FAITH COMES FROM HEARING. ROMANS 10:17



YOU and ONLY YOU | நீர் மாத்திரமே | Br. VELLANKANNI, Dindigul


நீர் என் சிருஷ்டிகர். நீர் என் இறைவன்! 
சிருஷ்டிகராய் என்னை உருவாக்கினீர். 
இறைவனாயிருந்து என்னை ஆசிர்வதிக்கிறீர்; 
ரட்சகராயிருந்து என்னை மீட்டெடுக்கிறீர்.
கன்மலையாயிருந்து என்னைக் காப்பாற்றுகிறீர்;

மோசேக்கு முன்பாகத் தமது மகிமையைக் கடந்து போகச் செய்தவர், 
 "கிறிஸ்துவுக்குள்ளாக மகிமையில் எங்களை நிலைக்கச் செய்கிறீர்: 

ஆம்... ஒரு விஷயமுமில்லாத நாங்கள் எதினால் விசேஷித்தவர்கள்?

நீர்  எங்களோடு இருப்பதனால் தானே....

நான் யாரென்றும்... என் தகப்பன் வீடு எம்மாத்திரம் என்றும் நானறிவேனே ...

வழிப்பறித் திருடனுக்கு வங்கி காசாளர் [Cashier] வேலையைப் போல்...

என்னைத் தமக்கென்று தெரிந்து கொண்டு, என்னுடைய தரித்திரத்தில் உம்முடைய

ஐசுவர்யத்தை நிரப்பின நீர் யாரென்றும் நான் நன்றாய் அறிகிறேன்:

பிறருடைய சம்பாத்தியத்தில் பிழைக்கின்ற யாசகன் நான்; கிரயத்துக்குக் கொண்டவருடைய இரவல்காரன் நான்;

தூக்கி எறியாமல்.. தொடர்ந்து பிசைகிறதினால், மதிப்புப் பெறும் மண்ணானவன் நான்:

ஏழுமுறை விழுந்தாலும்.. எழுந்திரிக்கும் பெலனை, ஏழு சபைகளின் அதிகாரியால் பெறும் பெலவீனன் நான்; 

புரிந்து கொள்ளும் புத்தி எத்துனை ஆசீர்வாதம்!! புரியாத எதுவும்...புதிராகத்தானே.இருக்கும்;

உணர்வுள்ள இருதயமும். உத்தம நிதானிப்பும், உம்மிடம் புறப்பட்டு, உரிமைக்காரர் மூலம் எம்மிடம் கடந்து வந்தது... எத்துனை ஆச்சர்யம்!!

அப்பா... என் பிதாவே;

அண்ணா...என் ஆண்டவரே.

தப்பாக பாவியாக நான் பிறந்திருந்தாலும் பூமிக்கு உப்பாக என்னைச் சாரமேற்றுகிறவரே.

ஒன்றுமில்லாமையிலிருந்து சகலத்தையும் உண்டாக்குகிறவரே... பலத்தினாலுமல்ல... பராக்கிரமத்தினாலுமல்ல; ஓடுகிறவராலுமல்ல. விரும்புகிறவராலுமல்ல;

குதிரை... யுத்தத்துக்கு ஆயத்தமாகிறதாலுமல்ல,

உம்மாலே ஒரு சேனைக்குள் [1,44000] பாய்வேன். உம்மாலே ஒரு மதிலை [இச்சை] தாண்டுவேன்;

 ஏனெனில்: இன்னான் நான்
இன்னான் என் உடன் சகோதரன்,
அதிலே பிறந்தான் என்று நீரே தொகையிடுகிறீர்! 
ஆம்... ராஜ்யத்தைக் கொடுக்க நீர் பிரியமாயிருக்கிறீர்!
என் ஆண்டவருடைய புண்ணியத்தால் வந்த தகுதியையும் நீதியையும் எனக்கு தரிப்பித்து, என்னை.. முத்திரையிட்டு-முகாந்திரப்படுத்தும்;

ஆமென்!

Comments

Post a Comment