Why was Israels first King not from Judah

ஆதியாகமம் 35:11 இல், கடவுள் யாக்கோபிடம், "நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள். (தொடக்கநூல் 35:11)" என்று சொன்னார்.
மேலும் யாக்கோபு, தனது பன்னிரண்டு மகன்களை ஆசீர்வதித்த போது, அவர் அரசுரிமை பற்றி குறிப்பாக யூதாவிடம் மட்டுமே சொன்னார்.
ஆதியாகமம் 49:10 இல் எழுதப்பட்டுள்ளபடி, "அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது; அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது."
இந்த தீர்க்கதரிசன ஆசீர்வாதத்தைப் பெற்றபோதிலும், இஸ்ரவேலின் முதலாவது ராஜா சவுல், யூதாவிலிருந்து அல்ல, பென்யமீன் குலத்திலிருந்து வந்தார்.
இப்போது கேள்வி ஒன்று எழுகிறது: ஏன் முதலாவது ராஜா யூதாவிலிருந்து வரவில்லை?
இதற்கான பதில் ஆதியாகமம் 38ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் உள்ளது.
யூதாவின் மருமகளான தாமார், விலைமாதுவாக நடித்து, பேரெஸை பெற்றாள்.
ஆனால், உபாகமம் 23:2 இல், "தடை செய்யப்பட்ட திருமணத்தில் பிறந்தவர், அல்லது அவர்களின் சந்ததியினர், பத்தாம் தலைமுறையிலும் கர்த்தரின் சபையில் சேர முடியாது." என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நேரடியாக யூதாவின் சந்ததியை பாதித்தது, அவர்களை பத்தாம் தலைமுறை வரை அரசுரிமை தகுதியை இழக்கச்செய்தது.
தலைமுறைகளை எண்ணுங்கள்
ஆதியாகமம் 46:12 யில், தாமாரும் யூதாவும் பெற்ற பேரெஸ் குறிப்பிடப்பட்டுள்ளார். பேரெஸிலிருந்து தாவீதுவரை உள்ள சந்ததிகள், ரூத்து 4:18-22 இல் பதிவாகியுள்ளன:
- பேரெஸ் ➡️ எஸ்ரோன்
- எஸ்ரோன் ➡️ ராம்
- ராம் ➡️ அமிநாதாப்
- அமிநாதாப் ➡️ நாக்ஷோன்
- நாக்ஷோன் ➡️ சால்மோன்
- சால்மோன் ➡️ போவாஸ்
- போவாஸ் ➡️ ஓபேத்
- ஓபேத் ➡️ யெசே
- யெசே ➡️ தாவீது
பாருங்கள், பத்தாவது தலைமுறையில் தான் தாவீது வருகிறார்.
கடவுளின் சட்டமும் தீர்க்கதரிசனமும் எவ்வாறு சரியாக பொருந்துகின்றன! ஒருபோதும் கடவுள் தனது வாக்குத்தத்தத்தை விட்டுக் கொடுப்பதில்லை,
கடவுளின் திட்டங்களில், யூதாவின் சந்ததிக்கு ராஜ்யம் கொடுப்பது அவருடைய திட்டம், ஆனால் அவருடைய சட்டத்தின் அடிப்படையில், தாவீது வரும்போது மட்டுமே அதற்கான நேரம் வந்தது.
இதன் மூலம், கடவுள் எவ்வாறு சரியான நேரத்தில் அவரது திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பதை நாம் அறிகிறோம்.
கிறிஸ்துவுக்குள்
Comments
Post a Comment