத் தலைப்பேற்றையும் நீ மீட்க வேண்டும்."
விடுதலைப் பயணம்
(யாத்திராகமம்)13:13, 34:20
பதில்
கழுதை தீட்டான விலங்கு என்று லேவியர் 11:3 படி அறிகிறோம்.
"தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும்."
எண்ணிக்கை 18:15
கழுதை, தீட்டான மிருகம் என்பதால், அதை கடவுளுக்கு பலியாக்க முடியாது. ஆகையால் அதை ஆட்டுக்குட்டியால் மீட்டெடுக்க வேண்டும். மீட்க முடியவில்லை என்றால் அது அழிவை எதிர் கொள்ள வேண்டும்.
கழுதையின் தலையீற்று:
தலைமகனாக கடவுளாம் பரமதந்தை தெரிந்தெடுத்த இஸ்ரயேல் மக்கள்.
(யாத்திரகமம் 4:22)
பின்பு தமக்கென பிரித்தெடுத்த லேவியர்.
(எண்ணிக்கை 3:12, 3:40,41)
மனிதரின் முதற்பேறு:
சத்தியத்தை அறிந்து புது சிருஷ்டியின் அழைப்புக்குள் வந்தவர்கள்.
"தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி சத்திய வார்த்தைகளினால் நம்மை ஈன்றெடுத்தார்."
யாக்கோபு 1:18
ஆனால் நமக்குள் இருக்கும் தீட்டான பாவத்தை நீக்கி நீதிமானாக்க கடவுளின் கட்டளைப்படி ஆட்டுக்குட்டி நம்மை மீட்க பலியாக்க பட வேண்டும்.
நம்மை மீட்டெடுக்க, பலியாக செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டி, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
கிறிஸ்துவுக்குள்

இன்றும், சில யூதர்கள் இந்த கட்டளையை நினைவூட்டும் விதமாக, முதற்பேறு கழுதையின் மீட்பு சடங்குகளை நடத்துகிறார்கள்.[விடுதலைப் பயணம் 13:14-16]
Comments
Post a Comment