THE PARABLE OF EQUAL WAGES
அன்புடையீர், வணக்கங்கள்
இந்த பாடத்தில், நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய "எஜமான் - திராட்சை தோட்ட வேலையாட்கள் பெற்ற சரிசமமான கூலி" குறித்த உவமையில்
வாசிக்கலாம்:
மத்தேயு 20:1-16
1 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.
2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
3 ஏறக்குறைய காலை ஒன்பது மணி க்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.
4 அவர்களிடம், “நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்: நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் “ என்றார்.
5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணி க்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
6 ஏறக்குறைய ஐந்து மணி க்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், “நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? “ என்று கேட்டார்.
7 அவர்கள் அவரைப் பார்த்து, “ எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை “ என்றார்கள். அவர் அவர்களிடம், “நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் “ என்றார்.
8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், “வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் “ என்றார்.
9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.
10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.
11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,
12 “கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே “ என்றார்கள்.
13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, “தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?
14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.
15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? “ என்றார்.
16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் “ என்று இயேசு கூறினார்.

உவமையில் உள்ள பாத்திரங்கள்
இந்த உவமையில், விடியற்காலையில் வேலைக்கு வந்த வேலையாட்களும், மாலையில் வந்த வேலையாட்களும் ஒரே ஊதியத்தை பெற்றார்கள் என்று அறிகிறோம். இது குறித்து முணுமுணுத்த வேலையாட்களின் கேள்வியும் நியாயமானது தான்!
அதற்கு நிலக்கிழார் அளித்த பதிலும் ஏற்புடையது தான்.
மேலும், கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் என்பதில் இருந்து, அனைவரும் இந்த உவமையின் பொருளை ஓரளவு புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது.
இப்போது, இந்த உவமையில் உள்ள பாத்திரங்கள், யாரை அடையாளப் படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம்.
நிலக்கிழார் - எஜமான் = கடவுளாம் பரமதந்தை
திராட்சை தோட்டம் = கடவுளின் திட்டம்
வேலையாட்கள் = சத்தியத்தை அறிந்த உடன் சகோதர சகோதரிகள்
ஆதார வசனம்:
மத்தேயு 9:37,38
37.அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு. 38ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் “ என்றார்.
37.அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு. 38ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் “ என்றார்.
அழைக்கின்ற எஜமானன்
கடவுள் - அழைக்கின்ற எஜமானனாய் இருக்கின்றார்.அவர் வீதியில் (கடவுளை அறியாமல்) இருந்த நம்மை அவரது திராட்சை தோட்டத்தில் (திட்டத்தில்) வேலை செய்ய அழைக்கின்றார்.
ஒரு காலத்தில் கடவுளை அறியாமல் இருந்த நம்மை, அடிப்படை சத்தியங்களை கற்று தந்து,
திருவெளிப்பாடு 18:4
4என் மக்களே, அந்நகரைவிட்டு வெளியேறுங்கள், அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும் அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு உட்படாதிருக்கவும் வெளியே போய்விடுங்கள்.
என்று எச்சரிக்கை தந்து, நம்மை அவரது திட்டத்தில் வேலை செய்ய அழைக்கிறார்.உழைப்பை விரும்பும் எஜமான்
வாசிப்போம்:
மத்தேயு 20:6
பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
கடவுள் சோம்பலை வெறுக்கிறார். நீதி மொழிகளில் மட்டும் 16 வசனங்கள் சோம்பேறிகளை பற்றி உள்ளது.
பவுல், பெருவயிற்று சோம்பேறிகள் என்று வேலை செய்யாமல் உண்ணுபவர்களை சாடுகிறார். பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
உழைப்பின் முக்கியத்துவத்தை கூறும் சில வசனங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3:10
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.
எபேசியர் 4:28
தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.
தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.
1 தெசலோனிக்கேயர் 2:9
அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.

