FAITH COMES FROM HEARING. ROMANS 10:17




THE HOLY ANOINTING OIL | பரிசுத்ததைலம் . ஆனந்த தைலம் - BR. ARUL VELLANKANNI

THE HOLY ANOINTING OIL

HOLY ANOINTING OIL



அபிஷேகத்தின் அடையாளம் பரிசுத்த தைலம்; 
அர்ப்பணிப்பில் மகிழ்ச்சியின் அடையாளம்... ஆனந்த தைலம்;

அபிஷேகத் தைலமாம் பரிசுத்தாவி யை அருள்வது தெய்வீக ஏற்பாடு; அர்ப்பணிப்பில் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது - 
ஆசாரியர்களின் ஆர்வமே;

செலுத்தும் பலியை முறுமுறுப்பில்லாமல் மனமுவந்து செலுத்தும் போதே கர்த்தரால் அது - சுகந்த வாசனையாய் முகர்ந்து பார்க்கப்படும்; 

அங்கவீனமான பலிகள் அங்கீகாரமாவதில்லை; மனதில்லாமல் செலுத்துவதும் ஏற்கப்படுவதில்லை. 
காணிக்கைப் பெட்டியில் அள்ளி அள்ளி போட்டாலும், இரண்டு காசுகளின் மதிப்பே அதிகமாயிருந்தது;

பண்டிகை நாளில் செலுத்தும் பலிகள் தவிர அதிகப்படியான காணிக்கைளும் அனுமதிக்கப்படுவது இல்லை. 

இதோ என் ஆண்டவர்; இல்லை; யோர்தானில் பெற்றது - அபிஷேகத்தைலம்;

கல்வாரியில் கொடுத்தவிதம் - அது ஆனந்த தைலம்:

சொந்தமானதை செலுத்துவதற்கே அபிஷேக தைலம்;

அதை..சுகந்தமானதாய் செலுத்துவது ஆனந்ததைலம்:

இதைக்கொடு அல்லது. அதைக்கொடு என்று  கேட்காமல், உன் இருதயத்தைக்கொடு என்றே
கர்த்தர் கேட்டார். 

இணக்கமான இருதயம் சுணக்கம் காட்டாது; 
திருக்குள்ள மனதோ... சுருக்கம் காட்டும்;

ஆபிரஹாமிடம் இறைவன் கேட்டது, பிள்ளையை அல்ல; பிள்ளையைக் காட்டிலும் மேலான...
ஆபிரஹாமின் உள்ளத்தையே;

பலி செலுத்துவது ஓர் அனுகூலமான ஆசிர்வாதமே;
 பகுத்தறிந்து மகிழ்ச்சியுடன் செலுத்துவது இரட்டிப்பான ஆசிர்வாதமே;

கனி கொடுப்பதெல்லாம் பலி என்றாலும், மிகுந்த கனிகொடுப்பதே ஆனந்த பாக்கியம்;

சவுகரியமாய் சபைகளுக்கு நிருபம் எழுதுவது பரிசுத்த தைலமான பலி என்றால்... 
அதைக் கண்ணீரோடும்..கண்ணில் உறுத்தலோடும் எழுதினது,

அப்: பவுலின் ஆனந்த தைலம்;

பாவிகள் எவ்விதத்திலும் பலி செலுத்த முடியாதே; நீதிமானாக எண்ணப்படுபவருக்கு, அளிக்கப்படும் நிபந்தனைச் சலுகையே..பரிசுத்ததைலம்... இலவசமாய்ப் பெற்ற இதை இலவசமாய்க் கொடுக்காதபடி இடைஞ்சலாய் இருப்பது - நமது சுயநலகம்

ஆம்... கடவுளின் வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்;
[எரேமியா: 48:10]

உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் கடவுள் பிரியமாய் இருக்கிறார்.
[Ⅱ கொரிந்தியர் 9:7]

ஆமென். 

- சகோதரர் அருள் வேளாங்கண்ணி, 
9789387638
திண்டுக்கல்

Comments

Post a Comment