அன்புக்குரியவர்களே 🙏
தானியேல் 1:5-16
அதிகாரத்தின் உயர்ந்த காரியத்தின் மூலமாக கிடைக்கும் நன்மைகளால் தன்னை தீட்டுப்படுத்த கூடாது என்று தீர்மானித்த இருதயத்திற்கு தயை செய்தது யார்?
5 அரசன் தான் உண்டுவந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள் தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான்.
6 இப்படித் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள்.
7 அலுவலரின் தலைவன் தானியேல் க்குப் "பெல்தசாச்சர்" என்றும் அனனியாவுக்குச் "சாத்ராக்கு" என்றும் மிசாயல் க்கு "மேசாக்கு" என்றும், அசரியாவுக்கு "ஆபேத்நெகோ" என்றும் மாற்றுப் பெயரிட்டான்.
8 அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகிவந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.
9 அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.
தானியல் 1:5 - 9
பாடம்:
இராஜாவின் போஜனத்தினால் தங்களை தீட்டுபடுத்தக் கூடாது என்று நினைத்த,
தானியேல்
அனனியா
மீஷாயேல்
அசரியா
என்பவர்களுக்கு
பிரதானிகளின் தலைவன் மேல்ஷார்யிடம் தயையும் இரக்கமும் கடவுள் கிடைக்கச் செய்தார்.
நாமும் தற்காலிக உலக நன்மைக்காக, ருசியுள்ளதாக தோன்றும் அசுத்தமான மாம்சத்துக்குரிய போதனைகளில் இருந்து நம்மை விலக்கி காத்துக் கொண்டால், கடவுள் தயவும் இரக்கமும் கிடைக்க செய்வார்.
கிறிஸ்துவுக்குள்
God the Father
ReplyDelete