ARE YOU A DONKEY?
அன்புடையீர், வணக்கங்கள்
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
பைபிளில் கழுதை என்றவுடனே நம் நினைவுக்கு வருவது
மார்ச் 30,(நிசான் 10) AD33இல், நம் ஆண்டவர் ஏறி செல்ல பாக்கியம் பெற்ற குட்டி கழுதையும்,
பழைய ஏற்பாட்டில் பிலயாமிடம் அடி வாங்கிய அதிசய பேசும் கழுதை தான்.
இந்த அதிசய பேசும் கழுதையின் பாடத்தை படிக்கும் முன்பு, எண்ணாகமம் 22,23,24 ஆம் அதிகாரங்களை மீண்டும் வாசித்து சம்பவங்களை நினைவில் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
சம்பவங்களின் சுருக்கம்:
பிலயாமும் கழுதையும்
வனாந்திர பயணத்தின் இறுதி கட்டத்தில், யோர்தானின் இக்கரையில் இருக்கும் இஸ்ரயேல் மக்கள், தங்களுக்கு வாக்களிக்கப் பட்ட கானான் நாட்டுக்கு, மோவாப் நாட்டுடன் போரிட்டு கடந்து செல்லும் சூழ்நிலை.
பல வெற்றிகளை குவித்து வந்த இஸ்ரயேல் மக்களை எதிர் கொள்ள மோவாப் மன்னன் பாலாக்கு அச்சம் கொண்டதால், ஐபிராத்து நதி அருகில் வாழும் பிலயாம் என்னும் குறி சொல்பவரிடம் பண ஆசை காட்டி, இஸ்ரயேல் மக்களை சபிக்க ஆள் அனுப்பி சொல்கிறார்.
ஆனால், உண்மையான இசுரயேலர்களின் கடவுளை அறிந்த பிலயாம், கடவுளின் கூற்றுக்கு கீழ்படிந்து, இஸ்ரயேல் மக்களை சபிக்க மறுத்து விட்டார்.
மீண்டும் மோபாப் மன்னன் பாலாக்கு, அதிக பணம் தருவதாக ஆசை காட்டிய போது, பிலயாம், தனது இரண்டு வேலையாட்களுடன், தனது கழுதையின் மேல் ஏறி சென்ற போது, கர்த்தருடைய தூதன் வழியில் பட்டயத்துடன் நின்றதால், ஏறி சென்ற கழுதை பாதை மாறி, அருகில் இருந்த திராட்சை தோட்டத்திற்குள் சென்று பிலயாமை கீழே தள்ளியதால், மூன்று முறைகள் கழுதையை அடித்தான்.
அடி வாங்கிய கழுதை
எண்ணாகமம் 22:28
நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
கண்கள் திறக்கப்பட்ட பிலயாம், தூதனை காலில் விழுந்து வணங்கினார்.நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
பின்பு
எண்ணாகமம் 22:32,33,34
32. கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
33. கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.
34. அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.
பின்பு, கடவுளின் தூதரின் அனுமதியுடன் அவர் மோவாப் மன்னன் பாலாக்கை சந்திக்க போகிறார்.
32. கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
33. கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.
34. அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.
சம்பவங்களின் சுருக்கம்:
பிலயாமும் பாலாக்கும்
பாலாக்கு, பிலயாமை மூன்று இடங்களில்
(1. பாகாலுடைய மேடு - எண்ணாகமம் 22:41 - 23:1)
2. பிஸ்காவின் கொடுமுடி - எண்ணாகமம் 23:14)
3. பேயோரின் கொடுமுடி - எண்ணாகமம் 23:28-30)
ஏழு பலி பீடங்கள் கட்டி, ஒவ்வொரு முறையும் ஏழு காளைகளையும், ஏழு ஆடுக்கிடாக்களையும் பலியிட செய்து, இஸ்ரயேல் மக்களை சபிக்க சொன்னான். ஆனால், ஒவ்வொரு முறையும் பிலயாம் கடவுளின் கூற்றுக்குள் கீழ்படிந்து, இஸ்ரயேல் மக்களை ஆசீர்வதித்தார் என்று வாசிக்கிறோம்.
பனித விளக்கங்கள்:
இசுரயேலர்
வாக்களிக்கப் பட்ட கானானின் எல்லைகளில் இருந்த இசுரயேலர்கள், இந்த அறுவடை கால முடிவில் இருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட திருச்சபையாரை அடையாளப் படுத்துகிறார்கள்.
வெற்றி அருகில் இருந்தாலும், ஆபத்துகளும் அருகிலேயே உள்ளது. அவர்களை சபிக்க எதிரிகள் எவ்வளவு முயன்றாலும், கடவுள் அவர்களை முழுமையாக பாதுகாக்கிறார்.
மோவாப் மன்னன் பாலாக்கு
கடவுளின் மக்களோடு போரிட பயப்படும் உலகத்தின் எதிர்ப்புகள். குறிப்பாக பிசாசு செயல்படும், அரசியல் கலந்த மத அமைப்புகள்.எவ்வளவு பலம் வைத்திருந்தாலும், உண்மையான கடவுளை அறிந்த மக்களோடு போரிட அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் (சத்தியங்கள்) இல்லாமையினால், நேரடியாக போரிட பயப்படுவார்கள். அதனால், பிசாசு குறுக்கு வழியில் கடவுளை அறிந்த மக்களை, வழிநடத்துபவர்களை அவர்களது பெருமை, கோபம் போன்ற பெலவீனத்தை பயன்படுத்தி, உலக ஆசைகளால் கடவுளின் திட்டத்தை அவர்களை கொண்டே சபிக்க/ முறியடிக்க முயல்வான்.
பிலயாம்
கழுதை
அவ்வாறு நீங்கள் உங்கள் சபையில் கழுதை போல நடத்தப்பட்டால், பிலயாமின் கழுதை போல, உங்களை விடுவித்து கொள்ளுங்கள்.
ராஜாக்களாகவும் ஆசாரியராகவும் அழைக்கப்பட்டவர்கள் கழுதையாக நடத்தப்படலாமா?
நிச்சயம் கடவுள் தமது தூதனை அனுப்பி காப்பாற்றுவார்.
எண்ணாகமம் 22:32
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
கழுதை பேசுமா?
எண்ணாகமம் 22:31
அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
இந்த அதிகாரத்தை படிக்கும் பலர், கழுதை உண்மையாகவே மனித குரலில் பேசியது போல தோன்றும். ஆனால், கழுதைக்கு தெரிந்த கடவுளின் தூதன், பிலயாமுக்கு தெரியவில்லை. இதனால், கழுதை மனித மொழியில் பேசியதாக உள்ளது - ஒரு தரிசனம் என்று நம்மால் பகுத்தறிவோடு புரிந்து கொள்ள முடிகிறது. அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
எண்ணாகமம் 24:4
கடவுள் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
எரும்பினிடத்தில் கற்று கொள் என்று நீதிமொழிகளில் வாசிக்கிறோம். (நீதிமொழிகள் 6:6) அதனால், எரும்பினிடம் சென்று எனக்கு சுறு சுறுப்பை கற்று கொடு என்று கேட்க முடியுமா? எறும்பு தான் நமக்கு கற்று தர முடியுமா? இல்லை. அது சுறு சுறுப்பாக ஆகாரத்தை சேர்ப்பதை நாம் உற்று பார்க்கும் போது, அதனிடம் இருந்து நாம் கற்று கொள்ள முடியும். அது பேச வேண்டும் என்ற அவசியமில்லை.
கடவுள் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
பிலயாமின் தீர்க்கதரிசனங்கள்
எண்ணாகமம் 24:2,3,4
2 தூய ஆவி அவன்மேல் வந்தது.
3 அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4 கடவுள் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
இந்த சம்பவத்திற்கு பின்பு, பிலயாமின் கண் திறக்கப்பட்டு தீர்க்கமான தீர்க்க தரிசனங்களை கடவுள் பிலயாம் மூலம் அருளினார்.2 தூய ஆவி அவன்மேல் வந்தது.
3 அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
4 கடவுள் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்தும் அவர் தீர்க்க தரிசனம் உரைத்துள்ளார்.
எண்ணாகமம் 24:19
17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;
19 யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்;

நமக்கான பாடம்
எண்ணாகமம் 22-ஆம் அதிகாரத்தின் உருவகக் கற்றலை, சகோதரர் ரசல் அவர்களின் போதனைகள் மற்றும் அறுவடைச் செய்தியின் வெளிச்சத்தில் பார்க்கும்போது, அது நம் காலத்திற்கு மிகவும் வலிமையான ஆழமான செய்தியை அளிக்கிறது.சுவிசேஷ யுகத்தின் முடிவில் நிகழும் நிலைகளை இது வெளிப்படுத்துகிறது; பாபிலோனுடனும் உலகத்துடனும் சமரசம் செய்வதின் ஆபத்துகளை எச்சரிக்கிறது. இது பேராசைக்கும், சத்தியத்தின் அழுக்கிற்கும் எதிரான கடுமையான எச்சரிக்கை.
ஆனால் அதே சமயம், கடவுளின் ஆசீர்வாதம் ஆவிக்குரிய இஸ்ரயேலின் மேல் மாறாதது என்பதை உறுதியாக அறிவிக்கிறது. கர்த்தர் தமது விசுவாசிகளை அறுவடைச் சோதனைகளின் வழியாக நடத்தி, இறுதி வெற்றிக்குத் திடமாக அழைத்துச் செல்கிறார்.
இந்த உண்மை நமக்கு ஆழ்ந்த ஊக்கத்தையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது: கர்த்தரின் வழிநடத்தல் நிச்சயமாக நம்மை பரம கானானை அடைய செய்யும் செய்யும். ஆமென்.

Different perspective. Excellent
ReplyDelete