FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




THE MUSTARD SEED | கடுகு விதை உவமை - MATTHEW 13:31, MARK 4:30, LUKE 13:18

The number of israelites who went to Egypt

The Mustard Seed - Parable


கடுகு விதை உவமை


The parable of mustard seed

மத்தேயு 13:31-32, மார்க் 4:30-32, லூக்கா 13:18,19


"வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்."
mustard plant
கடுகு செடி
கடுகு ஒரு செடி தான், பெரிய மரமாக வளர்வதில்லை.
உவமையில், கடுகு - மரமாக வளர்ச்சி அடைவது என்பது ஒரு அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த கடுகு விதை  உவமை, ஒரு உவமை மாத்திரம் அல்ல. கிறிஸ்து விதைத்த உண்மையான நற்செய்திக்கு கள்ள போதகர்களால்  ஏற்பட போகும் களங்கத்தையும் கூறும் ஒரு தீர்க்கதரிசனமும் கூட. 


நற்செய்தி விதையை விதைத்த மனிதன் யார்?


நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. பின்பு, அவரது சீடர்கள்.


கடுகு விதை மிகச்சிறிய விதையாக இருந்தாலும், விதைக்கப்பட்ட பின்பு மெதுவாக வளர்ந்து பெரிதாவதை போல, முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் சீடர்களால் தூவப்பட்ட கிறிஸ்துவின் நற்செய்தி,  உலகம் முழுவதும் பரவியது. 

மிகவும் சிறிய விதை ORCHID SEED தான். பிறகு ஏன் இயேசு கிறிஸ்து கடுகு விதையை உவமையில் சொன்னார்?
ஏனெனில், அன்றைய சாமானிய இஸ்ரேலர்களுக்கு நன்றாக அறிந்த சிறிய விதை கடுகு விதை தான்; ஆர்சிட் (ORCHID) விதை அல்ல.

ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அமர்ந்தது எதை அடையாளப்படுத்தும்?


ஆகாயத்து பறவைகள்:

சாத்தானின் ஊழியக்காரர்களாக செயல்படும் கள்ள போதகர்கள்.  

நற்செய்தி சீஷர்களால் பரவினாலும்,  அப்போஸ்தலர் பவுல் அடிகளார் முன் மொழிந்தது போல, ஆதி கால திருச்சபையிலேயே,   கள்ளபோதகர்களால் (ஆகாயத்து பறவைகள்)  திரித்துவம், அழியாத ஆத்துமா, நரகம், அந்நிய பாஷை உளறல் போன்ற தவறான போதனைகள் உள் நுழைந்தன. 

திருத்தூதர் பணிகள் 20:29,30

29"உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். 30 உங்களிடமிருந்து சிலர் தோன்னறி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்."

இந்த மனசாட்சியில் சூடுண்ட பொய்யர்களால் (1 TIMOTHY 4:1) -  நிறுவன மயமாக்கப்பட்ட கிறிஸ்தவ அமைப்புகளால், உண்மையான கிறிஸ்துவின் அரசாட்சி பற்றிய நற்செய்தி மறைக்கப்பட்டு, கிறிஸ்தவ மார்க்கம் உலகம் முழுவதும்  பொய்களின் சங்கமமாக (பெரிய மரமாக) மாறிவிட்டது. 


தானியேல் 4: 10,11,12 ல், அரசர்  நெபுகத்னேசர், அவரது கனவில் இலைகளும் கனிகளும் உள்ள ஒரு  பெரிய மரம் ஒன்றை கண்டதை நாம் வாசிக்கிறோம்.

Daniel Nebuchadnezzar
அம்மரம் வானளவு உயரமாகவும் -  காட்டு விலங்குகள் மற்றும் வானத்து பறவைகளுக்கு குடியிருப்பாக மாறியது. 


அந்த பெரிய மரம் = நிறுவன மயமாக்கப்பட்ட கிறித்துவ அமைப்புகள் = மகா பாபிலோன்.  (REVELATION 18:2)

ஆகாயத்து பறவைகள்: அதில் இருந்து கொண்டு சாத்தானின் ஊழியக்காரர்களாக செயல்படும் தசமபாக கள்ள போதகர்கள்.  


திருவெளிப்பாடு 18:2

"அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார் ”வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்."


(மகா) பாபிலோன் மாநகர் என்பது உலகம் முழுதும் பரவி இருக்கும் நிறுவன மயமாக்கப்பட்ட கிறிஸ்தவ அமைப்புகளை குறிக்கும். 

அங்கு தான், ஆகாயத்து பறவைகள் (சாத்தானின்  ஊழியக்காரர்கள்) - தசமபாக கள்ள போதகர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். 


தானியல் 4:13

"அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே:
இந்த மரத்தை வெட்டுங்கள்: கிளைகளைத் தறித்து விடுங்கள்: இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்: இதன் கனிகளைச் சிதறடியுங்கள்: இதன் கீழ் வாழும் விலங்குள் ஓடிப்போகட்டும்:
இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும். "


தானியல் 2:34,35
a stone was cut out without hands, which smote the image upon his feet
நேபுகாத்நேசர் செய்த அந்த மிகப்பெரிய சிலையின் பாதங்களில் ஒரு சிறு கல் மோதி நொறுக்கி போட்டது .அந்தக் கல்லோ பெரிய பர்வதமாகி பூமி எல்லாம் நிரப்பிற்று.அது உலக ராஜ்யங்கள் அழிக்கப்பட்டு கடவுளின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுவதை அடையாளப்படுத்தும்.
மோதிய கல் மெதுவாக வளர்ந்து பூமி எல்லாம் நிரப்பியது போல கடவுளின் ராஜ்ஜியம் கடுகு விதை போல சிறிதாக ஆரம்பித்து பூமி எங்கும் ஸ்தாபிக்கப்படும்.

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது இறையாட்சி பூமியில் வருவதாக.


ஆமென்.



Comments

Post a Comment