[4] KING DAVID'S DANCE & MICHAL'S DESPISE | தாவீதின் ஆடலும் மீகாலின் அவமதிப்பும் - [1 CHRONICLES 15:29]
அன்பானவர்களே 🙏
1 சாமுயேல் 6:16
நிழலும் நிஜமும்
கேள்வி
நிழல்:
1 நாளாகமம் 15:29

நிஜம் கண்டுபிடிங்கள்
1 நாளாகமம் 15:29
"கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி தாவீதின் நகரம் மட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய் பார்த்து தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனை தன் இருதயத்திலே அவமதித்தாள்".
1 சாமுயேல் 6:16
"கர்த்தருக்கு முன்பாக குதித்து நடனம் பண்ணுகிறதைக் கண்டு",
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக தாவீது ராஜா ஆடிப்பாடி கொண்டு வருகிறார்.
இராஜா சாதாரண ஜனம் போல் ஆடிப்பாடி கொண்டிருப்பது, மீகாளுக்கு அவமானமாக இருந்திருக்கலாம் ; அதனால் தாவீது இராஜாவை அவள் அவமதித்தாள்.
ஆடல் பாடல் வேதாகமத்தில் இடம்பெற்ற இடங்கள்:
1. "கோலியாத்தை கொன்று இஸ்ரயேலர் வெற்றி பெற்றதினால்,
ஸ்திரீகள் நடனம் ஆடிக்கொண்டு வந்து, சவுலையும் தாவீதையும் புகழ்ந்து பாடினார்கள்".
1 சாமுயேல் 18 : 6-7
2. மோசேயும் இஸ்ரயேல் புத்திரரும், கர்த்தரைப் புகழ்ந்து பாடின பாட்டு,
இந்தப் பாட்டின் மூலமாக தேவனைக் கனப்படுத்தினார்கள்.
3.தெபொராள் & பாராக் பாடின பாட்டில் கர்த்தருடைய வல்லமையை புகழ்ந்தார்கள்.
4.யெப்தாவின் குமாரத்தி, தம்புரு வாசித்து, நடனம் செய்து அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்.
யெப்தாவின் குமாரத்தி ஆடிய நடனம், யெப்தாவின் வெற்றியை கொண்டாடுவதற்காக ஏறெடுக்கப்பட்டது.
5. சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடு நடனம் பண்ணுகிறவர்களாய் புறப்பட்டு வருகிறதை
யெப்தாவின் குமாரத்தியை நினைவுகூறும்படியாக நடனம் பண்ணியிருக்கிறார்கள்.
6.தாவீது ராஜா உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நடனம் ஆடியது, சர்வவல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை கனப்படுத்தும் படியாக ; தன்னுடைய மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், துதியையும், ஆரவாரத்தையும் அந்த நடனத்தின் மூலம் கடவுளுக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார்.
7.தாவீது ராஜா, தான் ராஜாவாக இருந்தாலும்,
கடவுளுக்கு முன்பாக, தாழ்மையை வெளிப்படுத்திக் காண்பித்தார்.
நிஜம் :
லூக்கா 19: 32-40
"கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடு கடவுளை புகழ்ந்தார்கள்".
சீஷர்களும் ஜனங்களும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஸ்தோத்தரித்துப், கனப்படுத்தி, துதியோடு, சந்தோஷத்தோடு, ஆரவாரத்தோடு பாடுகிறதை பரிசேயரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
உடன்படிக்கை பெட்டி :
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
தாவீது ராஜா :
சிஷர்கள், அப்போஸ்தலர்கள்.
சீஷர்களும் அப்போஸ்தலர்களும் மிகுந்த ஆரவாரத்தோடு சந்தோஷத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஸ்தோத்தரித்து புகழ்ந்தார்கள்,
மீட்கும் பொருளை கனப்படுத்தினார்கள்.
ஆனால் சிஷர்களுடைய அப்போஸ்தலர்களுடைய செயல்பாடுகள், அப்போதிருந்த பரிசேயர்களுக்கு கனவீனமுள்ளதாக பைத்தியமாகவும், காணப்பட்டது.
மீகாள்:
பரிசேயராகிய இஸ்ரயேல் ஜனங்கள் மற்றும் இப்பொழுதுள்ள கிறிஸ்தவ மத அமைப்புகள்.
மீகாள் தன்னுடைய மனமேட்டின்மையினிமித்தம் தாழ்மையை வெளிப்படுத்தாமல், தாவீது ராஜாவை அவமதித்தது போல; பரிசேயராகிய இஸ்ரயேல் ஜனங்களும், கிறிஸ்தவ மத அமைப்பும் தங்கள் மனமேட்டின்மையினிமித்தம் கடவுளுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்மைப்படுத்தவில்லை.
முடிவில் மீகாளுக்கு ஒரு தண்டனையை கடவுள் வழங்கினார்; அப்படியாக பரிசேயராகிய இஸ்ரயேல் ஜனங்களுக்கும், AD 70 - AD 73, தண்டனையைப் பெற்றார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 8: 7, 8
கிறிஸ்தவ மத அமைப்புகளும் நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 14: 18 - 20
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment