அன்புடையீர் 🙏
நிழலும் நிஜமும்
ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள்.
நிழல்:
ஆபிரகாம், "இந்தக் கிணற்றைத் தோண்டியது நான்தான் என்பதற்குச் சான்றாக, நீர் இந்தப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்" என்றார். தொடக்கநூல் 21:30
நிஜம்:
ஆபிரகாம்:பிதாவாகிய கடவுளை அடையாளப்படுத்துவார்.
துரவு:ஆண்டவராகிய, இயேசு கிறிஸ்துவை அடையாளப்படுத்தும்.
(இயேசு கிறிஸ்து: "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்."
யோவான் 4:14)
ஏழு = 7 = சுவிசேஷ யுகம்
பெண் ஆட்டு குட்டிகள்: திருச்சபை = 144000
பனித விளக்கம்:கடவுளாம் பரமதந்தை (ஆபிரகாம்)கொடுத்த நம் ஆண்டவர் ஏசு கிறிஸ்துவுக்காக (துரவு), இந்த சுவிசேஷ யுகம் (7) முழுவதும்,சாட்சியாக, இந்த பெண்ணாட்டுக்குட்டிகள் (சபை) இருக்கும்.
"நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.
அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே; உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று; நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்!"
எசாயா 43:11,12
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment