[38] ISSAC • REBEKKAH: SHADOW & THE TRUTH | ஈசாக்கு • ரெபேக்கா: நிழலும் நிஜமும் [GENESIS 22: 19 -23]
நிழலும் நிஜமும்
நிஜம்
நிழல் :
ஆதியாகமம் 22:19-23
19. பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.
20. இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், "உன் சகோதரன் நாகோருக்கு மில்க்கா புதல்வரைப் பெற்றெடுத்திருக்கிறாள்" என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.
21. மூத்த மகன் ஊசு, அவன் தம்பி பூசு, ஆராமின் தந்தையான கெமுவேல்,
22 கெசேது, அசோ, பில்தாசு, இதிலாபு, பெத்துயேல்.
23. பெத்துயேல் ரெபேக்காவின் தந்தை.
தொடக்கநூல் 22:19 - 23
நிஜம்
ஆபிரகாம் தன் ஒரே மகனான ஈசாக்கை பலியாக ஒப்புக்கொடுக்க சென்றார்.
19 - ம் வசனத்தில் ஆபிரகாம் திரும்பி வந்தார் என்று எழுதப்பட்டிருக்கும். ஈசாக்கை குறித்து எழுதப்பட்டிருக்காது.
இது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரணத்திற்குப் பின்பு அவர் உயிர்த்தெழுந்து பரமேறி சென்றதை அடையாளப்படுத்துகிறது.
இந்த காரியங்கள் நடந்த பின்பு ரெபேக்கா பிறந்து விட்டாள் என்ற செய்தி வருகிறது.
இது எதற்கு அடையாளமாய் இருக்கிறது என்றால்,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகம் சென்ற பிறகு, சபை என்கிற அழைப்பிற்குள், திருச்சபையாக அழைக்கப்பட்டவர்கள், பிறக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை
.
இதற்குப் பிறகுதான் ரெபேக்கா என்ற மணமகள் (திருச்சபை) வளர்ந்து, பாலைநில பயணம் மேற்கொண்டு மணமகனாகிய ஈசாக்கை (ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து) சந்தித்த பிறகு, இவ்வுலக முடிவில் திருமணம் நடைபெறும்.
கிறிஸ்துவுக்குள்
Praise the lord🌹👍💐
ReplyDelete