அன்பானவர்களே🙏
🚩 நிழல் நிஜம் 🚩
🌱🪷🪷🪷🪷🪷🌱
நிழல்:
யாத் 4:1-5 & யாத் 7: 8-12
1 அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள். என் வாக்குக்குச் செவிகொடார்கள். கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.
2 கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
3 அதைத் தரையிலே போடு என்றார். அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று. மோசே அதற்கு விலகியோடினான்.
4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப்பிடி என்றார். அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது அது அவன் கையிலே கோலாயிற்று.
5 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.
8 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
9 உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால், அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக. அது சர்ப்பமாகும் என்றார்.
10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
11 அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின. ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.
யாத்திராகமம் 7:1-5, 8-12
நிஜம்:
முதலில் இந்த இரண்டு சம்பவங்களும் மோசேயின் இரண்டாவது 40 வருடத்தில் நடக்கக்கூடிய காரியங்கள்.
அது நம் ஆண்டவரின் இரண்டாம் வருகையில் நடக்கக்கூடிய காரியங்களுக்கு இசைவானது.
நான்காம் அதிகாரத்தில் இஸ்ரயேல் சபையாரின் மூப்பர்கள் மத்தியில் செய்யக்கூடிய காரியங்கள், நம் ஆண்டவர் இரண்டாம் வருகையில் வந்திருக்கிறார் என்கிற நம்பிக்கைக்குறிய சத்தியங்களை முதலில் தேவபிள்ளைகளிடத்தில் வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்த காரியங்கள் ஆரோன் (மாம்சத்திலிருக்கும் சபை) மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன (யாத் 4:30)
ஏழாம் அதிகாரத்தில் காண்பிக்கப்பட்ட காரியங்கள்...
மோசேயின் தலைமையின் கீழ், ஆரோன் கோலை பயன்படுத்தும் விதமானது
நம் ஆண்டவர் இரண்டாம் வருகையில் வந்திருக்கும் போது, பார்வோனின் (சாத்தானின்) வழிநடத்துததில் செயல்படக்கூடிய போலியான காரியங்களை, மோசே ( நம் ஆண்டவர்) மற்றும் ஆரோன் (மாம்சத்தில் இருக்கும் சபையின்) மூலமாக முறியடிக்கப்படுவதை அடையாளப்படுத்துகின்றது.
கிறிஸ்துவுக்குள் 🌱
கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம்
ReplyDeleteமாம்சத்த்தில் இருக்கும் சபை என்றால் என்ன?
ReplyDelete