A Prayer to my Father
சர்வ வல்லபிதாவே-- என்னை சத்துருவின் கையில் ஒப்புவிக்காதேயும்;
நீதியுள்ள பிதாவே -- என்னை மனுஷர் நியாயம் தீர்க்க விட்டுவிடாதேயும்;
அன்புள்ள பிதாவே -- என்னை மாயவலைக்குள் சிக்கவிடாதேயும்:
ஞானமுள்ள பிதாவே - என்னை அஞ்ஞானம் மேவ விடாதேயும்;
கிருபையுள்ள பிதாவே என்மை உரிமையாய் காத்துக் கொள்ளும்;
இரக்கமுள்ள பிதாவே. என்னை கிறக்கத்துக்குள் மூழ்க விடாதேயும்.
கருணையுள்ள பிதாவே, என்னை கரு மேகம் சூழ விடாதேயும்.
சாந்தமுள்ள பிதாவே, என்னை சாவுக்குள் கையளிக்காதேயும்;
ஜோதிகளின் பிதாவே, என்னை சோதனைக்குள்ளேயே விட்டுவிடாதேயும்;
ஆதியந்தம் இல்லாதவரே-என்னன அந்தகாரத்தில் அடைக்க விடாதேயும்;
ஜீவனுள்ள பிதாவே என்னை மரணத்துக்குள் மரிக்க விடாதேயும்.
நீடிய பொறுமையுள்ளவரே, என்னை பரிதவிப்புக்குள் பதறவிடாதேயும்;
ஒன்றாகிய ஒரே மெய் இறைவா, என்னை ஒரே நோக்கத்தில் நிலைக்கச்செய்பும்;
ஒருவராய் சாவாமை உள்ளவரே... என்னை அழியாமைக்கு தகுதிப்படுத்தும்.
ஒரே மனமாய் இருப்பவரே..என்னில் இருமனம் புரள விடாதேயும்;
நல்ல பிதாவே..என்னனக் கள்ளர்கையில் அகப்பட விடாதேயும்;
வானத்துக்கும் பூமிக்கும் இறைவா, என்னை வாதைக்குள்ளே விட்டு விடாதேயும்;
சர்வலோகத்துக்கும் இறைவா, என்னை, இறுமாப்பு ஆள விடாதேயும்;
பாதாளத்துக்கும் .. மரித்தோர்க்கும் இறைவா... என்னை பாவப் பாம்பு விழுங்க விடாதேயும்;
பரலோகத்தின் இறைவா... என்னை பாளையமிறங்கி பாதுகாத்தருளும்;
இறைவா... தூங்காதவரும். உறங்காதவருமானவரே, என்னை.. சோர்வுக்கும் அசதிக்கும் அப்புறப்படுத்தும்
அடைக்கலமும் பெலனுமான இறைவா.... என்னை . பெலவீனத்துக்கும்--பெரும் பாதகத்துக்கும் தூரப்படுத்தும்;
ஆணையிடும் இறைவா, அடங்கி நடக்கும் படி ஒருமுகப்படுத்தும்;
பரிசுத்தமான இறைவா.. எனக்குள் இருதய சுத்தம் ஓங்கச்செய்யும்;
விளையச் செய்கிற இறைவா, என்னில் களையை நீக்கி கதிராக்கியருளும்;
இருக்கிறவராகவே இருக்கிற இறைவா,
என்னைப்பாதி எடுத்துக்கொள்ளாதேயும்;
ஜெயம் கொடுக்கிற இறைவா-என்னை புத்தத்துக்கு ஆயத்தப்படுத்தும்.
என் கண்ணீரை துருத்தியில் சேர்த்திருக்கிறவரே,
என்னைக்-கழுவி கழுவி சுத்திகரியும்;
என்துக்கத்தை... ஆனந்த களிப்பாய் மாற்றிப்போடுகிறவரே,
உமக்குள்- உள்வாங்கிக் கொள்ளும்;'
முடிவுலே மகிமையிலே ஏற்றுக்கொள்ளுகிறவரே; என்னை.. என் ஆண்டவர் மூலம் இப்படி ஆசிர்வதியும் பிதாவே!!
ஆமென்!!
Beautiful
ReplyDelete