FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



[61] கருவிலே மரித்தது உயிர்த்தெழுதல் அடையுமா? யாத்திராகமம் 21: 22-24

அன்பானவர்களே🙏
🌀 வருவார்களா ? 🌀
🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸
கருவில் உருவாகி உயிரின் முழு வடிவத்தையும் பெறாமல் தாயின்வயிறாகிய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் உயிர்த்தெழுதலில் வருவார்களா?

 பதில்:
ஜீவனில் பிரவேசித்து பிறப்பதற்கு முழு தகுதியை அடையாமல் தாயின் வயிற்றிலே அடக்கம் பண்ணப்படும் கருவானது மனிதன் என்கிற தகுதியை அடையவில்லை என்பதை நாம் கீழ்கண்ட வசனத்தை பரிசோதித்து பார்ப்பதன் மூலம் அறிய முடியும்.

யாத் 21:22-24 - இங்கு தாயின் வயிற்றில் இருக்கும் கருவை முழு மனிதனாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அடையாளம் காண முடியும்.

எப்படியொன்றால், ஸ்திரிக்கு எந்த ஒரு சேதமும் இல்லாமல் அவளுடைய கர்ப்பம் மாத்திரம் விழுந்து போனால், அடித்தவனுக்கு நியாயாதிபதி சொல்லும் தீர்ப்புக்கு கீழ்ப்படிந்தால் போதும் (அ) புருஷன் சுமத்தும் அபராதத்தை கட்டினால் போதும்.

இங்கு கருவானது முழு மனிதனாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அறிய முடியும்.

ஆனால், ஸ்திரீக்கு வேறு சேதமுண்டானால் ஜீவனுக்கு ஜீவன் கொடுக்கப்பட வேண்டும்.......

மேலும் சில வசனங்கள் நம்முடைய பகுத்தறிவுக்கு.... சங்கீதம் 58:8
யோபு 3:16

ஆதலால், பிறப்பில் முழு ஜீவன் அடையாத கருவானது தாயின் வயிற்றில் அடக்கம் பண்ணப்படும் பொழுது அது உயிர்த்தெழுதலில் வராது. 😔

உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி🙏
🚸🚸🚸🚸🚸🚸🚸🚸🚸
கிறிஸ்துவுக்குள்

Comments

  1. Will the infant be risen if the baby is fully grown but expired during delivery?

    ReplyDelete
  2. Unless the kid takes breath on it's own can't be considered a soul.

    ReplyDelete

Post a Comment