நியாயமான எஜமான்
உவமையில், எஜமான் தன்னிடம் வேலை பார்த்த வேலையாட்களிடம் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை. அவர்களை சமமாக நடத்தி நியாயமாக அவர்களிடம் பேசிய ஊதியத்தை கொடுக்கிறார்.நாமும், நமது வாழ்வில் பிறரிடம் நியாயத்தோடும் வாக்கு பிறழாமையுடன் இருக்க கடவுள் விரும்புகிறார்.
வாசிப்போம்:
ஏசாயா 30:18
ஆண்டவர் நீதியின் கடவுள்:
ஆண்டவர் நீதியின் கடவுள்:
சங்கீதம் 97:2
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
அன்புள்ள எஜமான்
வாசிப்போம்:
மத்தேயு 20:13
அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
உவமையில், எஜமான் - முணுமுணுத்த வேலைக்காரனை கூட சிநேகிதனே என்று அழைக்கிறார்.அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
அதுபோல, கடவுளும் நம்மிடம் உள்ள குற்றம் குறைகள் இருந்தாலும், அவர் நம்மேல் வைத்த அன்பை குறைப்பதில்லை.
அதே, பண்பை கடவுள் நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.
அழைக்கப்பட்டோரில் பலவிதமானோர்
உவமையில், முதலாவது அவர் அதிகாலையிலும், பின்பு மூன்றாம் மணி வேளையிலும், பின்பு ஆறு, ஒன்பது மற்றும் பதினோராம் மணி வேளையில் சென்று வேலை ஆட்களை அழைக்கிறார்.எவ்வாறு தோட்டத்தில் பணியாற்ற வேறு வேறு நேரங்களில் ஆட்கள் வந்தார்களோ, அது போல - திருச்சபையாக அழைக்கப்பட்ட நமக்குள்ளும் வேறு வேறு நோக்கமுடையோர், திறமை உடையோர் இருக்கலாம்.
ஆனாலும், யாரும் யாருக்கும் அடிபணிந்தவர்கள் அல்லர்
நம் அனைவருக்கும் ஒரே எஜமானன் தான்.
அழைக்கப்பட்ட நாம், வெறும் எண்ணிக்கைகாகவும், இந்த தோட்டம் முன்பை விட நலமானதாக இருப்பதால், பார்வை இடுவதற்காக அழைக்கப்படவில்லை.
இங்கு நாம்
நம்மிடையே,
இதை காணும் போது, நமக்குள் இவர் அவரை விட சிறப்பாக ஊழியம் செய்கிறார், ஓடுகிறார் என்ற எண்ணங்கள் வரலாம்.
ஆனால், இது ஊழியத்தில் - ஒரு சிறு பகுதி தான். நாம், நம் அனுதின வாழ்வில், கடவுளோடு நெருங்கி, அவரது வார்த்தைகளை கருத்தாய் படிப்பது தான் - கடவுளுக்கு பிரியமான ஊழியம்.
கடவுளின் வார்த்தையை படித்து, தனிப்பட்ட வாழ்வில் - நல்ல கணவனாய், நல்ல மனைவியாய், நன்றி உணர்வுடன் இருப்பது தான், எஜமானாகிய கடவுளுக்கு உகந்த வாழ்க்கை.
நம்முடைய சாட்சியுள்ள வாழ்க்கையே - ஒரு சிறந்த ஊழியமாக இருக்க வேண்டும். வாசிக்கலாம்:
2 கொரிந்தியர் 3:2
எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.
நம்முடைய நோக்கம் - இலக்கு = கடவுளிடம் நற்சான்று பெற்று திருச்சபையாக மாறுவது தான். மனிதர்களை பிரியப்படுத்துவது இல்லை.
எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.
பிலிப்பியர் 3:14
பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.
பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.
உடன்படிக்கையை பொறாமையினால் உடைத்து போட்ட ஊழியக்காரர்கள்
வாசிப்போம்:
மத்தேயு 20:13
அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா?
முணுமுணுத்த ஊழியக்காரர்கள், வேலைக்கு செல்வதற்கு முன்பே, ஒரு தெனாரியம் பணத்திற்கு ஒத்து கொண்டு வேலைக்கு போயிருந்தாலும், அவர்கள் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு பார்த்ததால், எஜமானனின் கண்டிப்பான நினைவூட்டலுக்கு ஆளாகினர். நாமும்,பிறரோடும், பிறரின் திறமைகளை கண்டு பொறாமை கொள்ளாமல். நமது விசுவாச ஓட்டத்தை மட்டும் பற்றி கொண்டு ஓடுவதில் கவனமாய் இருக்க கடவோம். பிறரை பார்த்து நாம் முணுமுணுத்தால், நம்முடைய உடன்படிக்கையை மறந்து விடுவோம்.
வாசிப்போம்:
பிரசங்கி 4:4
மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
நீதிமொழிகள் 27:4
சினம் கொடியது: சீற்றம் பெருவெள்ளம் போன்றது: ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?
சினம் கொடியது: சீற்றம் பெருவெள்ளம் போன்றது: ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?
அன்பானவர்களே...
இந்த உவமை, கடவுளின் திட்டத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டிருக்கும் நமக்காக தான். நம்மிடையே இருக்க கூடாத விடயம்,
கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்
நம் அனைவருக்கும் ஒரே பரிசு தான் - உயிர்த்தெழுதலில் திருச்சபையாக கிறிஸ்துவோடு அரசாட்சி செய்வது.
நம்மை அழைத்த எஜமானனுக்கு மட்டும் உண்மையாய் அனுதின வாழ்வில் வாழ்ந்து, இந்த விசுவாச ஓட்டத்தை ஓடி வெற்றி பெற, இந்த திராட்சை தோட்டத்தில் மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றுவோம்.
கடவுளாம் பரமதந்தைக்கும் இறைமகனாருக்கும் மாட்சி உண்டாவதாக. ஆமென்.

God bayou bro. Very good deep analysis
ReplyDelete